Thursday, January 21, 2010

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
CHARITABLE TRUST FOR MINORITIES
2வது மடல்....

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ். . .)
'புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாகட்டும்'
எல்லாப்புகழும், எத்துதியும், வல்லோன் ஒருவனுக்கே ‚ அவனுடைய அருள் புவிப்பிரதேசமெங்கும் நிலவட்டுமாக ‚ அவனின் சாந்தியும், சமாதானமும் நம் இறுதித்தூதர் அண்ணலெம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் சத்தியசஹாபாக்கள் மீதும், இம்மார்க்கத்தை இப்பூவியில் நிலைநாட்டிட வேண்டி தங்களின் உயிர்களையும் பொருட்களையும் அர்ப்பணித்த, அர்ப்பணித்து வருகின்ற, அர்ப்பணம் செய்ய விரும்புகின்ற என அனைத்து நல் உள்ளங்கள் மீதும் நின்று நிலவட்டுமாக

உலகம் முழுவதும் வாழ்ந்து கொண்டிருக்கும் உம்மத்தே முஹம்மதியாரின் அங்கத்தினர்களை இம்மெயில் மூலம் தொடர்பு கொண்டு கருத்துகளை எத்தி வைப்பதற்கு வாய்ப்பளித்த வல்லான் அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும் ‚

கோவை குண்டு வெடிப்பு சிறைவாசிகள் விடுதலைக்காக உச்சநீதிமன்றம் செல்வதற்கு தேவையான பொருளாதாரத்தை வாரி வழங்குவீராக என்ற மையக்கருத்தை உட்கொண்ட மெயிலை கடந்த முறை படித்திருப்பீர்கள் என நம்புகிறோம். அதனைத் தொடர்ந்து அம்மெயிலின் சாராம்சத்துடன் இம்மெயிலையும் இறைவனிடம் இங்ஙனம் துஆ செய்த வண்ணம் அனுப்பி இருக்கின்றோம். ஊன்றி, ஆழ்ந்து படிப்பீராக.

 உள்ளத்தை ஆட்சி செய்பவனே ‚
 எங்களின் வேண்டுதலை ஏற்றுக்கொள்வாயாக ‚
 உம்மத்தினரின் உள்ளங்களை எங்களுக்கு இணக்கமாக ஆக்குவாயாக‚
 எங்கள் பணியை (சிறைபட்டோரின் விடுதலை) இலேசாக்குவாயாக‚
என அனுதினமும் ஒவ்வொரு துஆவிலும் எங்களின் தலையாய இறைஞ்சுதலாக இருக்கின்றன.

பாரிய பொறுப்புமிக்க இப்பணியினை சிரமேற்பட்டு செய்து வருகிறோம். இவ்வழக்கில் இவர்கள் சிறைபட்டு 12½ ஆண்டுகளாகின்றன. பத்தாண்டுகளுக்கும் மேலாக இவ்வறக்கட்டளை இவர்களின் விடுதலைக்காக அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. இத்தனை ஆண்டுகாலம் அறக்கட்டளை நடத்திய அனுபவத்திலும், நடைமுறையில் தெரிந்த
ஓர் உண்மை
புலப்பட்டிருக்கின்றது. அவ்உண்மை யாதெனில் சிறைபட்டோரின் விடுதலைக்கு பொருளாதாரத்தின் அவசியமே‚ மிக மிக இன்றியமையாததாக இருக்கின்றன. பொருளாதாரம் நம்மிடம் எந்தளவிற்கு மிக அதிகமாக உள்ளதோ அந்தளவிற்கு நம் நியாயங்களும், உண்மைகளும் வெகுவிரைவாக நீதிபதிகளின் முன் எடுத்துரைக்க இயலும். சுமாரான பணம் எனில் அதற்கேற்றவாறே வெகுதாமதமாக நியாயங்களையும் உண்மைகளையும் எடுத்துரைக்க இயலக்கூடிய ஓர் அசாதாரண சூழ்நிலையே இங்கு நிலவுகிறது.

200க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு 13 ஆண்டுகளாக தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர். அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அறக்கட்டளை தொடங்கிய பின்பு கிடைத்த பொருளாதாரத்தின் மூலம் சட்டரீதியான பணிகளை மேற்கொண்டதால் எண்ணற்றோர் இதுவரை விடுதலையாகியுள்ளனர்.
தற்போது 55 முஸ்லிம் இளைஞர்கள் மட்டுமே உள்ளனர். இதில் கோவை குண்டு வெடிப்பில் மட்டும் 18 பேர் உள்ளனர். பொருளாதாரமும் தாமதமாக கிடைக்கப்பெற்றதால் பணிகளும் தாமதமாயின என்பதே நிதர்சன உண்மையாகும். சீனியர் வழக்கறிஞர்களுக்கான பொருளாதாரம் விரைவாக கிடைக்கப்பெற்றால் பணிகளும் மிக துரிதமாக நடைபெற்றிருக்கும். பொருளாதாரமின்மையால் தான் 13 ஆண்டுகளுக்கு பின் பல பேர் சிறையைவிட்டு தாமதமாக விடுதலையாகி உள்ளனர். ஆகவே, பொருளாதாரம் இன்னும் அதிகமாக கிடைக்கப்பெற்றால் மீதமுள்ளவர்களையும் அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் விடுதலையடையச் செய்திடலாம். பொருளாதாரம் எந்தளவிற்கு அதிகமாக துரிதமாக கிடைக்கிறதோ, அந்த அளவிற்கு பணிகளும் துரிதமாக சிறப்பாகவும் நடைபெறும்.

காசிற்கு தகுந்த பணியாரம் போல் என்ற பழமொழி வழக்கறிஞர்கள் விஷயத்திலும் சரியாக பொருத்தும். பணம் எந்தளவிற்கு நம்மிடம் அதிகமாக உள்ளதோ அந்தளவிற்கு மதிப்புமிக்க மூத்த வழக்கறிஞரை நியமிக்க இயலும். உயர்ந்த அந்தஸ்தில் உள்ள இவ்வழக்கறிஞர்கள் சார்பாக கொடுக்கப்படும் வழக்குகள் தாமதமின்றி உடனுக்குடன் வாதுரைக்கு எடுத்துக் கொள்வது மட்டுமல்லாமல் இவர்களின் வாதுரையை உரிய கவனத்துடன் காது கொடுத்துக் கேட்பார்கள் நீதிபதிகள்.... இதே நாம் இலவச சட்ட உதவி சார்பாக அரசாங்க வழக்கறிஞரை நியமித்தால் அவ்வழக்கு உடனுக்குடன் நீதிமன்றத்தில் வாதுரைக்கு வராது, வழக்கு தொடர்ந்தவர்களின் வாழ்வு முடியும் தருவாயில் வரலாம். இத்தகைய சட்ட உதவி வழக்கறிஞர்களுக்கு நீதிமன்றத்தில் உரிய நேரமும் ஒதுக்கப்படுவதில்லை, உரிய மதிப்பும் தரப்படுவதில்லை, எங்ஙனம் இவர்களை நம்பி வழக்குகளை ஒப்படைக்க முடியும். வலியவன், எளியவன், உயர்ந்தோன், தாழ்ந்தோன் என முரண்பாட்டில் மையம் கொண்டுள்ள நம் சமூக அமைப்பை மாற்றக்கூடிய திறனுள்ளதாக கருதப்படும் நீதிமன்றங்களிலும் இத்தகைய முரண்பாடுகள் வேற்றுமைகள் நிலவுவது மிகவும் கேவலமாகும். ஆகவே தான் நம் தரப்பு நியாயங்களையும் உண்மைகளையும் விரைவாகவும் வெற்றிகரமாகவும், அமையவேண்டி - மிக உயர்ந்த கட்டணத்தில் வழக்கறிஞர்களை நியமித்திட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம். நாம் இதில் எதையும் மிகைபடுத்தி கூறிடவில்லை. இத்தகைய நிலை நிலவுகிறதா? என்பதனை நீங்கள் விசாரித்தால் அறிந்துக் கொள்ளலாம்.
கோவை குண்டு வெடிப்பு வழக்கு உள்பட தமிழகத்திலுள்ள மொத்த வழக்குகளையும் ஒரு முடிவிற்கு கொண்டு வர சுமார் 2 கோடி ரூபாய் அவசியமாகவுள்ளது. அறக்கட்டளைக்கு இப்பணம் உடனடியாக கிடைக்கப்பெற்றால் வழக்குகளை விரைந்து முடித்திட தோதாக இருக்கும். 2 கோடி என்பது பெரிய தொகையாகத்தான் தெரிகின்றது. ஆனால் 55 பேரின் வாழ்வு இதில் அடங்கியுள்ளது என்கின்ற போது தொகை மிகவும் சிறியதாகவும் வாழ்வே மிக பெரியதாகவும் தெரிகிறது. மதிப்புமிக்க சுதந்திர வாழ்விற்கு எத்தனை கோடிகள் தந்தாலும் தகும்.
கோடிகளில் புரளும் வசதிமிக்க ஒரு செல்வந்தர் நினைத்தால் இத்தொகையை ஒருவரே வழங்கிடலாம். அடிமைகளை மீட்பதிலுள்ள நன்மைகளை ஒருவர் அறிவாரானால் நிச்சயம் கோடிகள் அவருக்கு துச்சமாகத்தான் தெரியும். இதன் பலனை முழுமையாக உணர்ந்ததால் தான் அண்ணலெம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருமை நண்பரும், இஸ்லாத்தை ஏற்பதில் முதன்மையாக இருந்தவருமான கலீபா அபூபக்கர் (ரலி) அவர்கள் தன் சொத்துக்களை கணக்குப் பார்க்காமல் வாரி வாரி வழங்கி அடிமைகளை மீட்பதில் ஆனந்தமாக பேரானந்தம் கொண்டார். அபூபக்கர் (ரலி) அவர்களை போல் ஒருவர் வந்து எங்களை மீட்டு எங்களின் வாழ்விலும் வசந்தங்கள் மலர்வது எப்போது? மீண்டும் ஒரு அபூபக்கர் (ரலி) வந்திடமாட்டாரா? ... என ஆண்டுக்கணக்கில் அடிமை வாழ்வில் தள்ளப்பட்டு, நொந்து நூலாகிப்போன உள்ளங்களிலிருந்து வரும் ஏக்கமும், கனவும், பெருத்த ஆசையுமாகும். அல்லாஹ் நாடினால் நொடிப்பொழுதில் நிறைவேற்றிட போதுமானவனாக இருக்கின்றான், அல்ஹம்துலில்லாஹ் ‚ மெயிலை படிக்கும் அன்பர்கள் இக்கருத்தை தவறாக புரிந்திடவேண்டாம். அபூபக்கர் (ரலி) போன்று ஒருவர் என்பது எதிர்ப்பார்ப்பாகும். அதற்காக நீங்கள் அபூபக்கர் (ரலி) போன்று வசதி நம்மிடமில்லை என ஆதங்கப்பட்டு வெறுமனே இருந்திடல் வேண்டாம். உங்களால் இயன்ற உதவியினை தாராளமாக இவ்அறக்கட்டளைக்கு அனுப்பிடுவீராக. சிறுதுளி பெருவெள்ளமாவது நிச்சயம்.

நீண்ட நெடிய சிறைவாழ்வு வாழ்வோர் யாவரும் தங்களின் சுயநலங்களுக்காக சிறைபட்டிடவில்லை என்பதனை உம்மத்தினர் தங்களின் உள்ளக்கிடங்கில் எப்போதும் இருத்திடல் அவசியமாகும். சிறைப்பட்டோரின் குடும்ப உறுப்பினர் யாரும் எதிரிகளால் பாதிக்கப்படவில்லை. இவர்களின் சொத்துக்களும் சூறையாடப்படவில்லை. எதிரிகளால் உம்மாவின் உயிர்களும், சொத்துக்களும் சூறையாடப்பட்டதால் மதிப்புமிக்க தங்களின் வாழ்வை துச்சமாகக் கருதி சமுதாயத்தின் கண்ணியம் காக்க களமிறங்கினார்கள் என்பதே நிஜம்.

தமிழகத்தில் தற்போது இஸ்லாமிய எதிரிகள் அடக்கி வாசிக்கிறார்கள் எனில், அதன் உண்மையான காரணம் தன்னலமற்ற இத்தகைய நல் உள்ளங்களின் மாசற்ற அர்ப்பணிப்பே என கூறினால் அது மிகையல்ல. 1998க்கு முன்பு தமிழகத்தின் நிலை எவ்வாறு இருந்தது என்றால் .... நம் உயிரினும் மேலான நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நாகூசும் வகையில் கீழ்த்தரமான பேச்சுக்களை பேசி வருவது இந்து பாசிஸ்ட்டுகளின் வளமையான ஒன்றாக இருந்தது. அப்பாவி முஸ்லிம்களை படுகொலை செய்வதும் அன்றாட நிகழ்வாக இருந்தது. இத்தகைய நிலையினைக் கண்டு வேதனைப்பட்டு வெம்பி வெதும்பி இவ்அநியாயத்திற்கு எதிராக உருவாகி ஒன்றுபட்டு ஓரணியில் நின்று களமிறங்கி போராட இவையே காரணங்களாக திகழ்ந்தன என்பதே நிதர்சன உண்மைகளாகும். இவ்அர்ப்பணிப்பின் விளைவுகளால் தான் இன்று தமிழகத்தில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கீழ்த்தரமாக விமர்ச்சிக்கும் போக்கு முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. மெத்தனமாக இருந்த அரசுகளும் தற்போது இத்தகைய இழிபேச்சுகள் நடைபெறாவண்ணம் கண்களில் எண்ணெய் ஊற்றி கவனித்து வருகிறது. எது ஒன்றும் சும்மா கிடைக்குமா? பத்து ரூபா காசு என்றாலும் வேலைக்குப் போனால் தானே கிடைக்கும். ஏதும் நம்மை தேடி வராது. அதுபோலத்தான் சமுதாயத்தில் இழந்துவிட்ட மானம், கண்ணியம் நம் கதவை தட்டி நம் வீட்டினுள் நுழைந்து நம் தலையில் கிரீடமாக அமர்ந்து கொள்ளுமா? ஒரு வேளை உணவில்லாமல் கூட உறங்கிவிடலாம், நம் கண்ணியம் சிதைக்கப்பட்டால் ஒரு நொடிப் பொழுது கூட தூங்கிடக்கூடாது. உண்மை முஸ்லிம்களுக்கு அப்படித்தான், நிம்மதியான நித்திரை என்பதே இராது. கண்ணியம் காக்கப்பட்டால் தான் நிம்மதியான ஊண், உறக்கம் அனைத்தும். நம் முன்னோர்கள் காட்டித் தந்த அடிபணியாமை என்ற பண்பாட்டினை பேணிக்காத்திடத்தான் இன்றும் தமிழகத்தில் எண்ணற்ற இளைஞர்கள் தங்களை தத்தம் செய்துள்ளார்கள். வல்லோன் அல்லாஹ் எதிரிகளின் உள்ளத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளான் என்றால் ..... இவ்இளைஞர்களின் தியாகம் இறைவனால் சமுதாயத்திற்காக அளிக்கப்பட்ட வெற்றியாகும். அல்ஹம்துலில்லாஹ் ‚ அல்ஹம்துலில்லாஹ் ‚ அல்ஹம்துலில்லாஹ் ‚
இங்ஙனம் தமிழக சூழ்நிலையே மாறுவதற்கு காரணகர்த்தாக்களான இவ்இளைஞர்கள் இன்று வெஞ்சிறையில் வேதனைப்பட்டு துன்பப்பட்டு துயரப்பட்டு அவர்களின் குடும்பங்கள் நிர்க்கதிகுள்ளாகி வாடி வதங்கி வருகிறார்கள. இவர்களின் செயல்களும், வழிமுறைகளும் சமுதாயத்தில் பலருக்கு பல அபிப்ராய பேதங்களை கொடுக்கலாம். ஆனால், உம்மா ஒன்றை மட்டும் கவனத்தில் கொண்டு உதவிட வேண்டும் ... இவர்களின் எண்ணம் மிகச் சரியானதாகும். சமுதாயத்தின் கண்ணியம் காக்க வேண்டும் என்ற சுயநலமற்ற இவ்இளைஞர்களின் உயர்ந்த எண்ணத்திற்காக ... உம்மா உதவி செய்திடுவது காலத்தின் கட்டாயமாகும்.

சர்வதேச சமுதாயத்தின் சொந்தக்காரன், 80 லட்சம் முஸ்லிம்கள் வாழும் தமிழகத்தில் ஓர் அங்கம். இவர்களுக்கு மத்தியில் ... மத்திய சிறைகளில் பொருளாதாரம் இல்லாத ஒரே காரணத்தால் ஆண்டுக்கணக்கில் அடைபட்டு அடிமை வாழ்வில் இன்னும் அல்லலுற்றுக் கிடக்கிறார்களே, இதன் முழு பொறுப்பு யார் மேல்? உம்மத்தே, உன் உள்ளத்தை ஒரு கணம் சிந்திக்கச் செய் ‚ நாளை மஹஷரில் குற்றவாளிக் கூண்டில் இச்சிறைப்பட்டோர் நம்மை நிறுத்திட வாய்ப்பு தந்திடக்கூடாது.

ஒரு முறை மக்காவில் அண்ணலெம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நடந்து போய்க் கொண்டிருந்தபோது அதிகார வர்க்கங்கள் ஒரு அடிமை சிறுமியை கடுமையாக அடித்து துன்புறத்திக் கொண்டிருந்ததைக் கண்ட நபியவர்களின் உள்ளம் உருகி கண்கள் கசிந்தன. இக்கொடூர காட்சியினைக் கண்டு தாங்க முடியாமல் உடனே தன் வீட்டிற்கு சென்று தம் அருமை மனைவி கதீஜா (ரலி) அவர்களை அழைத்து அடிமை சிறுமிக்கு நேர்ந்திட்ட கொடுமையினை கூறிய பெருமானார் அவர்கள், என்னால் அதைக் காண முடியவில்லையே ‚ சகிக்க முடியவில்லையே என அன்றைய பொழுது முழுவதும் ஊண் இல்லாமல், உறக்கம் வராமல் வேதனைப்பட்டு தவித்ததைக் கண்ட செல்வசீமாட்டி கதீஜா (ரலி) அவர்கள், அச்சிறுமிக்குரிய பணத்தை ஈடாக கொடுத்து சிறுமியை மீட்டு வந்ததை பெருமானாரிடம் கூறிய பின்பே அண்ணலெம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அமுதுண்டார்கள். நிம்மதியான துயில் கொண்டார்கள். ஆதிக்கவெறி கொண்ட அதிகார வர்க்கத்தின் அதிகார துஷ்பிரயோகம் தான் ஆண்டுக்கணக்கில் அடிமை வாழ்வில் அடைபட்டு வதைபட்டுக் கிடக்கிறார்கள், இவ்இளைஞர்கள். நியாயமாக கிடைத்திடவேண்டிய சட்ட உரிமைகள் அனைத்தும் முஸ்லிம் என்ற ஒரே காரணத்தினால் மறுக்கப்பட்டு வருகின்றன. அண்ணலெம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அடிமைகள் மேல் காட்டிய அதே பரிவு, நேசம், அடிமைத்தனத்திலிருந்து விடுவித்திடவேண்டும் என்ற அவா, துடிப்பு போன்ற குணநலன்கள் ஆகியவற்றை அப்படியே பின்பற்றிட வேண்டிய பொறுப்பு உம்மாவில் ஒவ்வொருவருக்குமுண்டு. அனைத்து வழிகளிலும் அட்சரம் பிசகாமல் பின்பற்றி அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை பெறக் கூடிய நன்மக்களாக நம்மை திகழச் செய்ய வல்லான் வாய்ப்பளிப்பானாக ‚ ஆமீன்.

இதுநாள் வரை இவ்வறக்கட்டளைக்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வசிக்கும் பலர் மனமுவந்து உதவி செய்துள்ளனர். உதவிகள் சிறிதாக இருந்தாலும் கொடுத்து உதவுபவர்கள் சூழ்நிலை, மனப்பான்மை ஆகியவற்றால், அவ்வுதவிகள் மிகப்பெரிய தாக்கத்தையும், மாற்றத்தையும் ஏற்படுத்திவிடும் என்பது இறைநியதியாகும். அபு துஜானா (ரலி) நபித்தோழர் ஒரு கை இல்லாதவர். அவ்ஒற்றை கையால் இரவு முழுவதும் பேரித்தம் தோட்டத்திற்கு கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து அதன் மூலம் கிடைத்திட்ட கூலியை தபூக் போரின் போது தனது பங்களிப்பு நிதியாக கொடுத்துதவினார். அண்ணலெம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், நிதியாக மலைபோல வந்து குவிந்திருக்கும் பொருட்களில் அபு துஜானா(ரலி)வின் நிதி தான் சிறப்பான பரக்கத்தான நிதியாகும். இதைக் கொண்டுதான் இவ்வனைத்து நிதிகளும் பரக்கத் அடைகின்றன என சிலாகித்து கூறினார். அதைப் போலத்தான் கொடுத்த உதவியது சிறியதாக இருந்த போதிலும் இதுவரை எண்ணற்றவர்களின் அடிமை வாழ்வை அகற்றி, சுதந்திரக் காற்றை சுவாசிப்பதற்கு காரணமாக அவ்வுதவிகள் அமைந்திருக்கின்றது என்றால் அது மிகையல்ல. இதுபோன்ற உதவிகள் சிறிதோ, பெரிதோ மனமுவந்து வாரி வழங்கிடுவீராக ‚

அடிமை சிறை வாழ்விலிருந்து ஒருவன் விடுதலையடைவது ஒரு குடும்பத்தையே விடுதலையடையச் செய்வது போன்றது.

கட்டியவன் என்று வருவான், நம் கவலைகளை தீர்க்க – என மனைவியும்,
 அரவணைத்து அங்குமிங்கும் அழைத்து, செல்ல தந்தை எப்போ வருவார் – என ஏங்கும் குழந்தைகளும்,

தள்ளாடும்
வயதிலே தவித்திருக்கிறோம், நம்மை கவனித்திட தங்கமகன் வரும் நாள் என்றோ – என தவிக்கும் பெற்றோரும் .....


ஆகவே, விடுதலையால் சிறைபட்டோரின் சந்தோஷம் மட்டுமல்லாமல் அக்குடும்பமே மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கிறது. இவர்களின் மகிழ்ச்சிக்கு ஓர் எல்லை உண்டோ? அதை வார்த்தைகளால் வர்ணித்திடத்தான் முடியுமா? இக்குடும்பங்களில் எல்லையற்ற மகிழ்வை ஏற்படுத்திட உங்களின் உதவிகளே முழு காரணமாக இருக்கின்றது எனில் அதன் மதிப்பு அல்லாஹ்விடத்தில் எத்தகையது என்பதை நாம் அளவிடமுடியாத பன்மடங்கான நன்மைக்குரிய விஷயம் என்பதில் கிஞ்சிற்கும் சந்தேகம் வேண்டாம். வல்லான் அல்லாஹ் அக்குடும்பங்கள் அடைந்த மகிழ்வைப் போல உதவிகள் செய்திட்ட ஒவ்வொருவரின் வாழ்வில் ஈருலகிலும் மகிழ்வை ஏற்படுத்திட இறைஞ்சுகிறோம்.

யார் ஒருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ,அவர் உலக மாந்தர்கள் அனைவரையும் வாழ வைத்தவர் ஆவார்.- அல்-குர்ஆன்


CHARITABLE TRUST FOR MINORITIES
96, Vincent Road
Coimbatore – 641001
Email : ctmcoimbatore@gmail.com
Website: www.ctmkovai.com
Phone : 0422 2037673
Mobile : +919786093544
Our Banker : ICICI BANK LTD., MILL ROAD BRANCH, COIMBATORE – 641 001
S.B. A/C. NO. 605301208490