Sunday, June 27, 2010

                     தமிழில் படித்தவர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை : செம்மொழி மாநாட்டில் முதல்வர் கருணாநிதி


               
கோவை : ""தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை வழங்கப்படும்; தமிழ் மொழி வளர்ச்சிக்காக 100 கோடி சிறப்பு நிதியம் உருவாக்கப்படும்; மத்திய ஆட்சிமொழியாக தமிழை உடனடியாக அறிவிக்க மத்திய அரசு முன்வர வேண்டும்,'' என செம்மொழி மாநாட்டு நிறைவு விழாவில் முதல்வர் கருணாநிதி பேசினார்.

கோவையில் கடந்த 23ம் தேதி துவங்கிய உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடுஇன்று நிறைவடைந்து. நிறைவு நாள் விழாவுக்கு மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமை வகித்தார். "நிறைவு நாள் விழாவில், தமிழுக்காக சில அறிவிப்புகள் வெளியிடப்படும்; அவை இன்னொரு பட்ஜெட் போல் இருக்கும்' என, ஏற்கனவே முதல்வர் கருணாநிதி அறிவித்து இருந்தார். அதைப்போலவே, சில அறிவிப்புகளை வெளியிட்டதுடன், தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

விழாவில், முதல்வர் கருணாநிதி பேசியதாவது: இம்மாநாட்டின் விளைவாக என்னென்ன செய்ய வேண்டும் என்பதை மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் பேசினார். நான் பக்கத்திலே நிதி அமைச்சர் இருக்கிறார் என்ற தைரியத்தில் அவர் சொன்னதை செய்வதாக ஒப்புக் கொண்டிருக்கிறேன். முன்கூட்டிய நான் அவைகளை பேச்சோடு பேச்சாக இரண்டுநாளைக்கு முன் அறிவித்தது போன்று நிதிநிலை அறிக்கை போல் தயாரித்துள்ளேன். நிதிநிலை அறிக்கை போல என்றுதான் சொன்னேன் பயந்து விட வேண்டியது இல்லை. அதற்கான நிதி உதவியை மத்திய அரசுதான் வழங்க வேண்டும். வலதுபுறத்தில் பிரணாப்பும், இடதுபுறத்தில் சிதம்பரமும் இருக்கும் போது நிதியைப் பற்றிக் கவலைப்பட வேண்டியது இல்லை. ஐந்து நாட்களாக கோவையில் எழுச்சியுடன் நடந்த மாநாடு நிறைவு விழா காண்கிறது. ஐந்து நாட்களும் சிந்தனை, சொல், செயல் அனைத்தும் தமிழ் என்றே இருந்தது.

உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவியுள்ள ஒரே இந்திய மொழி என்னும் சிறப்பு பெற்றது தமிழ் மொழி. உலகமொழியாகத் திகழும் ஆங்கில மொழியில் முதல் எழுத்து வடிவம் கி.பி.,7ம் நூற்றாண்டை சேர்ந்தது. ஜெர்மன் முதல் வடிவம் கி.பி. 8ம் நூற்றாண்டு; பிரெஞ்சு 9ம் நூற்றாண்டு; ரஷ்யாவின் பழமையான எழுத்து வடிவம் கி.பி.,10 நூற்றாண்டு; லத்தீனில் இருந்து பிறந்த இத்தாலி மொழி 10ம் நூற்றாண்டில் தான் எழுத்து வடிவம் பெற்றது. ஆனால், கி.மு. 2ம் நூற்றாண்டுக்கு முன்பே தமிழின் முதல் எழுத்து வடிவ தொல்காப்பியம் கிடைத்துள்ளது. அதுமுதல் இன்று வரை சாமானியர் முதல் ஆன்றோர் சான்றோர் வரை வாழும் மொழியாகவும்,வரலாற்று மொழியாகவும் உள்ளது. காதல், வீரம் இரண்டும் தமிழர்களின் இரு முக்கிய உணர்வுகள்.அதனை சங்கப்பாடல்கள் தெளிவாகக் காட்டுகின்றன. "குழந்தைப் பருவத்தில் தனது தாயாருடன் மணலில் அழுத்திய விதை முளைத்து புன்னை மரமாக எனக்கு முன் தோன்றியதால்,இம்மரம் என் அக்கா ஆகும் என் அன்னை சொன்னார். அக்காள் முன் உன்னோடு காதல் மொழி பேச கூசுகிறது வேறிடம் சொல்வோம் காதலனே என்றாள், மங்கை ஒருத்தி சங்க இலக்கியத்தில். இதனை "விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி' என்ற நற்றிணைப்பாடல் கூறுகிறது.
ஒரு குழந்தை இறந்தால் கூட விழுப்புண் படாமல் இறந்து விட்டதே என வருந்தி வளாõல் பிளந்து புதைத்த வீரத்தை "குழவி இறப்பினும் ஊண்தடி பிறப்பினும்' என்ற புறநானூற்று பாடல் கூறுகிறது. "பிறப்பொக்கும்' என வள்ளுவ மொழிப்படி சமதர்ம சமுதாயத்தை தமிழர்கள் பின்பற்றினர்.

கி.மு., 3ம் நூற்றாண்டிலேயே ரோமானியர்கள் தமிழர்களோடு வாணிபத்தொடர்பு கொண்டிருந்தனர். பொள்ளாச்சி, வெள்ளகோவில் உள்ளிட்ட கொங்கின் பல்வேறு பகுதிகளிலும் ரோமானிய நாணயங்கள் கிடைத்துள்ளன. கி.மு. முதல் நூற்றாண்டில் இருந்தே ரோமர்கள் கொங்குநாட்டுடன் வாணிபத்த் தொடர்புகொண்டிருந்தனர். ஜாவா, மலேசியா உள்ளிட்ட நாடுகளுடன் கடல்வழி வாணிபம் மேற்கொண்டுள்ளனர். தொன்மையால், இலக்கண இலக்கியங்கள் வாயிலாக அறநெறி, வாழ்வியல் நெறிமுறைகளைக் கொண்டுள்ளது செம்மொழியான தமிழ் மொழி. தமிழ் வளர்க்க பாடுபட்டவர்களை இந்த நேரத்தில் நினைவுர வேண்டும். ஒப்பிலக்கணம் கண்ட கால்டுவெல், போப், செம்மொழி என நிறுவிய பரிதிமாற்கலைஞர், சங்க இலக்கியங்களை ஓலைச்சுவடிகளை அச்சுவடிவம் பெறச்செய்த உ.வேச.சா., சி.வை., தாமோதரம் பிள்ளை, 20ம் நூற்றாண்டில் தனித்தமிழ் இயக்கத்தை தோற்றுவித்த மறைமலை அடிகள், திரு.வி.க., பாரதியார், பாரதிதாசன், இலங்கை தனிநாயகம் அடகள், வ.ஐ.., சுப்பிரமணியம், ஈ.வெ.ரா., அண்ணாதுரை போன்ற அனைத்து சான்றோர்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். செம்மொழித் தமிழை எதிர்காலத்தில் அறிவியல் தமிழாக கட்டிக் காப்போம் என உறுதி ஏற்போம்.


செம்மொழி மாநாடு தொடர்பான கலந்தாய்வில் சிவத்தம்பி தலைமையில் நடந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையிலும், ஏற்கனவே நான் கூறியது போன்று சில அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளன.

அறிவிப்புகள்:

* தமிழகத்தில் ஐந்து இடங்களில் மரபணு பூங்கா நிறுவப்படும். அதற்கு எம்.எஸ்., சாமிநாதன் பொறுப்பாளராக இருப்பார்.

* இலங்கை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களில் பெரும்பாலானவர்கள் மறுகுடியமர்வு செய்யப்படவில்லை. மறுகுடியமர்வு செய்யப்பட்டவர்களுக்கும் சரியான அரசியல் தீர்வு காணப்படவில்லை. சிங்கள அரசால் தரப்பட்ட உறுதிவார்த்தைகள் நிறைவேற்றப்படவில்லை என்பது வேதனை தருகிறது. தமிழர்களை மறுகுடியமர்வு செய்ய வேண்டும், அவர்களுக்கு தேவையானவற்றை செய்ய வேண்டும் என்பதற்கான முனைப்புகளை இலங்கை அரசு செய்ய வேண்டும். அதற்காக இந்திய அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இம்மாநாடு வலியுறுத்துகிறது.

* மத்தியில் தமிழ் ஆட்சிமொழியாக அறிவிக்கப்பட வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து தேசிய மொழிகளையும் ஆட்சிமொழியாக அறிவிப்பதில் தாமதம் ஏற்படுமேயானால், செம்மொழியான தமிழ் மொழியை முதல்கட்டமாக உடனடியாகஅறிவிக்க வேண்டும், என மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.

* சென்னை ஐகோர்ட்டில் தமிழ் பயன்பாட்டு மொழியாக வேண்டும் என, 2006ம் ஆண்டு சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி, உயர்நீதிமன்றத்தின் பரிந்துரையும் பெற்று மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளோம். இதனை தாமதிக்காமல் அங்கீகரிக்க வேண்டும் எனவும் மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.

* சமஸ்கிருத ஆய்வுகளுக்கு வழங்குவ;து போன்று, தமிழ் ஆய்வுக்கும் தேவையான மானியத்தொகையை மத்திய அரசு வழங்க வேண்டும்.

* இந்தியா முழுவதும் ஒரு லட்சம் கல்வெட்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் 60 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழ்க் கல்வெட்டுகள். எனவே, இந்திய அரசு அமைக்க உள்ள இந்திய தேசிய கல்வெட்டியல் மையத்தை தமிழகத்தில் அமைக்க வேண்டும்.

* கடலால் அழிந்த பூம்புகார், குமரிக்கண்டம் பகுதியில் ஆழ்கடல் ஆராய்ச்சி செய்ய மத்திய அரசு திட்டமிட வேண்டும்.

* தமிழகத்தில் தமிழ் ஆட்சிமொழி என்பது முழுமையாக நிறைவேற்றப்பட அரசு அலுவலர்களும், பொதுமக்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

* தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை வழங்கப்படும்.

* தமிழில் சிறந்த மென்பொருளை உருவாக்குபவர்களுக்கு "கணியன் பூங்குன்றனார்' விருதும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசும், சான்றிதழும் வழங்கப்படும். முதல்கட்டமாக விழா மேடையில் விருது வழங்கப்படுகிறது.

* பள்ளி, கல்லூரி, பல்கலையில் தமிழ் செம்மொழி என்ற தலைப்பில் ஆய்வுகள் நடத்தப்படும்.

* பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள், சான்றோர்களால் மதுரையில் தொல்காப்பியச் செம்மொழிச் சங்கம் அமைகிறது. அதன் செயலாக்கங்கள் பின்வருமாறு அமையும்.

* குறிப்பிட்ட கால இடைவெளியில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடத்துவது.

* திராவிட மொழிகளின் கலை,பண்பாடுகளை நினைவுறுத்தும் விதமாக நிரந்தர கண்காட்சி அரங்கம் அமைப்பது.

* மொழிக்கூறுகள் தொடர்பான ஆவணக்காப்பகம் அமைப்பது.

* சிதறுண்டு கிடக்கும் தமிழ் ஆராய்ச்சிக்குழுக்களை ஒருங்கிணைப்பது.

* மொழி ஆராய்ச்சியிலும், மொழித்தொண்டிலும் ஈடுபடும் சான்றோர்களுக்கும் ஆதரவளித்து துணை புரிவது.

* உலகத்தமிழறிஞர்கள் கையேடு வெளியிடுவது

* உலகத்தமிழர்களை தொடர்பு கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்வது.

* கோவை செம்மொழி மாநாட்டின் நினைவாக காந்திபுரத்தில் ஒரு கி.மீ.,நீளத்துக்கு100 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் அமைக்கப்படும்.

* தமிழின் சிறந்த படைப்புகளை இந்திய மொழிகளிலும், ஆசிய, ஐரோப்பிய மொழிகளிலும் மொழி பெயர்ப்பது; பிற மொழி படைப்புகளை தமிழில் மொழி பெயர்க்கப்படும்.

* அறிவியல் தமிழை மேம்படுத்த கம்ப்யூட்டர், மருத்துவம் போன்ற துறைகளில் பிறமொழி நூல்களை தமிழாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

* தமிழ் வளர்ச்சிக்கு தனியாக 100 கோடி ரூபாய் சிறப்பு நிதியம் உருவாக்கப்படும். இவற்றுக்கு மத்திய அரசும் நிதி ஒதுக்கி உதவ வேண்டும். இவ்வாறு, முதல்வர் கருணாநிதி பேசினார்.

                                 செம்மொழி மாநாடு தமிழ் வளர்ச்சிக்கா? கருணாநிதியின் விளம்பரத்திற்கா?

தமிழ்நாட்டில் தமிழிலேயே படிக்காமல் மழலை முதல் உயர்கலவி வரை யார் வேண்டுமானாலும் படிக்கலாம், தமிழே தெரியாமல் அண்டை மொழிகளில் மட்டுமல்ல, ஆங்கிலம் மொழி வழிகளிலேயே படிக்கிற வாய்ப்பு தமிழகத்தில் உள்ளது ஆனால், மருத்துவ படிப்பு மற்றும் உயர் கல்விகளே தமிழிலில் படிக்க வழியில்லை.

தமிழகத்தின் உயர் வழக்கு மன்றத்திற்கு மெட்ராஸ் உயர்நீதி மன்றம், என்றே பெயர் வைத்திருக்கிறார்கள் இன்னும் மாற்றவில்லை அதிலும் தமிழில் பேச தர்க்கமிட முடியாது.
தமிழக அரசு அலுவலகங்களில் கூட தமிழில் ஆட்சி நடைமுறைகள் முழுமையாக இல்லை.
தமிழகத்தில் இருக்கிற இந்திய அரசு அலுவலகங்களில் தமிழகமே நுழைய முடியாது.
வங்கிகளில் தமிழ் இல்லை, வழிபாட்டில் தமிழ் இல்லை
இவற்றையெல்லாம் தமிழில் கொண்டுவர வேண்டுமான முயற்சி திராவிட கட்சிகளிடம் இல்லை. முத்தமிழ் அறிஞர், ஐந்தமிழ் அறிஞர் என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் கருணாநிதிக்கு தமிழனைத் தமிழில் படிக்க வைக்க முடியவில்லை.
தில்லியில், மும்பையில் ஓடும் வண்டிகளில் இந்தியில் எண்கள் உள்ளன. கருநாடகத்தில் கன்னடத்தில் எண்கள், குஜராத்தில் குஜராத்திதியில் எண்கள், வங்காளத்தில் வங்காள மொழியில் எண்கள் உள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் தமிழில் எண்கள் எழுதினால் விதி மீறல் என்று சிறைப்படுத்துகிறது தமிழக அரசு.
தமிழினத் தலைவர் ஐந்து முறை முதலமைச்சராக தமிழகத்தை ஆட்சி செய்தும் தமிழை கல்வி மொழியாகவோ, அலுவல் மொழியாகவோ, ஆட்சி மொழியாகவோ நடைமுறைப்படுத்த இயலவில்லை என்றால் அவர் எதை நோக்கி மாநாடு அறிவிக்கிறார்.
செம்மொழி என்று இந்திய அரசு தமிழை ஏற்றிருப்பது சமஸ்கிருதத்திற்கு இணையாகக் கூட அல்ல.
ஆண்டுதோறும் சமஸ்கிருத வளர்ச்சிக்கு ஆயிரம் கோடி உருவாய் ஒதுக்குகிற இந்திய அரசு, தமிழ் வளர்ச்சிக்கு ஒரு கோடி மட்டும் ஒதுக்குகிறது என்பதை ஒப்பிட்டு பார்த்தால் தமிழ் எந்த அளவு இழிவுக்குள்ளாக்கப்படுகிறது என்பது தெரியும்.
தமிழக மக்களின் வாயை அடைப்பதற்கு தமிழைச் செம்மொழி என்கிற அறிவிப்பை ஒப்புக்கு இந்திய அரசு செய்திருக்கிறது என்றால், அதற்கு விழாச் சிறப்பு மாநாடு நடத்தி பெருமைப்பட்டுக் கொள்வது தமிழர்களின் காதுகளில் பூச்சுற்றவே அல்லாமல் வேறொன்றும் இல்லை.
மொத்தத்தில் தமிழ் வளர்ச்சிக்கு ஏதும் செய்ய இயலாத கலைஞர் கருணாநிதி, தமிழுக்குச் செய்ததாய் விளம்பரம் தேடிக் கொள்வதற்குத்தான் இந்த மாநாடு.
இப்படி விளம்பரம் தேடத் தான் இந்த மாநாடு பயன்படும் என அறிந்தே உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தினர் 9 ஆம் உலகத் தமிழ் மாநாட்டினை இப்போது நடத்த இசைவு தரவில்லை.
அந்த தோல்வியை மறைப்பதற்காக உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு எனப் புதிதாக ஒரு தலைப்பை உருவாக்கிப் புது வேடம் கட்டித் தன் காட்சித் திரையை இறக்குகிறார் கருணாநிதி.
ஆக, தமிழ் வளர்ச்சிக்குரிய மாநாடு இது இல்லை என்பதும் கலைஞர் கருணாநிதி தம் விளம்பரத்திற்கு நடத்திக் கொள்ளும் மாநாடு என்பதும் வெட்ட வெளிச்சமாய் தெரிகிறது.

                                                                                                                                                விடுதலை முழக்கம
 


Saturday, June 26, 2010

                                 ஆயுள் கைதிகளை விடுவித்தால் தேர்தலில் விபரீதம் ஏற்படும்: ஜெ.,


சென்னை :"ஜனநாயகத்தை சீர்குலைக்கும் வகையில் ஆயுள் கைதிகளை விடுதலை செய்யும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் என, தமிழக மக்களின் சார்பில் வலியுறுத்துகிறேன். இதனால், வரும் சட்டசபை தேர்தலில் விபரீதம் ஏற்படலாம்' என்று அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:"ஜனநாயகம், சோஷலிசம், தேசியம் ஆகிய மூன்றில் ஜனநாயகம் உருக்குலைக்கப்பட்டிருக்கிறது' என்று வேதனையுடன் சொன்னவர் அண்ணாதுரை. அவரது கொள்கைக்கு மாறாக, ஜனநாயகத்தை சீர்குலைக்கும் நோக்கோடு, அவருடைய நூற்றாண்டு தினத்தை முன்னிட்டே, 2008ம் ஆண்டு ஏழாண்டுகள் சிறைவாசம் முடித்தவர்கள் உட்பட 1,405 ஆயுள் தண்டனைக் கைதிகள் ஒட்டுமொத்தமாக விடுவிக்கப்பட்டுள்ளனர்."மக்கள் நம்பிக்கையை இழந்து, 2009ம் ஆண்டு பார்லிமென்ட் தேர்தலில் ஜனநாயக முறைப்படி மக்களை ஓட்டளிக்க விடாமல், குறுக்கு வழியில் வன்முறையாளர்கள் மூலம் தேர்தலை சந்திக்க ஆயுள் கைதிகளை விடுவித்துள்ளனர்' என்று, அப்போது கண்டனம் தெரிவித்தேன்.



இந்த குற்றவாளிகளில் பெரும்பாலானோர் தி.மு.க.,வினர்; இதில் மதுரை லீலாவதி கொலை வழக்கில் ஈடுபட்ட குற்றவாளிகளும் அடங்குவர். இவர்கள் உள்ளாட்சி மற்றும் பார்லிமென்ட் தேர்தல்களில் தி.மு.க., விற்கு ஆதரவாக செயல்பட்டனர் என்பது நாடறிந்த உண்மை.தற்போது, செம்மொழி மாநாட்டை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட ஆயுள் கைதிகளை, முன்கூட்டியே விடுதலை செய்ய திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. இது ஜனநாயகத்திற்கு விரோதமானது; கோர்ட்டை அவமதிக்கும் செயல். வரும் சட்டசபைத் தேர்தலில் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு, ஓட்டளிக்க விடாமல் ஜனநாயகப் படுகொலையை செய்யும் திட்டமோ, என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது.மனித சமுதாயத்தில் தவறுகள் நடக்க கூடாது என்பதற்காக, கொலைக் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை தரப்படுகிறது. அவர்களை முன்கூட்டியே விடுவிப்பது, சட்டத்திற்குப் புறம்பான, கொலையாளிகளை ஊக்கப்படுத்தும் செயல். இதுபோன்று முன்கூட்டியே விடுவித்தால், கொலை, கொள்ளை போன்ற கொடூர சம்பவங்கள் மேலும் அதிகரிக்கும்.


சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய அரசே, சட்டத்திற்குப் புறம்பான செயலில் ஈடுபடுவது வேதனைக்குரியது.கச்சத்தீவு, தமிழக மீனவர்கள் மீதான இலங்கை ராணுவத்தின் தொடர் தாக்குதல், காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு, பொன்னையாறு போன்ற நதிநீர்ப் பிரச்னை, பார்லிமென்ட்டில் தமிழில் பேசும் உரிமை, ஐகோர்ட்டில் தமிழ் என்று எதையும் பெற்றுத் தரமுடியவில்லை. தமிழகத்தின் அனைத்து உரிமைகளும் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. தமிழக மக்களுக்கு இருக்கும் ஒரே உரிமை, ஓட்டுரிமை. அதையும் ஆயுள் கைதிகளை விடுவிப்பதன் மூலம் பறிக்க நினைக்கின்றனர்.


"மக்களாட்சியிலும் சில பல கேடுகளும், கொடுமைகளும் ஏற்பட்டு விடுகின்றன என்றாலும், அவைகளை நீக்கிடும் உரிமையும், போக்கிடும் வாய்ப்பும் மக்கட்கு கிடைக்கிறது' என்றார் அண்ணாதுரை. மக்களுக்கு கிடைக்கும் ஒரே வாய்ப்பான ஓட்டுரிமையிலும் மண் அள்ளிப் போடுவதா?இதுபோன்ற ஜனநாயக விரோத செயலுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவிப்பதோடு, ஜனநாயகத்தை சீர்குலைக்கும் வகையில் ஆயுள் கைதிகளை விடுதலை செய்யும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் என்றும் தமிழக மக்களின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.


Thursday, June 24, 2010

Sunday, June 20, 2010



                         உலக தமிழ் செம் மொழி மாநாட்டின் வாயிலாக

                                    7 ஆண்டுகளுக்கும்  மேலாக

                    சிறையில் உள்ள  முஸ்லிம் சிறைவாசிகளை விடுவிக்க

                                     தமுமுக  மாநில தலைவர்

                            பேராசியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்

                                        கோவையில் பேட்டி...


கோவை -19
          மீிடியா வாயஸ் இணைதளத்திற்க்கு அளித்த பேட்டி அவர் கூறியது:
பேரறிஞர் அண்ணாவின் ஆட்சி காலத்தில் நடைபெற்ற  உலகத்தமிழ் மாநாட்டை ஒட்டி ஆயிரக்கனக்கான சிறைக்கைதிகளை பேரறிஞர் அண்ணா அவர்கள் விடுதலை செய்தார்.

           அதே போல் 2008 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா அவர்களின் நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு 7 ஆண்டுகள் நிறைவடைந்த 1405 சிறைக்கைதிகளை விடுதலை செய்தது. தமிழக அரசு ஆனால் அதில் முஸ்லிம் சிறைக்கைதிகள்  விடுதலை செய்யப்படவில்லை.

           இந் நிலையில் தமிழக சிறையில் கடந்த 13 ஆண்டுகளாக துயரங்களை  அனுபவவித்து வரும் முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை  செய்ய வேண்டும்.

            என்ற கோரிக்கை தமிழக மக்கள் மத்தியில் வலுவாக நிலவுகின்ற இத்தருணணத்தில் எதிர் வரும். உலகத் தமிழ்  செம்மொழி மாநாட்டை முன்னி்ட்டு  7 ஆண்டுகள் நிறைவடைந்த சிறைவாசிகளை விடுதலை செய்ய  வேண்டும்.

               அதோ போல் இந்த செம்மொழி மாநாட்டியில் மேலும் ஒரு கோரிக்கை.  கணினியில்  யுனிகோட்  தமிழ் எழுத்துருவை உருவாக்கியவருக்கு மதிப்பளிக்க  வேண்டும்

                சில ஆண்டுகளுக்கு முன்புவரை கணினியில் ஆங்கிலம் மடடும் பயன்பாட்டியில்  இருந்தது. தமிழ்மொழியை இணையத்தில் படிக்க முடியாதபடி பல விதமான தமிழ் எழுத்துருக்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இதனால் அச் சமயத்தில் தமிழ் மீது தீராத பற்று கொண்ட தஞ்சை மாவவவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்த  உமர் தம்பி, அனைத்துக் கணினிகளிலும் பயன்படுத்தவதற்கு ஏற்ற பொதுவான தமிழ் எழுத்துருக்களை  உருவாக்கினார். இதற்கு யுனிகோட் (ஒருங்குறி) எழுத்துரு என்ற  பெயர். இப்போது,, அந்த எழுத்துகள்தான் இணையதளத்தில் பயன்படுத்தப்படுகின்றன, ஆயிரக்கணக்கான தமிழ் இணைதளங்கள் யுனிகோட் எமுத்துருக்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.

                இணையதளங்கள்  எப்படி எல்லாம் தமிழை வளர்க்கின்றன என்பது குறித்து விவாதிப்பதற்காக  உலகத் செம்மொழி இணைய மாநாடு நடை பெறுகிறது. இம்மாநாட்டில் கணினித் தமிழை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்படும். இந்த மாநாட்டுக்கும். கணினித் தமிழ் வளர்ச்சிக்கும்  அடிப்படை யாக விளங்குவது யுனி கோட்  தமிழ் எழுத்துருக்கள் தான்.

               இந்த எழுத்துருவை உருவாக்கிய தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் உமர் தம்பி நினைத்திருந்தால், தனது கண்டுபிடிப்பை வணிகரீதியாக பயன்படுத்தி  இருக்கும் முடியும். ஆனால், அவர்கள் அவர் அவ்விதம் செய்யாமல், தமிழ் வளர்ச்சிக்குப் பயன்பட வேண்டும் என்ற நோக்கில் தமிழ் யுனிகோட் தொழில் நுட்பத்தை சமுதாயக்கு இலவசமாக வழங்கினர். கணினி தமிழ் வளர்ச்சிக்கு வித்திட்ட அவர் தற்போது  உயிருடன்  இல்லை. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அவருக்கு உரிய கெளரவம்  செய்யப்பட  வேண்டுடும். இக் கோரிக்கையை வலியுறுத்தி  தமிழக அரசிடம் பல முறை மனு கொடுத்துள்ளோம்.

                செம்மொழி தமிழை உயர்நீதிமன்ற வழக்கு மொழியாக்க   வேண்டும் என வழக்கஞர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது நியாயமான கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்றார். தமுமுக மாநில  தலைவர்  ஜவாருஹிருல்லாஹ் அவர்கள் .


                 மாலை 7 மணியளவில் கோவை கோட்டை மேடு  இக்பால் திடலில்  மாபெரும்  ஒற்றை கோரிக்கை  பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில்  தமுமுக மாவட்ட தலைவர் அப்துல் பஷிர் தலைமையில் நடைபெற்றது. சிறப்புரையாக,  தமுமுக மாநில தலைவர் போராசிரியர் எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ்அவர்கள், விடுதலை கோரிக்கை என்ற தலைப்பிலும், தமுமுக மாநில பொது செயலாளர்  எஸ். ஹைதர் அலி அவர்கள், கோவை முஸ்லிம்கள் நேற்றும் இன்றும் என்ற தலைப்பிலும், தமுமுக மோன்மை குழு உறுப்பினர்  குனங்குடி அனிபா அவர்கள், விடுதலை சிந்தனைகள் என்ற தலைப்பிலும், மற்றும் தமுமுக மாநில செயலாளர்  இ. உம்மர் அவர்கள், தமுமுக மாநில துனைச் செயலாளர்கள், கோவை சாதிக், கோவை சைய்யது, கோவை ஜாகீர், மமக மாவட்ட செயலாளர் சுல்தான் அமீர், மமக மாவட்ட பொருளாளர், டி.எம. எஸ். அப்பாஸ்,  மற்றும் மமக மாவட்ட நிர்வாகிகள், அப்பாஸ், ஷாஜகான், அதுபோல் தமுமுக மாவட்ட நிர்வாகிகள், அகமது கபீர், பர்கத்துல்லாஹ், மமக நகர தலைவர் ரபிக், மற்றும்  ஜபார், கவிஞர் ஹக்,  அக்பர் அலி, திருப்பூர் மாவட்ட தமுமுக தலைவர் யுசுப், ஊட்டி மாவட்ட தமுமுக தலைவர்  சமது,  ஈரோடு மாவட்ட தமுமுக  தலைவர் பாருக்,  திருப்பூா மாவட்ட மமக தலைவர் ஹாலித்தீன், மற்றும் கோவை  மாவட்டம், திருப்பூர்  மாவட்டம், ஈரோடு மாவட்டம், ஊட்டி,உடுமலை, பொள்ளாச்சி, மேட்டுபாளையம்,ஆகிய இடங்களில் இருந்து   தமுமுக, மமக, நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், கலந்து கொண்டார்கள், இதில்  700க்கும் மேற்பட்ட பெண் உட்பட . 3500  பேர்கள் கலந்து கொண்டார்கள்.
 
                                            கோட்டை மேடு பகுதிகள்  மாநாடு போல்
 
காட்சி அளிதத்து. இதில் முக்கியமான விஷயம்  என்னவென்றால் இந்த பொதுகூட்டம்  நடந்த இடம்  இக்பால் திடல்  13 ஆண்டு காலம் எந்த ஒரு அரசியல் கட்சிக்கோ, சமுதாய அமைப்புகளுக்கோ, பொது கூட்டம் பேச அனுமதி மறுக்கப்பட்டது. 1998 ஆம் ஆண்டு கோவை குண்டு வெடிப்பு பிறகு  இதில்  கடைசி  பொதுகூட்டம்  1997  ஆம் ஆண்டு கோவையில் 19 முஸலிம் இளைஞர்கள் 
கொல்லப்பட்ட போது  முஸ்லிம் வணிகம் செய்யும்  கடைகள். ஷோபா துணிகடை 
உட்பட பல முன்னணி நிர்வனங்களை  தீ யிட்டு கொழுத்தப்பட்டது. இதில் பல 
கோடி ருபாய்  நஷ்டம் ஏற்பட்டது.  இதற்காக  தமுமுக  பல இடங்களில்  வசூல் செய்து.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கியது. அப்போது  இந்த இக்பால் திடலில் வைத்துதான்
நல உதவிகள் வழங்கிய  போதுதான்  அன்று கோவையில் குண்டு வெடித்தது. அன்று 
முதல் யார்க்கும் பொதுகூட்டம் அனுமதி இல்லை. அதோ  தமுமுக  13 ஆண்டு பிறகு
பொதுகூட்டத்திற்க;்கு அனுமதி அளிக்கப்பட்டது.  இழந்த உரிமையை மிண்டும் 
மீட்போம் என்ற  உரையுடன் பொதுகூட்டம்  நடந்தது. என்று குறிப்பீடபட்டது.

செய்தி: புகைப்படம், கோவை தங்கப்பா 



















Monday, June 14, 2010



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர்   பி ஜே சிறப்பு பேட்டி...

10 சதவீத இடஒதுக்கீடு கிடைக்காவிட்டால் காங்கிரஸ் கூட்டணியை முஸ்லிம் மக்கள் புறக்கணிப்பார்கள்


திருப்பூர்- ஜின், 14

10 சதவித இடஒதுக்கீடு கிடைக்காவிட்டால், காங்கிரஸ் கூட்டணியை முஸ்லிம் மக்கள் புறக்கணிப்பார்கள் என்று தமிழ்நாடு தவ்ஹீத் தலைவர் ஜெய்னூல்ஆபுதீன் கூறினார். திருப்பூர் மாவட்ட தவ்ஹீத் ஜமாத் செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட பிஜே. நிருபர்களிடம் கூறியதாவது:

கடந்த பாராளுமன்ற தேர்தல் அறிக்கையில் முஸ்லிம் மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தனியாக இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று காங்கிரஸ் அறிவித்தது. அதை நம்பி முஸ்லிம் மக்கள் காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தார்கள்.

சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி ரங்கநாத மிஸ்ரா தலைமையில் அமைக்கப்பட்ட கமிஷன், இந்தியாவில் உள்ள முஸ்லிம் மக்களுக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் கிடைத்தள்ள சலுகைகள் குறித்தும், முஸ்லிம் மக்களின் மேம்பாட்டுக்கு தேவையான வழிமுறைகள் குறித்து அறிக்கை தயார் செய்து மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.


இந்தியாவில் உள்ள 110 கோடி முஸ்லிம் தொகையில், 15 கோடி முஸ்லிம் முக்கள் உள்ளனர், அரசு மற்றும் தனியார்வேலைவாய்ப்புகள்,கல்வியில் 13 சதவீத முஸ்லிம் மக்கள் இடம் கிடைக்க வேண்டும். ஆனால் தற்போது 3 முதல் 4 சதவீதம் தான் வாய்ப்பு கிடைக்கிறது.

அரசு வேலைவாய்ப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் கல்வி உள்ளிட்ட அனைத்திலும் முஸ்லிம் மக்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ரங்கநாத மிஸ்ரா கமிஷன் பரிந்துரை செய்தது. இந்த அறிக்கை பாராளு மன்ற கூட்டத்தொடரில் வைக்கப்பட்டது. ஆனால் அந்த அறிக்கை மீதான நடவடிக்கை அறிக்கையை அரசு வைக்க வில்லை.ரங்கநாத மிஸ்ரா அறிக்கை சம்பந்தமாக மத்திய அரசு என்ன செய்யப்போகிறது என்று கூறவில்லை.

இது குறித்து முஸ்லிம் தலைவர்கள் பிரதமரை சந்தித்து வலியுறுத்திய போது, அனைத்து கட்சியின் ஒருமித்த கருத்துடன் செயல்படுத்தப்படும் என்று பிரதாமர் கூறினார். அனைத்து கட்சியின் ஒருமித்த கருத்துடன் நிறைவேற்றுவது என்பது சிரமம். இதனால் முஸ்லிம்மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ரங்கநாதமிஸ்ரா கமிஷன் அறிக்கைப்படி, முஸ்லிம் மக்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை சட்டமாக நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சென்னையில் அடுத்த மாதம் ஜீலை 4ம் தேதி மாபெரும் பேரணி மற்றும் மாநாடு சென்னை தீவுத்திடலில் நடக்கிறது.

இந்த பேரணி மற்றும் மாநாட்டியில் தமிழ்நாடு மற்றும் தமிழ்பேசும் பிற மாநிலங்களில் வசிக்கும் முஸ்லிம் மக்கள் 15 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். முஸ்லிம் மக்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றவில்லை என்றால், வரும் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு முஸ்லிம் மக்கள் வாக்களிக்காமல் புறக்கணிப்பார்கள். இது ஒட்டு மொத்த முஸ்லிம் மக்களின் நிலைப்பாடாக இருக்கும். இதை விளக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டமாக சென்று செயல்வீரர்கள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு ஜெய'னூல் ஆபுதீன் கூறினார். பேட்டியின் போது பொதுச்செயலாளர் அப்துல் அமீது, மாவட்ட தலைவர் முகமது சலீம், செயலாளா அப்துல் கலாம் உடன் இருந்தனர்.


Sunday, June 13, 2010


கோவையில் கொட்டும் மழையில

மனித நேய மக்கள் கட்சி சார்பில

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்த கோரி

இரு சக்கர வாகன பிரச்சாரப் பேரணி...




 
கோவை 13

          உலகத்திற்கு கலாச்சாரம் கற்று கொடுத்த நமது நாடு இன்று போதை எனும் அரக்கன் கையில் சிக்கி சீரழிந்து வருகிறது. காந்தி பிறந்த நாட்டியில் போதையில் வரும் வருமானத்தில் அரசு நடக்கிறது என்று கூறும் கேவல் நலை தமிழகத்திற்கு வந்துள்ளது. தமிழ்நாட்டில் 46 சதவிதம் மக்கள் போதை நோயாளியாகி உள்ளார்கள்.

          இன்று ஆரம்ப கல்வி மாணவர்கள் மது குடிக்கும் ஆபத்து வந்துள்ளது. பெண்களையும் மது குடிக்க தூண்டும் விளம்பரங்களை அரசே வெளியிடுகிறது. மது நாட்டிற்கு வீட்டிற்கும் கேடு என்று அச்சடித்து விட்டு அரசே வெளியிடுகிறது. மது நாட்டிற்கு வீ்'டிற்கும் கேடு என்று அச்சடித்து விட்டு அரசே சாராய டாஸ்மாக் கடைகளை நடத்துகிறது. நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்று தெரிந்தும் அந்த வருமானத்தில் அரசு நடத்தலாமா? அதற்கு நாம் அனுமதிக்கலாமா? சாலை விபத்துகள் அதிகம் நடப்பது போதையால் தான். மதுவை கொடுத்து விட்டு வாசலில் நின்று அபராதம் விதிக்கும் அவலம் நடக்கிறது.


          இந்திய சுந்திரா போராட்ட காலத்தில் பூரண மதுவிலக்கு கோரி கள், சீமை சாராயத்திற்கு எதிராக முன் நின்று போராடிய காங்கிரஸ் அரசு , மத்தியலும், மது விலக்கை உயிராய் மதித்த பெரியார்,அண்ணா வழி நடத்துவோம் என்ற கலைஞர் ஆட்சி மாநிலத்திலும் தமிழக தெருக்களில் டாஸ்மாக்காய் ஓடுகிறது. கோட்டால் வருமானம் இல்லாமல் அரசு நடத்த முடியுமா என்கிறார் கலைஞர். குஜராத்தில் இன்றும் மது விலக்கு அமுலில் உள்ளது. இன்று குஜராத் வளர்ச்சிப் பாதையில் முன்னியில் உள்ள போது ஏன் நம்மால் முடியாது. மேலும் அரசுக்குடாஸ்மாக் மூலம் வரும் வருவாயைக் காட்டிலும் அரசு மருத்துமனைகளில்
சாலை விபத்துக்களால் மருத்துவமனைகள் நிரம்பி வழிவதும், கள், மது வகைகளில் குடல் நோய், வாய்ப்புண், கேன்சர், மனநோய் என சிகிச்சை செலவினங்களே அதிகமாகும். போதை தடுப்பு மையங்களும் மக்களின் பணம் விரயம் செய்யப்படுகிறது.

              மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்று முழக்கமிடும் கலைஞர் அசாமில் தேயஜலைக்கு மதிதிய அரசாங்கம் ராயல்டி கொடுக்கிறது, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்படும பொழுது ராயல்டி கொடுக்கப்படுகிறது. ஆனால் தமிழக நெய்வேலி நிலக்கரிக்கு,
மின்சாரத்திற்கு, கனிம வளங்களுக்கு ராயல்டி கொடுப்பதில்லை, ரயல்டி பெற்றாலே பல ஆயிரம் கோடி ரூபாய் தமிழகத்திற்கு கிடைக்கும். மக்களின் நலனை பாதுகாக்கவே அரசு க்கும் வருமானம் தேவை. மக்களுக்கு குடிக்க கொடுத்து குடியை கெடுத்து வரும் வருமானம் தேவை தானா? அதில் வரும் இலவசங்கள் இருந்தும் என்ன பயன். பெண்களுக்கு கலர் டி.வி. கொடுத்து மானாட மயிலாடா ஆட்டம் கண்டு சிந்திக்க விடாமலும், ஆண்களுக்கு மதுவை கொடுத்து சிந்திக்க விடாமலும் செய்து, இந்திய நாட்டின் சிறப்பு அம்சமான ஜனநாயகத்தை பண நாயகமாக்கும் முயற்சியை முறியடிக்க வல்லரசு கனவு இளைஞர்களே அரசியலக்கு அப்பாற்பட்டு அணிதிரள்வீர்.

              இந்த நாட்டை அடிமைபடுத்தியவனிடமே போராடி மதுவிலக்கை கொண்டு வர செய்யும் போது, சுந்ததிர இந்தியாவில் மக்கள் நல அரசு என்று கூறிக் கொள்ளும் அரசுகளிடம் நம் போராட்டம் உறுதியானால் ஏன் கொண்டு வர முடியாது. மது விலக்கு 34 ஆண்டுகள் தமிழகத்தில் பூரண மது விலக்கு அமுலில் இருந்தது. காந்தியும் காந்தியவாதிகளும் போதைக்கு எதிராய் போராடிய மாபெரும் மரபு நமக்கு உண்டு 1987-ல் மக்கள் குறிப்பாக பெண்களின் கடுமையான கள், சாராயம் எதிர்ப்பு போராட்டங்களாலே கள், சாராய கடை இழுத்து மூடப்பட்டன. அநீதிக்கொதிராய் மதுரையை எரித்த கண்ணகியின் வாரிசுகளே உங்களின் மணாலன்களை மனநோளியாக்கும் மதுவிற்கு எதிராய் திரும்பட்டும் உங்கள் கோப பார்வை எரியட்டும் தமிழக கள் மற்றும் டாஸ்மாக் கடைகள்.

               போதையில் தள்ளாடும் தமிழகத்தை தலை நிமிர்ந்து நிற்க வைக்க இனியொரு விதி செய்வோம் என்ற கண்டன உரையுடன் இரு சக்கர வாகன பிரச்சாரப் பேரணியை த.மு.மு.க. மாநில செயலாளர், இ. உம்மர் அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

             போதைக்கு எதிரான கோஷா முழக்கத்தயை த.மு.மு.க. மாநில துனைச்செயலாளர் கோவை செய்யது அவர்கள் வாகனத்தில் தொடர்ந்து முழுக்கமிட்டு வந்தார். இந்த நிகழ்ச்சிக்கு மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சுல்தான் அமீர் தலைமை தாங்கினர், இதில் 200க்கு மேற்பட்ட இரு சக்கர வாகனத்தில் 350க்கு மேற்பட்றோர்கள் கலந்து கொண்டார்கள். இந்த வாகன பிரச்சாரப் பேரணி கோவை ஆத்துபாலம்,குறிச்சி பிரிவு, போத்தூனுர், அறிவொளி நகர் , கோவைப்புதூர், இடையர்பாளையம், முடிவில் குனியமுத்தூர்யுள்ள த.மு.மு,க , மமக , கிளை அலுவலத்தில் முடிவுஅடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை, மனித நேய மக்கள் கட்சி மாவட்ட பொருளாளர் அப்பாஸ், தமுமுக மாவட்ட நிர்வாகிகள் ரபிக், நுர்த்தீன், மமக மாவட்ட நிர்வாகிகள், எம்.எச். அப்பாஸ், காஜா, நுர்முகம்மது, ஜபார், ஷாஜகான், பாவா நிசார், குட்டி, அப்பாஸ்,மமக நகர செயலளாளர் ரபிக், மமக இளைஞர் மாவட்ட நிர்வாகிகள் கவிஞர் ஹக், முத்துகாலனி காதர் அபுதாஹிர், ஜெமிஸா, ஆகியோர் ஏற்பாடுகளை செய்தார்கள். முடிவில் மமக மாவட்ட பொருளாளர் அப்பாஸ் நன்றி கூறினார்.

செய்தி, புகைப்படம் : கோவை தங்கப்பா













Friday, June 11, 2010

த மு மு க வின்
மாபெரும் ஒற்றை கோரிக்கை பொதுக் கூட்டம்
கோவையில்.......

Tuesday, June 8, 2010



மும்பை தாக்குதலில் போலீஸ் அதிகாரி
கார்கரேயை கொலை செய்தது யார் ?
நூல் அறிமுக விழா




திருப்பூர்- 6

இந்தியாவில் நடந்த அனைத்து குண்டு வெடிப்புகளில் முஸ்லிம் மீதே சுமத்தப்பட்டது. குறிப்பாக ஜீம்ஆ வேலையில் பள்ளியில் வெடித்த குண்டுகளுக்கும், நோன்பு திறக்கும் வேலையில் வெடித்த குண்டுகளுக்கும் முஸ்லீம்கள் மீது பழி சுமத்தப்பட்டு அப்பாவி முஸ்லீம் இளைஞர்கள் கைது செய்யப்பட்னர்.

ஹேமந்த் கர்கரே தீவிராத தடுப்பு படையின் தலைவராக நியமிக்கப்பட்டபின் உண்மையில் குண்டு வைத்தவர்கள் கைது செய்யப்பபட்டனர், அதானல் முப்பை தாக்குதல் எனும் நாடகத்தில் அவர் கொல்லப்பட்டார். அது எவ்வாறு நிகழ்ந்தது என்பதை மும்பையின் முன்னால் ஐ.ஐி. முஸ்ரிப் WHO KILED KARKAREY  எனம் நூலின் மூலம் வெளிக்கொணர்ந்தார்.

அதன் தமிழாக்கம் கார்கரேயை கொலை செய்தது யார்  எனும் நூல் வெளீயீட்டு விழா திருப்பூர்யில் ரோஜா மஹாழில் கடந்த  6ம் தேதி நடைபெற்றது.

இதில் திருப்பூர் ஐக்கிய ஜமாத் தலைவர் ஹாஜி ஜக்கரியா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்  கார்கரேயை கொலை செய்தது யார்  என்ற  நூல்யை தாருல் இஸ்லாம் பவுண்டேஷன் டிரஸ்ட் தலைவர்  ஜனாப் எம். குலாம் முஹம்மது வெளியீடா அதை மனித உரிமை மக்கள் வழக்கறிஞர் ப.பா. மோகன் பெற்றுகொண்டார். சிறப்புரையாக முன்னாள்  எம்.பி.  சுப்புராயன் பேசினார். இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் ஐக்கிய ஜமாத் துனைத்தலைவர்  நஜீர் அஹமது, பிலால் மஸ்ஜித் இமாம் ஜபருல்லா பாக்கவி, காதர்மைதின் பாக்கவி, சிறுபான்மை உதவி அறக்கட்டளை  துனைத்தலைவர்  அபுதாஹிர், ஆகியோர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள். முடிவில் காதர் மைதீன் நன்றி கூறினார்.இதில் 200க்கு  மேற்பட்றோர்கள் கலந்து கொண்டார்கள்.









Sunday, June 6, 2010

துபாயில் பிறைமேடை இதழ்
அறிமுகம் ....

துபாயில் எலந்தகுடி ஜமாஅத் சார்பில் பிறைமேடை மாதமிரு முறை இதழ் அறிமுகம் நிகழ்ச்சி ஜீன் 3ம் தேதியன்று மாலை நடைபெற்றுது. நிகழ்ச்சிக்கு எலந்தக்குடி முத்தலிபு இக்பால் தலைமை தாங்கினார் அவர்தனது உரையில் எலந்தக்குடி ஜமாத் சார்பில் பல்வேறு கல்வி மற்றும் சமுதாய நலப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறித்து விவரித்தார். எலந்தக்குடி நஜிமுதீன் வரவேற்புரை நிழ்த்தினர். சிறப்பு விருந்தினராக அமீரக காயிதேமில்லத் போரவை தலைவர் குத்தாலம் ஏ. லியாகத் அலி கலந்து கொண்டார். அவர் தனது உரையில் எலந்தக்குடியைச் சேர்ந்த இக்பால் மற்றும் நஜீமுதீன் சகோதரர்கள் மேற்கொண்டு வரும் சமுதாய நலப்பணிகளைப் பாராட்டினார். மேலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் சார்பில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மானை ஆசிரியராகக் கொண்டு வெளிக்கொணரப்பட்டு வரும் பிறை மேடை இதழுக்கு ஆதரவளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.
எலந்தக்குடி ஜமாத்தினர் போன்று ஒவ்வொரு ஜமாஅத்தினரும் பிறைமேடை இதழை தங்களது பகுதிகளில் அறிமுகப்படுத்தும் பணியை மேற்கொண்டு கல்வி சமுதாய மற்றும் அரசியல் விழிப்புணர்வு பணியினை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர். எலந்தக்குடி முத்தலிபு இக்பால் பிறைமேடை இதழை அறிமுகப்படுத்த கடைநல்லூர் அப்துல் காதர் ஜமான் பெற்றுக்கொண்டார். நிகழ்வில் அமீராக காயிதேமில்லத் போரவை தலைவர் குத்தாலம் ஏ. லியாகத் அலி, தேரிழந்தூர் இமாம் அலி, திருச்சி அப்பாஸ், மணிகிராமம் ரியாஸ், பெருந்தோட்டம் அமீர்ஹம்ஸா, சன்னாநல்லுர் ஷாஜகான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.
நன்றி : முதுவை ஹிதாயத்

Friday, June 4, 2010




                       தமிழகத்தில் கள் இறக்க அனுமதி அளிக்கக்கூடாது

                               மனித நேய மக்கள் கட்சி  ஆர்பாட்டம்


கோவை,ஜீன் 4
                  1937 ஆண்டுகளின் ஆங்கிலேய ஆட்சி காலத்தில் சுதந்திர ஒரு பங்காக சீமை சாராய ஒழிப்பு போராட்டதை முன்னின்று  நடத்திய காங்கிரஸ் கட்சி மத்தியிலும் , மதுவிலக்குகொள்கையாய் வைத்திருந்த தந்தை பெரியார், அண்ணா வழியையும், கொள்கையையும்  பின்பற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின்  கலைஞர் ஆட்சி மாநிலத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், மது ஆறாக தமிழகத்தில் ஒடிக்கொண்டிருக்கிறது. மதுவின் வருமானத்தில் தான் ஆட்சியை நடக்கிறது என்று கூறும் கேவலமான சூழ்நிலையை  மனித நேய மக்கள் கட்சி வண்மையாக கண்டிப்பதுடன், மாநிலத்தில் உடனடியாக மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும் என்பதுடன் 46 சதவிதம் மக்கள் மது நோயாளிகள் ஆகிவிட்ட நிலையில், உழைக்கும் மக்களையும் தாழ்த்தப்பட்ட மக்களையும் சுயமரியாதையை பறிக்கு நோக்கத்தில், மக்களை மது நோயாளிகளாக ஆக்கும் நோக்கத்தில் கள் இறக்க அனுமதி கோருவதையும்  வன்மையாக  கண்டித்தும்.

கோவையில் பொது மக்களுக்கும் வியாபாரிகளுக்கும் மிகவும் இடையூராக  உள்ள  உக்கடம், பொருமாள் கோவில் வீதி, செல்வபுரம் தெற்கு மற்றும் போத்துனூர் ஆட்டுதொட்டி ஆகிய இடங்களில் உள்ள டாஸ்மாக்  கடைகளை  உடனடியாக அப்புறப்படுத்த கோரியும்  ஆர்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மமக  மாவட்ட துனைச்செயலாளர் ஷாஜகான்,  தலைமை தாங்கினர். தலைமை கழக பேச்சாளர் கோவை  செய்யது கண்டன உரை ஆற்றினார், சமத்துவ முன்னணி நிர்வாகி தோழர்  கார்க்கி , மாவட்ட தமுமுக தலைவர் அப்துல் பஷிர், மமக மாவட்ட செயளாளர் சுல்தான் அமீர், மமக மாவட்ட பொருளாளர் டிஎம்எஸ் அப்பபாஸ், மமக மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அப்பாஸ், தமுமுக மாவட்ட பொருளாளர் கபிர், ஜபார், கவிஞர் ஹக், ஜபார்சாதிக், இளைஞர் அபு, நிஷார், காஜா, மற்றும் பொள்ளாச்சி நகர நிர்வாகிகள்,  தமுமுக, மமக, கிளை,நகரம்.மாவட்ட நிர்வாகிகள் உட்பட 500க்கும்  மேற்பட்டோர்கள் கலந்து கொண்டனர்.