Wednesday, October 28, 2009

இஸ்லாமிய சமுதாயத்திற்கு திமுக அரசு வழங்கியுள்ள சலுகை
முதல்வர் கருணாநிதி அறிக்கை

சென்னை: சிறுபான்மையினர் மேம்பாட்டுக்கு ஆற்ற வேண்டியது நிறைய இருக்கிறது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: இஸ்லாமிய சமுதாயத்தினரோடு, நமது திராவிட இயக்கமும், நானும் கொண்டுள்ள தொய்வில்லாத தொடர்பும், உறவும் இன்று நேற்று ஏற்பட்டதல்ல. 70 ஆண்டுகளுக்கு முன்பு, பள்ளி மாணவனாக இருந்த போதே, திருவாரூரில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டிலேயே நான் பச்சைப் பிறைக் கொடியை கையிலே ஏந்துகின்ற சிறுவனாக கலந்து கொண்டேன். இஸ்லாமிய சமுதாயத்தினர்மீது நான் கொண்டிருந்த மதிப்பின் தொடர்ச்சியாக; காயிதே மில்லத் மீது நான் கொண்டிருந்த அன்புக்கும், பாசத்துக்கும் அடையாளமாக அந்த சமுதாயத்தினருக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பல்வேறு நன்மைகளை வழங்கியிருக்கிறேன். 1969ல் மீலாது நபிக்கு அரசு விடுமுறை அறிவிப்பு, அதிமுக அரசு 2001ல் ரத்து செய்த மீலாது நபி அரசு விடுமுறையை 15.11.2006 ஆணை மூலம் மீண்டும் அறிவித்தது; 1973ல் உருதுபேசும் லப்பைகள், தெக்கனி முஸ்லிம்கள் ஆகியோரைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது; 1974ல் சென்னை அரசினர் மகளிர் கல்லூரிக்கு Òகாயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரிÓ எனப் பெயர் சூட்டியது; 1989ல் Òசிறுபான்மையினர் நல ஆணையம்Ó ஒன்றை 13.2.1989 அன்று உருவாக்கியது. 1999ல் வக்பு வாரியச் சொத்துக்களைப் பராமரிப்பதற்கென முதன்முறையாக ரூ.40 லட்சம் வழங்கியது; 1999ல் Òதமிழ்நாடு சிறுபான்மையினர் மேம்பாட்டுக் கழகம்Ó உருவாக்கியது; 2000ல் உலமா ஓய்வூதியத் திட்டத்தை 19.7.2000 முதல் தர்க்காக்களில் பணிபுரியும் முஜாவர்களுக்கும் நீட்டிப்பு செய்தது; 21.7.2000ல் Òஉருது அகடமிÓயைத் தொடங்கியது;காயிதே மில்லத் மணிமண்டபத்தை சென்னையில் அமைத்திட 25.2.2001 அன்று அடிக்கல் நாட்டி, திறக்கப்பட ஆவன செய்தது; சென்னைப் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய ஆய்வு மையம் ஏற்படுத்தியது, உலமா மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தை 2009, மார்ச்சில் ஏற்படுத்தியது என இஸ்லாமிய சமுதாயத்திற்கு திமுக அரசு வழங்கியுள்ள சலுகைகளும், நன்மைகளும் கணக்கிலடங் காதவை. 2001&2006 அதிமுக ஆட்சியில் முதலில் 6 மாதகாலம் முஸ்லிம் சமுதாயத்தின் பிரதிநிதியாக அன்வர்ராஜா இடம்பெற்றிருந்தார். அதற்குப்பிறகு முஸ்லிம் பிரதிநிதியே இல்லாமல்தான் அதிமுக அமைச்சரவை நடைபெற்றது. தற்பொழுது, 2006ல் பொறுப்பேற்ற திமுக ஆட்சியில் உபயதுல்லா, மைதீன்கான் என 2 முஸ்லிம் அமைச்சர்கள் உள்ளனர். முஸ்லிம் சமுதாயத்தினருக்குப் பிரதிநிதித்துவம் இல்லாத திமுக அமைச்சரவையே இதுவரை இருந்ததில்லை என்ற உண்மையை அந்த சமுதாயத்தினர் நன்கறிவார்கள். முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வேண்டுமென்ற கோரிக்கை நீண்டகாலமாகவே இருந்து வந்தது. அதனை ஏற்று, 2006&2007ம் ஆண்டுக்கான திமுக அரசின் நிதிநிலை அறிக்கையில், இஸ்லாமியர்களுக்கு தனி இடஒதுக்கீட்டுக்கான உறுதி வழங்கப்பட்டது. இதற்காக, நீதிபதி ஜனார்த்தனனை தலைவராகக் கொண்டுள்ள, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் பரிந்துரை கேட்கப்பட்டது. முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்கலாம் என்று அந்த ஆணையம் பரிந்துரை செய்தது. தமிழக அரசு இந்தப் பரிந்துரையை ஏற்று, அண்ணாவின் 99ம் ஆண்டு பிறந்தநாள் பரிசாக, பிற்படுத்தப்பட்டோருக்கான 30 சதவீத இடஒதுக்கீட்டில், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றுள்ள முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்கி, 15.9.2007 அன்று அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இப்படி தனி இடஒதுக்கீடு வழங்கியதன் காரணமாக, கல்வி நிலையங்களில் அவர்கள் பெற்றுள்ள இடங்களின் எண்ணிக்கை பெருமளவுக்கு அதிகரித்துள்ளன. எம்.பி.பி.எஸ். படிப்பில், இஸ்லாமியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு முன், 2006&2007ம் ஆண்டில் 46, 2007&2008ல் 57 இடங்கள் கிடைத்தன. ஆனால், அவர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு பிறகு 2008&2009ம் ஆண்டில் 78, 2009&2010ல் 80 இடங்கள் கிடைத்துள்ளன. அதாவது, தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு முன்பு பெற்றதைவிட 74 சதவீத அதிகமான இடங்களை பெற்றிருக்கிறார்கள். பி.இ., படிப்பில் 2007&2008ம் அவர்களுக்குக் கிடைத்த இடங்கள் 2125. தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதற்குப் பிறகு 2008&2009ம் ஆண்டில் 3288, 2009&2010ல் 3655 இடங்கள் கிடைத்துள்ளன. அதாவது, பொறியியல் படிப்பில் தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு முன்பு பெற்றதைவிட 72 சதவீத அதிகமான இடங்களை இப்போது பெற்றிருக்கிறார்கள். இஸ்லாமியர்களுக்குக் திமுக அரசு வழங்கிய தனி இடஒதுக்கீட்டின் காரணமாக இப்பொழுது அவர்கள் பெற்றுள்ள வெற்றி, எதிர்காலத்தில் அவர்கள் பெறவேண்டிய பல வெற்றிகளுக்கு அடிப்படையாக அமைந்திட வேண்டுமென்பதே எனது ஆசை. சிறுபான்மையினர் என்பதால் இஸ்லாமியர்களிடம் நாம் கொண்டிருக்கும் அக்கறையின் காரணமாக, அவர்களுக்கு பல்வேறு நன்மைகளைச் செய்திருந்தாலும்; இப்போதும் நான் சொல்லுகின்றேன் & எல்லாவற்றையும் நாம் செய்து முடித்துவிடவில்லை; அவர்களது மேம்பாட்டுக்கு நாம் ஆற்றிட வேண்டியது இன்னும் நிறைய இருக்கின்றது. நம்மைப் பொறுத்தவரையில், சமூக நீதிக்கான பயணம் என்பது, நீதிக்கட்சி காலத்திலேயே தொடங்கிய நெடிய பயணமல்லவா! இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

Thursday, October 22, 2009

பொள்ளாச்சி நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம்
சார்பாக

75 வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா
மற்றும்
மாபெரும் பொதுக்கூட்டம்
இறைவன் நாடினால்
நாள்: 23 - 10 -2009 வெள்ளிக்கிழமை
மாலை 5 . 00 மணி
இடம் : திருவள்ளுவர் திடல்
பொள்ளாச்சி
தலைமை
கபூர் அவர்கள்நகர தலைவர். த. மு் மு் க.
பொள்ளாச்சி
ஆம்புலன்ஸ் அர்பணித்து சிறப்புரை

பேரா. டாக்டர். எம்.செ். ஜவாஹிருல்லாஹ் அவர்கள்மாநிலத்தலைவர் த. மு. மு. க

எழுச்சியுரை
சகோ. எம். தமீமுன் அன்சாரி அவர்கள் மாநில துனைப்பொதுச்செயலாளர். ம. ம. க

சகோ. கோவை இ. உமர் அவர்கள்மாநில செயலாளர்.
த. மு. மு. க

சிறப்பு அழைப்பாளர்கள்த. மு. மு. கமாவட்ட. மாநகர. நகர. நிர்வாகிகள்அனைத்து அணி நிர்வாகிகள்
மாவட்ட. மாநகர. நகர. நிர்வாகிகள்மனித நேய மக்கள் கட்சிகோவை
நன்றியுரை்இ ரஃபில்தீன் அவர்கள்செயலாளர். பொள்ளாச்சி. த. மு. மு. க

Monday, October 19, 2009



சோஷியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின்துவக்க
பொதுக்கூட்டம்
எஸ். டி. பி் ஐ. யின் துவக்கவிழா மற்றும் தேசிய பிரதிநிதிகள் சந்திப்பு நிகழ்ச்சி டெல்லியில் F I C C I ஆடிடோரியத்தில் நடைபெறுவதை தொடர்ந்து, அகிலஇந்திய அளவில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் உள்ளது. அது சமயம் கோவையிலும் கொடியேற்றம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

நாள் : ஞாயிற்றுக்கிழமை 18-10-2009

நேரம் : மாலை 6 லி45 மணிக்கு

இடம் : கோவை. உக்கடம் லாரிப்
பேட்டை
வரவேற்புரை

எம். எஸ். அனீசுர் ரஹ்மான் ( செயலாளர்,எஸ். டி. பி் ஐ, கோவை )

தலைமை

வி. எம். அபுதாஹிர் (தலைவர்,,எஸ். டி. பி் ஐ, கோவை )

சிறப்பு அழைப்பாளர்கள்

என். அப்துல் அஜிஸ் (தொழில் அதிபர்)

கோவை தங்கப்பா ( சமூக நல ஆர்வலர்)

எ. யு. சுல்தான் ( தலைவர், அத்தர் ஜமாத்)

யு. சந்தானம் (இயக்குனர். தொன்போஸ்கோ அன்பு இல்லம்)

ஜின்னா (நிர்வாக உறுப்பினர். சி.டி.சி பள்ளிவாசல்)

சிறப்புரை

வழக்கறிஞர் பாவனி பா. மோகன் (தலைவர், தமிழ்நாடு)

எம்.ஒய். அபடபாஸ் (செயலாளர், பாப்புலர் ஃபிரண்ட், கோவை )

டி. எம். உமர் கத்தாப் ( பொதுச் செயலாளர் எஸ். டி. பி் ஐ, கோவை )

எ.எ. காதர் (தெற்குப்பகுதி செயலாளர் பாப்புலர் ஃபிரண்ட், கோவை )

நன்றியுரை

எ. ஜே. அப்துல் கரீம் (பொருளாளர்.எஸ். டி. பி் ஐ, கோவை )

சோஷியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின்
கோவை மாவட்டம்
புகைப்படம்




இனிப்பு வழங்கினார்கள்
கொடி ஏற்றும் போது
அணிவகுப்பு காட்சி
தொண்டர்கள் கூட்டம்


மேடை முகப்பு

எஸ். டி. பி் ஐ. யின் கொடி அறிமுகம்
வழக்கறிஞர் பாவனி பா. மோகன் (தலைவர்,N C H R O தமிழ்நாடு) உரை
எம். எஸ். அனீசுர் ரஹ்மான் ( செயலாளர்,எஸ். டி. பி் ஐ, கோவை ) உரை

டி. எம். உமர் கத்தாப் ( பொதுச் செயலாளர் எஸ். டி. பி் ஐ, கோவை ) உரை
வி. எம். அபுதாஹிர் (தலைவர்,,எஸ். டி. பி் ஐ, கோவை ) உரை
எ. ஜே. அப்துல் கரீம் (பொருளாளர்.எஸ். டி. பி் ஐ, கோவை ) உரை


மேடையில் கோவை தங்கப்பா
மக்கள் கூட்டம்

எ.எ. காதர் (தெற்குப்பகுதி செயலாளர் பாப்புலர் ஃபிரண்ட், கோவை ) உரை

யு. சந்தானம் (இயக்குனர். தொன்போஸ்கோ அன்பு இல்லம்) உரை

எ. யு. சுல்தான் ( தலைவர், அத்தர் ஜமாத்) உரை
ஜின்னா (நிர்வாக உறுப்பினர். சி.டி.சி பள்ளிவாசல்) உரை




Saturday, October 17, 2009

சோஷியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின்துவக்க
பொதுக்கூட்டம்
எஸ். டி. பி் ஐ. யின் துவக்கவிழா மற்றும் தேசிய பிரதிநிதிகள் சந்திப்பு நிகழ்ச்சி டெல்லியில் F I C C I ஆடிடோரியத்தில் நடைபெறுவதை தொடர்ந்து, அகிலஇந்திய அளவில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் உள்ளது. அது சமயம் கோவையிலும் கொடியேற்றம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

நாள் : ஞாயிற்றுக்கிழமை 18-10-2009

நேரம் : மாலை 6 லி45 மணிக்கு

இடம் : கோவை. உக்கடம் லாரிப்
பேட்டை
வரவேற்புரை

எம். எஸ். அனீசுர் ரஹ்மான் ( செயலாளர்,எஸ். டி. பி் ஐ, கோவை )

தலைமை

வி. எம். அபுதாஹிர் (தலைவர்,,எஸ். டி. பி் ஐ, கோவை )

சிறப்பு அழைப்பாளர்கள்

என். அப்துல் அஜிஸ் (தொழில் அதிபர்)

கோவை தங்கப்பா ( சமூக நல ஆர்வலர்)

எ. யு. சுல்தான் ( தலைவர், அத்தர் ஜமாத்)

யு. சந்தானம் (இயக்குனர். தொன்போஸ்கோ அன்பு இல்லம்)

ஜின்னா (நிர்வாக உறுப்பினர். சி.டி.சி பள்ளிவாசல்)

சிறப்புரை

வழக்கறிஞர் பாவனி பா. மோகன் (தலைவர், தமிழ்நாடு)

எம்.ஒய். அபடபாஸ் (செயலாளர், பாப்புலர் ஃபிரண்ட், கோவை )

டி. எம். உமர் கத்தாப் ( பொதுச் செயலாளர் எஸ். டி. பி் ஐ, கோவை )

எ.எ. காதர் (தெற்குப்பகுதி செயலாளர் பாப்புலர் ஃபிரண்ட், கோவை )

நன்றியுரை

எ. ஜே. அப்துல் கரீம் (பொருளாளர்.எஸ். டி. பி் ஐ, கோவை )

சோஷியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின்
கோவை மாவட்டம்

Sunday, October 11, 2009

இறைவனின் திருப்பெயரால். . . .
அஸ்ஸலாமு அலைக்கும், (வரஹ்)

அன்புள்ள சமுதாயத்திற்கு,
சிறுபான்மை அறக்கட்டளையின் அன்பு மடல்.
உயர்நீதிமன்றத்தில் கோவை குண்டுவெடிப்பு வழக்கின் விசாரணை முடியும் தருவாயில் இடைக்கால உத்தரவாக இரண்டு இளம் சிறார்களான முஜிபுர் ரஹ்மான் அம்ஜத் அலி ஆகியோர்களை (இளம் சிறார்களான இவர்கள் மீது வழக்கு தொடுத்தது தவறு என) உயர்நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இது சி.டி.எம். அறக்கட்டளை மேற்கொண்ட சட்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறோம்.

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கீழ் கோர்ட்டில் தீர்ப்பு கொடுக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகின்றது. தண்டிக்கப்பட்டவர்களான ஆயள் தண்டனை சிறைவாசிகளை எங்ஙனமாவது விடுதலை செய்து விடவேண்டுமென சி.டி.எம்.அறக்கட்டளை கடந்த இரண்டாண்டுகளாக சட்ட போராட்டம் மேற்கொள்வதற்கான பொருளாதாரம் ஈட்டுவதில் கடுமையாக களமிறங்கி பணி செய்தது. உயர்நீதிமன்றத்தில் மிகச் சிறந்த மூத்த வழக்கறிஞர்களான N. நடராஜன், கோபிநாத், சேவியர் ‡பிலிக்ஸ், ப. மோகன், திருமலைராஜன், ஜெயகுமார், அபூபக்கர் ஆகியோர்களை அறக்கட்டளை சார்பாக நியமித்தோம். வழக்கை முடித்து கொடுப்பதற்கான மொத்த செலவு 70 இலட்சம் என பேசி முடிக்கபட்டது. வழக்கு முடிவடைந்த இந்நிலையிலும் வழக்கறிஞர்களுக்கு கொடுக்க வேண்டிய தொகையில் மீதம் இன்னும் கொடுக்க வேண்டியுள்ளது சி.டி.எம்.அறக்கட்டளை தற்போது வழக்கறிஞர்களுக்கு கடன் பட்டுள்ளது. 70 இலட்சம் என்பது நம் சமுதாயத்தை பொறுத்தவரை ஒரு பெரிய தொகையே அல்ல.

மாவட்டத்திலுள்ள ஓரிரு செல்வந்தர்கள் தலா ஒரு இலட்சம் என்று கொடுத்து உதவினாலே இத்தொகை மிக சுலபமாக ஆகிவிடும். ஆனால், மாறாக இரண்டு ஆண்டுகாலமாக இத்தொகை சேமிக்க கடும் முயற்சி எடுக்க வேண்டியதாக போயிற்று. நிலைமை இப்படி இருந்த போதிலும் அல்லாஹ்வின் பேருதவியால் உள்ளூரிலும், வெளியூர்களிலும், வெளிநாடுகளிலும் ஒரு சில நல்ல உள்ளங்கள் செய்திட்ட தூய்மையான பொருளாதார உதவியினால் இவ்வழக்கை எதிர் கொண்டதில் அல்லாஹ்வின் மாபெரும் கருணையால் இவ்விரு சகோதரர்கள் இவ்வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு இருக்கின்றார்கள். (அல்ஹம்துலில்லாஹ்)

சிறையிலிருந்து விடுதலை பெற்றதிலே - பொருளாதார உதவி அளித்திட்ட அத்தனை பேருக்கும் இவர்களின் விடுதலையில் பங்களிப்புண்டு. அநியாயமாக 12 ஆண்டுகாலமாக சிறையில் அடைபட்டு, வதைபட்டு வறண்டுபோன இவ்வுள்ளங்கள் விடுதலையினால் அடையும் சந்தோசத்திற்கு ஒரு அளவுகோல் உண்டா?... இத்தகைய சந்தோசம் கிடைத்ததில் பொருளாதாரம் கொடுத்துதவிய அனைத்து நல்உள்ளங்களுக்கும் பங்குண்டு.

இவர்கள் அடைந்த சந்தோசத்தை போல் பொருளாதார உதவி செய்திட்டவர்களின் உள்ளங்களிலும் அவர்களின் குடும்பங்களிலும் மகிழ்ச்சியும் ஆனந்தத்தையும் வல்லான் அல்லாஹ் ஈருலகிலும் வாரி வழங்கிட வேண்டுமென அறக்கட்டளையின் சார்பாக பிரார்த்திக்கிறோம்.

இது போன்று இன்னும் எத்தனையோ சிறைவாசிகள் ஆண்டுகணக்கில் சிறையில் அடைபட்டுக் கிடக்கிறார்கள். அவர்களுக்கும் இத்தகைய மகிழ்ச்சி கிட்டிடவும் அவர்களின் மனைவி மக்களோடு அவர்கள் இணைந்திட வேண்டியும் தாங்கள் அனைவரும் மனம் உருகி பிரார்த்திக்க வேண்டும். இன்னும் இவ்வழக்கின் தீர்ப்பு ஓரிரு வாரங்களின் வழங்கி விடுவார்கள் தீர்ப்பு வரும் வரை உங்களின் கரங்கள் இவர்களின் விடுதலைக்காக உயர்ந்த வண்ணமே, மனங்கள் இறைஞ்சிய வண்ணமே. . .
அன்புடன்
சி .டி .எம் .
அறக்கட்டளை
கோவை-1

Tuesday, October 6, 2009

இரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு 4நால்வர் பலி

சோழவந்தான் இரயில் நிலையத்தில் இன்று மாலை குண்டுவெடித்ததில் நால்வர் கொல்லப்பட்டார்கள். நிலைய மேலாளர் உட்பட் பலர் காயமடைந்தனர். மதுரை லி திண்டுக்கல் இடையே உள்ள ஊரான சோழவந்தானில் இன்று மாலை நெல்லைலிஈரோடு இரயில் வந்து நின்ற சில நிமிடங்களிலேயே குண்டு வெடித்தது.

குண்டு வெடித்ததில் சம்பவ இடத்திலேயே, இரயிலுக்கு காத்திருந்த பயணிகள் இருவர் கொல்லப்பட்டனர். மேலும் இருவர் மருத்துவமனையில் உயிரிழந்தனர். நிலைய மேலாளர் ஆறுமுகம் உட்பட பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறையினர், இது தீவிரவாதிகளின் செயலாக இருக்க வாய்ப்பில்லை என்றும், குவாரியில் பாறைகள் உடைக்க வைக்கப்பட்ட ஜெலடின் குச்சிகள் வெடித்ததா? அல்லது கிணறு வெட்ட வைக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் வெடித்ததா? என்பது குறித்தும் விசாரித்து வருவதாக தெரிவித்தனர்.

இக்குண்டு வெடிப்பு சம்பவம், சோழவந்தானில் பெரும் பீதியை கிளப்பியுள்ளது. பாதுகாப்பிற்காக போலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Thursday, October 1, 2009

கமலுக்கு எதிராக அல் - உம்மா ! ! !

நன்றி -நக்கீரன்