Friday, October 1, 2010

அயோத்தி வழக்கு தீர்ப்பை தொடர்ந்து கோவை முஸ்லிம் அமைப்பு நிர்வாகிகள் பேட்டி..




அயோத்தி வழக்கு தீர்ப்பை தொடர்ந்து

சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்வதை வரவேற்கிறோம்

கோவை முஸ்லிம் அமைப்பு நிர்வாகிகள் பேட்டி

கோவை, அக்.1- அயோத்தி வழக்கில் தீர்ப்பை தொடர்ந்து சன்னி வக்பு வாரியம் சுப்ரீம் கோhட்டில் அப்பில் செய்வதை வரவேற்கிறோம். என்று கோவை முஸ்லிம் அமைப்புகள் தெரிவித்தன.

அயோத்தி வழக்கு தொடர்பாக, அலகாபாத் ஐகோர்ட் பெஞ்ச் தீர்ப்பை தொடர்ந்து, கோவை கோட்டை மேட்டில் உள்ள மாவட்ட ஐக்கிய ஜமாத் அலுவலகத்தில் முஸ்லிம் அமைப்புகளின் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு ஐக்கிய ஜமாத் தலைவர் அமீர் அல்தாப் தலைமை தாங்கினார்.

இதில் த.மு.மு.க., மனித நேய மக்கள் கட்சி, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, சிறுபான்மை உதவி அறக்கட்டளை, தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத், ஜாக், ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த், இந்திய இஸ்லாமிய மாணவர் அமைப்பு, உள்பட அமைப்புகளை சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, ஜக்கிய ஜமாத் பொதுச்செயலாளர் அப்துல் ஜப்பார் கூறியாவது:-

அயோத்தி வழக்கு தீர்ப்பு தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. புhபர் மசுதி தொடர்பாக வழக்கு தொடர்ந்த, சன்னி வக்பு வாரியம் இந்த தீர்ப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. உலக முஸ்லிம்கள் அனைவரும் எதிர்பார்த்ததற்கு மாறாக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது. வுரலாற்று சான்றுகள் என்ற பெயரில், சிறுபான்மை முஸ்லிம்களின் உரிமைகளை பறித்து விடுவார்களோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

சுன்னி வக்பு வாரியம், இந்த தீர்ப்பு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் .அப்பில் செய்ய உள்ளதை இந்த கூட்டம் வரவேற்கிறது.

பாபர் மசுதி இடம் தொடர்பாக சட்டரீதியிலான அனைத்து உரிமைகளும் கிடைப்பபதற்காக சன்னி வக்பு வாரியத்துக்கு அனைத்து முஸ்லிம்களும் ஒத்துiழுப்பு கொடுக்குமாறு கேட்டு கொள்கிறோம்.
மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சுல்தான் அமீர் பேட்டி.
கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக அலகாபாத் உயர்நீpதி மன்றத்தின் நீதிபதி சிபத்துல்லாகான்;, தலைமையிலான சுசில்குமார் அகர்வால், தாம்வீர் சர்மா, ஆகியோர் அடங்கிய லக்னோ உயர்நீதி மன்ற பென்ச் 450 ஆண்டுகளுக்கும் மேலாக முஸ்லிம்கள் தொழுகை நடத்தி வந்த சட்டத்திற்கு புறம்பாக, சங்பரிவார் கும்பால் இடிக்கப்பட்ட பாபரி மஸ்ஜித் சிவில் வழக்கில் இந்திய சிவில் சட்ட தீர்ப்பு வழங்காமல், பஞ்சாயத்து நடத்திவது போல் மூன்று பகுதியாக பிரித்து வழங்கிய தீர்ப்புயும், வழக்குக்கு. தேவையில்லாத சர்ச்சைக்குரிய, கற்பனையான விசயங்களை உண்மைபடுத்தும் முகமாக கருத்துக்களை கூறியதை வண்மையாக கண்டிப்பதுடன் மேற்கண்ட தீர்ப்புக்கு எதிராக உச்சநீதி மன்றத்தின் மேல்முறையீடு செய்யும் அனைத்து முயற்ச்சிகளூக்கும் ஒத்துழைப்பு கொடுப்பது, தீர்ப்புக்கு எதிராக சட்டப்படியாகவும், ஜனநாயக நெறிமுறைக்கு உட்பட்ட கடுமையான போராட்டங்களை நடத்துவது, ஆதிரிப்பது என்று மனித நேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக சிறுபான்மை சமூகத்திற்க்கு தெரியப்படுத்தி கொள்வதுடன் இஸ்லாமிய சமூகம் இதுபோன்ற சுழ்நிலையில் பொறுமையுடன் இருக்க வேண்டும் என ம.ம.க, த மு மு க, வலியுறுத்துகிறது.