Sunday, July 26, 2009

5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில்
கம்யுனிஸ்டு கடசிகளுடன் இணைந்து போட்டியிட
ஆலோசனை
த மு மு க. மாநில தலைவர் ஜவாஹிருல்லா கோவையில் பேட்டி
கோவை,ஜிலை,26 தழிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட பொதுக்குழு கூட்டம் கோவையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா கலந்துகொண்டு ஆலோசனை நடத்தினார். பின்னர் மிடியா வாயஸ் இனைத்தளம் நிருபர்க்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை புறக்கணிக்காது. இந்த தேர்தலில் இளையான்குடி தொகுதியில் போட்டியிடுமாறு மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்டு மற்றும் இந்திய கம்யுனிஸ்டு கட்சி பிரமுகர்கள் வேண்டுகொள் விடுத்துள்ளனர். இதுகுறித்து சென்னையில் நடைபெறும் உயர்நிலை குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு ஒரு சில நாட்களில் அறிவிக்கப்படும். முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடந்த 2004-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்டது. முpஸ்ரா கமிஷன் சிறுபான்மையினருக்கு 15 சதவிதம் இடஒதுக்கீடும்,முஸ்லிம்களுக்கு 10 சதவித உள் ஒதுக்கீடும் வழங்க பரிந்துரை செய்துள்ளது.இதனை நிறைவேற்ற வற்புறுத்தி மனித நேய மக்கள் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆர்பபாட்டம் நடைபெறும். சென்னையில் 30-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட கமிஷனுக்கு ரூ.8 கோடி செலவு செய்யப்பட்டது. கடந்த ஜீன் 30;-ந்தேதி இந்த கமிஷன் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. நாட்டு மக்கள் தெரிந்துகொள்வதற்காக அறிக்கைமுழுpவிரங்களையும் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.ஒரினசேர்க்;கை உறவு குற்றம் அல்ல என்று டெல்லி உயர்நீதிமன்றம் கூறி இருப்பதை எதிர்த்து தமிழ்நாடு முஸ்லிம் முன்ஆனற்ற கழகம் சார்பில் சுப்ரீம் கோர்ட்;டி யில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளது.ஐரோப்பா, அமெரிக்கா நாடுகளில் கூட வாக்குச்சீட்டு முறையிலான தேர்தல்தான் இன்றும் நடைமுறையில் உள்ளது.இந்தியாவில் வாக்குப்பதிவு எந்திரத்தில் நடைபெறும் தேர்தலில் நம்பகத்தன்மை இல்லை. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட பணபலம் பயன்படுத்தபட்டது. எங்களது கட்சிக்கு அதிகமான ஒட்டுகள் கிடைத்து இருக்க வேண்டும். ஏந்திர வாக்குப்பதிவால் ஒட்டு விகிதம் குறைந்துள்ளது. வரக்கூடிய தேர்தலில் அதிக ஒட்டுகளை பெற்று தமிழ்நாட்டில் திருப்புமுனையை ஏற்படுத்துவோம். இவ்வாறு ஜவாஹிருல்லா கூறினார்.முன்னதாக நடைபெற்ற கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் மாநில துனை பொதுச்செயலாளர் ஜே. எஸ்.ரிபாயி,மாநில செயலாளர் இ.உம்மர், மாவட்ட தலைவர் பசிர், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சுல்தான் அமீர் உள்ளபட பலர் கலந்துகொண்டனர்.
செய்தி், கோவை தங்கப்பா