Sunday, September 7, 2008

கோவையில் இஸ்லாமிய அமைப்புகள்

தினமலர் நாளிதழை கண்டித்து கோவையில்.
எம் என் பி. த மு மு க. ஜாக்.
சி டி எம். சமுதாய அமைப்புகள் ஒன்று இனைந்து. மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். 5000 மேற்பட்றோர்கள் கலந்துகொண்டார்கள்.....
தினமலர் நாளிதழை கண்டித்துமபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்அன்றைய மனித சமுதாயம் காட்டுமிரண்டிகளாகவும்,விலங்குகள்போலவும் கலாச்சார சீர்கேடுகளில் மூழ்கி குளித்துக் கொண்டிருந்தது.அம் மனித சமுதரயத்தை சுத்தப்படுத்தி மனிதர்களாக மாற்றி.ஒழக்கத்தை போதித்து அழகிய வாழ்க்கை கல்வியை இவ்வுலகிற்க்கு அளித்தவர் எம்பெருமானார்முஹம்மது நபி(ஸல்) அவர்கள். அங்கிருந்து தோன்றிய அந்த பிரகாசம் ஒளிதான் உலகெங்கும் படர்ந்துபரவியது.அந்த ஒளியிலே கராச்சாரத்தையும்,விஞ்ஞானத்தையும் கற்ற ஐரோப்பா. சூரிய ஒளியை அற்ப கையால் மறைப்பது போல் இஸ்லாத்தின் மீது அவ்வப்போது சேற்ற வாரி வீசும் பணியைத் தொடர்ந்து செய்துவந்தது. அதில் ஒன்றுதான் டென்மார்க்கின் பத்திரிகையான ஜிலான்ட்ஸ்-போஸ்டன் என்ற பத்திரிக்கைஇஸ்லாத்தின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் முஸ்லிம்களின் உயிரினும் மேலான முஹம்மது நபி (ஸல்) அவர்களின் தலைப்பாதையில் வெடிகுண்டுடன் ஒரு கேலிச்சித்திரத்தை வெளியிட்டது. இவ்வலியினை தாங்க முடியாத முஸ்லிம் சமூகம் உலகமெங்கும் பெரும் போராட்டத்தை நடத்தினர்.இச் சம்பவம் உலகலத்தில் உள்ள எல்லா மக்களும் அறிவார்கள். தின மலர் பத்திரிக்கைக்கும் தெரியும். அமைதியான ரமழான் மாதத்தை முஸ்லிம்கள் கடைபிடித்துக் கொண்டிருக்கும் இவ்வேலையில் தின மலர் பத்திரிக்கை இந்த அமைதியை சீர்குலைக்கவும், தனது முஸ்லிம் எதிர்ப்பு எனும் அரிப்பைத் தீர்த்துக்கொள்ளவும்,முஸ்லிம்களை கொந்தளிக்கச் செய்வதற்காக ஒன்றும் தெரியதாத அப்பாவி போல் இக் கேலிச் சித்திரத்தை மறு பிரசும் செய்துள்ளது எனவே தினமலர் நாளேட்டைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம். கோவையில் 4.08.08 அன்று சமுதாய இயக்ககள் தமுமுக, எம் என் பி, ஜாக், சிறுபான்மை உதவி அறகட்டளை,ஆகியோர்கள் இனைந்து சுமார் 5000க்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டார்கள்.இந்த ஆர்ப்பாட்டத்தில். தமுமுக மாவட்ட தலைவர் பஷிர் தலைமையில்.சிறப்புரையாக தமுமுக மாநில செயலாளர் உமர்,எம்என்பி மாவட்ட தலைவர் இஸ்மாயில்,ஜாக் மாவட்ட செயலாளர் மசூத், சிறுபான்மை உதவி அறக்கட்டளை தலைவர் உமர்ஷா, கோவை தங்கப்பா. ஆகியோர்கள் கலந்துகொண்டார்கள்.









த மு மு க மாநில செயலாளர். உமர் அவர்கள் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு அருகில்
எம் என் பி . மாவட்ட தலைவர் இஸ்மாயில். ஜாக் மாவட்ட தலைவர் மலங்கு. மற்றும்
கோவை தங்கப்பா ஆகியோர்கள் உடன் இருந்தார்கள்.
ஜாக் மாவட்ட செயலாளர் மசூத் உரை