Saturday, July 18, 2009



ஜீலை 22.2006. கோவை வெடிகுண்டு
பீதியை கிளப்பிய உளவுத்துறை ஏ.சி.
ரத்த்தினச்சபாபதியைபணி நீக்கம் செய்ய வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்
கோவை மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
சார்பில் நடந்தது.
11-7-2009 முதல் 19-72009 வரை
கடந்த2006 ம் ஆண்டு ஜீலை மாதம் கோவையில் வெடிகுண்டு பீதியைக் கிளப்பிய,அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் மீது பொய் வழக்கு புனைந்து.கோவை மாநகரையே குலுங்கி வைத்த உளவுத்துறை ஏ.சி. ரத்தினசபாபதியின் மாபாதகச் செயலை யாரும் மறந்திருக்க முடியாது.ஒன்றுபட்ட முஸ்லிம்களின் போராட்டதினாலும்,சமூக நலனில் அக்கறை கொண்ட நல்லுள்ளங்கள் எழுப்பிய குரலாலும் தமிழக அரசு இவ்வழக்கைசி.பி்.சி.ஐ.டி.-சிறப்பு புலனாய்வுதுறைக்கு மாற்றியது.

ஒரு வருடகாலமாக இவ்வழ்க்கை விசாரித்த எஸ்.ஜ.டி, கடந்த 2007 அக்டோபர் மாதம் கோவை மாண்புமிகு ஜே.எம்.-7 நீதிமன்றத்தில் தனது இறுதி அறிக்கையை சமர்ப்பித்தது.இவ்வழக்கில் கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகள்,காவல்துறையினராலேயே பொய்யாக புனையப்பட்டு இவ்வழ்க்கில் சேர்க்கப்பட்டவை.மேலும் இவ்வழக்கின் ஆவணங்களும் போலியாக தயாரிக்கப்பட்டு புனையப்பட்டுள்ளன.எனவே இவ்வழக்கு பொய்யாக புனையப்பட்ட வழக்கு என்று கூறி இவ்வழக்கை முடிக்கிறோம் என அவ்வறிக்கையில் எஸ்.ஜ.டி. குறிப்பிட்டுள்ளது.

எஸ்.ஜ.டி.யால் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு 2 ஆண்டுகளாகியும் தமிழக அரசு ஏ.சி. ரத்தின சபாபதி மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏற்கனவே அவடிகுண்டு பீதியால் பாதிக்கப்பட்ட கோவை மாநகரை,பொறுபடபு வாய்ந்த பதவியிலிருக்கும் ஒரு உளவுத்துறை அதிகாரியான ஏ.சி. ரத்தினசபாதியே வெடிகுண்டு பொய் வழக்கால் கடும் பீதி வயப்படுத்தியுள்ளார்.

கோவை மாநகர் மட்டுமல்ல அன்று ஒட்டு மொத்த தமிழகமும் இந்த வெடிகுண்டு பீதியின் பாதிப்பை உணர்ந்தது பொது அமைதியையும்.சட்ட ஒழங்கையும் சீர் குலைத்து வெடிகுண்டு கபட நாடகத்தால் மக்களை பீதி
வயப்படுத்தியுள்ளார் இந்த ஏ.சி. ரத்தினசபாபதி.பொதுவாக அரசுப்பணியிலிருக்கும் காவல்துறை மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் நடுநிலையாகவும்,பாரபட்சமின்றியும் மக்கள் நலனுக்காக பணியாற்ற வேண்டும்.
ஆனால் ஏ.சி.ரத்தின சபாபதியோ தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து,இந்த தேசத்தின் குடிமக்களாகிய சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்தின் மீது அபாண்ட பழி சுமத்தியது மட்டுமின்றி. இதன் முலம் பொது அமைதியையும், சட்ட ஒழங்கையும் சீர் குலைக்கம் பணியில் ஈடுபட்டுள்ளார்.

இவருடைய இந்த இழிச் செயல்,தேசப் பாதுகாப்பிற்கே குந்தகம் விளைவிக்கும் மாபாதகச் செயலாகும்.ஏ.சி.ரத்தின சபாபதி போன்ற அதிகாரிகள் இனியும் பணியில் தொடர்ந்தால் பொது அமைதிக்கும்,சட்ட ஒழுங்கிற்கும், சமூக நல்லிணக்கத்திற்கும் பெரும் ஆபத்து ஏற்படும்.
எனவே, சமூக நலனையும்,தேச நலனையும் கருத்தில் கொண்டு,தமிழகம் தொடர்ந்து அமைதிப்புங்காவாத் திகழ ஏ.சி. ரத்தின சபாதியை பணி நீக்கம் செய்து, அவர்மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்து, நடவடிக்கை எடுக்க தழிழக அரசை வலியுநுத்தி இந்த கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகின்றது.

நீதியை நிலைநாட்டவும்,சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்கவும் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தும் இந்த கையெழுத்த இயக்கத்தில் பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய கையொப்பத்தை பதிவு செயயுமாறு அன்புடன் கோட்டுக்கொள்கிறோம்.

செய்தி: கோவை தங்கப்பா
இவண்
பாப்புலர் ஃப்பிரண்ட் ஆஃப் இந்தியா
கோவை மாவட்டம்