Saturday, December 20, 2008


மனித நீதிப் பாசறை சார்பில் தமிழகத்தில் உள்ள 5மாவட்டகளில் தமிழக சிறைகளில் உள்ள முஸ்லிம் சிறைவாசிகளை கருணை அடிப்படையிலும் முஸ்லிம் சிறைவாசிகளை விடுவிப்பதில் சமநீதி வேண்டியும், கருப்பு பேட்ஜ் அணிந்து மாபெரும் கவணஈர்ப்பு ஆர்ப்பாட்டம். நடந்தது இந்த ஆர்ப்பாட்டதிற்க்கு. மாநில நிர்வாகிகள் தலைமையில் நடந்தது .
இதில் கலந்துகொண்ட நிர்வாகி விபரம்.சென்னையில்.சையது இபுராஹிம் தலைமையில் மாநில பேச்சாளாளர் உசேன் அவாகள் சிறைப்புரை நிகழ்த்தினர் இதில் 500க்கும் மேற்பட்றோர்கள் கலந்து கொண்ட்டார்கள். அதோ போல். நெல்லையில் அன்வர் தலைமையில் நெல்லைமாவட்ட செயலாலாளர் மெலளவி மகபுப் அன்சாரி பைஜி சிறப்புரை நிகழ்தினர் இதில் 350க்கும் மேற்பட்றோர்கள் கலந்மு கொண்டடர்கள். மதுரையில். மதுரைமாவட்ட செயலாளர் நசுருத்தின் தலைமையில் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் ஜலில் சிறப்புரை நிகழ்த்தினர்.இதில் 600க்கும் மேற்பட்றோர்கள் கலந்து கொண்டடார்கள். திருச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் முஹம்மது அலாவுதின் தலைமையில் மாநில பேச்சாளாளர் சையது இபுராஹிம் சிறப்புரை நிகழ்த்தினர்.500க்கும் மேற்பட்றோர்கள் கலந்து கொண்டடர்கள்.
கடந்த செப்டம்பர் 15 அன்று பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக
சிறைகளில் 8 ஆண்டுகள் நிறைவடைந்த 1405 தண்டனைக் கைதிகளை தமிழக அரசு விடுதலை செய்தது. இதில் மத வழக்குகள் சம்பந்தப்பட்ட ஒரு முஸ்லிம் சிறைவாசி கூட விடுதலை செய்யப்படவில்லை. அதே போல் 2007ம் ஆண்டும் விடுதலை செய்யப்பட்ட 118 சிறைவாசிகளில் ஒரு முஸ்லிம் கூட கிடையாது.
பேண் கவுன்சிலர் லீலாவதி கொலை வழக்கில் குற்றவாளிகளை விடுதலை செய்ததை கருணை அடிப்படையில் என்று கூறிய தமிழக அரசுக்கு முஸ்லிம் சிறைவாசிகளின் மீது மட்டும் ஏன் கருணை ஏற்படவில்லை?
எனவே, சிறுபான்மையோரின் நலன் காக்கும் அரசாக தன்னை முன்னிறுத்திக் கொண்டிருக்கும் கலைஞர் அரசு எந்த பாரபட்சமும் காட்டாமல் முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலைக்காக சிறப்பு ரெமிசன்களை ஏற்படுத்தி பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று 19.12.2008 வெள்ளிக்கிழமை மாலை 4.45 மணியளவில் செஞ்சிலுவை சங்கம் முன்பாக கோவை மாவட்டத் தலைவர் ஏ. எஸ். இஸ்மாயில் அவர்களின் தலைமையில் மாநில செயலாளர் ஏ. பக்ருதீன் அவர்களின் சிறப்புரையுடன் கருணை அடிப்படையிலும், முஸ்லிம் சிறைவாசிகளை விடுவிப்பதில் சமநீதி வேண்டியும் கருப்பு பேட்ஜ் அணிந்து மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிறுபான்மை உதவி அறக்கட்டளை தலைவர் உம்மர்ஷா மற்றும் கோவை தங்கப்பா, ஆகியோரும் மற்றும், சிறைவாசி குடும்ப பெண்கள் உட்பட ஆண்களும், பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் தீர்மானங்களாவன
1. பேரறிஞர் அண்ணா போன்ற தலைவர்களின் பிறந்த தினத்தில் வரும் போது 2009 ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யும் போது பாரபட்சமின்றி முஸ்லிம் சமூக வழக்கிலுள்ள ஆயுள் சிறைவாசிகளையும் விடுதலை செய்ய வேண்டும்.2. பதிமூன்று வருட தண்டனை பெற்ற முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளுக்கு இவ்வாண்டு மற்றும் வருமாண்டு தண்டனை குறைப்புகளை உடனே வழங்கி அவர்களின் முன் கூட்டிய விடுதலைக்கு அரசு வழிவகை செய்தல் வேண்டும். 3. முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய அரசுக்கும், சிறைத்துறைக்கும், பரிந்துரைக்கும் காவல் துறையினர் அவர்களின் தற்போதைய மனநிலையை கருத்திற் கொண்டு அதற்கு இசைவான அறிக்கை சமர்ப்பித்தல் வேண்டும். 4. பரோல் (விடுப்பு) போன்றவற்றில் மற்ற சிறைவாசிகளுக்கு வழங்கும் வருடத்திற்கு 15 நாள் விடுப்பை முஸ்லிம் சிறைவாசிக்கும் பாரபட்சமின்றி வழி காவலின்றி வழங்க வேண்டும்.5. சிறைத் தண்டனை கழிந்து வெளிவருபவர்களின் மறுவாழ்விற்கு அரசு, உரிய நடவடிக்கைகள் எடுத்து அவர்களுக்கு கடனுதவி போன்றவற்றை வழங்குதல் வேண்டும். 6. சிறையில், முன் கூட்டியே விடுதலைக்கு மறுத்து மன இறுக்கத்தால் மரணமடைந்த திரு. சபூர் ரஹ்மான் போன்றோரின் நிலை மற்ற முஸ்லிம் சிறைவாசிகளுக்கு நேரா வ்ணம் விரைந்து அவர்களை விடுதலை செய்ய அரசு ஆவண செய்தல் வேண்டும்
புகைப்பட காட்சிகள்

தனது தந்தைக்காக பச்சிளம் குழைந்தை கேஷம்யிடம் காட்சி

மாநில செயலாளர் பக்ருதீன் சிறப்புரை
மாவட்டத் தலைவர் இஸ்மாயில் தலைமை உரை








செய்திகள். புகைப்படம்: கோவை தங்கப்பா
மிடியா வாய்ஸ்