இஸ்லாத்திலும் ஜாதியா !
கேரளாவின் கடற்கரையோரத்தில் வாழும் இஸ்லாமியர்கள்
அரபு நாடுகளிலிருந்து வந்தவர்களின் வழித்தோன்றல்கள் என்பர். தமிழ்நாட்டின் கீழக்கரைப் பகுதியில் இருப்பவர்களும் அதே மரபு வழியைக் கொண்டவர்கள்தாம். காலப் போக்கில் இம்மக்களும் நம் மக்களைப் போன்றே தோற்றத்தில் மாறிவிட்டனர்.கேரள மாப்ளா முசுலிம்கள் பற்றிய ஒரு சேதி. அவர்களில் 5 பிரிவுகள் உண்டாம். சன்னி, ஷியா, வஹாபி, ஜைத், ஹனபி, ஷாபி, அஹமதியா, இசுமெய்லி போன்ற பிரிவுகள் என நினைத்துக் கொள்ளாதீர்கள். இவை வேறு வகைப் பிரிவுகள்.தங்ஙள், அரபி, அன்சாரி, புஸ்ஸலார் மற்றும் ஒஸ்ஸான் என 5 வகைகள் இவற்றிற்குப் பெயர்கள். என்ன இவை? எதைக் குறிக்கின்றன, இந்தப் பெயர்ப் பிரிவுகள்?தங்ஙள் என்றால் முகமது நபியின் மகளான பாத்திமாவின் வழிவந்தவர்கள். இந்துமத நம்பூதிரிகளைப் போல இவர்கள் உயர்ந்தவர்களாம்.அவர்களுக்கு அடுத்த நிலையில் இருப்பவர்கள் அரபிகள்.அரபிகளுக்கும் கீழே அன்சாரிகள். இவர்கள் மூவருக்கும் கீழே கடைத்தட்டில் வைக்கப்பட்டிருப்பவர்கள் புஸ்ஸலார்களும் ஒஸ்ஸான்களும்.புஸ்ஸலார் என்பவர்கள் கேரள மீனவர்களாகிய இந்துமத முக்குவர் ஜாதியில் இருந்து இசுலாமாகியவர்கள். புதிய இஸ்லாம் என்பது புஸ்ஸலாம் என்றாகி விட்டது.இசுலாமியர்களின் பஞ்சமர்கள் ஒஸ்ஸான்கள். நாவிதர்கள். இந்து மதத்தில் எந்தத் தொழிலோ அந்தத் தொழிலையே இஸ்லாத்திலும் செய்பவர்கள்.முஸ்லிம்களிடையே ஜாதியும் சமூக அடுக்குகளும் எனும் நூல் பல பிரபலங்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூலில் இந்த விவரங்கள். தொகுத்தவர் ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகப் பேராசிரியர் இம்தியாஸ் அகமது.பிரம்மாவின் முகத்திலிருந்து வந்தேன் எனக்கூறி முதன்மை இடத்தை எடுத்துக் கொண்டான் பார்ப்பனன், இந்து மதத்தில் என்றால்... இஸ்லாத்தின் நபிகள் நாயகத்தின் குடும்பக் கொடி வழி என்ற கதை கூறப்படுவதா?மதங்கள் என வந்தாலே, இதுதான் போலிருக்கிறது. அதனால்தான் புரட்சிக்கவிஞர், பெரு மதங்கள் எனும் பீடை பிடியாதிருக்க வேண்டும் என்று பாடினார்.----------------4-7-2009 "விடுதலை"ஞாயிறுமலரில் செங்கோ அவர்கள் எழுதிய கட்டுரை
கருத்து பெட்டி
safik said...
As a practicing Muslim i never head of these things.please don't take anyone's book.If you have any doubt please read Quran.You can find tamil translated Quran.I am also from palani if you need Quran i am very happy to give you.
July 4, 2009 7:55 PM
தமிழ் ஓவியா said...
தமிழில் பின்னூட்டம் அளிக்க வேண்டுகிறேன்.தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிஎன்னிடம் தமிழில் குரான் நூல் உள்ளது. மிக்க நன்றி.தங்களைப் பற்றி எனக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.நன்றி
July 4, 2009 8:32 PM
ELIYAVAN said...
As a Tamil Muslim, I know there are castes in Tamil Nadu Muslims also. Besides Shaafi, Hanabi etc. old muslim women quote 'irumboothiyaar' etc. as a caste of Muslims when they consider the brides or bride-grooms for marriage. In the south, if a Muslim family's mother tongue is Urdu, they are treated differently by Tamil Muslims.
July 4, 2009 8:41 PM
சுவனப்பிரியன் said...
தமிழ் ஓவியா!முகமது நபியின் சொல் செயலையும் குறித்து வைத்தனர் ஒரு சில மத குருமார்கள். முகமது நபியின் வார்த்தைகளை புரிந்து கொண்டதில் ஏற்பட்ட கோளாரால் அவர்கள் எழுதிய வரலாறுகளில் ஒரு சில மாற்றங்கள் இருந்தது. இந்த மாற்றங்களே காலப் போக்கில் ஷாபி, ஹம்பலி, மாலிக்கி, ஹனபி என்று அந்த அந்த அறிஞர்களின் பெயரால் பிரிவுகள் உண்டாகி விட்டது. முகமது நபி இறந்து இருநூறு ஆண்டுகளுக்கு பிறகே இந்த பிரிவுகள் எல்லாம் தோன்றுகின்றன.இப்படி பிரிவுகள் இருந்தாலும் திருமண உறவுகளை வைத்துக் கொள்வதிலோ, மசூதியில் தொழுகையிலோ எத்தகைய பாகுபாடும் காட்டப்படுவதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். சவூதி அரேபியாவில் இது போன்ற பிரிவுகளை சொன்னால் அங்குள்ள அரபிகளுக்கு எதுவும் தெரியாது. இதை வைத்து 'நான் உயர்ந்தவன், நீ தாழ்ந்தவன்' என்ற தீண்டாமை இங்கு இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.'நான் முகமது நபியின் வாரிசு', 'நான் பாத்திமாவின் வாரிசு' என்றெல்லாம் ஒரு சில புரட்டர்கள் உழைக்காமல் வயிறு வளர்க்க பொய் கூறி திரிகின்றனர். அவர்களை முஸ்லிம்கள் நன்கு விளங்கி தற்போது அவர்களுக்கு அற வழியில் பதிலையும் கொடுத்து வருகிறார்கள்.
July 5, 2009 4:36 AM
அபூ அப்திர்ரஹ்மான் said...
தமிழ் ஓவியா! இஸ்லாத்தைப் பற்றி நுனிப் புல் மேய்ந்து விட்டு எதைஎதையோ எழுதித் தள்ளிவிட்டீர்கள். மதத்தை நிராகரிக்கும் உரிமை உங்களுக்கு உண்டு. ஆனால் ஒரு மதத்தில் உள்ள கருத்துக்களை விமர்சிக்கும்போது உறுதியான பின்துணைச் சான்றுகளுடன் விமர்சிப்பதே அறிவுடைமை. இந்து மதத்திலுள்ள சாதிகளையும் இசுலாத்தில் ஜாதிகள் என்ற உங்கள் கற்பனையையும் சேர்த்து ஒப்பீடு செய்தது இது குறித்த உங்களின் அறியாமையைக் காட்டுகிறது. இந்து மதத்தில் உள்ள வர்ணாசிரமக் கொள்கைக்கு அந்த மத வேதங்களின் வரிகளே அடிப்படை ஆதாரமாக இருக்கிறது. இஸ்லாத்தில் நீங்கள் குறிப்பிட்டுக் காட்டிய ஐந்து வகை ஜாதிகள் என்பதற்கு என்ன ஆதாரங்கள்? கொஞ்சம் எடுத்து விளக்குங்களேன்.அரபியை விட அரபியல்லாதவனுக்கு எந்த சிறப்பும் இல்லை, கருத்தவனை விட வெளுத்தவனுக்கு எந்த சிறப்புமில்லை, நீங்கள் அனைவரும் ஆதம் என்ற முதல் மனிதரிலிருந்து வந்தவர்களே, அவரோ மண்ணிலிருந்து வந்தவர். உங்களில் சிறந்தவர் இறையச்சம் மிக்கவர்களே என்ற இஸ்லாத்தின் தலைவர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் உயர்ந்த கொள்கைப்பிரகடனம் உங்களுக்கு ஏன் தெரியாமல் போனது?மனிதர்கள் அனைவரும் ஓர் ஆண் மற்றும் பெண்ணிலிருந்து உருவானவர்கள், கிளைகளும் கோத்திரங்களும் பரஸ்பரம் அறிந்து கொள்வதற்காக மட்டுமே, பயபக்தியுடையவர்களே இறைவனிடத்தில் சிறந்தவர்களாக ஆக முடியும் என்று 14 நூற்றாண்டுகளுக்கு முன் அறைகூவல் விடுத்த திருக்குர்ஆன் (49: 13) பற்றி என்ன தெரிந்து வைத்துள்ளீர்கள்?கருப்பு இன அடிமையாக இருந்த பிலால் என்ற மனிதரை இன்று ஒட்டு மொத்த முஸ்லிம்களும் தங்கள் தலைவராகப் போற்றுவதன் காரணம் என்ன என்பதையும் அவரது பெயரைக் கேட்டவுடன் மதிப்புடன் மரியாதையுடன் அவர் மீது இறை திருப்தி உண்டாகட்டும் என்று பிரார்த்தனை செய்வதன் காரணம் என்ன என்பதையும் அறிவீர்களா? கருப்பு நிற அடிமையாக இருந்த உசாமா என்பவரை முஸ்லிம்களின் படைத்தளபதியாக நியமித்து அழகு பார்த்த முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மார்க்கத்தைக் குறித்து அறிவீர்களா? தடித்த உதட்டை உடைய கருப்பு நிறத்தவர் உங்களின் தலைவராக நியமிக்கப்பட்டாலும் அவருக்கு நீங்கள் கட்டுப்பட்டே ஆக வேண்டும் என்ற முஹம்மத் (ஸல்) அவர்களின் உபதேசத்தை அடியொற்றிப் பின்பற்றும் முஸ்லிம் சமுதாயத்தைக் குறித்து அறிவீர்களா?மனிதனுக்குள் ஜாதிகளை வேரறுத்த இஸ்லாமின் உன்னதக் கொள்கைகளை இதுபோல ஏராளமாகப் பட்டியலிட என்னால் முடியும். பின்னூட்டம் நீண்டு விடக்கூடாது என்பதற்காக நிறுத்துகிறேன். இஸ்லாத்தை விமர்சிக்கும் முன் அதன் அடிப்படை ஆதாரங்களை சற்று ஆராய்ந்து விட்டு விமர்சியுங்கள். நுனிப்புல் மேய்ந்து விட்டு அறியாமையை ஒப்பி வைப்பது உங்களைப் போன்ற எழுத்தாளர்களுக்கு நன்றன்று.என்றும் அன்புடன்அபூ அப்திர்ரஹ்மான்
July 5, 2009 10:39 AM
itzyasar said...
இன குல வேறுபாடுகளை அறுத்து எடுப்பதில் இஸ்லாம் மட்டுமே தனித்து விளங்குகிறது. நீங்கள் தவறாக விளங்கியதின் விளைவாகவே இவ்வாறு எழுதி உள்ளீர்கள், இதற்க்கு உங்களின் அறியாமை அல்லது இஸ்லாத்தை பற்றி முழு தெளிவு இல்லாததையே குறிக்கிறது.தெளிவு இல்லாத மக்கள் ஏற்படுத்தி அதனை பின்பற்றுவது எல்லாம் இஸ்லாத்தில் கூறப்பட்டவை என்று நீங்கள் அர்த்தம் செய்தால் அது உங்கள் அறியாமையே பறைசாற்றுகிறது.தெளிவு கிடைத்த ஒரு விஷயத்தை பற்றி விமர்சனம் அல்லது கருத்து தெரிவிப்பது சிறந்ததாகவும் ஆரோக்கியம் நிறைந்ததகவும் இருக்கும்.சகோதரதுவம் என்பதை நடை முறை படுத்துவதில் இஸ்லாம் வலியுருத்தி கூறி இருக்கு என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள குரானை படித்து தெளிவு பெற வேன்டுகிறேன்.
July 5, 2009 12:17 PM
Post a Comment