Sunday, February 14, 2010

அல்-உம்மா தலைவர் முஹம்மது அன்சாரி அறிக்கை !!!
உள்ளங்கள் உருகட்டும்...., உதவிகள் பெருகட்டும்....
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ். . .)
'புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாகட்டும்'
பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு,கோவை மத்திய சிறையிலிருந்து எம். முஹம்மது அன்சாரியின் அன்பான வேண்டுகோள் ‚

சிறுபான்மை உதவி அறக்கட்டளை சிறைபட்டோரை விடுவித்திட வேண்டி செயல்பட்டிடும் ஓர் அறக்கட்டளையாகும். கோவை குண்டுவெடிப்பு வழக்கு உள்பட பல வழக்குகள் உம்மத்தே ரசூல் அளித்திட்ட உதவிகளால் நடத்தி முடித்து எண்ணற்ற சகோதரர்கள் விடுதலையாவதற்கு காரணமாக அமைந்திருக்கின்றது.

கோவை குண்டுவெடிப்பு வழக்குகள் நடக்க ஆரம்பித்து 12 ஆண்டுகளாகின்றன. 9½ ஆண்டுகளுக்குள் கீழ்க்கோர்ட்டில் விசாரணை முடிவடைந்து 122 பேர் விடுதலையாகினர். 43 பேர் ஆயுள் தண்டனை பெற்று தண்டனைக்கு உரியவர்களாயினர். இத்தண்டனை பெற்றவர்களை உயர்நீதிமன்றம்; விடுவித்திட வேண்டும் என கடந்த இரண்டாண்டுகளாக அறக்கட்டளை பல சிரமங்களுடன் பொருளாதாரத்தை சிறுக சிறுக சேர்த்த தொகையான சுமார் ரூ.70 இலட்சத்தை சீனியர் வழக்கறிஞர்களுக்கு கட்டணமாக கொடுத்து, வாதாடி வழக்கிலுள்ள 26 பேரை விடுவித்திட முடிந்தது. உள்ள பொருளாதாரத்தையும், கடனாக பெற்றதையும் சேர்த்து இத்தொகையினை கொடுக்க முடிந்தது. தற்போது அறக்கட்டளை ரூ. 5 லட்சம் கடனாளியாக உள்ளது.

இந்நிலையில் தற்போது அறக்கட்டளையின் முன் இரண்டு முக்கிய பணிகள் உள்ளன. 1) மீதமுள்ள 17 பேரை மீட்டிட உச்சநீதிமன்றம் சென்றிட, அதற்குண்டான பொருளாதாரத்தை திரட்டுவது. 2) சிறைப்பட்ட சகோதரர்களின் குடும்பங்களில் நிலவிடும் வறுமையை அகற்றிடுவது.

பொருளாதாரம் இருந்த சூழ்நிலையில் குடும்பங்களுக்கு இயன்ற உதவியினை செய்து வந்தது. பொருளாதாரமற்ற சூழ்நிலையில் மீதமுள்ள சிறைபட்ட சகோதரர்களின் குடும்பங்களில் நிலவிடும் வறுமையை அகற்றிட என்ன செய்திடுவது என தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றது. குடும்பங்களில் நிலவிடும் வறுமையின் கொடுமையினை வார்த்தைகளில் வடித்திட இயலாது. குடும்பத்தை காப்பாற்றிட வேண்டிய ஆண் மக்கள் சிறையில் அடைபட்டதால்... அடைந்திடும் துயரங்கள் ஏராளம், ஏராளம். இவர்களின் விடுதலையில் தான் குடும்பங்களின் வறுமை அகன்று, நிலைமைகள் மேம்படும். விடுதலையாவது வரை ஏதேனும் உதவிகள் செய்தாக வேண்டும். குடும்பங்களின் நிம்மதியில் தான் சிறைபட்டோரின் வாழ்வும் சீராக சென்றிடும். ஆகவே, வசதிபடைத்தவர்கள் ஒவ்வொருவரும் ஒரு குடும்பத்தையோ, இரு குடும்பத்தையோ கவனித்துக் கொண்டால் மிக, மிக பயனாக இருக்கும். இங்ஙனம் கோவை சிறையில் மட்டும் 25 குடும்பங்கள் உள்ளன. நிராதரவற்ற இந்த குடும்பங்களுக்கு உதவிடுவது உதவிகளிலே மிகச் சிறந்த உதவியாக கருதப்படும். அல்லாஹ்விடத்தில் இம்மெயில் காணும் அன்பர்கள் ஒவ்வொருவரும் அல்லாஹ் தங்களுக்கு வழங்கிய வசதியின் அளவிற்கு உதவிட முன்வருவீர்களாக. சுமார் ஒரு குடும்பத்திற்கு மாதம் ரூ. 2000ஃ- கொடுத்துதவினால் நிறைவாக இல்லாவிட்டாலும், நிம்மதிக்கு குறைவில்லாமல் இருப்பார்கள். வழக்கின் செலவிற்கு, குடும்பங்களின் வறுமைக்கு என குறிப்பிட்டு கொடுத்தால் கூறியபடி உதவிகள் பயன்படுத்தப்படும்.

அல்லாஹ்வின் மீதுள்ள அன்பின் காரணமாக ஏழைகளுக்கும், அனாதைகளுக்கும், சிறைபட்டோர்களுக்கும் உணவளிப்பார்கள்அல் குர்ஆன் 76 - 8

CHARITABLE TRUST FOR MINORITIES
96, Vincent Road
Coimbatore – 641001
Email : ctmcoimbatore@gmail.com
Website: www.ctmkovai.com
Phone : 0422 2037673
Mobile : +919786093544
Our Banker : ICICI BANK LTD., BRANCH, COIMBATORE – 641 001
S.B. A/C. NO. 605301208490