Sunday, August 16, 2009


போராடிப் பெற்ற சுதந்திரத்தைக் கொண்டாடும் விதமாகவும் நம் முன்னோர்களின் சுதந்திரப் போராட்ட தியாகத்தை நினைவுகூரும் விதமாகவும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் ,ந்தியா ஆகஸ்டு 15, 2009 அன்று 63வது சுதந்திரதினத்தை சிறப்பாகக் கொண்டாடியது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் கும்பகோணத்திலும், கேரளாவில் ,டுக்கி மற்றும் கண்ணூரிலும், கர்நாடகாவில் மைசூரிலும் சுதந்திரதின அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டத்தை நடத்தியது.கும்பகோணத்தில் நடைபெற்ற சுதந்திரதின அணிவகுப்பு மதியம் சரியாக 3.15க்கு துவங்கியது. பாப்புலர் ஃப்ரண்ட் தமிழக தலைவர் எம். முஹம்மது அலி ஜின்னா அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து ஒற்றுமை கீதம் முழங்கிய பின் பாப்புலர் ஃப்ரண்டின் பொதுச் செயலாளர் ஏ. ஃபக்ருதீன் வரவேற்புரை வழங்கினார். தொடர்ந்து பாப்புலர் ஃப்ரண்ட் தமிழக தலைவர் முஹம்மது அலி ஜின்னா சுதந்திரதின உறுதிமொழியை முன்மொழிய மக்கள் அதனை வழிமொழிந்தார்கள். பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய தலைவர் ,.எம். அப்துர் ரஹ்மான் தலைமையுரையாற்றினார். அந்த உரையில் உண்மையான சுதந்திரம் என்பது அனைவரும் அச்சத்திலிருந்தும் பசியிலிருந்தும் விடுதலை பெற வேண்டும். அனைத்து மக்களுக்கும் சரியான பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் ,ந்தியா என்ற கட்சியை உருவாக்கியுள்ளோம் என்று கூறினார்.பின்னர் சுதந்திரப் போராட்ட தியாகிகள் கவுரவிக்கப்பட்டனர்.சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்த நெல்லை மாவட்ட உலமா சபை தலைவர் மவுலவி டி.ஜே.எம். சலாஹுத்தீன் ரியாஜி தனது உரையில் ',ங்கு எழுச்சி மிகு அணிவகுப்பு நடத்திய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் ,ந்தியாவினுடைய உறுப்பினர்களே சுதந்திரப் போராட்டத்தில் தங்களுடைய உயிரை தியாகம் செய்த தியாகிகள் ,ன்றைய பொழுது உயிரோடு ,ருந்திருந்தால் அணிவகுப்பின் வீரர்களான உங்களை ஆரத்தழுவி தங்களுடைய மகிழ்ச்சியைத் தெரிவித்திருப்பார்கள்' எனக் குறிப்பிட்டார்.விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த திரு. ரவிக்குமார் எம்.எல்.ஏ. தலித் முஸ்லிம் ஒற்றுமையைப் பற்றியும் அதன் முக்கியத்துவத்தையும் குறிப்பிட்டு உரையாற்றினார்.முன்னாள் எம்.எல்.ஏ. திரு. எம்.ஜி.கே. நிஜாமுத்தீன் உரையாற்றும் போது ',ந்த திடலிலே திரளாகத் திரண்டிருக்கும் ,வ்வீரர்களைக் காணும் பொழுது என்னதான் நிகழ்ந்தாலும் உங்களிடத்திலே ஒரு விஷயத்தை உறுதியாக சொல்ல விரும்புகிறேன். ,ந்த பாப்புலர் ஃப்ரண்ட் வீரர்களுக்கு துப்பாக்கி பயிற்சி அளித்து ,ந்திய ,ராணுவத்தில் சேர்த்து சீனாவையும், பாகிஸ்தானையும் ,ந்திய எல்லையிலிருந்து விரட்டி ,ந்தியாவைப் பாதுகாக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டார்.தமிழ்நாடு பாப்புலர் ஃப்ரண்ட் துணைத்தலைவர் திரு. ஏ.எஸ். ,ஸ்மாயீல் காவல் துறையின் அதிகார துஷ்பிரயோகத்தையும், அத்துமீறல்களையும் கண்டித்துப் பேசினார்.மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் திரு. கே.எம். ஷரீஃப் 'முஸ்லிம்கள் என்றால் பிரியாணியும் குருமாவும் சாப்பிடுவார்கள் என்ற மக்களின் எண்ணத்தை மாற்றி முஸ்லிம்கள் என்றால் பெற்ற சுதந்திரத்தைப் பாதுகாப்பவர்கள் என்றும் தனி மனித சுதந்திரம் பாதிக்கப்படும் போது தட்டிக் கேட்பவர்கள் என்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் ,ந்தியா ,ன்று உணர்த்தியுள்ளது' என்று உரையாற்றினார்.பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய பொருளாளர் மவுலவி ஷேக் முஹம்மது தெஹ்லான் பாகவி தனது சிறப்புரையில் 'முஸ்லிம்களுக்கு சுதந்திரதின கொண்டாட்டத்திற்கான அனுமதியை காவல்துறை மறுப்பது சிறுபான்மை மக்களின் நலனில் அக்கறை கொண்ட மான்புமிகு முதல்வரின் கவனத்தில்தான் ,ந்த அனுமதி மறுக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது' எனக் குறிப்பிட்டார்.நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அபுபக்கர் சித்தீக் நன்றியுரை கூறினார்.,றுதியாக தேசிய கீதம் முழங்க சுதந்திரதின கொண்டாட்டம் நிறைவடைந்தது.