Wednesday, February 24, 2010

கோவை மாவட்ட மனித நேய மக்கள் கட்சியின்
மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது
கோவையில் 24
கோவை மாவட்ட மமக செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் சுல்தான் அமீர் அவர்கள் தலைமையில் தமிழ்நாடு ஹோட்டலில்நடைபெற்றது. இந்த செயற்குழுவில் மாநில நிர்வாகிகள், மாவட்ட தமுமுக நிர்வாகிகள், மாவட்ட மமக நிர்வாகிகள், கலந்து கொண்டதுடன் செயற்குழுவில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானங்கள்
பிப்ரவரி 7ம் தேதி திருப்பூரில் நடந்த மமகவின் இரண்டாம் ஆண்டு தொடக்கவிழா மற்றும், முப்பெரும் கோரிக்கை மாநாட்டை வெற்றி பெற செய்த மற்றும் மாநாட்டில் கலந்து கொண்டவர்களும் செயற்குழு மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் தொவித்துக்கொள்கிறது.
தமிழகத்தில் பூரண மதுவிலக்ககை உடனடியாக அமுல்படுத்த கோரி தமிழக அளவில் மனித நேய மக்கள் கட்சி எதிர்வரும் மார்ச் 7ம் தேதி அன்று நடக்க இருக்கும் மதுக்கடை மறியல் போரை தமுமுக மற்றும் ஒத்த கருத்துள்ள அனைவரையும் ஒன்று திரட்டி வெற்றிகரமாக நடத்தவது எனவும், அதற்கான கடுமையாக உழைப்பது எனவும் இச் செயற்குழுவில் முடிவு செய்யப்படுகிறது.
கோவையில் அதிகமான இடங்களில் மறியல் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
கோவையில் ஜீன் மாதம் நடக்க இருக்கும் செம்மொழி மாநாட்டிற்கு பல கோடிகளில் அடிப்படை வசதிகளை செய்து வரும் திமுக அரசு சிறுபான்மை மற்றும் தாழ்த்தபபட்ட மக்கள் பெரும்பான்மையாக வசித்து வரும் கோவை தெற்கு பகுதிகளை திட்டமிட்டு புறக்கணித்து வருவதை செயற்குழு கண்டிப்பதுடன் உடனடியாக அடிப்படை வசதிகளை கோவை தெற்கு பகுதியில் விரிவுபடுத்தும் திட்டங்களை தீட்டி செயல்படுத்த வேண்டும் என செயற்குழு கோரிக்கை வைப்பதுடன் புறக்கணிப்பு தொடர்ந்தால் செம்மொழி மாநாட்டில் கோவை தெற்கு பகுதி மக்கள் கலந்து கொள்ளக்கூடாது. என்ற பிரச்சாரத்தை கடுமையாக செய்வது எனவும், செம்மொழிமாநாடு அன்று தெற்கு பகுதிகளில் கறுப்புக் கொடி ஏற்றுவது எனவும் முடிவு செய்யப்படுகிறது.
இன்னும் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த செயற்குழுவிற்கு, தமுமுக மாநில துனைச்செயலாளர்கள் கோவை சையது, கோவை சாதிக், மாநில செயற்குழு உறுப்பினர் கோவை அக்பர், மாநில கழக பேச்சாளர் கோவை ஜாகீர், மமக மாவட்ட செயலாளர் சுல்தான் அமீர், தமுமுக மாவட்ட தலைவர் அப்துல் பசிர், மாவட்ட செயலாளர் ஆர்.எம். ரபிக், மமக மாவட்ட துனைச்செயலாளர் ஷாஜகான், மமக மாவட்ட பொருளாளர் அப்பாஸ், மற்றும் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் அப்பாஸ், தமுமுக மாவட்ட துனைச்செயலாளர் ஜபார்சாதிக், மோட்டுபாளையம் நகர நிர்வாகி ரகுபதி, வணிகர் பிரிவு செயலாளர் ராஜா, மற்றும் திருப்பூர் மமக மாவட்ட பொருளாளர் ஷாஜகான், மற்றும் மமக, தமுமுக, நகர மாநகர மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். இறுதுயில் மமக தொழிலாளர்அணி செயலாளர் சலிம் நன்றி கூறினார்.


செய்தி படம் : கோவை தங்கப்பா