Wednesday, September 30, 2009

தமிழக அரசு
கமலஹாசன் நடித்து உன்னை போல் ஒருவன் என்ற திரைப்படம் தடை செய்ய வேண்டும் ...
சிறுபான்மை உதவி அறக்கட்டளை துனைத் தலைவர். அபுதாஹிர் தமிழக அரசுக்கு கடிதம்...
கோவை 30
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல், கமலஹாசன் மற்றும் மோகன்லால் நடித்து சக்ரி டோலாட்டி இயக்கிய உன்னை போல் ஒருவன் என்ற திரைப்படம் 18.09.2009 அன்று தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. அதன் விமர்சனங்களை பத்திரிக்கைகளில் பார்த்த போது 1998ம் ஆண்டு கோவை குண்டு வெடிப்பு சம்பந்தமாக மையக்கருத்துடன் கூடிய திரைப்படமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.

எனவே, அந்த திரைப்படத்தை திரையரங்குகளில் பார்த்தபோது 1998 கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட இஸ்லாமிய சிறைவாசிகள் மூன்று பேரையும், மற்ற ஒருவரையும், கமலஹாசன் ஒரு இஸ்லாமிய பயங்கரவாதியைப் போல் நடித்து தமிழக அரசின் காவல்துறை ஐ.ஜி.யிடம், தகவல் தொழில்நுட்ப தொடர்பு மூலம், சென்னை நகரத்தில் பல இடங்களில் குண்டு வைத்திருப்பதாக மிரட்டி கோவை குண்டு வெடிப்பு கைதிகளை விடுவிக்கக் கோரியும்,
அதன் படி மேற்கூறிய நான்கு பேரையும் சிறையிலிருந்து விடுவித்து கொண்டு வந்து, ஒரு வாகனத்தில் தப்பித்து செல்லும் போது அந்த வாகனத்தில் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததினால் மூன்று பேர் இறந்ததாகவும், மற்ற ஒருவர் போலி மோதல் சாவில் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் சித்திரிக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தின் செய்தியாக தீவிரவாதத்திற்கு பதில் தீவிரவாதம் தான் என்பதைப் போலும், அதை ஒரு காவல்துறை அதிகாரியே அங்கீகரித்தது போல் கூறப்பட்டுள்ளது.

குண்டு வெடிப்பு சம்பந்தமாக திரைப்படம் பற்றியோ, அதனால் பாதிக்கப்படும் மக்களைப் பற்றியோ கூறுவதால் எங்களுக்கு ஆட்சேபணையில்ரலை.
ஆனால், 1998 ஆம் ஆண்டின் கோவை குண்டு வெடிப்பு சம்பவம் குறித்த விசாரணை தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு நீதிபதிகள் பிரபா 'தேவன், சத்தியநாராயணன் பெஞ்ச் முன்பாக வழக்கறிஞர்கள், மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களை கேட்டுக் கொண்டிருக்கிறது.

நிலுவையிலுள்ள ஒரு பெரும் வழக்கு சம்பந்தமாக அதிலும் குறிப்பாக இஸ்லாமிய சிறுபான்மை மக்களின் மீதும், குறிப்பாக பல அப்பாவி இளைஞர்கள் இந்த வழக்கில் ஜோடிக்கப்பட்டு, அதைப்பற்றிய சாட்சியங்கள் சம்பந்தமான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் என். நடராஜன் தலைமையில் வழக்கறிஞர்களின் குழு தொடர்ந்து நீதிக்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் போது உன்னைப் போல் ஒருவன் திரைப்படம் மக்கள் மத்தியிலும், நீதிமன்றத்தின் முன்பும் ஒரு தவறான கருத்தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு ஏதுவாகும்.

ஏற்கனவே, உச்ச நீதிமன்றம் ஊடகங்களின் விசாரணை பற்றி கருத்து கூறிய நிலையில் கவனிக்கத் தக்கது.

மேலும், 2006ம் ஆண்டு கோவை சிறப்பு நீதிமன்றத்தில், 1998 குண்டு வெடிப்பு வழக்கு விசாரணைக்கு பிறகு வழக்கறிஞர்களின் வாதுரை நடந்து கொண்டிருந்த போது கோவை மாநகர உளவுத்துறை அதிகாரி ரத்தினசபாபதி, அவருக்கு பணிபுரியும் பால்ராஜ், இளங்கோ ஆகியோர் சதி செய்து அப்பாவி இஸ்லாமிய இளைஞர்கள் மீது வெடிகுண்டு வழக்கு ஒன்று புனைந்து போத்தனூர் காவல்நிலையத்தில் பதிவு செய்து அதனை ஊடகங்களின் மூலமாக விளம்பரப்படுத்தி மக்கள் மத்தியிலும், நீதிமன்றத்தின் கண்ணோட்டத்திலும் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தினர்.

ஆனால், பின்னோக்கி இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் மனித உரிமை அமைப்புகளின் போராட்டங்களின் காரணமாக தமிழக அரசு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்திரவிட்டு, சி.பி.சி.ஐ.டி விசாரணைக்குழு தீர விசாரித்து ரத்தினசபாபதி மற்றும் அதன் அதிகாரிகள் இஸ்லாமிய இளைஞர்கள் மீது பொய்யாக வழக்கினை ஜோடித்துள்ளனர் என்று ஆதாரத்துடன் இறுதி அறிக்கை தாக்கல் செய்து இளைஞர்களை விடுவித்தனர்.

ஆனால், இறுதி அறிக்கை தாக்கல் செய்த பின்னரும் மேற்படி வழக்கு ஊடகங்கள் மூலமாக ஏற்படுத்திய கருத்தாக்கம் மக்கள் மத்தியில் ஒரு பீதியையும், நீதிமன்றத்தின் கருத்தில் ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தியது என்பது உண்மை.

1998ம் ஆண்டு நடந்த கோவை குண்டு வெடிப்பு வழக்கில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பிணை கூட கிடைக்காமல் சிறையில் வாடிக் கொண்டிருக்கும் அப்பாவி இளைஞர்கள் பலபேருக்கு மேல் முறையீட்டிலாவது நீதி கிடைக்குமென்று நம்பிக்கையோடு காத்துக் கொண்டிருக்கும் நிலையில், உன்னைப் போல் ஒருவன் திரைப்படம் கோவை குண்டு வெடிப்பு சம்பந்தமான கைதிகளை விடுவிக்கக் கோரி மையக் கருத்தாக கொண்டு திரையிட்டு இருப்பது நிலுவையிலிருக்கும் மேல் முறையீட்டு விசாரணை பாதிக்கப்படுவதாக உறுதியாக நம்புகிறோம்.

எனவே, தாங்கள் உடனடியாக உன்னைப்போல் ஒருவன் திரைப்படத்தை தமிழகம் மற்றும் பல இடங்களில் திரையிட்டுள்ளதை மேல் முறையீடு வழக்கு முடியும் வரை நிறுத்திவைக்க உத்தரவு செய்யுமாறு வேண்டிக்கொள்கிறோம்.

1. தமிழக உள்துறைச் செயலாளர் அவர்கள்தலைமைச் செயலகம்சென்னை

2. தலைவர் thanikkaiகுழு

3. ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர் நேஷனல் டீல – கமலஹாசன் சென்னை


இப்படிக்கு
யு.அபுதாகீர்துணைத் தலைவர்சிறுபான்மை உதவி அறக்கட்டளை