Tuesday, June 8, 2010



மும்பை தாக்குதலில் போலீஸ் அதிகாரி
கார்கரேயை கொலை செய்தது யார் ?
நூல் அறிமுக விழா




திருப்பூர்- 6

இந்தியாவில் நடந்த அனைத்து குண்டு வெடிப்புகளில் முஸ்லிம் மீதே சுமத்தப்பட்டது. குறிப்பாக ஜீம்ஆ வேலையில் பள்ளியில் வெடித்த குண்டுகளுக்கும், நோன்பு திறக்கும் வேலையில் வெடித்த குண்டுகளுக்கும் முஸ்லீம்கள் மீது பழி சுமத்தப்பட்டு அப்பாவி முஸ்லீம் இளைஞர்கள் கைது செய்யப்பட்னர்.

ஹேமந்த் கர்கரே தீவிராத தடுப்பு படையின் தலைவராக நியமிக்கப்பட்டபின் உண்மையில் குண்டு வைத்தவர்கள் கைது செய்யப்பபட்டனர், அதானல் முப்பை தாக்குதல் எனும் நாடகத்தில் அவர் கொல்லப்பட்டார். அது எவ்வாறு நிகழ்ந்தது என்பதை மும்பையின் முன்னால் ஐ.ஐி. முஸ்ரிப் WHO KILED KARKAREY  எனம் நூலின் மூலம் வெளிக்கொணர்ந்தார்.

அதன் தமிழாக்கம் கார்கரேயை கொலை செய்தது யார்  எனும் நூல் வெளீயீட்டு விழா திருப்பூர்யில் ரோஜா மஹாழில் கடந்த  6ம் தேதி நடைபெற்றது.

இதில் திருப்பூர் ஐக்கிய ஜமாத் தலைவர் ஹாஜி ஜக்கரியா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்  கார்கரேயை கொலை செய்தது யார்  என்ற  நூல்யை தாருல் இஸ்லாம் பவுண்டேஷன் டிரஸ்ட் தலைவர்  ஜனாப் எம். குலாம் முஹம்மது வெளியீடா அதை மனித உரிமை மக்கள் வழக்கறிஞர் ப.பா. மோகன் பெற்றுகொண்டார். சிறப்புரையாக முன்னாள்  எம்.பி.  சுப்புராயன் பேசினார். இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் ஐக்கிய ஜமாத் துனைத்தலைவர்  நஜீர் அஹமது, பிலால் மஸ்ஜித் இமாம் ஜபருல்லா பாக்கவி, காதர்மைதின் பாக்கவி, சிறுபான்மை உதவி அறக்கட்டளை  துனைத்தலைவர்  அபுதாஹிர், ஆகியோர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள். முடிவில் காதர் மைதீன் நன்றி கூறினார்.இதில் 200க்கு  மேற்பட்றோர்கள் கலந்து கொண்டார்கள்.









Sunday, June 6, 2010

துபாயில் பிறைமேடை இதழ்
அறிமுகம் ....

துபாயில் எலந்தகுடி ஜமாஅத் சார்பில் பிறைமேடை மாதமிரு முறை இதழ் அறிமுகம் நிகழ்ச்சி ஜீன் 3ம் தேதியன்று மாலை நடைபெற்றுது. நிகழ்ச்சிக்கு எலந்தக்குடி முத்தலிபு இக்பால் தலைமை தாங்கினார் அவர்தனது உரையில் எலந்தக்குடி ஜமாத் சார்பில் பல்வேறு கல்வி மற்றும் சமுதாய நலப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறித்து விவரித்தார். எலந்தக்குடி நஜிமுதீன் வரவேற்புரை நிழ்த்தினர். சிறப்பு விருந்தினராக அமீரக காயிதேமில்லத் போரவை தலைவர் குத்தாலம் ஏ. லியாகத் அலி கலந்து கொண்டார். அவர் தனது உரையில் எலந்தக்குடியைச் சேர்ந்த இக்பால் மற்றும் நஜீமுதீன் சகோதரர்கள் மேற்கொண்டு வரும் சமுதாய நலப்பணிகளைப் பாராட்டினார். மேலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் சார்பில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மானை ஆசிரியராகக் கொண்டு வெளிக்கொணரப்பட்டு வரும் பிறை மேடை இதழுக்கு ஆதரவளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.
எலந்தக்குடி ஜமாத்தினர் போன்று ஒவ்வொரு ஜமாஅத்தினரும் பிறைமேடை இதழை தங்களது பகுதிகளில் அறிமுகப்படுத்தும் பணியை மேற்கொண்டு கல்வி சமுதாய மற்றும் அரசியல் விழிப்புணர்வு பணியினை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர். எலந்தக்குடி முத்தலிபு இக்பால் பிறைமேடை இதழை அறிமுகப்படுத்த கடைநல்லூர் அப்துல் காதர் ஜமான் பெற்றுக்கொண்டார். நிகழ்வில் அமீராக காயிதேமில்லத் போரவை தலைவர் குத்தாலம் ஏ. லியாகத் அலி, தேரிழந்தூர் இமாம் அலி, திருச்சி அப்பாஸ், மணிகிராமம் ரியாஸ், பெருந்தோட்டம் அமீர்ஹம்ஸா, சன்னாநல்லுர் ஷாஜகான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.
நன்றி : முதுவை ஹிதாயத்

Friday, June 4, 2010




                       தமிழகத்தில் கள் இறக்க அனுமதி அளிக்கக்கூடாது

                               மனித நேய மக்கள் கட்சி  ஆர்பாட்டம்


கோவை,ஜீன் 4
                  1937 ஆண்டுகளின் ஆங்கிலேய ஆட்சி காலத்தில் சுதந்திர ஒரு பங்காக சீமை சாராய ஒழிப்பு போராட்டதை முன்னின்று  நடத்திய காங்கிரஸ் கட்சி மத்தியிலும் , மதுவிலக்குகொள்கையாய் வைத்திருந்த தந்தை பெரியார், அண்ணா வழியையும், கொள்கையையும்  பின்பற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின்  கலைஞர் ஆட்சி மாநிலத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், மது ஆறாக தமிழகத்தில் ஒடிக்கொண்டிருக்கிறது. மதுவின் வருமானத்தில் தான் ஆட்சியை நடக்கிறது என்று கூறும் கேவலமான சூழ்நிலையை  மனித நேய மக்கள் கட்சி வண்மையாக கண்டிப்பதுடன், மாநிலத்தில் உடனடியாக மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும் என்பதுடன் 46 சதவிதம் மக்கள் மது நோயாளிகள் ஆகிவிட்ட நிலையில், உழைக்கும் மக்களையும் தாழ்த்தப்பட்ட மக்களையும் சுயமரியாதையை பறிக்கு நோக்கத்தில், மக்களை மது நோயாளிகளாக ஆக்கும் நோக்கத்தில் கள் இறக்க அனுமதி கோருவதையும்  வன்மையாக  கண்டித்தும்.

கோவையில் பொது மக்களுக்கும் வியாபாரிகளுக்கும் மிகவும் இடையூராக  உள்ள  உக்கடம், பொருமாள் கோவில் வீதி, செல்வபுரம் தெற்கு மற்றும் போத்துனூர் ஆட்டுதொட்டி ஆகிய இடங்களில் உள்ள டாஸ்மாக்  கடைகளை  உடனடியாக அப்புறப்படுத்த கோரியும்  ஆர்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மமக  மாவட்ட துனைச்செயலாளர் ஷாஜகான்,  தலைமை தாங்கினர். தலைமை கழக பேச்சாளர் கோவை  செய்யது கண்டன உரை ஆற்றினார், சமத்துவ முன்னணி நிர்வாகி தோழர்  கார்க்கி , மாவட்ட தமுமுக தலைவர் அப்துல் பஷிர், மமக மாவட்ட செயளாளர் சுல்தான் அமீர், மமக மாவட்ட பொருளாளர் டிஎம்எஸ் அப்பபாஸ், மமக மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அப்பாஸ், தமுமுக மாவட்ட பொருளாளர் கபிர், ஜபார், கவிஞர் ஹக், ஜபார்சாதிக், இளைஞர் அபு, நிஷார், காஜா, மற்றும் பொள்ளாச்சி நகர நிர்வாகிகள்,  தமுமுக, மமக, கிளை,நகரம்.மாவட்ட நிர்வாகிகள் உட்பட 500க்கும்  மேற்பட்டோர்கள் கலந்து கொண்டனர்.






Saturday, May 29, 2010

தமிழக முதல்வருக்கு
முஸ்லிம் பெண்மணியின் கண்ணீர் கடிதம்.....

அன்புள்ள தமிழக முதல்வர் அவர்களுக்கு
எனது கணவன் அப்துல் மஜித் வயது 43 த.பெ. யூசுப் தண்டனை எண்- 3239 என்பவர் கடந்த 1991-ல் கோவையில் நடந்த ஒரு கொலை வழக்கில் குற்றவாளியாக்கப்பட்டு, நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டபின் 1998-ல் என்னை திருமணம் செய்தார். திருமணம் முடிந்த நான்கு மாதங்களுக்குள் சம்மந்தமில்லாமலேளே வேறு வழக்கில் எனது கணவரை கைது செய்து அவ்வழக்கில் குற்றமற்றவர் என்று நீதிமன்றம் அவரை விடுதலை செய்துவிட்டது. ஆனால் 1991-ல் நடைபெற்ற கொலை வழக்கில் எனது கணவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. நானும் நீதிவேண்டும் மேல் நீதிமன்றம் வரை என் கணவரின் விடுதலைக்காக என் குடும்பத்தினர் மற்றும் என் பெற்றோர் எனக்கு வழங்கிய அனைத்து பொருட்களை விற்று வழக்கை நடத்தியும், எனது கணவருக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்து உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டு விட்டது. இவ்வளவு முடிவுற்றபோது எனது கணவர் கோவை சிறையில் 15 ஆண்டுகளை கடந்து விட்டார்கள்.

இதற்கிடையில், கடந்த 2006 மற்றும் 2007ல் 10 ஆண்டு சிறைவாசம் முடிந்தவர்களையும், 2008 அண்ணா நுற்றாண்டு விழாவின்போது 7 ஆண்டு முடிந்தவர்களையும், தாங்கள் பெரும் கருணையுடன் விடுவித்தபோது வேறு வழக்கு மற்றும் மத சம்மந்த காரணம் காட்டி எனது கணவரின் விடுதலையை மறுத்து விட்டார்கள்.
நீதிமன்றத்தின் மூலமும், தங்களின் கருணை மூலமும் விடுதலை பெறுவார் என்ற எதிர்பார்த்து என் சக்திக்கு மீறி, ஒரு பெண்ணாகிய நான் பட்டபாடு துன்பமும் வேதனையும் எந்த பெண்ணும் பெறக் கூடாது என்பதுதான் என் பிரார்தனையாகவே இருக்கும்படி என் வாழ்வு அமைந்துவிட்டது.
துன்பப்படுவோரின் துயர் துடைக்க குறிப்பாக பெண்களின் கண்ணீர் துடைக்க, ஏழைப்பெண்களுக்கு திருமண உதவித்திட்டம் தந்ததோடு, கணவனால் கைவிடப்பட்டோருக்கும், கணவனை இழந்த பெண்களுக்கும் மாதந்தோறும் உதவித்தொகை வழங்கி அவர்களின் துயரத்தை போக்கியதோடு, உணவில்லாமல் எந்த ஒரு பெண்ணும் குழந்தையும் தமிழகத்தில் வாழக்கூடாது என்பதற்காக ஒரு ரூபாய் ஒரு கிலோ அரிசி தந்ததோடு, விறகை எரித்து அதனால் பெண்கள் விடும் கண்ணீரை துடைத்திட இலவச காஸ் அடுப்பபையும் பெண்களின் வேதனையை துன்பத்தை துடைத்து தாங்கள், தந்தையில்லாமல் இருக்கும் தாயாரும் சிறுநீரகக்கோளாரால் பாதிக்கப்பட்டும் ஆதரவு வழங்குவார் என்ற அண்ணன் கால் ஊனத்தால் கஷ்டப்பட்டும், இருக்கும் 12 வயது மகனை படிக்க வைக்கவும், அவனுக்கும், எங்களுக்கும் அன்றாடாம் வாழ தேவைப்படும் உணவிற்காக தையல் தொழில் செய்து அல்லல்பட்டும் துன்பமே வாழ்வாய் வாழ்ந்த வரும் என் கண்ணீரை துயரை வேதனையை நீங்கள் என் கணவரின் விடுதலை மூலம் துடைப்பீர்கள் என்ற நம்பிக்கையில் எங்களின் என்றும் முதல்வராகிய உங்களிடம் கோருகிறேன்.
எவ்வளவோ அரிய பல எண்ணற்ற சரித்திர சாதனைகளுக்க சொந்தக்காரராகிய தாங்கள் எளிளோரின் துயர் துடைப்பதற்காகவே 5-வது முறையும் முதல்வராக பொறுப்பேற்று மக்களுக்காக உழைத்து வரும் தாங்கள், தமிழின் மேல், தமிழ்மொழியின் மேல் பற்று கொண்டு தமிழுக்காகவே தங்களை ஒப்படைத்துக் கொண்டு அதற்காகவே நாங்கள் வாழும் கோவையிலேயே உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை நடத்திடும் தாங்கள் கணவன் இருந்தும் இல்லாமல், வாழ்வே கேள்விக்குறியாய், எப்போதும் துன்பத்தோடும் துயரத்தையும் நீண்ட காலமாகவே அனுபவித்து இதிலிருந்து நமக்கு இறப்பு மடடுமேதான் விடுதலைபோலும் என்ற மனநிலைக்கு என்னை கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டாலும், நீங்கள் இருக்கிறீர்கள் எனற் நம்பிக்கையில் உங்களால் என் கணவர் நிச்சயம் விடுதலையாகி எங்கள் வாழ்விலும் ஒளி வீசும் என்ற நம்பிக்கைதான் என்னை வாழவைத்து வருகிறது.
உலகத் தமிழ்ர்களெல்லாம் இம்மாநாட்டல், உங்களால் மகிழ்வுறம் போது எனது கணவரின் விடுதலை மூலம் நாங்களும் மகிழ்வுற்று நீண்டகால துன்பத்திலிருந்து இன்பம் கண்டிட எங்களின் மேல் கருணைகாட்டி எனது கணவருக்கும் அதுபோல் அவர்யுடன் உள்ள மற்ற சகோதரர்களையும் பொதுமன்னிப்பு விடுதலை வழங்கிட கனிவுடன் வேண்டுகிறேன். துயருறும் என்னைப் போன்ற பெண்களின் கண்ணீர் துடைத்திடவும் உதவி புரியுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்....

இப்படிக்கு
யாஸ்மின்
கோவை

Sunday, May 23, 2010



சிறுபான்மை  உதவி அறக்கட்டளை  அலுவலகத்தில்
முஸ்லிம் லீக்  எம். பி. அப்துல் ரஹ்மான்



கோவை 22
கோவைக்கு முஸலிம் லீக் எம்.பி. அப்துல் ரஹ்மான் கட்சியின் பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்தார். அப்போது  சிறைவாசிகளுக்காக இயங்கி வரும் சிறுபான்மை உதவி அறக்கட்டளை அலுவலத்திற்க்கு வருகை தந்தார்.அப்போது சிறைவாசி குடும்பங்களை சந்தித்தார். அப்போது 40க்கு மேற்பட்ட சிறைவாசி குடும்ப்தார்கள் அப்துல் ரஹ்பான் எம்.பி யிடம் வருகின்ற ஜின் மாதம் கோவை நடைபெறுகின்ற உலக தமிழ் செம்மொழி மாநாடு அன்று 13 வருடங்களாக  சிறைகளில் இருக்கும் எங்கள்  சகோதரர்களை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்க. எம்.பி யிடம்
மனு கொடுத்தார்கள். அந்த மனுவை பெற்று கொண்டு. இன்ஷா அல்லாஹ் நான் சென்னை சென்றயுடன் மாநில தலைவர் காதர்மைதின் அவர்களை கலந்து பேசிவிட்டு நானும் தலைவர் அவர்களும்,பொதுச்செயலாளர் அவர்களும். தமிழக முதல் அமைச்சர் கருணாநிதி அவர்களையும், துனை முதல் அமைச்சர் ஸ்டாலின் அவர்களையும் சந்தித்து. எங்கள் சமுதாயத்திற்க்கு உதவி செய்ய வேண்டும் என்று உங்களுக்கு எண்ணம் இருந்தால் எங்கள் சமுதாயத்தை சேர்ந்த இளைஞர் 13 ஆண்டு களாமாக பல் வேறு மத்திய சிறைகளில் உள்ளனர்.  அண்ணாவின் ஆட்சி காலத்தில் செம்மொழி மாநாடு அன்று கைதிகளை விடுதலை செய்தது போல் நிங்கள் எங்கள் சமுதாய இளைஞர்களை் விடுதலை செய்யவேண்டு.என்று  எங்கள் முதல் கோரிக்கையாக முன் வைக்கிறோம். என்று சிறைவாசி குடும்பங்களை பார்த்து சொன்னார். பிறகு  சிறைவாசி குடும்பங்களின் சுழ்நிலைகளை பற்றி கேட்டு அறிந்தார். ஒவ்வொரும் தன் குடும்ப சுழ்நிலைகளை கேட்டு அவர்களின் துன்பங்கள், கஷ்டங்களை பார்த்து  கண்ணீர் விட்டு அழுதுவிட்டார். பிறகு சிறைவாசி  குடும்பகளை பார்த்து உங்கள்  ஆண் மக்கள் சிறையில் இருந்து வரும்வரை உங்களுக்காக  முழு நேரமமும் கவணம் செலுத்துவேண் என்று உறுதி அளித்துவிட்டு கிளம்பி போனர். அவர்யுடன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள். நெல்லை மஜித், கோவை நிர்வாகிகள் உசேன், பஷிர், கபூர், நாசர்,ஆகியோர்கள் உடன் இருந்தார்கள்.
இதற்கான ஏற்பாட்டுகளை  மேலபாளைம்  கிச்சான் புகாரி, நாகூர் ஆமானி, கோவை தங்கப்பா, சக்தியமக்களம்  அலிகான் குட்டி, எம்.எஸ் எம். அபுதாஹிர், பாசித் ஆகியோர்கள் செய்து வந்தார்கள்.



சிறைவாசி குடும்பங்கள் அப்துல் ரஹ்மான் எம் பி யிடம் மனு கொடுத்த படம்


சிறைவாசி குடும்பங்களின் குறைகளை கவணமாக  அறிகிறார்

 சில நாட்களுக்கு முன்பு விடுதலையான குணங்குடி அனிபா அவர்யுடன் விடுதலையான சக்தியமங்களம் சேர்ந்த 
அலிகான் குட்டியிடம் விடுதலையான விபரங்களை கேட்கிறார்.

இரண்டு ஆண்டுககளாக சிறையில் இரண்டு கிட்னியும் பாதிக்கபட்ட சிறைவாசி
அபுதாஹிர்யிடம் உடல் நலம் விசாரிக்கிறார். இவர் ஆயுள் தண்டனை கைதியாக உள்ளர் இவர் தற்காலியா 3 மாத ஜமீன் பெற்றுயிருக்கிறார். இந்த அபுதாஹிர்காக
பல முறை சிறைதுறை அதிகாரியிடமும். அரசுயிடம் நிறந்தரா விடுதலைக்காக
முயற்ச்சி  செய்து வருகிறது  முஸ்லிம் லீக் என்று  எம்.பி கூறினார்.


சிறைவாசி அபுதாஹிர்  அப்துல் ரஹ்மான்  எம்.பி யிடம் மனு கொடுக்கிறார்.அதை பெற்று கொண்டு உனது விடுதலைகாக முயற்சி செய்கிறோன்
அருகில் நெல்லை மஜித்




கோவையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது இதில்  
அப்துல் ரஹ்மான் எம்.பி . பேசிய போது....