Saturday, June 26, 2010

                                 ஆயுள் கைதிகளை விடுவித்தால் தேர்தலில் விபரீதம் ஏற்படும்: ஜெ.,


சென்னை :"ஜனநாயகத்தை சீர்குலைக்கும் வகையில் ஆயுள் கைதிகளை விடுதலை செய்யும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் என, தமிழக மக்களின் சார்பில் வலியுறுத்துகிறேன். இதனால், வரும் சட்டசபை தேர்தலில் விபரீதம் ஏற்படலாம்' என்று அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:"ஜனநாயகம், சோஷலிசம், தேசியம் ஆகிய மூன்றில் ஜனநாயகம் உருக்குலைக்கப்பட்டிருக்கிறது' என்று வேதனையுடன் சொன்னவர் அண்ணாதுரை. அவரது கொள்கைக்கு மாறாக, ஜனநாயகத்தை சீர்குலைக்கும் நோக்கோடு, அவருடைய நூற்றாண்டு தினத்தை முன்னிட்டே, 2008ம் ஆண்டு ஏழாண்டுகள் சிறைவாசம் முடித்தவர்கள் உட்பட 1,405 ஆயுள் தண்டனைக் கைதிகள் ஒட்டுமொத்தமாக விடுவிக்கப்பட்டுள்ளனர்."மக்கள் நம்பிக்கையை இழந்து, 2009ம் ஆண்டு பார்லிமென்ட் தேர்தலில் ஜனநாயக முறைப்படி மக்களை ஓட்டளிக்க விடாமல், குறுக்கு வழியில் வன்முறையாளர்கள் மூலம் தேர்தலை சந்திக்க ஆயுள் கைதிகளை விடுவித்துள்ளனர்' என்று, அப்போது கண்டனம் தெரிவித்தேன்.



இந்த குற்றவாளிகளில் பெரும்பாலானோர் தி.மு.க.,வினர்; இதில் மதுரை லீலாவதி கொலை வழக்கில் ஈடுபட்ட குற்றவாளிகளும் அடங்குவர். இவர்கள் உள்ளாட்சி மற்றும் பார்லிமென்ட் தேர்தல்களில் தி.மு.க., விற்கு ஆதரவாக செயல்பட்டனர் என்பது நாடறிந்த உண்மை.தற்போது, செம்மொழி மாநாட்டை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட ஆயுள் கைதிகளை, முன்கூட்டியே விடுதலை செய்ய திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. இது ஜனநாயகத்திற்கு விரோதமானது; கோர்ட்டை அவமதிக்கும் செயல். வரும் சட்டசபைத் தேர்தலில் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு, ஓட்டளிக்க விடாமல் ஜனநாயகப் படுகொலையை செய்யும் திட்டமோ, என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது.மனித சமுதாயத்தில் தவறுகள் நடக்க கூடாது என்பதற்காக, கொலைக் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை தரப்படுகிறது. அவர்களை முன்கூட்டியே விடுவிப்பது, சட்டத்திற்குப் புறம்பான, கொலையாளிகளை ஊக்கப்படுத்தும் செயல். இதுபோன்று முன்கூட்டியே விடுவித்தால், கொலை, கொள்ளை போன்ற கொடூர சம்பவங்கள் மேலும் அதிகரிக்கும்.


சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய அரசே, சட்டத்திற்குப் புறம்பான செயலில் ஈடுபடுவது வேதனைக்குரியது.கச்சத்தீவு, தமிழக மீனவர்கள் மீதான இலங்கை ராணுவத்தின் தொடர் தாக்குதல், காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு, பொன்னையாறு போன்ற நதிநீர்ப் பிரச்னை, பார்லிமென்ட்டில் தமிழில் பேசும் உரிமை, ஐகோர்ட்டில் தமிழ் என்று எதையும் பெற்றுத் தரமுடியவில்லை. தமிழகத்தின் அனைத்து உரிமைகளும் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. தமிழக மக்களுக்கு இருக்கும் ஒரே உரிமை, ஓட்டுரிமை. அதையும் ஆயுள் கைதிகளை விடுவிப்பதன் மூலம் பறிக்க நினைக்கின்றனர்.


"மக்களாட்சியிலும் சில பல கேடுகளும், கொடுமைகளும் ஏற்பட்டு விடுகின்றன என்றாலும், அவைகளை நீக்கிடும் உரிமையும், போக்கிடும் வாய்ப்பும் மக்கட்கு கிடைக்கிறது' என்றார் அண்ணாதுரை. மக்களுக்கு கிடைக்கும் ஒரே வாய்ப்பான ஓட்டுரிமையிலும் மண் அள்ளிப் போடுவதா?இதுபோன்ற ஜனநாயக விரோத செயலுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவிப்பதோடு, ஜனநாயகத்தை சீர்குலைக்கும் வகையில் ஆயுள் கைதிகளை விடுதலை செய்யும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் என்றும் தமிழக மக்களின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.


Thursday, June 24, 2010

Sunday, June 20, 2010



                         உலக தமிழ் செம் மொழி மாநாட்டின் வாயிலாக

                                    7 ஆண்டுகளுக்கும்  மேலாக

                    சிறையில் உள்ள  முஸ்லிம் சிறைவாசிகளை விடுவிக்க

                                     தமுமுக  மாநில தலைவர்

                            பேராசியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்

                                        கோவையில் பேட்டி...


கோவை -19
          மீிடியா வாயஸ் இணைதளத்திற்க்கு அளித்த பேட்டி அவர் கூறியது:
பேரறிஞர் அண்ணாவின் ஆட்சி காலத்தில் நடைபெற்ற  உலகத்தமிழ் மாநாட்டை ஒட்டி ஆயிரக்கனக்கான சிறைக்கைதிகளை பேரறிஞர் அண்ணா அவர்கள் விடுதலை செய்தார்.

           அதே போல் 2008 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா அவர்களின் நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு 7 ஆண்டுகள் நிறைவடைந்த 1405 சிறைக்கைதிகளை விடுதலை செய்தது. தமிழக அரசு ஆனால் அதில் முஸ்லிம் சிறைக்கைதிகள்  விடுதலை செய்யப்படவில்லை.

           இந் நிலையில் தமிழக சிறையில் கடந்த 13 ஆண்டுகளாக துயரங்களை  அனுபவவித்து வரும் முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை  செய்ய வேண்டும்.

            என்ற கோரிக்கை தமிழக மக்கள் மத்தியில் வலுவாக நிலவுகின்ற இத்தருணணத்தில் எதிர் வரும். உலகத் தமிழ்  செம்மொழி மாநாட்டை முன்னி்ட்டு  7 ஆண்டுகள் நிறைவடைந்த சிறைவாசிகளை விடுதலை செய்ய  வேண்டும்.

               அதோ போல் இந்த செம்மொழி மாநாட்டியில் மேலும் ஒரு கோரிக்கை.  கணினியில்  யுனிகோட்  தமிழ் எழுத்துருவை உருவாக்கியவருக்கு மதிப்பளிக்க  வேண்டும்

                சில ஆண்டுகளுக்கு முன்புவரை கணினியில் ஆங்கிலம் மடடும் பயன்பாட்டியில்  இருந்தது. தமிழ்மொழியை இணையத்தில் படிக்க முடியாதபடி பல விதமான தமிழ் எழுத்துருக்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இதனால் அச் சமயத்தில் தமிழ் மீது தீராத பற்று கொண்ட தஞ்சை மாவவவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்த  உமர் தம்பி, அனைத்துக் கணினிகளிலும் பயன்படுத்தவதற்கு ஏற்ற பொதுவான தமிழ் எழுத்துருக்களை  உருவாக்கினார். இதற்கு யுனிகோட் (ஒருங்குறி) எழுத்துரு என்ற  பெயர். இப்போது,, அந்த எழுத்துகள்தான் இணையதளத்தில் பயன்படுத்தப்படுகின்றன, ஆயிரக்கணக்கான தமிழ் இணைதளங்கள் யுனிகோட் எமுத்துருக்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.

                இணையதளங்கள்  எப்படி எல்லாம் தமிழை வளர்க்கின்றன என்பது குறித்து விவாதிப்பதற்காக  உலகத் செம்மொழி இணைய மாநாடு நடை பெறுகிறது. இம்மாநாட்டில் கணினித் தமிழை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்படும். இந்த மாநாட்டுக்கும். கணினித் தமிழ் வளர்ச்சிக்கும்  அடிப்படை யாக விளங்குவது யுனி கோட்  தமிழ் எழுத்துருக்கள் தான்.

               இந்த எழுத்துருவை உருவாக்கிய தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் உமர் தம்பி நினைத்திருந்தால், தனது கண்டுபிடிப்பை வணிகரீதியாக பயன்படுத்தி  இருக்கும் முடியும். ஆனால், அவர்கள் அவர் அவ்விதம் செய்யாமல், தமிழ் வளர்ச்சிக்குப் பயன்பட வேண்டும் என்ற நோக்கில் தமிழ் யுனிகோட் தொழில் நுட்பத்தை சமுதாயக்கு இலவசமாக வழங்கினர். கணினி தமிழ் வளர்ச்சிக்கு வித்திட்ட அவர் தற்போது  உயிருடன்  இல்லை. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அவருக்கு உரிய கெளரவம்  செய்யப்பட  வேண்டுடும். இக் கோரிக்கையை வலியுறுத்தி  தமிழக அரசிடம் பல முறை மனு கொடுத்துள்ளோம்.

                செம்மொழி தமிழை உயர்நீதிமன்ற வழக்கு மொழியாக்க   வேண்டும் என வழக்கஞர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது நியாயமான கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்றார். தமுமுக மாநில  தலைவர்  ஜவாருஹிருல்லாஹ் அவர்கள் .


                 மாலை 7 மணியளவில் கோவை கோட்டை மேடு  இக்பால் திடலில்  மாபெரும்  ஒற்றை கோரிக்கை  பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில்  தமுமுக மாவட்ட தலைவர் அப்துல் பஷிர் தலைமையில் நடைபெற்றது. சிறப்புரையாக,  தமுமுக மாநில தலைவர் போராசிரியர் எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ்அவர்கள், விடுதலை கோரிக்கை என்ற தலைப்பிலும், தமுமுக மாநில பொது செயலாளர்  எஸ். ஹைதர் அலி அவர்கள், கோவை முஸ்லிம்கள் நேற்றும் இன்றும் என்ற தலைப்பிலும், தமுமுக மோன்மை குழு உறுப்பினர்  குனங்குடி அனிபா அவர்கள், விடுதலை சிந்தனைகள் என்ற தலைப்பிலும், மற்றும் தமுமுக மாநில செயலாளர்  இ. உம்மர் அவர்கள், தமுமுக மாநில துனைச் செயலாளர்கள், கோவை சாதிக், கோவை சைய்யது, கோவை ஜாகீர், மமக மாவட்ட செயலாளர் சுல்தான் அமீர், மமக மாவட்ட பொருளாளர், டி.எம. எஸ். அப்பாஸ்,  மற்றும் மமக மாவட்ட நிர்வாகிகள், அப்பாஸ், ஷாஜகான், அதுபோல் தமுமுக மாவட்ட நிர்வாகிகள், அகமது கபீர், பர்கத்துல்லாஹ், மமக நகர தலைவர் ரபிக், மற்றும்  ஜபார், கவிஞர் ஹக்,  அக்பர் அலி, திருப்பூர் மாவட்ட தமுமுக தலைவர் யுசுப், ஊட்டி மாவட்ட தமுமுக தலைவர்  சமது,  ஈரோடு மாவட்ட தமுமுக  தலைவர் பாருக்,  திருப்பூா மாவட்ட மமக தலைவர் ஹாலித்தீன், மற்றும் கோவை  மாவட்டம், திருப்பூர்  மாவட்டம், ஈரோடு மாவட்டம், ஊட்டி,உடுமலை, பொள்ளாச்சி, மேட்டுபாளையம்,ஆகிய இடங்களில் இருந்து   தமுமுக, மமக, நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், கலந்து கொண்டார்கள், இதில்  700க்கும் மேற்பட்ட பெண் உட்பட . 3500  பேர்கள் கலந்து கொண்டார்கள்.
 
                                            கோட்டை மேடு பகுதிகள்  மாநாடு போல்
 
காட்சி அளிதத்து. இதில் முக்கியமான விஷயம்  என்னவென்றால் இந்த பொதுகூட்டம்  நடந்த இடம்  இக்பால் திடல்  13 ஆண்டு காலம் எந்த ஒரு அரசியல் கட்சிக்கோ, சமுதாய அமைப்புகளுக்கோ, பொது கூட்டம் பேச அனுமதி மறுக்கப்பட்டது. 1998 ஆம் ஆண்டு கோவை குண்டு வெடிப்பு பிறகு  இதில்  கடைசி  பொதுகூட்டம்  1997  ஆம் ஆண்டு கோவையில் 19 முஸலிம் இளைஞர்கள் 
கொல்லப்பட்ட போது  முஸ்லிம் வணிகம் செய்யும்  கடைகள். ஷோபா துணிகடை 
உட்பட பல முன்னணி நிர்வனங்களை  தீ யிட்டு கொழுத்தப்பட்டது. இதில் பல 
கோடி ருபாய்  நஷ்டம் ஏற்பட்டது.  இதற்காக  தமுமுக  பல இடங்களில்  வசூல் செய்து.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கியது. அப்போது  இந்த இக்பால் திடலில் வைத்துதான்
நல உதவிகள் வழங்கிய  போதுதான்  அன்று கோவையில் குண்டு வெடித்தது. அன்று 
முதல் யார்க்கும் பொதுகூட்டம் அனுமதி இல்லை. அதோ  தமுமுக  13 ஆண்டு பிறகு
பொதுகூட்டத்திற்க;்கு அனுமதி அளிக்கப்பட்டது.  இழந்த உரிமையை மிண்டும் 
மீட்போம் என்ற  உரையுடன் பொதுகூட்டம்  நடந்தது. என்று குறிப்பீடபட்டது.

செய்தி: புகைப்படம், கோவை தங்கப்பா 



















Monday, June 14, 2010



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர்   பி ஜே சிறப்பு பேட்டி...

10 சதவீத இடஒதுக்கீடு கிடைக்காவிட்டால் காங்கிரஸ் கூட்டணியை முஸ்லிம் மக்கள் புறக்கணிப்பார்கள்


திருப்பூர்- ஜின், 14

10 சதவித இடஒதுக்கீடு கிடைக்காவிட்டால், காங்கிரஸ் கூட்டணியை முஸ்லிம் மக்கள் புறக்கணிப்பார்கள் என்று தமிழ்நாடு தவ்ஹீத் தலைவர் ஜெய்னூல்ஆபுதீன் கூறினார். திருப்பூர் மாவட்ட தவ்ஹீத் ஜமாத் செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட பிஜே. நிருபர்களிடம் கூறியதாவது:

கடந்த பாராளுமன்ற தேர்தல் அறிக்கையில் முஸ்லிம் மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தனியாக இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று காங்கிரஸ் அறிவித்தது. அதை நம்பி முஸ்லிம் மக்கள் காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தார்கள்.

சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி ரங்கநாத மிஸ்ரா தலைமையில் அமைக்கப்பட்ட கமிஷன், இந்தியாவில் உள்ள முஸ்லிம் மக்களுக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் கிடைத்தள்ள சலுகைகள் குறித்தும், முஸ்லிம் மக்களின் மேம்பாட்டுக்கு தேவையான வழிமுறைகள் குறித்து அறிக்கை தயார் செய்து மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.


இந்தியாவில் உள்ள 110 கோடி முஸ்லிம் தொகையில், 15 கோடி முஸ்லிம் முக்கள் உள்ளனர், அரசு மற்றும் தனியார்வேலைவாய்ப்புகள்,கல்வியில் 13 சதவீத முஸ்லிம் மக்கள் இடம் கிடைக்க வேண்டும். ஆனால் தற்போது 3 முதல் 4 சதவீதம் தான் வாய்ப்பு கிடைக்கிறது.

அரசு வேலைவாய்ப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் கல்வி உள்ளிட்ட அனைத்திலும் முஸ்லிம் மக்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ரங்கநாத மிஸ்ரா கமிஷன் பரிந்துரை செய்தது. இந்த அறிக்கை பாராளு மன்ற கூட்டத்தொடரில் வைக்கப்பட்டது. ஆனால் அந்த அறிக்கை மீதான நடவடிக்கை அறிக்கையை அரசு வைக்க வில்லை.ரங்கநாத மிஸ்ரா அறிக்கை சம்பந்தமாக மத்திய அரசு என்ன செய்யப்போகிறது என்று கூறவில்லை.

இது குறித்து முஸ்லிம் தலைவர்கள் பிரதமரை சந்தித்து வலியுறுத்திய போது, அனைத்து கட்சியின் ஒருமித்த கருத்துடன் செயல்படுத்தப்படும் என்று பிரதாமர் கூறினார். அனைத்து கட்சியின் ஒருமித்த கருத்துடன் நிறைவேற்றுவது என்பது சிரமம். இதனால் முஸ்லிம்மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ரங்கநாதமிஸ்ரா கமிஷன் அறிக்கைப்படி, முஸ்லிம் மக்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை சட்டமாக நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சென்னையில் அடுத்த மாதம் ஜீலை 4ம் தேதி மாபெரும் பேரணி மற்றும் மாநாடு சென்னை தீவுத்திடலில் நடக்கிறது.

இந்த பேரணி மற்றும் மாநாட்டியில் தமிழ்நாடு மற்றும் தமிழ்பேசும் பிற மாநிலங்களில் வசிக்கும் முஸ்லிம் மக்கள் 15 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். முஸ்லிம் மக்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றவில்லை என்றால், வரும் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு முஸ்லிம் மக்கள் வாக்களிக்காமல் புறக்கணிப்பார்கள். இது ஒட்டு மொத்த முஸ்லிம் மக்களின் நிலைப்பாடாக இருக்கும். இதை விளக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டமாக சென்று செயல்வீரர்கள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு ஜெய'னூல் ஆபுதீன் கூறினார். பேட்டியின் போது பொதுச்செயலாளர் அப்துல் அமீது, மாவட்ட தலைவர் முகமது சலீம், செயலாளா அப்துல் கலாம் உடன் இருந்தனர்.


Sunday, June 13, 2010


கோவையில் கொட்டும் மழையில

மனித நேய மக்கள் கட்சி சார்பில

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்த கோரி

இரு சக்கர வாகன பிரச்சாரப் பேரணி...




 
கோவை 13

          உலகத்திற்கு கலாச்சாரம் கற்று கொடுத்த நமது நாடு இன்று போதை எனும் அரக்கன் கையில் சிக்கி சீரழிந்து வருகிறது. காந்தி பிறந்த நாட்டியில் போதையில் வரும் வருமானத்தில் அரசு நடக்கிறது என்று கூறும் கேவல் நலை தமிழகத்திற்கு வந்துள்ளது. தமிழ்நாட்டில் 46 சதவிதம் மக்கள் போதை நோயாளியாகி உள்ளார்கள்.

          இன்று ஆரம்ப கல்வி மாணவர்கள் மது குடிக்கும் ஆபத்து வந்துள்ளது. பெண்களையும் மது குடிக்க தூண்டும் விளம்பரங்களை அரசே வெளியிடுகிறது. மது நாட்டிற்கு வீட்டிற்கும் கேடு என்று அச்சடித்து விட்டு அரசே வெளியிடுகிறது. மது நாட்டிற்கு வீ்'டிற்கும் கேடு என்று அச்சடித்து விட்டு அரசே சாராய டாஸ்மாக் கடைகளை நடத்துகிறது. நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்று தெரிந்தும் அந்த வருமானத்தில் அரசு நடத்தலாமா? அதற்கு நாம் அனுமதிக்கலாமா? சாலை விபத்துகள் அதிகம் நடப்பது போதையால் தான். மதுவை கொடுத்து விட்டு வாசலில் நின்று அபராதம் விதிக்கும் அவலம் நடக்கிறது.


          இந்திய சுந்திரா போராட்ட காலத்தில் பூரண மதுவிலக்கு கோரி கள், சீமை சாராயத்திற்கு எதிராக முன் நின்று போராடிய காங்கிரஸ் அரசு , மத்தியலும், மது விலக்கை உயிராய் மதித்த பெரியார்,அண்ணா வழி நடத்துவோம் என்ற கலைஞர் ஆட்சி மாநிலத்திலும் தமிழக தெருக்களில் டாஸ்மாக்காய் ஓடுகிறது. கோட்டால் வருமானம் இல்லாமல் அரசு நடத்த முடியுமா என்கிறார் கலைஞர். குஜராத்தில் இன்றும் மது விலக்கு அமுலில் உள்ளது. இன்று குஜராத் வளர்ச்சிப் பாதையில் முன்னியில் உள்ள போது ஏன் நம்மால் முடியாது. மேலும் அரசுக்குடாஸ்மாக் மூலம் வரும் வருவாயைக் காட்டிலும் அரசு மருத்துமனைகளில்
சாலை விபத்துக்களால் மருத்துவமனைகள் நிரம்பி வழிவதும், கள், மது வகைகளில் குடல் நோய், வாய்ப்புண், கேன்சர், மனநோய் என சிகிச்சை செலவினங்களே அதிகமாகும். போதை தடுப்பு மையங்களும் மக்களின் பணம் விரயம் செய்யப்படுகிறது.

              மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்று முழக்கமிடும் கலைஞர் அசாமில் தேயஜலைக்கு மதிதிய அரசாங்கம் ராயல்டி கொடுக்கிறது, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்படும பொழுது ராயல்டி கொடுக்கப்படுகிறது. ஆனால் தமிழக நெய்வேலி நிலக்கரிக்கு,
மின்சாரத்திற்கு, கனிம வளங்களுக்கு ராயல்டி கொடுப்பதில்லை, ரயல்டி பெற்றாலே பல ஆயிரம் கோடி ரூபாய் தமிழகத்திற்கு கிடைக்கும். மக்களின் நலனை பாதுகாக்கவே அரசு க்கும் வருமானம் தேவை. மக்களுக்கு குடிக்க கொடுத்து குடியை கெடுத்து வரும் வருமானம் தேவை தானா? அதில் வரும் இலவசங்கள் இருந்தும் என்ன பயன். பெண்களுக்கு கலர் டி.வி. கொடுத்து மானாட மயிலாடா ஆட்டம் கண்டு சிந்திக்க விடாமலும், ஆண்களுக்கு மதுவை கொடுத்து சிந்திக்க விடாமலும் செய்து, இந்திய நாட்டின் சிறப்பு அம்சமான ஜனநாயகத்தை பண நாயகமாக்கும் முயற்சியை முறியடிக்க வல்லரசு கனவு இளைஞர்களே அரசியலக்கு அப்பாற்பட்டு அணிதிரள்வீர்.

              இந்த நாட்டை அடிமைபடுத்தியவனிடமே போராடி மதுவிலக்கை கொண்டு வர செய்யும் போது, சுந்ததிர இந்தியாவில் மக்கள் நல அரசு என்று கூறிக் கொள்ளும் அரசுகளிடம் நம் போராட்டம் உறுதியானால் ஏன் கொண்டு வர முடியாது. மது விலக்கு 34 ஆண்டுகள் தமிழகத்தில் பூரண மது விலக்கு அமுலில் இருந்தது. காந்தியும் காந்தியவாதிகளும் போதைக்கு எதிராய் போராடிய மாபெரும் மரபு நமக்கு உண்டு 1987-ல் மக்கள் குறிப்பாக பெண்களின் கடுமையான கள், சாராயம் எதிர்ப்பு போராட்டங்களாலே கள், சாராய கடை இழுத்து மூடப்பட்டன. அநீதிக்கொதிராய் மதுரையை எரித்த கண்ணகியின் வாரிசுகளே உங்களின் மணாலன்களை மனநோளியாக்கும் மதுவிற்கு எதிராய் திரும்பட்டும் உங்கள் கோப பார்வை எரியட்டும் தமிழக கள் மற்றும் டாஸ்மாக் கடைகள்.

               போதையில் தள்ளாடும் தமிழகத்தை தலை நிமிர்ந்து நிற்க வைக்க இனியொரு விதி செய்வோம் என்ற கண்டன உரையுடன் இரு சக்கர வாகன பிரச்சாரப் பேரணியை த.மு.மு.க. மாநில செயலாளர், இ. உம்மர் அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

             போதைக்கு எதிரான கோஷா முழக்கத்தயை த.மு.மு.க. மாநில துனைச்செயலாளர் கோவை செய்யது அவர்கள் வாகனத்தில் தொடர்ந்து முழுக்கமிட்டு வந்தார். இந்த நிகழ்ச்சிக்கு மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சுல்தான் அமீர் தலைமை தாங்கினர், இதில் 200க்கு மேற்பட்ட இரு சக்கர வாகனத்தில் 350க்கு மேற்பட்றோர்கள் கலந்து கொண்டார்கள். இந்த வாகன பிரச்சாரப் பேரணி கோவை ஆத்துபாலம்,குறிச்சி பிரிவு, போத்தூனுர், அறிவொளி நகர் , கோவைப்புதூர், இடையர்பாளையம், முடிவில் குனியமுத்தூர்யுள்ள த.மு.மு,க , மமக , கிளை அலுவலத்தில் முடிவுஅடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை, மனித நேய மக்கள் கட்சி மாவட்ட பொருளாளர் அப்பாஸ், தமுமுக மாவட்ட நிர்வாகிகள் ரபிக், நுர்த்தீன், மமக மாவட்ட நிர்வாகிகள், எம்.எச். அப்பாஸ், காஜா, நுர்முகம்மது, ஜபார், ஷாஜகான், பாவா நிசார், குட்டி, அப்பாஸ்,மமக நகர செயலளாளர் ரபிக், மமக இளைஞர் மாவட்ட நிர்வாகிகள் கவிஞர் ஹக், முத்துகாலனி காதர் அபுதாஹிர், ஜெமிஸா, ஆகியோர் ஏற்பாடுகளை செய்தார்கள். முடிவில் மமக மாவட்ட பொருளாளர் அப்பாஸ் நன்றி கூறினார்.

செய்தி, புகைப்படம் : கோவை தங்கப்பா