Thursday, January 27, 2011

Wednesday, January 19, 2011

கோவையில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம் !

கோவையில் பல கோடியில் கட்டப்பட்ட அடுக்கு மாடி குடியிருப்பு
மாநகராட்சி இழுபறியால் ஒப்படைப்பதில் தாமதம்

அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம் !

கோவை: உக்கடம் வின்சென்ட் ரோட்டில் 12 கோடி ரூபாய் மதிப்பில் வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்ட 352 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவதில்இ மாநகராட்சி செய்யும் காலதாமதத்தால் வீடுகளை ஒப்படைப்பதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. உக்கடம் வின்சென்ட் ரோட்டில் வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்டு பரமாரிக்கப்பட்டு வந்த அடுக்கு மாடி கட்டடங்கள்இ 2007ம் ஆண்டு இடிந்து விழுந்தது. இதில் 13 பேர் பலியாயினர்; பலர் காயமடைந்தனர்.

இச்சம்பவத்தையடுத்து. அங்குள்ள மற்ற குடியிருப்புகளை காலி செய்ய மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது. அதன் பிறகு வீடுகளை முழுமையாக இடித்து அப்புறப்படுத்தி புதியதாக 12 கோடி ரூபாயில் 352 வீடுகள் கட்டப்பட்டன. வீடுகளை இடித்து அப்புறப்படுத்திய மாவட்ட நிர்வாகம் ஏழு மாதங்களில் வீடுகளை புதியதாகக் கட்டி பயனாளிகளுக்கு ஒப்படைப்பதாகக் கூறியிருந்தது. அதுவரை வேறு வீடுகளில் குடியிருப்பதற்காக ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் 8000 ரூபாயை வழங்கியது. கட்டடங்களை முழுமையாக இடித்து அப்புறப்படுத்தும் பணியே ஏழு மாதத்தில் நிறைவடையாமல் காலதாமதமாக கட்டடம் கட்டும் பணி 2009 மார்ச்சில் துவங்கியது. ஜூலையில் பணிகளை வாரியம் வேகமாக நிறைவு செய்தது. ஆனாலும்இனியும் வீடுகள் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படவில்லை. இந்நிலையில் வீடுகளை ஒப்படைக்கக் கோரிய தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்போர் பொது நல ஒருங்கிணைப்புக் குழுவினர் நேற்று மாலை அவசர கூட்டத்தைக் கூட்டினர். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா ஜமாத்தே இஸ்லாமிய ஹிந்த் சிறுபான்மை உதவி அறக்கட்டளை ஜாக் மற்றும் ஜமாத் அதன் நிர்வாகிகள் ஜாபர் உசேன் அப்துல் ஜலீல் கோட்டை தங்கப்பா அப்பாஸ் நூருல்அமீன் அபுதாஹிர் சர்புதீன் உட்பட பலர் பங்கேற்றனர். 'இம்மாதம் 31ம் தேதிக்குள் வீடுகளை பயனாளிகளிடம் ஒப்படைக்கா விட்டால் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் குடும்ப உறுப்பினர்களை திரட்டி போராட்டம் நடத்தவும் தயங்க மாட்டோம்' என்று கூட்டத்தில் எச்சரிக்கப்பட்டது.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய நிர்வாக பொறியாளர் (பொறுப்பு) ராமமூர்த்தி உதவி நிர்வாக பொறியாளர் கோவிந்தன் ஆகியோர் கூறியதாவது: அடுக்கு மாடி கட்டடத்திலுள்ள 352 வீடுளில் வசிக்கப் போகும் மக்களுக்காக மூன்று ஆழ்துளை கிணறு (போர்வெல்) அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு சம்ப் கட்டியுள்ளோம். மின் இணைப்பிற்கு விண்ணப்பித்துள்ளோம். சிறுவாணி குடிநீர் வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்ததின் அடிப்படையில் இணைப்பு கோரி மனு செய்துள்ளோம்.
எங்கள் தரப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்துவிட்டன. காலதாமதத்திற்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது என்றனர். மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது 'குடிநீர் இணைப்பு கொடுப்பதற்கு வரி விதிப்பு செய்ய வேண்டும். வரி விதிப்பு செய்ய வாரியம் ஒப்படைப்பு ஆணையை சமர்ப்பிக்க வேண்டும். அதனால் இது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். விரைவில் குடிநீர் இணைப்பு வழங்கி விடுவோம்' என்றார்.