Thursday, December 17, 2009

The Muuti Media Soft டேச்நோலோகீஸ்

ஒர் இனிய அறிமுகம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அன்புள்ள சகோதரர்களுக்கு
நம்முடைய முஸ்லிம் உம்மத் கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ளது யாவரும் அறிந்ததே. சச்சார் கமிட்டி இதனை அறிக்கையாக ஊருக்கே வெளிச்சம் போட்டுக் காட்டியது. கல்வியை எங்கு கிடைத்தாலும் பெற்றுப் பயனுற்ற உலகிற்கே முன்னோடிகளாய் திகழ வேண்டிய சமூகம் இன்றோ நாதியற்றுச் சீர்குழைந்து நிர்க்கதியாய் தெருவேரங்களில் முடங்கிக் கிடக்கின்றது. வாழ்க்கைக்குப் பணம் சம்பாதித்தால் போதும் எனனும் மனப்பான்மையினால் வணிகம் வியாபாரத்தை மட்டும்மே இலக்காகக் கொண்டு காசு பணத்தை மட்டும்மே தேடியலையும் சமூகமாய் நாமின்று மாறிவிட்டோம். இந்நிலையை மாற்றியே ஆகவேண்டும், அதுவும் விரைவாய் வெகு விரைவாய். அதற்கான ஒரு சிறு முயற்சிதான் தி மல்ட்டி மீடியா ஸாஃப்ட் டெக்னாலஜி இது ஒரு சமுதாய நிறுவனம்.

இன்றைய வேகஉலகில் தவிர்க்வே முடியாத ஓர் அம்சமாய் திகழுவது கணிணி என்பதை செய்தித்தாள் வாசிக்கத் தெரிந்தவர்கள் கூட மிகச்சரியாக புரிந்து வைத்திருப்பார்கள். அக்கணிணித் துறையில் நம்மவர்களை வல்லவர்களாகவும் சிறிகடித்து பறப்பவரளாகவும் உருவாக்கவேண்டும் என்பதையே குறிக்கோளாகக் கொண்டு தோற்றுவிக்கப்பட்டுள்ளது தி மல்ட்டி மீடியா ஸாஃப்ட் டெக்னாலஜி கம்ப்யூட்டர் என்பது ஏதோ கண்க்கு போடும் கருவியோ மொபைல் ஃபோன்களுக்கு டவுன்லோாடு செய்யும் மெஷினோ கடைக்கு வைக்கும் பேனர்களை உருவாக்கும் இயந்திரமோ அல்ல. கண்டிப்பாக இல்லை. மாறாக, உலகத்தில் வெற்றிவாய்ப்புகளை குவிக்க நினைப்பவர்களுக்கு வாசலை அகலமாகத் திறந்து வைக்கும் வெற்றிச்சாவி.
கம்ப்யூட்டர் பயில வேண்டுமென்றால் ஆயிரக்கணக்கில் செலவளிக்கவேண்டும். நிறையப் படித்திருக்க வேண்டும் என்றெல்லாம் நினைத்துக்கொண்டு அதைப் பற்றி யோசிக்கவே நாம் பயப்படுகிறோம். தமிழ்நாட்டில் கம்ப்யூட்டர் துறையில் முன்னிணியில் திகழுகின்ற நிறுவனங்களில் நுழைந்து பார்த்தால், நுழைவது என்ன அவற்றின் விளம்பரங்களைக் கண்ணுற்றாலே நமக்கு கண்டிப்பாக நமக்கு கம்ப்யூட்டர் பயிலவேண்டும் என்னும் எண்ணமே வராது.
ஏராளமாய் சம்பாதிக்க வேண்டும் என்னும் வணிகநோக்கம் இல்லாமல் சமூகத்தை முன்னேற்ற வேண்டும் என்பதை முதல் இலக்காகக் கொண்டு இந் நிறுவனம் துவக்கப் பெற்றுள்ளது. முஸ்லிம் பெண்கள், முஸ்லிம் மாணவர்கள், மாணவியர்கள் என அனைத்து தரப்பாரும் பயனுறும் வகையில் பல்வேறு துறைக்கல்வியை இந்நிறுனம் வழங்க உள்ளது.
அதுமட்டுமல்லாமல் சமூகத்திற்கு வழிகாட்டுகின்ற உலமாக்களைப் பற்றி யாருமே கவலை கொள்ளுவதாகத் தெரியவில்லை. பள்ளியில் நின்று தொழுவைப்பது மட்டும் அவர்களுடைய பணியாக இருக்காலாகாது. மாறாக சமூக அரங்கிலும் முன்னிணியில் நின்று அவர்கள் பணியாற்றியாக வேண்டும், அதற்கான பல்திறன் தகுதிகளை அவர்கள் உருவாக்கிக் கொள்ளவேண்டும். அவற்றுள் மிக முக்கியமானது கணிணிப் பயிற்சி. கணிணிப் பயிற்சியின் மூலம் அவாகள் உலகத்தை மட்டும் அறிந்து கொள்ளப் போவதில்லை. அத்தோடு அரபி மொழியையும் வளர்த்துக்கொள்ள முடியும் ஆயிரக் கணக்கான அரபி நூற்களை அணுகி வெகு எளிதாக ஆய்வுக்கண் கொண்டு அறிவமுதம் பருகமுடியும்.
சமூகத்தின் பெருந்தகைகளான தங்களிடம் கோரிக்கையொன்றை ஈங்கு நாங்கள் முன்வைக்கிறோம். சமூகநலன் கருதி துவங்கப்பட உள்ள இப்பணிக்கு தங்களுடைய ஆதரவையும் ஆலோசனையையும் உறுதுனணயையும் உதவிகளையும் ஒத்தாசசைகளையும் எதிர்நோக்குகிறோம்.
சிற்பான முறையில் இற்றிறுவனத்தை இயக்க துனைபுரியும் வகையில் 15 கணிணிப்பொறிகளை வாங்கியாக வேண்டியுள்ளது. எனவே, தங்களால் இயன்ற அளவு ஒன்று, இரண்டு, நான்கு, என கணிப்பொறிகளை வாங்கியளிக்குமாறும் முஸ்லிம் உம்மத்தினரை முன்னேற்றம் முயற்சியில் இயன்ற உதவி ஒத்தாசைகளை வழங்குமாறும் இந்த பணி இறைவனின் நற்கூலி பெறுவாதுதான் எங்கள் நோக்கம் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு
இஸ்லாமிய சகோதரன்
முஹம்மது ஸஃபையர்என்னும்கோவை தங்கப்பா94436 54473