Thursday, May 20, 2010

சமுதாய மனசாட்சியை நோக்கி .....


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் . . . . )
கடந்த கால நிகழ்வுகள் பல நம் நினைவுகளிலிருந்து அகன்றுவிட்டன. ஆனாலும் சில நிகழ்வுகளை நினைவில் நிறுத்திடும் நினைவுச் சின்னங்கள் உண்டு. அப்படி நம் கடந்த கால நினைவுகளின் நினைவுச் சின்னங்கள் தங்கள் வாழ்வையே சின்னாபின்னமாக்கி சிறைக் கொட்டடியில் அடிமைகளாய் உயிர்வாழƒ உண்பதையும், உடுத்ததையும், மட்டும் அசைபோடும் மனிதர்களை நாம் ? இன்று நாம் சுகபோகமாங் வாழ்கின்றோமோ, இல்லையோ, ஆனால், சுதந்திரமாய், சுயமரியாதையாய் வாழ வழி வகுத்தது அந்த அடிமைச் சிறை கூட்டம் அல்லவா‚? ஒரு கூட்டம் வமை;பு மீறியது என்பது எந்த அளவிற்கு உண்மையோƒ அந்த அளவிற்கு உண்மை ஒரு கூட்டத்தால் ஒரு சமூகமே (சுயமரியாதையோடு) வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதும்.

நமக்கு வாழ்வளித்த அந்த கூட்டம் இன்று வாழ்விழந்து தவித்திட நாம் அவர்களுக்கு செய்திடும் கைமாறுதான் என்ன? நாம் அவர்களின் போராட்ட வழிமுறைகளை ஆதரிக்க சொல்லவில்லை. தன் சமூகத்திற்காக தன்னையே அர்ப்பணித்து பதிமூன்று வருடங்களாய் சிறையில் வாடும் நல்உள்ளங்களின் தியாகத்தினை மதிக்கவும், நன்றிகாட்டவும் வேண்டுகிறோம். உங்கள் வீட்டு உயிர் இழப்பையும், பொருள் இழப்பையும் தன் சொந்த இழப்பாய் கருதி சிறை கண்டவன் சந்தித்த இழப்புகள் தான் எத்தனை, எத்தனைƒ தன் இழப்பை மட்டுமா இழந்தான்ƒ தன் இளமையை மட்டுமா இழந்தான்ƒ தன் இல்லத்தவரை ஒருவர் ஒருவராய் இழந்து ஒற்றை மனிதாய் (அநாதையாய்) தனிமைச்சிறையில்‚ எட்டி நின்று ஏன் என்று கேட்கக்கூட நாதியில்லை‚ உன் வீட்டு தவிப்பை கண்டு உள் அருகி(ஊரி)லிருந்து மட்டுமல்ல, உன் இழப்பின் செய்தி எட்டிய திசைகளிலிருந்தெல்லாம் புழுவாய் துடித்து வந்தவன்ƒ இன்று அணுஅணுவாய் சிறைக் கொட்டடியில் செத்துப் பிழைத்து கொண்டிருக்க, செத்துப் போன உணர்வுளோடு சுத்தமாய் கடந்த கால நிகழ்வுகளை மறந்து சுற்றித் திரிகிறான. அன்று தனிமனிதர்களால் நின்று சமூகத்திற்காக தம்மையே அர்ப்பணித்தவர்களுக்கு, இன்று ஒரு சமூகமாய் நின்று மீட்சி (விடுதலை) தர மனதில்லையா‚? அல்லது நம்மில் மனிதம் தான் இல்லையா‚?

இன்னும் இன்னும் எத்துனை காலம் மௌனம் காப்பாய், மனம் மட்டும் இருந்திருந்தால் இரு மரணங்களை கண்டு விட்ட மத்தியசிறை பதில்கள் கூட மௌனம் கரைத்திருக்கும் (2002ல் தஸ்தகீர் வயது - 65 மரணம், 2007-ல் சபுர் ரஹ்மான் வயது - 35 மரணம்) சில கற்களில் கூட ஈரம் வழிந்ததோடுவதுண்டு எனச் சொல்வார்கள். ஆனால் உங்கள் கல்புகளின் ஓரங்களில் கூட ஈரங்கள் இல்லையா இந்த அபலைக்களுக்காக‚

விமர்சனங்களையே விரிவாய் பதிவு செய்து விட்டாலும் விட்டு விலகாத நினைவுகளாய் நெஞ்சில் நிலைத்திருக்கும் நல்உள்ளங்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். அவர்கள் எல்லா காலங்களிலும் அநாதரவற்ற சிறiவாசிகளுக்காக இயன்றதை செய்து இயலாமைக்காக விசனப்பட்டு துஆ செய்தவர்கள். மீண்டும், மீண்டும் அவர்களுக்காக நன்றிகளை பதிவு செய்து கொள்கிறோம்.

கோவை தங்கப்பா
media voice