சேலத்தில் முதல் முதலில் 4000க்கு மேற்பட்றோர் கலந்துகொண்டா
தமுமுகவின் முஸ்லிம்களின் எழுச்சி மாநாடு !!!
எல்லா புகழும் இறைவனக்கே.
தமுமுக சார்பில் நவம்பர் 2ம் தேதி சேலத்தில் முஸ்லிம்களின் எழுச்சி மாநாடு நடந்தது.இந்த மாநாட்டியில் தமுமுக மாநிலத்தலைவர் ஜவாஹிருல்லாஹ் பேசுகையில்,தமுமுக,சமுதாயத்தின் முன்னேற்றத்தை மட்டுமே முன்னிலை படுத்தி செயல்பட்டு வருகிறது நாட்டில் நடக்கும்பல்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு, முஸ்லிம்கள் மீது பழிபோடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்,என்றார். தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அளிக்கப்பட்டுள்ள 3.5 சதவிதம் இடஒதுக்கீட்டை,6 சதவிதமாக உயர்த்த வேண்டும், முஸ்லிம்களுக்கு அனைத்திந்திய அளவில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் தனி இடஒதுக்கீ வழங்க ஐக்கிய முற்போக்கு கூட'டணி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.தேர்லில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத கட்சிகளுக்கு,இனி வரும் தேர்தலில்,முஸ்லிம்கள் ஆதரவு அளிக்கக் கூடாது என்று ஜவாஹிருலாஹ் பேசினார்.இதையடுத்தது. தமுமுக. பொதுச்செயலர். ஹைதர்அலி பேசுகையில்,நாட'டியில் பல்வேறு இடங்களில் நடந்து வரும் குண்டு வெடிப்பு சம்பவங்கள் அனைத்தும், முஸ்லிம்களால் ஏற்படுவதாக,அரசும், ஊடகங்களும், பொய் பிரசாரம், மேற்கொண்டு வருகின்றன. இந்நிலை மாற வேண்டும்.முழு விசாரணை நடத்தாமலே முஸ்லிம்களை, பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் நிலையை மத்திய அரசு மாற்றிக் கொள்ள வேண்டும்,அப்படி, மாற்றிகொள்ளாவிட்டால், வரும் பாராளுமன்ற தேர்தலில், தமுமுக , காங்கிரஸ்க்கு எதிராக செயல்படும், மத்தியல் பா.ஜ.க. காங்கிரஸ். அல்லாது மூன்றாவாது அணியின் வெற்றிக்கு தீவிரமாக செயல்படும் என்றார்.இந்த மாநாட்டியில் தமுமுக. துனைபொதுச்செயலாளர்.மெளலவி ரிபாய். மாநில செயலாளர் தமிமுன் அன்சாரி,மாநிலதுனை செயலாளர் கோவை சாதிக்,தலைமைகழக பேச்சாளர் ரபிக்,மாநில மாணவர்அணி பொருளாளர் மாயவரம் அமீன்,மாநில உலமா அணி செயலாளர் நாசர் உமரி மற்றும் பலர் உரைநிகழ்த்தினார்கள்.இந்த நிகழ்ச்சிக்கு சேலம் மாவட்ட தலைவர். சையத் முஸ்தபா தலைமை வகித்தார்.
சேலத்தில் நவம்பர் 2 அன்று நடை பெற்ற சேலம் மாவட்ட தமுமுக
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1. தமிழகத்தில் தற்போது பிற்படுத்தப் பட்ட முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் அளிக்கப்பட்டுள்ள 3.5 சதவிகித இடஒதுக்கீட்டை 6 சதவிகித மாக உடனடியாக உயர்த்துமாறு தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது
2. இலங்கையில் அப்பாவி தமிழர் களுக்கு எதிராகத் தொடர்ந்து சிங்கள பேரினவாத அரசு கட்டவிழ்த்து வரும் வன்முறைகளை இந்த மாநாடு வன் மையாகக் கண்டிக்கின்றது. இந்திய அரசு உடனடியாக இப்பிரச்சனையில் தலை யிட்டு அங்கு அமைதி ஏற்பட வழிவகைச் செய்ய வேண்டுமெனவும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. இந்த அமைதி முயற்சிகளில் இலங்கையின் வட கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் பேசும் முஸ்லிம்களின் வாழ்வுரிமை பாதுகாக்கப் படவும் வலிமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் இம்மாநாடு கோருகின்றது.
3. 2001ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தாக்குதல் முதல் கடைசியாக அசாமில் நடைபெற்ற குண்டு வெடிப்புகள் வரை நாட்டில் நடைபெற்றுள்ள அனைத்து பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர் பான வழக்குகள் மறுவிசாரணை மேற் கொள்ளப்பட வேண்டுமென இம்மாநாடு கோருகின்றது. ரமலான் மாதத்தின் கடைசி தினங்களில் மராட்டிய மாநிலம் மாலேகோன் மற்றும் குஜராத் மாநிலம் மொடாசவில் நடைபெற்ற குண்டு வெடிப்புகள் தொடர்பாக உண்மை குற்றவாளிகளைக் கண்டுபிடித்த மராட் டிய பயங்கரவாதத் தடுப்புப் படையி னரை (ஏ.டி.எஸ்) இம்மாநாடு பாராட்டு கிறது. இந்த வழக்கில் ஆழமாகச் சென்று முழுச் சதித்திட்டத்தையும் அதில் ஈடுபட் டோரையும் அம்பலப்படுத்த (ஏ.டி.எஸ்) நடவடிக்கை மேற்கொள்ள வேண்டு மெனவும் குண்டு வைத்த பயங்கரவாதி பெண் சாமியாருடன் தொடர்புள்ள பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங்கையும் உண்மை அறியும் கருவி மூலம் விசாரிக்க வேண்டுமெனவும் இம்மாநாடு கோருகின்றது.
4. மாலேகோன் குண்டுவெடிப்பில் இராணுவத்தில் பணியாற்றி வரும் சிலருக்கும் ஒய்வுப் பெற்ற சிலருக்கும் தொடர்பு உள்ளது என்பதும் இவர்கள் தீவிரவாத பயிற்சிகளையும் அளித்து வந்துள்ளனர் என்பதும் நாட்டின் நலன் நாடுவோரை அதிர்ச்சியில் ஆழ்த்தி யுள்ளது. இத்தகைய மனப்போக்குடைய அனைவரையும் அடையாளம் கண்டு அவர்களைக் களையெடுப்பதற்கு மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென இம் மாநாடு கோருகின்றது.
5. முஸ்லிம்களுக்கு அனைத்திந்திய அளவில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் தனி இடஒதுக்கீடு அளிக்கப் பரிந்துரைச் செய்துள்ள நீதிபதி ரங்க நாதன் மிஸ்ரா ஆணையத்தின் அறிக்கை 2007 மே மாதம் பிரதமரிடம் அளிக்கப் பட்ட போதினும் இதுவரை அதனை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து அதன் அடிப்படையில் இடஒதுக்கீடு அளிக்காத ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை இம்மாநாடு வன்மை யாகக் கண்டிக்கின்றது. தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறை வேற்றாத கட்சிகளுக்கு அடுத்த தேர்த லில் ஆதரவு அளிக்கக் கூடாது என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
6. தமிழக அரசு போர்கால நடவடிக்கைகளை மேற்கொண்டு மின் வெட்டு பிரச்சனையை உடனடியாகத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென இம்மாநாடு கோருகின்றது
7. பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி விடுதலைச் செய்யப் பட்ட கைதிகளின் பட்டியலைத் தயாரிப் பதில் தமிழக அரசு பாரபட்சம் காட்டி யுள்ளதை இம்மாநாடு கண்டிக்கின்றது. ஆயுள் தண்டனை பெற்று 7 ஆண்டு கள் சிறைத் தண்டனை அனுபவித்து விட்ட அனைத்து கைதிகளையும் விடு தலைச் செய்ய தமிழக அரசு உடனடி யாக ஆவணச் செய்ய வேண்டுமென இம்மாநாடு கோருகின்றது.
8. பல்வேறு நகரங்களில் குண்டு வெடிப்புகள் நடப்பதைத் தடுக்க தவறிய துடன் சங்பரிவார கும்பலின் குண்டு வெடிப்பு சதிகளை முறியடிக்க தவறிய உள்துறை அமைச்சர சிவராஜ் பாட்டீல் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம் கே. நாராயணன் ஆகியோர் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டுமென இம்மாநாடு கோருகின்றது. .

செய்திகள்- படம்: கோவை தங்கப்பா
மீடியா voice
மாநாட்டு புகைப்பட காட்சி