Saturday, February 20, 2010

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின்
சமூக எழுச்சி மாநாடு கொடியேற்றத்துடன் துவங்கியது
மதுரையில்...
பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா, மதுரையில் நடத்தும் சமூக எழுச்சி மாநாடு மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் 20ம் தேதி அன்று சனிக்கிழமை துவங்கியது. வண்டியுர் ரிங் ரோட்டியில் அமைந்திருக்கும் ஷஹீத் திப்பு சுல்தான் மாநாட்டு திடலில் காலை 9மணிக்கு மாநில தலைவர் முஹம்மது அலி ஜின்னா அவர்கள் கொடியேற்றி வைத்து மாநாட்டை துவக்கி வைத்தார்.
அனைத்து சமூகங்களின் வளர்ச்சியில் தான் நாட்டின் உண்மையான வளர்ச்சி உள்ளது எனும் மாநாட்டுச் செய்தியை அறிவித்து, வாருங்கள் எழுச்சியின் பங்காளர்களாக என மக்களை அறைகூவி அழைப்பது போல் பட்டொளி வீசிப் பறந்தது நட்சித்திரம் பொறிக்கப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் கொடி.
ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில தலைவர் அப்துல் காதி முனீரி அவர்கள் மாநாடு வெற்றிக்காக பிரார்த்தனை நிகழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் தேசிய தலைவர்கள் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பிறகு காலை 10-15மணிக்கு வி.பி. சிங் அரங்கியில் (குப்தா ஆடிட்டோரியம், அண்ணா நகர்) பாப்புலர் ஃபிரண்ட் தேசிய செயற்குழு உறுப்பினர் யா முகைதீன் அவர்கள் வரவேற்புரையுடன் கருத்தரங்கம் துவங்கியது.
இதில் பாப்புலர் ஃபிரண்ட் தேசிய பொதுச்செயலாளர் கே.எம். ஷெரீஃப்.தெஹல்க ஆங்கில புலனாய்வு இதழின் முதன்மை ஆசிரியர் திரு அஜித்சாகி . டெல்லி பல் கலைகழக பேரா. ஜீலானி.வழக்கறிஞர் லஜ பதிராய்.போராஆ.மார்க'ஸ்தமிழ் இலக்கிய கழகத்தின் பொதுச் செயலாளர் எஸ்.எம். ஹிதாயத்துல்லா. எஸ்.டி.பி. ஐ. மாநில பொருளாளர் எஸ்.எம். ரஃபிக் அஹமது. ஆகியோர்கள் சிறப்புரை நிகழ்த்தினர்கள். மாநாட்டின் கருப்பொருளை பாப்புலர் ஃபிரண்ட்டின் மாநில பொருளாளர் இஸ்மாயில் தொகுத்து வழங்கினர்.
இறுதியில் பாப்புலர் ஃபிரண்டடின் மாநில செயலாளர் எம். நிஜாம் முஹைதீன் நன்றியுரையாற்ற கருத்தரங்கம் நிறைவுபெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மனித உரிமை ஆர்வலர்கள், பெண்கள், பல்வேறு சமூக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சியில் கலந்து கொண்டா அனைவருக்கு மதிய உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டது.
பிறகு மதியம் சாரியாக 3 மணிக்கு சிராஜ்-உத்-தவ்லா அரங்கம்- ஸடார் பார்க் திருமண மண்டபதில் இஸ'லாமிய கண்காட்சி நடைபெற்றது இந்த கண்காட்சியை மாநில துனைதலைவர் பாப்புலர் ஃபிரண்ட் ஏ.எஸ். இஸ்மாயில் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பாப்புலர் ஃபிரண்ட் மாநில தலைவர் முஹம்மது அலி ஜின்னா. எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் தெஹ்லான் பாகவி. மாநில பொதுச்செயலளாளர் முபரக். ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.
செய்தி புகைப்படம் : கோவை தங்கப்பா