இடைத்தேர்தலில் தி.மு.க.கூட்டணிக்கு ஆதரவு
யுனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர்காதர்மொய்தீன் மிடியா வாய்ஸ் இனைதளத்திற்கு பேட்டி
கோவை,ஜீலை,26- இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு கொடுப்போம் என்று காதர் மொய்தீன் கூறினார்.கோவையில் முஸ்லிம் லீக் கட்சியில் 4.85 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். இதை 2 மடங்காக உயாத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கட்சியின் செயற்குழு கூட்டம் அடுத்த மாதம் (ஆகஸ்ட்)1-ம் தேதி குற்றாலத்தில் நடக்கிறது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறது. ஏங்கள் கட்சியில் தலித்லீக் என்ற உட்பிரிவு உருவாக்கப்பட்டு அவர்களுக்கு உரிய இடம் கொடுக்கப்படும்.தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதியில் 25 தொகுதிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள்.முஸ்லிம்லீக் உறுப்பினர்கள் உள்ளனர்.இந்த தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். இவ்வாறு நாங்கள் அடையாளம் காட்டும் தொகுதிகளில் எங்கள் கட்சிக்கு கூட்டணி சார்பில் இடங்கள் ஒதுக்கிப்படும் போது தேர்தலில் வெற்றிபெற சுலபமாக இருக்கும்.தமிழ்நாடு மாநில யுனியன் முஸ்லிம் லீக் கட்சி பெயரை,தலைவர் பதவியை சிலர் தவறாக பயன்படுத்துகின்றனர். ஆவாகள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.துமிழக முதல்-அமைச்சர் கலைஞர் அறிவித்த மருத்தவ காப்பீட்டு திட்டம் அவரது இல்லத்தை மருத்துவமனையாக பொதுமக்களுக்கு அர்பபணிப்பு என்பது யாரும் செய்ய முடியாத செயல். சித்தர்கள் சிந்தனை இது ஆகும். இது வரவேற்கதக்கது.வருகிற சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு அளிக்கிறோம். துp.மு.மு.க கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிக்கு கடுமையாக பாடுபடுவோம்.கோவை குண்டு வெடிப்பு வழக்கு மற்றும் பல்வேறு வழக்குகளில் விசாரணை கைதிகளாக சிறையில் வாடும் 64 கைதிகளை வருகின்ற அண்ணா பிறந்த நாளில் விடுதலை செய்ய வேண்டும் என்று முதல் - அமைச்சர், துணைமுதல் - அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். இவ்வாறு காதர்மொய்தீன் கூறினார்.
செய்தி : கோவை தங்கப்பா