முஸ்லிம் சிறைக்கைதிகளை விடுதலை செய்ததில் தமிழக அரசு பாரபட்சம்
கோவை நீதிமன்றத்தில் அல்-உம்மா தலைவர். அன்சாரி ஆவேசம்!! கோவைகுண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள்தண்டனை பெற்று சிறையில் உள்ள அன்சாரியை நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்புடன் போலீசார் அழைத்து வந்தனர். வேனிலில் இருந்து இறங்கியதும் அன்சாரி ஆவேசமாக கூறியதாவது:அண்ணா பிறந்ததினத்தையொட்டி தமிழக அரசு 1405 ஆயுள் கைதிகளை விடுதலை செய்தது. இதில் ஒரு முஸ்லிம்கூட விடுவிக்கவில்லை. மதுரையை சேர்ந்த மார்க்கிஸ்ட் கம்யுனிஸ்ட் கவுன்சிலர் லீலாவதி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர்களை விடுவித்துள்ளனர்.கோவை குண்டுவெடிப்பு வழக்கில் 72 முஸ்லிம்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். அவர்களை விடுவிக்க கருணை காட்டவில்லை.இவர்களில் பலர் நோயால் இறக்கும்நிலையில் உள்ளனர்.பாரபட்சம் காட்டும் தமிழக அரசை கண்டிக்கிறோம்.இவ்வாறு அன்சாரி ஆவேசமாக கூறினார்.இதனால் நீதிமன்றம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் நீத்மன்றத்தில் அன்சாரியை ஆஜர்படுத்தி. மிண்டும் ஜெயில்க்கு அழைத்து சென்றனர்.
சாலை மறியல்.ஈடுபட்டனர்
இன்ஷா அல்லாஹ் மிக விரைவில் சிறைவாசி குடும்பங்கள் தமிழக முழுவதும் தொடர் மறியல். முற்றுகை பல பேராட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளார்கள். சமுதாய தலைமைகளோ.சிறைவாசிகளின் விடுதலைக்கு உங்கள் பணி என்ன ???