Monday, June 14, 2010



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர்   பி ஜே சிறப்பு பேட்டி...

10 சதவீத இடஒதுக்கீடு கிடைக்காவிட்டால் காங்கிரஸ் கூட்டணியை முஸ்லிம் மக்கள் புறக்கணிப்பார்கள்


திருப்பூர்- ஜின், 14

10 சதவித இடஒதுக்கீடு கிடைக்காவிட்டால், காங்கிரஸ் கூட்டணியை முஸ்லிம் மக்கள் புறக்கணிப்பார்கள் என்று தமிழ்நாடு தவ்ஹீத் தலைவர் ஜெய்னூல்ஆபுதீன் கூறினார். திருப்பூர் மாவட்ட தவ்ஹீத் ஜமாத் செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட பிஜே. நிருபர்களிடம் கூறியதாவது:

கடந்த பாராளுமன்ற தேர்தல் அறிக்கையில் முஸ்லிம் மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தனியாக இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று காங்கிரஸ் அறிவித்தது. அதை நம்பி முஸ்லிம் மக்கள் காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தார்கள்.

சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி ரங்கநாத மிஸ்ரா தலைமையில் அமைக்கப்பட்ட கமிஷன், இந்தியாவில் உள்ள முஸ்லிம் மக்களுக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் கிடைத்தள்ள சலுகைகள் குறித்தும், முஸ்லிம் மக்களின் மேம்பாட்டுக்கு தேவையான வழிமுறைகள் குறித்து அறிக்கை தயார் செய்து மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.


இந்தியாவில் உள்ள 110 கோடி முஸ்லிம் தொகையில், 15 கோடி முஸ்லிம் முக்கள் உள்ளனர், அரசு மற்றும் தனியார்வேலைவாய்ப்புகள்,கல்வியில் 13 சதவீத முஸ்லிம் மக்கள் இடம் கிடைக்க வேண்டும். ஆனால் தற்போது 3 முதல் 4 சதவீதம் தான் வாய்ப்பு கிடைக்கிறது.

அரசு வேலைவாய்ப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் கல்வி உள்ளிட்ட அனைத்திலும் முஸ்லிம் மக்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ரங்கநாத மிஸ்ரா கமிஷன் பரிந்துரை செய்தது. இந்த அறிக்கை பாராளு மன்ற கூட்டத்தொடரில் வைக்கப்பட்டது. ஆனால் அந்த அறிக்கை மீதான நடவடிக்கை அறிக்கையை அரசு வைக்க வில்லை.ரங்கநாத மிஸ்ரா அறிக்கை சம்பந்தமாக மத்திய அரசு என்ன செய்யப்போகிறது என்று கூறவில்லை.

இது குறித்து முஸ்லிம் தலைவர்கள் பிரதமரை சந்தித்து வலியுறுத்திய போது, அனைத்து கட்சியின் ஒருமித்த கருத்துடன் செயல்படுத்தப்படும் என்று பிரதாமர் கூறினார். அனைத்து கட்சியின் ஒருமித்த கருத்துடன் நிறைவேற்றுவது என்பது சிரமம். இதனால் முஸ்லிம்மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ரங்கநாதமிஸ்ரா கமிஷன் அறிக்கைப்படி, முஸ்லிம் மக்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை சட்டமாக நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சென்னையில் அடுத்த மாதம் ஜீலை 4ம் தேதி மாபெரும் பேரணி மற்றும் மாநாடு சென்னை தீவுத்திடலில் நடக்கிறது.

இந்த பேரணி மற்றும் மாநாட்டியில் தமிழ்நாடு மற்றும் தமிழ்பேசும் பிற மாநிலங்களில் வசிக்கும் முஸ்லிம் மக்கள் 15 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். முஸ்லிம் மக்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றவில்லை என்றால், வரும் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு முஸ்லிம் மக்கள் வாக்களிக்காமல் புறக்கணிப்பார்கள். இது ஒட்டு மொத்த முஸ்லிம் மக்களின் நிலைப்பாடாக இருக்கும். இதை விளக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டமாக சென்று செயல்வீரர்கள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு ஜெய'னூல் ஆபுதீன் கூறினார். பேட்டியின் போது பொதுச்செயலாளர் அப்துல் அமீது, மாவட்ட தலைவர் முகமது சலீம், செயலாளா அப்துல் கலாம் உடன் இருந்தனர்.