Wednesday, September 30, 2009

தமிழக அரசு
கமலஹாசன் நடித்து உன்னை போல் ஒருவன் என்ற திரைப்படம் தடை செய்ய வேண்டும் ...
சிறுபான்மை உதவி அறக்கட்டளை துனைத் தலைவர். அபுதாஹிர் தமிழக அரசுக்கு கடிதம்...
கோவை 30
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல், கமலஹாசன் மற்றும் மோகன்லால் நடித்து சக்ரி டோலாட்டி இயக்கிய உன்னை போல் ஒருவன் என்ற திரைப்படம் 18.09.2009 அன்று தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. அதன் விமர்சனங்களை பத்திரிக்கைகளில் பார்த்த போது 1998ம் ஆண்டு கோவை குண்டு வெடிப்பு சம்பந்தமாக மையக்கருத்துடன் கூடிய திரைப்படமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.

எனவே, அந்த திரைப்படத்தை திரையரங்குகளில் பார்த்தபோது 1998 கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட இஸ்லாமிய சிறைவாசிகள் மூன்று பேரையும், மற்ற ஒருவரையும், கமலஹாசன் ஒரு இஸ்லாமிய பயங்கரவாதியைப் போல் நடித்து தமிழக அரசின் காவல்துறை ஐ.ஜி.யிடம், தகவல் தொழில்நுட்ப தொடர்பு மூலம், சென்னை நகரத்தில் பல இடங்களில் குண்டு வைத்திருப்பதாக மிரட்டி கோவை குண்டு வெடிப்பு கைதிகளை விடுவிக்கக் கோரியும்,
அதன் படி மேற்கூறிய நான்கு பேரையும் சிறையிலிருந்து விடுவித்து கொண்டு வந்து, ஒரு வாகனத்தில் தப்பித்து செல்லும் போது அந்த வாகனத்தில் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததினால் மூன்று பேர் இறந்ததாகவும், மற்ற ஒருவர் போலி மோதல் சாவில் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் சித்திரிக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தின் செய்தியாக தீவிரவாதத்திற்கு பதில் தீவிரவாதம் தான் என்பதைப் போலும், அதை ஒரு காவல்துறை அதிகாரியே அங்கீகரித்தது போல் கூறப்பட்டுள்ளது.

குண்டு வெடிப்பு சம்பந்தமாக திரைப்படம் பற்றியோ, அதனால் பாதிக்கப்படும் மக்களைப் பற்றியோ கூறுவதால் எங்களுக்கு ஆட்சேபணையில்ரலை.
ஆனால், 1998 ஆம் ஆண்டின் கோவை குண்டு வெடிப்பு சம்பவம் குறித்த விசாரணை தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு நீதிபதிகள் பிரபா 'தேவன், சத்தியநாராயணன் பெஞ்ச் முன்பாக வழக்கறிஞர்கள், மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களை கேட்டுக் கொண்டிருக்கிறது.

நிலுவையிலுள்ள ஒரு பெரும் வழக்கு சம்பந்தமாக அதிலும் குறிப்பாக இஸ்லாமிய சிறுபான்மை மக்களின் மீதும், குறிப்பாக பல அப்பாவி இளைஞர்கள் இந்த வழக்கில் ஜோடிக்கப்பட்டு, அதைப்பற்றிய சாட்சியங்கள் சம்பந்தமான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் என். நடராஜன் தலைமையில் வழக்கறிஞர்களின் குழு தொடர்ந்து நீதிக்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் போது உன்னைப் போல் ஒருவன் திரைப்படம் மக்கள் மத்தியிலும், நீதிமன்றத்தின் முன்பும் ஒரு தவறான கருத்தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு ஏதுவாகும்.

ஏற்கனவே, உச்ச நீதிமன்றம் ஊடகங்களின் விசாரணை பற்றி கருத்து கூறிய நிலையில் கவனிக்கத் தக்கது.

மேலும், 2006ம் ஆண்டு கோவை சிறப்பு நீதிமன்றத்தில், 1998 குண்டு வெடிப்பு வழக்கு விசாரணைக்கு பிறகு வழக்கறிஞர்களின் வாதுரை நடந்து கொண்டிருந்த போது கோவை மாநகர உளவுத்துறை அதிகாரி ரத்தினசபாபதி, அவருக்கு பணிபுரியும் பால்ராஜ், இளங்கோ ஆகியோர் சதி செய்து அப்பாவி இஸ்லாமிய இளைஞர்கள் மீது வெடிகுண்டு வழக்கு ஒன்று புனைந்து போத்தனூர் காவல்நிலையத்தில் பதிவு செய்து அதனை ஊடகங்களின் மூலமாக விளம்பரப்படுத்தி மக்கள் மத்தியிலும், நீதிமன்றத்தின் கண்ணோட்டத்திலும் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தினர்.

ஆனால், பின்னோக்கி இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் மனித உரிமை அமைப்புகளின் போராட்டங்களின் காரணமாக தமிழக அரசு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்திரவிட்டு, சி.பி.சி.ஐ.டி விசாரணைக்குழு தீர விசாரித்து ரத்தினசபாபதி மற்றும் அதன் அதிகாரிகள் இஸ்லாமிய இளைஞர்கள் மீது பொய்யாக வழக்கினை ஜோடித்துள்ளனர் என்று ஆதாரத்துடன் இறுதி அறிக்கை தாக்கல் செய்து இளைஞர்களை விடுவித்தனர்.

ஆனால், இறுதி அறிக்கை தாக்கல் செய்த பின்னரும் மேற்படி வழக்கு ஊடகங்கள் மூலமாக ஏற்படுத்திய கருத்தாக்கம் மக்கள் மத்தியில் ஒரு பீதியையும், நீதிமன்றத்தின் கருத்தில் ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தியது என்பது உண்மை.

1998ம் ஆண்டு நடந்த கோவை குண்டு வெடிப்பு வழக்கில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பிணை கூட கிடைக்காமல் சிறையில் வாடிக் கொண்டிருக்கும் அப்பாவி இளைஞர்கள் பலபேருக்கு மேல் முறையீட்டிலாவது நீதி கிடைக்குமென்று நம்பிக்கையோடு காத்துக் கொண்டிருக்கும் நிலையில், உன்னைப் போல் ஒருவன் திரைப்படம் கோவை குண்டு வெடிப்பு சம்பந்தமான கைதிகளை விடுவிக்கக் கோரி மையக் கருத்தாக கொண்டு திரையிட்டு இருப்பது நிலுவையிலிருக்கும் மேல் முறையீட்டு விசாரணை பாதிக்கப்படுவதாக உறுதியாக நம்புகிறோம்.

எனவே, தாங்கள் உடனடியாக உன்னைப்போல் ஒருவன் திரைப்படத்தை தமிழகம் மற்றும் பல இடங்களில் திரையிட்டுள்ளதை மேல் முறையீடு வழக்கு முடியும் வரை நிறுத்திவைக்க உத்தரவு செய்யுமாறு வேண்டிக்கொள்கிறோம்.

1. தமிழக உள்துறைச் செயலாளர் அவர்கள்தலைமைச் செயலகம்சென்னை

2. தலைவர் thanikkaiகுழு

3. ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர் நேஷனல் டீல – கமலஹாசன் சென்னை


இப்படிக்கு
யு.அபுதாகீர்துணைத் தலைவர்சிறுபான்மை உதவி அறக்கட்டளை

Tuesday, September 29, 2009

ஷோசியல் டெமாக்ராடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா மாநில நிர்வாகிகளின் நியமனம்
அதிகரரம் மக்களுக்கே என்ற முழக்கத்தோடு ஒடுக்கப்பட்ட சிறுபான்மை முஸ்லிம்கள்இதாழ்த்தப்பட்ட தலித்த்துகள்இ ஆகியோரின் அரசியல் நம்பிக்கையாய் அகில இந்திய அளவில் செயல்பட்டு வரும் ஷோசியல் டெமாக்ரடிக் பார்ட்'டி ஆஃப் இந்தியாவின் தமிழக நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் மாநிலஇமாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மதுரையில் 26-9-2009 அன்று மதுரையில் ரத்தினா ரெஸிடென்சில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் தலைவராக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலத் தலைவர் எம்.முஹம்மது அலி ஜின்னா சாஹிப் அவர்கள் தலைமையேற்றார்கள்இசிறப்பு அழைப்பாளராக தேசிய தலைவர் இஇ அபுபக்கர் சாஹிப் அவர்களும் கலந்து கொண்டார்கள்.
இதில் கிழ்கண்ட நபர்கள் மாநில நிர்வாகிகளாக தேர்ந்தேடுக்கப்படார்கள்.

மாநில தலைவர் : கே. கே. ஷேக் முஹம்மது தெஹ்லான் பாகவி சாஹிப்

மாநில துனை தலைவர் : அப்துல் ஹமிது (எ) பிலால் ஹாஜியார்

மாநில பொதுச் செயலாளர் : எஸ். முஹம்மது முபாரக் அவர்கள் : எம். எம். கே. ஜமால் அவர்கள்
செயலாளர் : தாஹிர் சாஹிப்


பொருளாளர்
: எஸ். எம். ரபிக் அஹமது சாஹிப்

தேசிய தலைவர் இஇ அபுபக்கர் சாஹிப புதிய மாநில தலைவர் கே. கே. ஷேக் முஹம்மது தெஹ்லான் பாகவி சாஹிப் உரை.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலத் தலைவர் எம்.முஹம்மது அலி ஜின்னா சாஹிப் அவர்கள் உரை.

செயற்குழு உறுப்பினர்கள்
ஏ. யா முதைதிஇன்
ஏ. பக்ருதீன்
அப்துல் சர்தார்
அப்பாஸ் மெளலானா
நிஜாம் முஹைதீன்
ஏ.எஸ் இஸ்மரயில்
எம். முஹம்மது அலி ஜின்னா
ஷேக்தாவூது
ஆகியோர் தேர்ந்தேடுக்கப்பட்டனர்.
தீர்மானம்
1) எஸ் . டி .பி . ஐ . தமிழகத்தில் வளர்ப்பதற்காக பாடுபடுவதென தீர்மானிக்கப்பட்டது.

இப்படிக்கு
எஸ். முஹம்மது முபாரக்
பொதுச் செயலாளர் எஸ் . டி .பி . ஐ .- தமிழ்நாடு

Wednesday, September 23, 2009


கோவை மாவட்ட த மு மு க. சார்பில் ஈத் பொருநாள் தொழுகையில் 1500 க்கு மேற்பட்டோர்கள் கலந்து கொண்டார்கள்....




கோவை மாவட்ட த மு மு க மற்றும் மனித நேய மக்கள் கட்சி இனைந்து ஈத் பெருநாள் தொழுகை நடைத்தினர்கள்.கோவையில் 21 ம் தேதி காலை 7-30 மணிக்கு கரும்புகடை தொழில் அதிபர் ஜிவன்ஸ் அஜிஸ் அவர்களின் சொந்த இடத்தில்மாவட்ட நிர்வாகம் ஆண்கள்,பெண்கள், அனைவருக்கும் ஈ த் பெருநாள் தொழுகைக்கு ஏற்பாடு செய்யபட்டது.பெருநாள் குத்பாவை த மு மு க. மாநில பேச்சாளர் கோவை ஜாஹீர் அவர்கள் சிறப்புரை நிகழ்திதினர். இதில் ஆண்கள்.பெண்கள் உட்பட 1500 பேர் கலந்து கொண்டார்கள். தொழுகை முடிந்தயுடன். கோவை அல் அமின் காலனி த மு மு க. சரர்பில் துவங்கள்ளா பள்ளி வாசல்க்கு. தொழில் அதிபர் ஜீவன்ஸ் அஜீஸ் அவர்கள் பள்ளி கட்டிட நிதியாக ரூபாய்.1 லட்சம் நன்கொடையாக வழங்கினர்.இந்த நிகழ்ச்சியில். மாநில செயலாளர் கோவை உம்மர்.மாவட்ட பொருளாளர் கபிர். மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் சுல்தான் அமீர். பொருளாளர் அப்பாஸ்.மற்றும் மாநகர நிர்வாகிகள் சேட். ரபிக்.கவிஞர் ஹக்ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.இதற்கான ஏற'பாடுகளை மனித நேய மக்கள் கட்சி இளைஞர் அணி செயலாளர் அப்பாஸ். ஜாபார்.நுர்முஹம்மது.ஆகியோர் ஏற்பாடு கவணித்தார்கள்.

Tuesday, September 22, 2009

ஈ த் அன்று முஸ்லிம் பெண்கள் வாந்தி மயக்கம் ! ! !


பாட்னா : நேற்று நாடு முழுவதும் முஸ்லிம்களால் ரம்ஜான் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வட மாநிலங்களில் ரம்ஜானையொட்டி ஏராளமான முஸ்லிம் பெண்கள் மெகந்தி வைத்துக் கொள்வது வழக்கம். ரமஜானை முன்னிட்டு சிலர் கடைகளில் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் மெகந்தியை வாங்கி தங்கள் கை, கால்களில் வைத்துக் கொண்டனர். இந்த மெகந்தியை வைத்த அடுத்த சில நிமிடங்களில்....

அவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. மெகந்தி வைத்த இடங்களில் கொப்புளம் காயம் ஏற்பட்டது. இதை கண்ட உறவினர்கள் உடனே அவர்களை அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஒரிசா மாநிலம் பாலசூர், பட்ராக் மாவட்டங்களில் மெகந்தி வைத்த பெண்கள் அங்குள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது பற்றி அங்குள்ள மருத்துவர்கள் கூறும்போது, 'மெகந்தி வைத்ததால் மயக்கம் அடைந்த பெண்கள் இங்கு சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் தற்போது பதினைந்து பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். மற்றவர்களுக்கு உரிய மருந்துகளை கொடுத்து அனுப்பிவிட்டோம்' என்றனர்.
பீகார் மாநில சுகாதாரத்துறை செயலாளர் சி.கே.மிஸ்ரா கூறும்போது, 'பீகாரில் 100-க்கும் மேற்பட்ட முஸ்லிம் பெண்கள் மெகந்தி வைத்ததால் வாந்தி- மயக்கம் அடைந்துள்ளனர். எனவே கடைகளில் விற்கப்படும் மெகந்தியை பரிசோதனை செய்து அதில் கலப்படம் இருந்தால் தயாரிப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

Saturday, September 19, 2009


Assalaamu Alaikum warhmatullahi wabarakathu
Dear Brothers
Insha Allah I hope this email reaches you with the best of imaan and good health
Eid Mubarak to You & Your Family
May Allah accept all your duas this Eid.
May Allah bless us with the righteous way and the proper understanding of His guidance
May Allah forgive us of our shortcomings in our deen and our worldly activities which we may have done
knowingly and unknowingly.
May Allah protect us from the mischief’s of Shaytan and from Shaytan getting the better of our weaknesses.
May Allah grant us patience, determination, health, and strength in facing the difficulties of this life
May Allah guide us all and help us to Unite
and
May Allah bless the Ummah on this special time of Eid ul FITR
Ameen

By
Kovai Thangappa
Media Voive Tv

Friday, September 18, 2009

ஸதக்கத்துல் ஃபித்ரை முறையாகக்
கொடுப்போம்
ஸதக்கத்துல் ஃபித்ரு என்றால் என்ன?

ஈகைத் திருநாள் என்னும் ஈதுல் ஃபித்ரு அன்று ஏழை - எளியோருக்கு வழங்கியாகவேண்டிய கொடை ஸதக்கத்துல் பிஃத்ரு ஸகாதுல் ஃபித்ரு எனப்படு கின்றது. ரமழான் மாத நோன்புகளை வைத்து முடித்த பிறகு கொடுக்கப்படுவதால் இது ஸதக்கத்துல் ஃபித்ரு எனப்படுகின்றது. ரமழான் மாத நோன்புகளில் நாம் இழைத்துவிடும் சிறுசிறு குற்றங்களுக்கு பரிகாரமாக இது அமைகின்றது. ஏழை - எளிய முஸ்லிம்களும் ஈதுப் பெருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டும். இல்லாமை அவர்களுடைய சந்தோஷத்திற்கு தடையாக ஆகிவிடக்கூடாது என்பதும் ஒரு முக்கியக் காரணம். (அபு தாவுது, இப்னு மாஜா)

யாரெல்லாம் கொடுக்கவேண்டும்?

முஸ்லிமான ஆண்கள், பெண்கள், சிறியவர்கள், பெரியவர்கள், பச்சிளம் குழந்தைகள், வயதானோர் அனைவரும் கட்டாயம் கொடுத்தாக வேண்டும். (புகாரி, முஸ்லிம், அபு தாவுது, நஸாயி, திர்மிதீ, அஹ்மத்)தான-தருமம் பெறத்தகுதியில்லாத அனைவரும் ஸதக்கத்துல் ஃபித்ரு கொடு;த்தாக வேண்டும். இவ்வளவு இருந்தால்தான் கொடுக்கவேண்டும் என்னும் நிபந்தனை எல்லாம் கிடையாது. ஒருநாளுக்கு அதிகமாகன உணவு வீட்டில் இருந்தால் ஸதக்கத்துல் ஃபித்ரு கொடுக்கவேண்டும். கடன் வாங்க முடிந்தால் கடன் வாங்கி ஸதக்கத்துல் ஃபித்ரு கொடுக்க வேண்டும்.

எப்போது கொடுக்கவேண்டும்?
ஈது தொழுகைக்காக தொழுகைத் திடலுக்கு போகும் முன் கொடுத்துவிட வேண்டும். அப்போதுதான் கடமை நிறைவேறும். தொழுதபிறகு, கொடுத்தால் தான-தருமமாகக் கருதப்படுமே அல்லாமல் ஃபித்ரு கடமையை நிறைவேற்றியதாக ஆகாது.

எவற்றைக் கொடுக்கவேண்டும்?

நபிமொழிகளில் எட்டு பொருட்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை:-1) தீட்டாத கோதுமை
2) பேரீத்தம் பழம்
3) சோளம்
4) பாலாடைக் கட்டி
5) உலர்ந்த திராட்சை
6) வறுக்கப்பட்;ட தானியமாவு
7) கோதுமை மாவு
8) உணவுப் பொருள்இப்பொருட்களில் இருந்து ஏறக்குறைய 2650 கிராம் (இரண்டே முக்கால் கிலோ) அளவு கொடுக்கவேண்டும்.

நிர்ணயிப்பது சரியா?

ஸதக்கத்துல் ஃபித்ரு இவ்வளவுதான் என நிர்ணயிப்பது ஷரீஅத்தில் வழிகாட்டப் படவில்லை. நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கை முறையும் வசதிகளும் வேறுபடுகின்றன. நம்முடைய வசதி, வாய்ப்பு, செல்வ நிலைமை, வாழ்க்கை முறை போன்றவற்றைக் கருத்தில் கொண்டு மேற்கண்ட பொருட்களில் நமக்குரிய, நம்மால் இயலுகின்ற பொருளின் அளவு ஸதக்கத்துல் ஃபித்ரு கொடுக்க வேண்டும். மேற்கண்ட பொருட்களில் உங்களால் கொடுக்க இயலுகின்ற பொருளின் அளவு ஸதக்கத்துல் ஃபித்ரு கொடுக்கவேண்டும். மேற்கண்ட பொருட்களில் உங்களால் கொடுக்க இயலுகின்ற விலை உயர்ந்த பொருளைக் கொடுக்கவேண்டும் என இமாம் அபு ஹனீஃபா (ரஹ்) கூறியுள்ளார்கள்.இமாம்களைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொள்வோரும் நபிமொழிகளைப் பின்பற்றுவதாக சொல்வோரும் ஸதக்கத்துல் ஃபித்ராவுக்கென ஒரு தொகையை நிர்ணயித்து அறிவித்து விடுகிறார்கள். இரண்டு தரப்பாருக்கும் ஏறக்குறைய பத்து, பதினைந்து ரூபாய்தான் வித்தியாசம்.பொதுவாக, இரண்டரை கிலோ நடுத்தர கோதுமையின் விலையே நிர்ணயிக்கப் படுகின்றது. ஏறக்குறைய 60 அல்லது 80 ரூபாய். கூலிவேலைக்குப் போகின்ற முஸ்லிமும் 60 ரூபாய்தான் கொடுக்கிறார். மிகப்பெரிய பணக்காரரும் 60 ரூபாய்தான் கொடுக்கிறார். சாதாரண பருப்புக் குழம்போடு தம்முடைய உணவை முடித்துக் கொள்கின்ற ஏழை முஸ்லிம்களும் 60 ரூபாய் ஸதக்கத்துல் ஃபித்ரு கொடுக்கிறார்கள். அன்றாடம் நான்-வெஜ் சாப்பிடுகின்ற முஸ்லிம்களும் 60 ரூபாய் ஸதக்கத்துல் ஃபித்ருஸ கொடுக்கிறார்கள்.

இறைமறை குர்ஆனின்
வழிகாட்டுதல்

அல்லாஹ்வின் வேதமான அல்குர்ஆன் இதற்கு வழிகாட்டுகின்றது. தன்னுடைய மனைவியை ஒருவர் தலாக் சொல்லிவிட்டால் தன்னால் முடிந்த அளவு உதவித்தொகையை வழங்கவேண்டும்.'ஆயினும், செல்வம் படைத்தவன் அவனுக்குத் தக்க அளவும் ஏழை அவனுக்குத் தக்க அளவும் அவர்களுக்குப் பயனுள்ள பொருட்களை முறையாகக் கொடுங்கள். இது நல்லோர்களின் கடமையாகும்' (அல்குர்ஆன் 2:236)தரத்திற்கும் தகுதிக்கும் ஏற்ப உதவித் தொகையை வழங்கவேண்டும் என குர்ஆன் சொல்கின்றது. தலாக் என்பது வெறுப்பு ஏற்பட்ட பிறகு, நடைபெறும் செயல். அப்போதுகூட முடிந்த அளவு உதவித்தொகையை அளிக்குமாறு குர்ஆன் சொல்கின்றது.ஸதக்கத்துல் ஃபித்ரு என்பதோ விருப்போடு செய்யும் செயல். குர்ஆன் சொல்லும் நியதியை கருத்தில் கொண்டால் இங்குதான் அதிகமாக சக்திக்கு ஏற்றவாறு கொடுத்தாக வேண்டும். ஆகையால் ஷரீஆ சொல்ல வருகின்ற கருத்தை மனதில் கொண்டு 50, 60 ரூபாயோடு நிறுத்திக் கொள்ளாமல் நம்முடைய தகுதிக்கு ஏற்ப தலைக்கு 100, 150, 200, 300, 500, 750, 1000, 1500, 2000 என மனப்பூர்வமாக வழங்குவோம். ஏழை முஸ்லிம்களும் நம்மோடு சந்தோஷமாக ஈது கொண்டாட வகை செய்வோம்.
தொகுப்பு: சையது அப்துல் ரஹ்மான் உமரி

Centre for Islamic Studies
Coimbatore. TN.

Thursday, September 17, 2009

சவூதியில் 25 வயது இளைஞர் துக்கு போட்டு தற்கொலை !!!




ரியாத்: கடந்த ஆறு வாரங்களுக்கு முன் சவூதி தலைநகர் ரியாத்துக்கு எலக்டிரிசியன் வேலைக்கு வந்த இளைஞர் ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆந்திர மாநிலம் அனந்த்பூர் மாவட்டம் காதிரி கிராமத்தை சேர்ந்த ஷேக் யூசுப் பாஷா என்ற 25 வயதுடைய இளைஞர் ரியாத்தில் உள்ள ஒரு தனியார் எலக்டிரிகல் நிறுவனத்திற்கு பணிக்காக வந்தார். அவர் தனது மாமாவான எஸ்.கே. முஸாப்பருடன் தங்கியிருந்தார்.

இந்நிலையில் முஸாப்பர் காலையில் வேலைக்காக புறப்பட்டு சென்றபோது பாஷா அயர்ந்து தூங்கிகொண்டிருந்ததாகவும் பிறகு 3 மணிக்கு வேலை முடிந்து திரும்பி வந்து பார்க்கும்போது அவரது உடல் தூக்கில் தொங்கி கொண்டு இருந்ததாகவும் கூறினார். மேலும் பாஷாவிற்கு எந்த பணப்பிரச்சனைகளோ அல்லது கடன் தொல்லையோ இல்லை என்றும் சவூதி வருவதற்கு கூட அவர் ஒரு ரியால் கூட செலவழிக்கவில்லை என்றும் அவ்ருக்கு விசா கூட இலவசமாகவே கிடைத்தது என்றார்.இந்தியாவில் இருக்கும் அவருடைய பெற்றோர் அவருடைய உடலை பத்திரமாக இந்தியாவிற்கு அனுப்பி வைக்கும்படி இந்திய தூதரகத்தை கேட்டுக்கொண்டுள்ளனர் தனது மகன் சவூதிக்கு செல்லும்போது பூரண உடல்நலத்துடனே சென்றதாக கூறினார்கள்.

Tuesday, September 15, 2009


அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு கோவை இஸ்லாமிய சிறைவாசி 9 பேர் இன்று விடுதலையானார்கள்: சிறை வாசலில் உறவினர்கள் வரவேற்பு
கோவை, செப். 15
அண்ணா பிறந்த நாளை யொட்டி ஆண்டு தோறும் நன்னடத்தை விதிகளின் கீழ் கைதிகள் கருணை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டு வருகிறார்கள். இந்த ஆண்டு 10 பேரை விடுதலை செய்வதாக அரசு அறிவித்தது.
இவர்கள் அனைவரும் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதானவர்கள். குண்டு வெடிப்பு வழக்கில் இவர்கள் 13 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வந்தனர். இவர்களை விடுதலை செய்வதற்கான உத்தரவு கோவை ஜெயிலுக்கு வந்தது. இதை தொடர்ந்து 10 பேரில் 9 பேர் இன்று காலை 7.15 மணிக்கு விடுதலை செய்யப்பட்டனர்.
யூசுப் என்கிற ஷாஜகான் என்பவருக்கு விடுதலை உத்தரவு வந்துள்ளது. அவருக்கு வேறு வழக்கில் தொடர்பு இருப்பதால் விடுதலை செய்வது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விடுதலை செய்யப்பட்ட கைதிகள் விவரம் வருமாறு:
1. முகம்மது இப்ராகிம், 2. அப்துல் ரகீம், 3. அப்துல் பாரூக், 4. அப்பாஸ், 5. முகம்மது ரபீக், 6. அப்துல் ரவுப், 7. அஷ்ரப், 8. பத்ருதீன் அலிமுகம்மது, 9. சாகுல் அமீது. விடுதலையான 9 பேரின் தண்டனை அடுத்த மாதம் முடிவடைய இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கைதிகள் விடுவிக்கப்படும் தகவல் கிடைத்ததும் அவர்களின் உறவினர்கள் அதிகாலையிலேயே ஜெயில் முன் குவிந்து இருந்தனர். கைதிகள் வெளியில் வந்ததும் கட்டித்தழுவி மகிழ்ச்சி தெரிவித்தனர். சில கைதிகள் ஆனந்த கண்ணீர் விட்டனர்.
விடுதலை குறித்து அஷ்ரப் கூறியதாவது:லி நாங்கள் ஒரு வாரத்தில் தண்டனை காலம் முடிந்து விடுதலை ஆகிவிடுவோம். ஆனால் அண்ணா பிறந்த நாளில் விடுதலை செய்தோம் என அரசு கண் துடைப்பு செய்கிறது. மேலும் 65 பேர் உள்ளே இருக்கிறார்கள். அவர்களை விடுதலை செய்ய வேண்டியது தானே. இவ்வாறு அவர் கூறினார்.
சாகுல் அமீது கூறியதா வது:விடுதலை ஆகி குடும்பத் தினரை சந்திப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் இன்னும் 10 நாளில் விடு தலை ஆக வேண்டிய எங்களை அண்ணா பிறந்த நாளில் விடுதலை செய்தோம் என்பது சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. அதே போல் எங்களின் அமைப்பு விடுத்த கோரிக்கையின்படி யாரும் விடுதலை செய்யப் படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
படம்: கோவை தங்கப்பா













திருப்பூரில் த மு மு க. பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா, தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத், மற்றும் அனைத்து இயக்கம். ஜமாத். நிர்வாகிகள் 1500 பேர் கைதி செய்யபட்டார்கள் !!!

திருப்பூரில் 25-08-09 அன்று நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பள்ளிவாசல் மீதும் தொழுகைக்கு வந்த முஸலிம்கள் மீதும் கொலை வெறி தாக்குதல் நடத்திய இந்து முன்னணியை கண்டித்தும், இதன் தொடர்ச்சியாக காவல்துறையினர் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களையும், வயதான முதியவாகளையும், இரவு நேரத்தில் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து கைது செய்த காவல்துறையை கண்டித்து. 14 -09 -09 அன்று மாலை 3- 30 மணிக்கு திருப்புரில் மாநகராட்சி முன்பு மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் த மு மு க, மனிதநேயமக்கள்கட்சி, தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, சோசியல் டெமாக்கிரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா, ஜமாஅத்தே இஸ்லாமிய ஜமாத், மக்கள் ஜனநாயக கட்சி,நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள், இந்த ஆர்பாடட்த்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதானல் அனைவருரையும் கைதி செய்து. திருமண மண்டபத்தில் வைக்கபட்டு பிறகு மாலை 7 மணிக்கு பிறகு அனைவரையும். விடுதலை செய்யபட்டது. இதற்கான ஏற்பாடுகளை அனைத்து இஸ்லாமிய இயக்க ஜமாத் கூட்டமைப்பு என்ற பெயரில் ஆர்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, இந்த கூட்டத்தில் த மு மு க. திருப்பூர் மாவட்ட தலைவர் ஹாலிதீன் தலைமையில் சுமார் 1500 பேர் கலந்து கொண்டனர். இந்த ஆர்பாட்டத்திற்கு கோவையில் இருந்து த மு மு க மாவட்ட தலைவர் முஹம்மது பஷிர், செயலாளர் ரபிக், மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட பொருளாளர் அப்பாஸ், கவிஞர் ஹக், இளைஞர் அணி செயலாளர் அப்பாஸ், திருப்பூர் மாவட்ட மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஹைதர் அலி, ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.
செய்தி : புகைப்படம். கோவை தங்கப்பா


















Monday, September 14, 2009

கோவை மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
சார்பாக 2000 க்கும் மேற்பட்ட நோன்பாளிகளுக்கு இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
கோவையில் 13 -09 -09 அன்று மாலை 5-00 மணிக்கு கோவை சங்கமம் திருமண மண்டபத்தில். கோவை மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக ரமளானில் நோன்பு நோற்று இருக்கும் நோன்பாளிகளுக்கு இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் இஸ்லாமிய சகோதரர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்ச்சியில் . கோவை மாவட்ட தலைவர் அப்துல் நாசர் அவா்கள் தலைமையில் கேரளா கிரீன் வேலி அகாடமியின் முதல்வர் மெளலவி அப்துர் ரஹ்மான் பாகவி அவர்களும். சேலம் நூருல் இஸ்லாம் அரபிக் கல்லூரி பேராசிரியர் மெளலவி முஹம்மது அபூதாஹிர் பாகவி அவாகள் தக்வா என்ற தலைப்பில் பயான்னும். கோவை சிறைவாசி விடுதலைக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் என்ன பங்கு என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்தினர்கள். இறுதியில் தெற்கு பகுதி செயலாளர் அப்துல் காதர் நன்றியுரை நிகழ்த்தினர். பிறகு நோன்பு திறக்கும் நேரத்தில். கஞ்சி மற்றும் பழ வகைகள். கொடுக்கபட்டது. மஹரிப் தொழுகைக்கு பிறகு பிரியாணி விருந்து கொடுக்கபட்ட்து. விருந்து முடிந்ததும். சுதந்திரதின அணிவகுப்பு குறுந்தகடு ஒளிபரப்பட்டது.








Saturday, September 12, 2009

கோவை மாவட்ட தேசிய பெண்கள் முன்னணி சார்பாக இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி 1500க்கு மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டார்கள்.
கோவையில் 12-09-09 அன்று மாலை 4-45 மணிக்கு சங்கமம் திருமண மண்டபத்தில் தேசிய பெண்கள் முன்னணி சார்பாக ரமளானில் நோன்பு நோற்று இருக்கும் நோன்பாளிகளுக்கு இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் இஸ்லாமிய சகோதரிகள் பெருந்திரளாக கலந்து கொண்டார்கள். இந்தி நிகழ்ச்சிக்கு கோவை மாவட்ட தலைவர். சகோதரி ஹபீப் நிஷா தலைமை தாங்கினர். சிறப்புரையாக தேசிய துணைத் தலைவர் சகோதரி. பெனாசீர் மற்றும். மெளலவி. சையது இப்ராஹிம் உஸ்மானி அவர்களும். தமிழ்மாநில துனைத்தலைவர் சகோதரி. ஆயிஷா சித்திகா ஆகியோர்கள் சிறப்புரையாற்றினர்கள். இறுதியாக சகோதரி. பர்ஸானா நன்றியுரை நிகழ்திதினர். நிகழ்ச்சி முடிந்தயுடன் பெண்களுக்கு நோன்பு திறக்க ஏற்பாடும் அனைவருக்கும் பிரியாணி. மற்றும் நோன்பு கஞ்சி பழம் வகைகள் கொடுக்கப்பட்டது. இதற்கனான ஏற்பாடுகளை கோவை மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் கோவை மாவட்ட சோசியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா நிர்வாகிகள் ஏற்பாடு செய்தார்கள். செய்தி: புகைப்படம். கோவை தங்கப்பா











Friday, September 11, 2009

ராகுல் காந்தி சுற்றுப்பயணம் காங்கிரஸ் தமிழகத்தில் புத்துயிர் பெறுமா?
கோவை செப் 18
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்தும் நோக்கில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல தரப்பினரையும் சந்தித்து தமிழக மக்களின் மன நிலையை அறிந்து சென்றுள்ளார்.
கடந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்காக திருச்சி மற்றம் சிவகங்கை வந்த ராகுல் காந்தி, தன்னுடைய தந்தை ராஜீவைப் போன்றே தாமும் தமிழகத்தை நேசிப்பதாகவும் தேர்தலுக்குப் பின் தமிழகத்தில் காங்கிரசை வலுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடுவேன் என்றும் கூறிச் சென்றார். தன்னுடைய கவனம் முழுவதும் உத்திரப் பிரதேசத்திலேயே இருந்ததாகவும் இனி தமிழகத்தின் பக்கமும் தன் கவனத்தைச் செலுத்துவேன் என்றும் அவர் கூறியிருந்தார். கூறியவாறே அவரின் தமிழக சுற்றுப் பயணமும் அமைந்தது.
இந்தியாவிலேயே காங்கிரசுக்கு அதிக கோஷ்டிகள் உள்ள மாநிலம் என்ற பெருமை தமிழகத்திற்கு உண்டு. 5 ஆண்டுகள் தமிழக காங்கிரஸ் தலைவராக நீடித்திருப்பதே பெரும் சாதனை என்ற அளவிலேயே தமிழகத் தலைமை இருந்து வருகிறது. மூப்பனார், வாழப்பாடி இராமமூர்த்தி, குமரி அனந்தன், திண்டிவனம் இராமமூர்த்தி, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், இரா. அன்பரசு, ஜி.கே. வாசன், கிருஷ்ணசாமி, கே.வி. தங்கபாலு என கடந்த 20 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர்களாக இருந்தவர்களின் பட்டியல் நீளுகிறது. ஒவ்வொருவரும் தாங்கள் தலைவர்களாக நியமனம் பெற்றவுடன் தமக்கு முன் இருந்தவர்களின் விசுவாசிகளை கட்டம் கட்டுவது, தமது ஆதரவாளர்களை வளர்த்து விடுவது என கட்சியைப் பிளவுபடுத்துவதிலேயே குறியாக இருந்து வந்துள்ளனர்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 10 சதவீத ஆதரவு இருக்கிறது. இதில் பெரும்பாலானவர்கள் வயதானவர்களே. தமிழக இளைஞர்கள் காங்கிரஸ் கட்சியின் கோஷ்டிப் பூசலில் வெறுப்புற்றிருப்பதால் இளைஞர்களிடையே கட்சிக்கு ஆதரவு இல்லை. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியுடன் இளைஞர் காங்கிரஸையும் தன் பொறுப்பில் வைத்திருக்கும் ராகுல், இளைஞர்களை கட்சியில் இணைப்பதில் பெரிதும் ஆர்வம் காட்டி வருகிறார். தமிழக சுற்றுப் பயணத்தின்போது கட்சியினரை மட்டுமின்றி, கல்லூரி மாணவர்களையும் சந்தித்து உரையாடி இருக்கிறார். இந்தக் கூட்டங்களில் அவர் கூறியதாகக் கூறப்படும் கருத்துகள் தமிழகத்தின் நிலையை அவர் புரிந்து கொண்டுள்ளதை உறுதி செய்கிறது.
இனி காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கட்சித் தலைமையால் தேர்ந்தெடுக்கப்பட மாட்டார்கள். கிராம கமிட்டி தேர்ந்தெடுத்து அளிக்கும் வேட்பாளர்களையே கட்சித் தலைமை இறுதி செய்யும் என்று கூறியுள்ளார். இது படித்த இளைஞர்களிடையே புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவிலில் மீனவர்களைச் சந்தித்து அவர்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளைக் கேட்டறிந்த ராகுல், நெல்லையில் பீடித் தொழிலாளர்களையும், தஞ்சையில் விவசாயிகளையும், வேலூர் மற்றும் சென்னையில் மாணவர்களுடன் கலந்துரையாடியதையும் சுட்டிக்காட்டும் அரசியல் நோக்கர்கள், ராகுல் தேர்ந்த அரசியல்வாதியாக ஆகிவிட்டதாகவே கருதுகின்றனர்.
நேரு குடும்பம் மீது தமிழக மக்களுக்கு இருக்கும் அன்பு தற்போது ராகுல் வருகை மூலம் மீண்டும் உறுதி செய்யப்படுவதைப் போன்று, அவர் சென்ற இடங்களிலெல்லாம் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.
சென்ற முறை மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்தபோது, காங்கிரஸ் தலைவர்கள் தமிழகம் வரும்போதெல்லாம், கூட்டணியின் முக்கியத் தலைவர் என்ற முறையில் முதல்வர் கருணாநிதியை சந்திப்பது என்பது வழக்கமாகி இருந்தது. பல தலைவர்கள் கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு போவதைவிட கருணாநிதியை சந்திப்பதை முக்கியமாகக் கருதினார்.
ஆனால் ராகுலோ முதல்வரை மரியாதை நிமித்தமாக சந்திப்பது கூட அக்கட்சிக்கு தேவையில்லாத முக்கியத்துவம் அளித்து, அகில இந்திய அளவில் பத்திரிக்கைகளில் வரும் என்பதை உணர்ந்து தான் சந்திப்பதை தவிர்த்து இருக்கிறார் என்பது அரசியல் ஆய்வாளர்களின் கணக்கு.
பிற காங்கிரஸ் தலைவர்கள் போல் நாங்கள் ஆட்சியை பிடிப்போம், காமராஜர் ஆட்சியை அமைப்போம் என்றெல்லாம் பேசாமல், ஏன் காங்கிரஸ் ஆட்சி அமைக்க முடியவில்லை என்ற அடிப்படையான கேள்விக்கு விடை காணும் விதமாகத் தான் அவருடைய பேட்டிகள், சுற்றுப் பயணங்கள், செயல்பாடுகள் அமைந்திருந்திருந்தது. இது அவர் கற்று வரும் அரசியல் பக்குவத்தைக் காட்டுகிறது.
ஆக, முக்கியத் தலைவர் தமிழகம் வந்தார் சென்றார் என்றில்லாமல், "இனி அடிக்கடி வருவேன்; எல்லோரும் செயல்படுவோம்" என்ற செய்தியை இச்சுற்றுப் பயணத்தின் மூலம் காங்கிரஸ் கோஷ்டிகளுக்கு விட்டுச் சென்றிருக்கிறார். ராகுலின் நிகழ்ச்சியில் இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்துக் கொண்டது தமிழக முக்கிய அரசியல் கட்சிகளிடையே கலக்கத்தை உருவாக்கியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
தமிழக இளைஞர்களை காங்கிரஸ் கட்சியில் இணைக்க பரவலாக ஆங்காங்கே வித்துகளை ஊன்றிச் சென்றுள்ளார். தொடர்ந்து நீர் பாய்ச்சினால் வளர்ந்து செழிக்க வாய்ப்புண்டு. காங்கிரஸ் தமிழகத்தில் புத்துயிர் பெறுமா? என்பதை அடுத்த சில மாதங்களின் நிகழ்வுகள் நமக்கு உணர்த்திவிடும்
.
கோவை தங்கப்பா

Thursday, September 10, 2009

கோவை மாநகர இந்திய யூனியன் முஸ்லிம்லீக்
சார்பாக
இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி
அஸ்ஸலாமு அலைக்கும்
கோவை மாநகர இந்திய யூனியன் முஸ்லிம்லீக் சார்பாக,
இன்ஷா அல்லாஹ் வரும் 13-09-2009 ஞாயிற்றுக்கிழமைமாலை 4:30
மணியளவில்
கோவை கரும்புக்கடை ஜே. பி .மஹால் திருமண மண்டபத்தில் வைத்து கோவை மாவட்ட செயலாளர் ஹாஜி .பி எஸ். எம். உசேன் அவர்களின் தலைமையில்
இப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு அழைப்பாளர்கள் ஜனாப். காயல் மஹபூப்
அவாகள் கொள்கைப் பரப்பு மாநிலச்
செயலாளர்மாநில இந்தியா யூனியன் முஸ்லிம் லீக் ஜனாப் . கே.எம்.நிஜாமுத்தின் அவர்கள்இளைஞரணி மாநில அமைப்பாளர் மாநில இந்தியா யூனியன் முஸ்லிம் லீக்கோவை மாவட்ட,மாநகர,பிரைமரி,மற்றும் இளைஞர் அணி, துனை அமைப்புகளின் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள்,தாய்சபையின் சகோதார்கள் கலந்து சிறப்பிக்கின்றனர்.இஃப்தார் நிகழ்ச்சி
ஏற்பாடுஜனாப். பி. முஹம்மது பஷிர். பி. அப்துல் கபூர்.எம்.சிராஜ்தீன். ரஹ்மத்துல்லா வப்பு

Sunday, September 6, 2009

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
ஓ..... சமுதாயமே...... இவர்களுக்காக.....துஆ செய்யுங்கள்!!!
இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது என்றென்றும் நின்று நிலவட்டுமாக‚ அஸ்ஸலாமு அலைக்கும்.தமிழக அரசால் விடுதலை மறுக்கப்பட்டுள்ள முஸ்லிம் ஆயுள் தண்டனை சிறைவாசிகளின் விடுதலைக்காக குரல் கொடுத்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் இதயம் கனிந்த நன்றிகள் பல.தொடர்ந்து வருகின்ற 15.09.2009 அண்ணா நூற்றாண்டு நிறைவு நாள் பிறந்த நாளில் விடுதலை மறுக்கப்பட்ட அனைத்து முஸ்லிம் ஆயுள் தண்டனை சிறைவாசிகளுக்கும் விடுதலை பெற்றுத் தர வேண்டுகிறோம். தங்களின் பார்வைக்காக சிறைவாசிகள் தொடர்பான தகவல்களை முன்வைக்கின்றோம்.கடந்த வருட அண்ணா நூற்றாண்டு பிறந்த நாளின் போது 'முஸ்லிம் ஆயுள் தண்டனை கைதிகளை' விடுதலை செய்திட குரல் கொடுத்த மனித நேயம் கொண்ட நல் உள்ளங்களுக்கு எங்கள் நன்றிகள் பல.ஒட்டு மொத்த சமுதாய அமைப்புகளின் கோரிக்கையையும் அரசு நிராகரித்த நிலையில் நடந்து முடிந்த 15-வது மக்களவைத் தேர்தலில் தொடர்ந்து இக்கோரிக்கையை சமுதாய இயக்கங்கள் அரசிடம் முன் வைக்கும் என எதிர்பார்த்திருந்தோம். பனிரெண்டு ஆண்டுகளாக தொடர் சிறைவாசத்தில் வைத்து, விடுதலை மறுப்பை அதிகார வர்க்கம் நியாயப்படுத்திக் கொண்டிருக்கையில் முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலை கோரிக்கை மூடி மறைத்து பேச வேண்டிய விஷயம் அல்ல. பயங்கரவாத ஆதரவுப்பேச்சுகள் பகிங்கரமாகப் பேசப்படும் தமிழகத்தில் . . . . சமநீதி மறுக்கப்பட்டு, பாரபட்சம் காட்டப்பட்டு அநீதியிழைக்கப்பட்ட முஸ்லிம் சிறைவாசிகளுக்காக உரத்து குரல் கொடுப்பதும், கோரிக்கையை வென்றெடுப்பதும் சமநீதி மற்றும் மனித நேயம் விரும்பும் அனைவரின் மீதும் கடமையும் பொறுப்புமாகும்.முதலில் . . . . 'அநீதியிழைக்கப்பட்டவர்களின் பிரச்சனைகளை செவிமடுப்பதும்; புரிந்து கொள்வதும் அவர்கள் அவ் அநீதியிலிருந்து பாதிவிடுபட்டதற்கான அறிகுறியாகும்'எனவே, பின்வரும் முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலை தொடர்பான நியாயங்களை கூர்ந்து (படிக்க) கவனிக்க வேண்டுகிறோம். 1. பொதுவாக ஒரு மாநில அரசு தமக்குள்ள அதிகாரத்தை கொண்டு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட சிறைவாசிகளின் தண்டனையை குறைக்கவும், ரத்து செய்திடவும், தண்டனையை நிறுத்தி வைத்திடவும், மற்றும் விடுதலை செய்திடவும், அதிகாரம் பெற்றுள்ளது. மாநில அரசின் அதிகாரத்தை நடைமுறையில் இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள . . . நீதிமன்றத்தால் மனித சமூகத்தில் வாழத் தகுதியற்றவர்கள் என தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளைக் கூட இதே தி.மு.க. அரசு 1975 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் தோழர்கள் மற்றும் மனித உரிமை அமைப்பினர் கலைஞரை நேரடியாக சந்தித்து முன்வைத்த வேண்டுகோளை ஏற்று தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டு விடுதலை அளிக்கப்படுகிறது. (காண்க : முரசொலி – 2008 ஜூன் நாளிதழில்)இவ்வாறான தமக்குள்ள அதிகாரத்தைக் கொண்டே தமிழக அரசு வளமையாக 10 பத்து வருடம் நிறைவு செய்த ஆயுள் தண்டனை கைதிகளை செப்டம்பர் 15-ல் விடுதலை செய்து வந்தது; இவ்வருடம், அண்ணா நூற்றாண்டு பிறந்த நாள் என காரணம் கூறி 10 வருடத்தை 7 வருடமாக குறைத்து 1405 கைதிகளை செப்டம்பர் 15, 2008-ல் விடுதலை செய்தது. 2. இவ்வாறு வளமையாக அனைத்து ஆயுள் தண்டனை கைதிகளையும் விடுதலை செய்து வந்த மாநில அரசு ‘All India Committees On Prison Reforms” குழுவின் பரிந்துரைப்படி அரசாணை எண். 1762 – dated: : July1987 ஆம் ஆண்டு ஒரு அரசாணை வெளியிட்டது. அவ்வரசாணைப்படி குறிப்பிட்ட Indian Penal Code குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்ட கைதிகளை அண்ணா பிறந்தநாள் முன்கூட்டிய விடுதலையில் ; (Premature Release) விடுதலை செய்வதில்லை.அந்த 1762ஃ1987 அரசாணையில் முன்கூட்டிய விடுதiயில் தகுதி அற்ற எந்த IPCபிரிவின் கீழும் நாம் கோரிக்கை எழுப்பிவிடும் முஸ்லிம் சிறைவாசிகள் தண்டிக்கப்படவில்லை. ஆகவே, முஸ்லிம் சிறைவாசிகள் அனைவருமே அரசாணை 1762ஃ87ன் படி செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாள் விடுதலைக்கு தகுதி பெற்றவர்கள் என்பதனை கவனத்தில் கொள்ளவும்.3. குறிப்பாக ஒன்றை கவனிக்கவும் :- அரசாணை 1762ஃ87இன் படி முன்கூட்டிய விடுதலையில் தகுதி அற்ற IPC224 பிரிவின் கீழ், தண்டனை பெற்ற ஆயுள் தண்டனை கைதிகளைக் கூட தமிழக அரசு 50-வது சுதந்திர பொன் விழா (1997ம் ஆண்டு) மற்றும் கலைஞர் சட்டப்பேரவை பொன்விழா (2007ம் ஆண்டு) ஆகிய தினங்களில் தனி அரசாணை வெளியிட்டு விடுதலை செய்கிறது.ஆனால் அரசாணை 1762ஃ87இன்படி விடுதலைக்கு தகுதி பெற்றிருந்த முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலையை தனி வழிமுறையைக் கையாண்டு தடை செய்தார்கள். (அதனை தொடர்ந்து காண்போம்.4. வளமையாக தமிழக அரசு அரசாணை 1762ஃ87ல் குறிப்பிடப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு மட்டுமே அண்ணா பிறந்த நாள் விடுதலையை மறுத்து வந்ததையும், அந்த அரசாணை 1762ஃ87 முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலையை தடை செய்யாது என்பதனையும் முன்னர் பார்த்தோம்.புதிய விதியின் பெயரால் செய்யப்பட்ட சதியை இங்கு காண்போம்:அண்ணா நூற்றாண்டு பிறந்த நாளுக்கு முன்பாக அதாவது 99-வது அண்ணா பிறந்த நாளில் (2007ம் ஆண்டு) 10 வருடம் பூர்த்தியாகி விடுதலைக்கு தகுதி பெற்றிருந்த திரு. ஜாகீர் உசேன், தண்டனை எண். 10431 மற்றும் திரு. அபுத்தாஹீர் தண்டனை எண். 10429 ஆகிய திருச்சி மத்திய சிறையிலிருந்த இரு முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலையை தடைசெய்யும் நோக்கில் அப்போதைய சிறைத்துறை கூடுதல் இயக்குநர் (ADGP) R. சேகர் அவர்கள் விடுத்த வேண்டுகோள் கடிதத்தின் படி (கடித எண். 39712/PSI/2007 dated: 10.09.2007 ) உள்துறை செயலாளர் ளு. மாலதி அவர்கள் அளித்த ஒப்புதல் பதில் கடிதத்தின்படி (கடித எண். 84962/Pri IV/2007 – 2 Dated: 12.09.2007) மேற்குறிப்பிடப்பட்ட இரு முஸ்லிம்களும் ‘Communal”வழக்கில் உள்ளவர்கள் எனக்கூறி விடுதலை மறுக்கப்படுகிறது. 99 ஆவது அண்ணா பிறந்த நாள் விடுதலை உத்திரவு மாலதி அவர்கள் அளித்த ஒப்புதல் கடித தேதியில் தான் வெளியிடப்படுகிறது என்பதனை கவனிக்கவும். (காண் : அரசாணை Dated: : 12.09.2007 இவ்வுத்தரவில் எங்கும் Communalவழக்கு விடுதலைக்கு தகுதி அற்றது என குறிப்பு இல்லை)5. இவ்வாறு 2007 ஆம் வருடம் இரு முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலை மறுக்கப்பட்ட நிலையில் . . . 2008 அண்ணா நூற்றாண்டு பிறந்த நாளில் 69 முஸ்லிம் ஆயுள் தண்டனை சிறைவாசிகள் விடுதலைக்கு தகுதி பெறுவதால் . . ; அவர்களின் விடுதலையையும், எப்படியும் தடைசெய்தே தீர வேண்டும் என்ற நோக்கில் முதலில் உள்துறை செயலாளர் மாலதி அவர்கள் சிறைத்துறை கூடுதல் இயக்குநர் (ADGP) அவர்களுக்கு ‘ARMS AND EXPLOSIVE ACT” வழக்குளை முன்கூட்டி விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரமில்லை' என்று 2008 ஏப்ரல் மாதம் ஒரு Circular அனுப்பி வைக்கிறார். இதன்படி ARMS AND EXPLOSIVE வழக்கில் தண்டிக்கப்பட்ட வெறும் 42 முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலையை மட்டுமே நிறுத்த முடியும் என்பதால் ; மொத்தம் உள்ள 69 முஸ்லிம்களின் விடுதலைiயும் தடைசெய்யும் நோக்கில் மற்றொரு வழிமுறை கையாளப்படுகிறது. தொடர்ந்து அதனை (6)ல் காண்க. . . . (அதற்கு முன்பாக ஒரு ஒப்பு நோக்கல்: - இதே அரசு ARMS AND EXPLOSIVE ACT- இல் பதியப்பட்ட தென்மாவட்ட ஜாதிய வழக்குளை வாபஸ் பெற அதிகாரம் பெற்றிருந்தது. ஆனால், இன்று நீதிமன்ற தீர்ப்பிற்கு பின் தண்டனைக்கு மேல் தண்டனை பெற்று அரசு விடுதலை அளிக்க வேண்டிய சூழலில் அதிகாரம் இல்லை என சுற்றறிக்கை அனுப்பப்படுகிறது)6. மொத்த முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலையையும் அண்ணா நூற்றாண்டு பிறந்த நாளில் 15.07.2008 தடை செய்திடும் நோக்கில் சிறைத்துறை கூடுதல் இயக்குநர் (ADGP) அலுவலகத்திலிருந்து அனைத்து மத்தியசிறை கண்காணிப்பாளர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்படுகிறது. அதில் 'அண்ணா பிறந்த நாள் போன்ற முன்கூட்டிய விடுதலையில் Communalவழக்குகளை விடுதலைக்கு பரிந்துரை (கூட) செய்திடக்கூடாது' என்று உள்ளது. (காண்க : No. 27761/PSI/ 2008 Dated: 06.08.2008)இந்த சுற்றறிக்கையின்படி நாம் விடுதலை கோரிக்கை எழுப்பிய அனைத்து முஸ்லிம் சிறைவாசிகளின் வழக்குகளும் Communalஎன குறிப்பிடப்பட்டு விடுதலை மறுக்கப்படுகிறது. Communalவழக்கில் இல்லாத பல முஸ்லிம் வழக்குகளும் Communalஎனக் குறிப்பிட்டு விடுதலை மறுக்கப்;படுகிறது.
அதே வேளையில் தி.க. (நாத்திக) பிரமுகர்களை கொன்ற வழக்கில் தண்டிக்கப்பட்ட இந்துத்துவவாதிகளான கிருஷ்ணன் தஃபெ. ராமசாமி, தண்டனை எண். 75515, சக்திவேல் மற்றும் முருகேஷ் ஆகியோர் எவ்வித Communalதடையும் இன்றி கோவை மத்திய சிறையிலிருந்து அண்ணா நூற்றாண்டு பிறந்த நாளில் விடுதலை செய்யப்பட்டனர்.இங்கு குறிப்பாக கவனித்திட வேண்டியது, இந்த புதிய Communalஎன்ற விதிமுறையின் பெயரால் தமிழகம் முழுவதும் உள்ள மத்திய சிறைகளில் விடுதலை மறுக்கப்பட்டவர்கள் முஸ்லிம் சிறைவாசிகள் மட்டுமே. எனவே, இச்சுற்றறிக்கை முழுக்க, முழுக்க முஸ்லிம்களின் விடுதலையை தடைசெய்திடவே அனுப்பப் பட்டிருக்கிறது. சுற்றறிக்கையின் விபரீதத்தை உணர்ந்த நாம் பேராசிரியர் அ. மார்க்ஸ் அவர்களின் தலைமையில் கோவையில் 25.08.2008 அன்று சுற்றறிக்கையை திரும்பப் பெறக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினோம். மேற்கொண்டு இதன் விபரீதத்தை இஸ்லாமிய இயக்கங்களுக்கும் தெரியப்படுத்தியிருந்தோம். 7. இவ்வாறு 11 ஆண்டுகளாக சிறையிலிருந்த முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலை பரிசீலனைக்கு கூட எடுக்கப்படாமல் விடுதலை மறுக்கப்பட்ட நிலையில் . . . தமிழகத்தின் அனைத்து மத்திய சிறைகளிலிருந்தும் 7வருடம் மட்டுமே பூர்த்தி செய்திருந்த 1405 ஆயுள் தண்டனை சிறைவாசிகள் 15.09.2008 அண்ணா நூற்றாண்டு பிறந்த நாளில் விடுதலை செய்யப்படுகின்றனர்.மிகக் குறைந்த வருடம், தி.மு.க. கட்சியினர் விடுதலை, லீலாவதி கொலையாளிகள் உள்பட பெரும் அளவில் ஆயுள் கைதிகள் விடுதலை என பல்வேறு வகையில் விமர்சனங்களை கம்யூனிஸ்ட், அ.தி.மு.க. மற்றும் பிற கட்சியினர் வெளியிட்ட போது தமிழக முதல்வர் வெளியிட்ட பதில் அறிக்கைகள் நம் கவனத்திற்குரியவைஅறிக்கையின் சாராம்சம் : 'நான் கட்சி பாகுபாடு எதையும் பார்த்திடவில்லை. லீலாவதி வழக்கில் உள்ளோர் தி.மு.க.வினர் என்பதற்காக உள்ளேயே வைத்திட முடியாது. விடுதலைக்கு தகுதி பெற்ற அனைத்து கட்சிக்காரர்களையும் விடுதலை செய்திருக்கின்றேன். லீலாவதி கொலையாளிகளை அரசாணை 1762ஃ87-இன் படியும் கருணையின் அடிப்படையிலும் விடுதலை செய்திருக்கின்றேன்' (காண்க: 17.09.2008 அனைத்து நாளிதழ்களிலும்)கட்சிப் பாகுபாடின்றி அரசாணை 1762ஃ87-இன்படி தகுதி பெற்ற அனைவரும் விடுதலை செய்யப்பட்டதாகச் சொல்லும் கருணாநிதி அவர்கள், அதே அரசாணைப்படி முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலைக்கு தகுதி பெற்றிருந்தும் Communalஎன்ற பாகுபாடு காட்டப்பட்டது ஏன்? 7வருட சிறைவாசிகள் கருணையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்ட போது, கோவை மத்திய சிறையில் 11 வருடங்களாக உள்ள ஆயுள்தண்டனை கைதி (எண். 1748) அபுத்தாஹீர் இரு சிறுநீரகங்களும் பழுதடைந்து படுத்த படுக்கையாக இருந்தபோதும் விடுதலை மறுக்கப்பட்டது ஏன்? மனநோயாளியாக இருந்து வரும் ஹைதர் அலி 14 வருடங்களை கடந்தும் விடுதலை செய்யப்படாமல் தண்டிக்கப்பட்டுக் கொண்டிருப்பது ஏன். . . ?மேலும் 1405 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை தொடர்பாக 2008 அக்டோபர் மாத நாளிதழ்களின் விமர்ச்சனம் செய்த ஜெயலலிதாவுக்கு கலைஞர் அளித்த பதில் அறிக்கை . . . .'கைதிகளை விடுதலை செய்வது என்பது பல்வேறு மாநில அரசிலும் நடைபெற்று வரும் ஒரு நடைமுறை. மேற்கு வங்க அரசு பயங்கரவாதிகள், நக்ஸலைட்டுளை விடுதலை செய்துள்ளது. மராட்டிய மாநில காங்கிரஸ் அரசு மகாத்மா காந்தி படுகொலைகாரன் கோபால் கோட்சேவை விடுதலை செய்துள்ளது. நானும் தூக்கு தண்டனை கைதிகளான நக்ஸலைட்டுகளை 1975ம் ஆண்டு விடுதலை செய்துள்ளேன்'. இவ்வாறு மாநில அரசின் அதிகாரத்தை ஆதாரத்துடன் பட்டியலிடும் கலைஞர் அரசு; அதே அதிகாரத்தை முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலையை தடைசெய்திட பயன்படுத்தியது ஏன் . . ? இப்படி பல ஏன்? என்ற கேள்விகளை நாம் அரசை நோக்கி எழுப்பினாலும் . . . இந்த பிரச்சனையை எந்த அளவிற்கு இஸ்லாமிய இயக்கங்கள், கட்சிகள் கையாண்டிருக்கிறது? இனி எவ்வாறு கையாளப் போகிறது என்பதில் தான் முஸ்லிம் சிறைவாசிகள் மீது ஆட்சியாளர்களின் அநீதி தொடரப்போகிறதா? அல்லது முற்று பெறப் போகிறதா? என்பதன் பதில் தங்கியிருக்கிறது.8. தனது கூட்டணி அரசியலுக்கு பா.ம.க. தேவை இல்லை எனும்போது குருவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்கிறது. அதனை அறிவுரை கழகம் (நீதிபதிகள் குழு) உறுதி செய்து, பின்னர் உயர்நீதிமன்றமும் உறுதி செய்த நிலையில்; அதே பா.ம.க.வை தம் பக்கம் இழுக்க தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்து குருவை விடுதலை செய்கிறது கலைஞர் அரசு.கலைஞர் அரசே கதி என காலமெல்லாம் கிடந்த போதும் ஒட்டு மொத்த முஸ்லிம் அமைப்புகள், கட்சிகளின் அண்ணா நூற்றாண்டு பிறந்த நாள் விடுதலை கோரிக்கை ரத்து செய்யப்படுகிறது.கீழ் நீதிமன்றம், உயர் நீதிமன்றம் மற்றும் உச்சநீதி மன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 'மகாலிங்க நாடார்' என்ற தனிநபருக்காக நாடார் சமூகமே திரண்டெழுந்ததால் 1989-இல் கோவை மத்திய சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுகிறார்.இன்னும் மாநில அரசுகள் இது போன்று கைதிகளை விடுதலை செய்திடும் விஷயத்தில் 'பாரபட்சம் காட்டிடக் கூடாது' என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் : S. B. சின்ஹா, ஹர்ஜித் சிங் பேடி ஆகியோர் 02.11.2007இல் அரியானா அரசு தொடுத்த வழக்கில் தீர்ப்பளித்தது. நாம் உதாரணத்திற்காக சில ஆதாரத் தகவல்களையே முன்வைத்துள்ளோம். எல்லா வகையிலும் முஸ்லிம் சிறைவாசிகள் அநீதியிழைக்கப்பட்டுள்ளனர்.எனவே, வருகின்ற அண்ணா பிறந்த நூற்றாண்டு நிறைவு நாளில் (15.09.2009) COMMUNALஎன்ற காரணம் கூறியும், ARMS And EXPLOSIVE என்ற காரணம் கூறியும் விடுதலையை தடை செய்திடாமல் இருக்க தமிழக முதல்வரை நேரில் சந்தித்து முஸ்லிம் சிறைவாசிகளுக்கு விடுதலை பெற்றுத் தர வேண்டுகிறோம்.9. இன்னொரு தந்திரமாக அதிகாரவர்க்கம் மேற்கொள்ளும் சிக்கலையும் கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்.முஸ்லிம் சிறைவாசிகளை எந்த வகையிலும் விடுதலை செய்திடக் கூடாது என முழு முனைப்பை காட்டி வருவது காவல்துறை தான். இது வரை ஏற்பட்டுள்ள தடைகளுக்கும் அவர்களே முழு முதற்காரணம்.பொதுவாக விடுதலைக்குரிய கைதிகள் குறித்த அறிக்கை அந்தந்த சிறைகளிலிருந்தும், சிறைவாசிகள் குடியிருக்கும் பகுதியில் உள்ள காவல் நிலையத்தாரிடமும் மற்றும் Professional Officer – நன்னடத்தை அலுவலரிடமும் கோரப்படும். இவ் அறிக்கைகள் பாதகமாக இருப்பின் விடுதலையை தடைசெய்யலாம். ஆனால் அரசு விடுதலையை நிர்ணயித்து விட்டால் அதற்கு ஏதுவாகவே மேற்குறிப்பிட்ட அறிக்கைகள் அனுப்பிட அனைத்து துறையும் ஒத்துழைக்கும்.ஆனால் முஸ்லிம் சிறைவாசிகள் விஷயத்தில் ஒரு புறம் அரசு COMMUNAL, ARMS And EXPLOSIVE என விடுதலையை மறுக்க் மறுபுறம் காவல்துறை, சிறைத்துறை மற்றும் Professional Officers ஆகியவற்றிலிருந்து பாதகமான அறிக்கைகளே முஸ்லிம் சிறைவாசிகள் விஷயத்தில் வழங்கப்பட்டது. 2008 செப்டம்பர் 15-ல் முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை மறுக்கப்பட்டது குறித்து தமிழக முதல்வரை நேரில் சந்தித்த தமிழகத்தை சேர்ந்த முக்கிய பிரமுகரிடம் 'காவல்துறை, சிறைத்துறை அறிக்கைகள் பாதகமாக வந்துள்ளதால் அரசு ஒன்றும் செய்திட இயலாது' என்ற பதில் அளிக்கப்பட்டிருக்கிறது. ஒரு சமயம் அதிகார வர்க்கம் ஏற்படுத்தியுள்ள COMMUNAL, ARMS And EXPLOSIVE என்ற தடைகளை அரசு நீக்கினாலும் மேற்குறிப்பிட்ட பாதகமான அறிக்கைளால் விடுதலை செய்திட இயலவில்லை என காரணம் கூறிடலாம்.எனவே, எவ்வித நிபந்தனையுமின்றி 2007 மற்றும் 2008 அண்ணா பிறந்த நாளில் விடுதலை மறுக்கப்பட்ட அனைத்து முஸ்லிம் ஆயள் தண்டனை சிறைவாசிகளுக்கும் வருகின்ற அண்ணா நூற்றாண்டு பிறந்த நிறைவு நாளில் 15.09.2009 விடுதலை அளிக்க தமிழக முதல்வரை வலியுறுத்திட வேண்டுகிறோம்.
தமிழக சிறைகளில் உள்ள
விடுதலை மறுக்கப்பட்ட முஸ்லிம் ஆயுள் தண்டனை சிறைவாசிகள் : -(குண்டு வெடிப்பு வழக்கு சிறைவாசிகள்)வ. எண். பெயர் தண்டனை சிறைவாசி எண். மத்திய சிறை1. ஹைதர் அலி(மனநிலை பாதிக்கப்பட்ட 14 வருடங்களாக சிறையில் இருக்கிறார்) 6358 மதுரை2. எஸ்.ஏ. பாஷா 3244 கோவை 3. முஹம்மது அன்சாரி 10661 கோவை4. நவாப்கான் 10663 கோவை5. தாஜுதீன் 10662 கோவை 6. பாஷித் 10664 கோவை7. ஒஜீர் 10665 கோவை8. சித்திக் அலி 10667 கோவை9. முஹம்மது அலிகான் குட்டி 10666 கோவை10. ஊம்பாபு (எ) மஜீத் 3239 கோவை11. அப்துல் சலாம் 10672 கோவை12. அஸ்லம் 1485 கோவை13. சிராஜ் 10673 கோவை14. அப்பாஸ் 10674 கோவை15. சையது ஜபீர் அஹமத் 1484 கோவை16. இஸ்மாயில் 10675 கோவை17. ஜாபர் 10676 கோவை18. அம்ஜத் அலி 10677 கோவை19. அமானுல்லா 6580 20. ஜஹாங்கீர் 10678 கோவை21. முஹம்மது முத்து 10679 கோவை22. ஷர்புதீன் 6583 கோவை23. ஹக்கீம் டு.ஆ. 10680 கோவை24. அபுதாஹீர் 10681 கோவை25. முஹம்மது ரபி 10682 கோவை 26. நூர் முஹம்மது 10683 கோவை27.ஒஜீர் பாஷா 10684 கோவை28. இப்ராஹிம் பாபு 10685 கோவை29. ஹக்கீம் 10686 கோவை30. ஹக்கீம் 10687 கோவைவ. எண். பெயர் தண்டனை சிறைவாசி எண். மத்திய சிறை31. மோனப்பா (எ) அசன் 10711 கோவை32. அப்துல் ரஸாக் 10710 கோவை33. முஹம்மது ஆஜம் 10709 கோவை34. சாந்து முஹம்மது 10708 கோவை35. ர்pயாஸ் அஹமது 10707 கோவை36. சலீம் 10701 கோவை37. ஜுபைர் 3243 கோவை38. சையது முஹம்மது புகாரி 10717 கோவை39. முஜிபுர் ரஹ்மான் 10725 கோவை40. முஹம்மது அலி 10727 கோவை41. முஜிபுர் ரஹ்மான் 10728 42. ஜாகீர் உசேன் 1770 சென்னை புழல்43. அபூபக்கர் சித்தீக் 832 சென்னை புழல்44. காஜா நிஜாமுதீன் 843 சென்னை புழல்45. மூஸா 9400 பாளையங்கோட்டை(5) தாஜுதீன், (19) அமானுல்லாஹ், (45) மூஸா மூவரும் குண்டு வெடிப்பு வழக்கில் எவ்வித ஆயுத வெடிபொருள் சட்டத்தின் கீழும் தண்டிக்கப்படவில்லை
வ. எண். பெயர் தண்டனை சிறைவாசி எண். மத்திய சிறை46. யாசுதீன் 3287 கோவை47. இப்ராஹிம் 10900 கோவை48. ஆரூண் 10852 கோவை49. சம்சுதீன் 6582 கோவை50. ஹக்கீம் 6581 கோவை51. சலாவுதீன் 76888 கோவை52. அபுதாகீர் (இரு சிறுநீரகங்களும் செயலிழந்துடன் தொடர் சிகிச்சையில் உள்ளார்) நுNசு 1478 கோவை53. ரஹ்மத்துல்லாஹ் 7369 பாளையங்கோட்டை54. சித்தீக் 7368 பாளையங்கோட்டை55. சேக் ஜிந்தா மதார் 7370 பாளையங்கோட்டை56. ஷாஜஹான் 7367 பாளையங்கோட்டை57. இப்ராஹிம் சேலம் 58. ரிஸ்வான் சேலம்59. அபுதாஹிர் 10429 திருச்சி 60. ஜாகீர் உசேன் 10431 திருச்சிவ. எண். பெயர் தண்டனை சிறைவாசி எண். மத்திய சிறை61. அப்துல் காதர் (எ) உமர் பாரூக் 11997 திருச்சி62. ஆசிக் 4110 மதுரை63. முஹம்மது கான் 4429 மதுரை64. சாகுல் அமீது ழுது 29 சென்னை புழல்65. அப்துல் அஜீஸ் 841 சென்னை புழல்
7 வருடங்களுக்கு குறைவான ஆயுள் தண்டனை சிறைவாசிகள்வ. எண். பெயர் தண்டனை சிறைவாசி எண். மத்திய சிறை1. அபுதாஹீர் 4346 கோவை 2. சிராஜீதீன் 4348 கோவை3. ஷாஜஹான் 4349 கோவை4. மீரான் மொய்தீன் 4430 மதுரை5. இப்ராஹிம் ஷா 4056 மதுரை6. அஜீஸ் 4883 மதுரை
ஆயுள் தண்டனை பெற்றவர்கள் மொத்தம் : 71 பேர்விடுதலைக் கோரப்படும் மொத்த சிறைவாசிகள் : 65 பேர்
செய்தி வெளியீடு : கோவை தங்கப்பா

Saturday, September 5, 2009


அண்ணா நூற்றாண்டு நிறைவினையொட்டி சிறைக் கைதிகளை விடுவித்திடுக! திராவிட கழகத் தலைவர் கி. வீரமணி அறிக்கை!
அறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாஅண்ணா கொள்கைக்கு அண்ணா தி.மு.க. நாமம்!அய்யா, அண்ணா கொள்கை பரப்பும் தி.மு.க.வின் வேகம்!!
அண்ணா நூற்றாண்டு விழா குறித்தும், தி.மு.க. ஆட்சியில் சிறப்பாகக் கொண்டாடப்படுவது குறித்தும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தந்தை பெரியாரின் தலைமகனாம் அறிஞர் அண்ணா அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவிற்கு இன்னும் சில நாள்-களே உள்ளன என்ற நிலையில், அய்ந்தாம் முறையாக ஆட்சிப் பொறுப்பேற்று, பொற்கால ஆட்சியை நடத்திவரும் நமது மானமிகு சுயமரியாதைக்காரரான கலைஞர் அவர்கள் அண்ணாவிற்கு எப்படியெல்லாம் பெருமை சேர்க்க முடியுமோ அதனை நூற்றாண்டில் ஓராண்டாகவே செய்து வருகிறார்கள்.முதல்வர் தந்த இன்ப அதிர்ச்சி!
கடந்த ஆண்டு செப்-டம்பர் 15 அன்று ஒரு சிறப்பான கவியரங்கத்தோடு அண்ணா நூற்றாண்டு முதல்வர் தலைமையில் தொடங்கியபோது, அண்ணா அறிவித்த ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் திட்டத்தினை அறிவித்து, இந்தியாவையே இன்ப அதிர்ச்சிக்கு ஆளாக்கினார்!கோடானு கோடி ஏழை, எளிய மக்கள் இத்திட்டத்தாலும், 50 ரூபாய்க்கு மலிவு விலையில் 10 பல சரக்கு பொருள்கள் கிடைக்கவும் ஏற்பாடு திட்டத்தாலும், அறிஞர் அண்ணா எண்ணத்திற்கு செயல்வடிவம் கொடுத்து ஆக்க ரீதியாக அண்ணா விழாவைத் தொடங்கி வைத்தார்.
அப்போதும் பல கைதிகளை சிறையிலிருந்து விடுதலை செய்தார்கள்; அது பாராட்டத்தக்கதாகும்.
புதிய தலைமுறையினருக்கு துணை முதல்வரின் திட்டம்
துணை முதல்வர் மாண்புமிகு தளபதி மு.க. ஸ்டாலின், இளைஞர்கள், மாணவர்களிடையே அண்ணா புகழைப் பரப்ப, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி போன்ற பலவற்றையும் நடத்தி, இளைய தலைமுறையினருக்கு அண்ணாவை நினைவூட்டி அவர்தம் கருத்துகளைப் பதிய வைத்தார்கள்.
அண்ணா நாணயம் வெளியீடு!
அண்ணா நூற்றாண்டு நாளான 15.9.2009 அன்று சென்னையில் அண்ணா உருவம் பொறித்த நாணயம் வெள்ளி அய்ந்து ரூபாய் நாணயத்தை மத்திய நிதியமைச்சர் வெளியிடுகிறார். பெரிய விழா அரசு சார்பில் ஏற்பாடாகி, அதில் சிறப்பு மலர் ஒன்றும் வெளியிடப்படவிருக்கிறது.
காஞ்சியில் அண்ணா விழா
தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த மண்ணாம் காஞ்சியில் ஒரு மாபெரும் மக்கள் கடல் கூடும் நிகழ்ச்சியை நடத்திட ஏற்பாடாகி வருகிறது! (26.9.2009).அது ஓர் பெரு விழா! திருவிழா!!
விருதுகளும் வழங்கப்படவிருக்கும் அவ்விழா, இனமானப் பேராசிரியர் தலைமையில் நடைபெறவிருப்பது மகிழ்ச்சிக் குரியதாகும்!
சிறைக் கைதிகளை விடுவித்திடுக!
இந்நிலையில், அண்ணா நூற்றாண்டு நிறைவினையொட்டி, பல சிறைகளில் பல ஆண்டுகளாக வதியும் சிறைக் கைதிகளை, அவர்கள் இஸ்லாமியர்கள், இந்துக்கள், கிறித்துவர்கள் ஆகிய எம்மதத்தினராயினும் விடுதலை செய்வது அண்ணா விரும்பிய மனிதநேயத்தினைச் செயல்படுத்திக் காட்டும் வாய்ப்பாகும்!
குறிப்பாக கோவை போன்ற சிறைகளில் பல ஆண்டுகளாக, சிறுபான்மை சமூகத்தவரான முசுலிம்கள் மிகுந்த வேதனையோடு, தவறு செய்யாதவர்களும்கூட தவறான சேர்க்கை சிந்தனை காரணமாக வாடுகிறார்கள். குறிப்பாக இளைஞர்களைத் திருத்திடுவது அவசியம். எனவே, இதனை மனிதநேயத்தோடு நமது முதல்வர் அணுகவேண்டும் என அன்புடன் வேண்டுகிறோம்.
அறிஞர் அண்ணா போப் ஆண்டவரை சந்தித்ததே கோவாவில் தூக்குத் தண்டனை பெற்ற ஒரு கைதியை அடையாளம்கூடத் தெரியாத ஒருவரை விடுதலை செய்யத்தான் என்பது அண்ணாவின் புகழ் பூத்த வரலாற்றுச் சாதனை அல்லவா?
குற்றவாளிகள் திருத்தப்படவேண்டும்
அண்ணாவின் இதயத்தைப் பெற்ற நமது முதல்வர் கலைஞர் அவர்கள் இதனை இணக்கமாகப் பரிசீலித்து, அண்ணா நூற்றாண்டில், வாடிய மனிதப் பயிர்களையும், காப்பாற்றிடவேண்டுகிறோம்.
குற்றவாளிகள்கூட திருத்தப்படவேண்டும் என்பதே இப்போதுள்ள அணுகுமுறை என்பதை அறியாதவரல்ல நமது முதல்வர் அவர்கள்.
எனவே, அன்புடன் வேண்டுகிறோம்!
அண்ணா தி.மு.க. அண்ணா கொள்கைக்குப் போடும் நாமம்!அண்ணாவுக்கு நாமம் போட்டுவிட்டு, அண்ணா நூற்றாண்டு நாளைக்கூட கொண்டாடாமல் இருப்பதுகூட, ஒரு வகையில் அண்ணா கொள்கைகளைக் காப்பாற்றிட உதவி செய்தவர்களே ஆவார்கள்.
அய்யா, அண்ணா என்ற கொள்கைக் குடும்பத்தின் புகழ் அகிலமெல்லாம் பரப்பிட, அதற்கு கலைஞர் துணை நிற்பவராக _ வேகம் கூட்டுபவராக என்றும் இருப்பது நல்லதோர் வாய்ப்பே!

Tuesday, September 1, 2009