Sunday, December 28, 2008

த மு மு க. சார்பில் தமிழக முதல்வர்க்கு கடிதம்

கோவை மாவட்ட த மு மு க. சார்பில் தமிழக முதல்வர்க்கு கடிதம்

கோவை சிறையிலுள்ள குண்டு வெடிப்பு கைதிகள் பாதிக்கப்படுவது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கக் கோரியும் மற்றும் விடுதலைச்செய்ய கோரி கடிதம். மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு,
கோவை மத்திய சிறையில் 11 வருடங்களாக அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கின்ற முஸ்லிம் சிறைவாசிகளை, மற்ற ஆயுள் தண்டனை சிறைவாசிகளை அண்ணா பிறந்த நாளன்று விடுதலை செய்வது போல் வருகின்ற குடியரசு தினத்தன்று முஸ்லிம் சிறைவாசிகளை பாரபட்சமின்றி விடுதலை செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்வதுடன், சிறையிலுள்ள முஸ்லிம் சிறைவாசிகள் தங்களது நியாயமான கோரிக்கைகளை சிறை நிர்வாகத்திடம் கோருகின்ற போது, 11 வருடங்களாக சிறை வாழ்க்கையினால் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள இக்கைதிகள் உடல்நலம் குன்றி நோய்வாய்பட்;டு இருக்கும் வேளையில் சிறைத் துறை அதனை அறிந்து இக்கைதிகளுக்கு முறையான சிகிச்சைகள் அளிக்கப்படாமல் இருக்கின்ற நிலையில் மிகவும் பாதிப்படைகின்ற சூழ்நிலை ஏற்படுகின்றது. மேலும் கைதிகள் தங்களுக்குண்டான உரிமைகளை கேட்கும் நேரத்தில,; அதுவும் பல வழிகளில் மறுக்கப்படுகின்றது. இக்கைதிகள் பரோலில் வரும் போது அளவுக்கு அதிகமான காவல் துறையின் பாதுகாப்பு ஏற்பாட்டினால் இவர்கள் குடும்பத்தார் மத்தியிலும் அப்பகுதியில் வாழ்கின்ற மக்கள் மத்தியிலும் அச்சம் ஏற்படுகின்ற வகையில் இச்செயல் அமைந்து விடுகின்றது.
எனவே, மேலே குறிப்பிடப்பட்டுள்ள இப்பிரச்சனைகளை கருத்தில் கொண்டு இவர்களுக்கு நியாயம் கிடைக்க தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
இவர்களின் வழக்கை விசாரித்து இவர்களின் நடவடிக்கைகளை நன்கு அறிந்த தனி சிறப்பு நீதிமன்ற நீதிபதி அவர்கள,; அவரின் தீர்ப்பில் 'மனித சமூகத்தில் வாழும் உதாரணமாக இவர்கள் இருப்பார்கள்' என நீதிபதி தன் தீர்ப்பில் கூறியதையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றோம். ஆகையால், ஐயா அவர்கள், இவைகளை கருத்தில் கொண்டு முஸ்லிம் சிறைவாசிகளின் விஷயத்தில் ஆவண செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
செய்தி : கோவை தங்கப்பா
மீடியா வாய்ஸ்