Friday, May 7, 2010

நீலகரி மாவட்ட மனித நேய மககள் கட்சி யின் மாவட்ட செயலாளர் ஷேக் அப்பதுல்லா, உட்பட 6 பேர் உடல் அடக்கம்

ஊட்டி,மே 6- கரூர் அருகே விபத்தில் 6 பேரின் உடல் நேற்று காலை 10 மணிக்கு அடக்கம் செய்யப்பட்டது.
நீலகரி மாவட்ட ஊட்டி பாம்பே கேசில் பகுதியை சேர்ந்தவர் ஷேக் அப்துல்லா வயது 45 நீலகரி மாவட்ட மனித நேய மககள் கட்சி யின் மாவட்ட செயலாளராக பணியாற்றி வருகிறார் மற்றும் கேட்டரிங் தொழில் செய்து வருகிறார். அதுபோல் சிங்கர் போஸ்ட் டை சேர்ந்த யூனுஸ் என்ற அப்துல் கனி வயது 42 இவர் மனித நேய மககள் கட்சி யின் ஊட்டி நகரச் செயலாளராகவும் மாட்டிறைச்சி வியாபரம் செய்து வருகிறார்.

அது போல் மற்றவர்கள் சபியுல்லா வயது (32),எஹ்ஸான் வயது(22),மதீன் வயது(32),சைபுதீன் வயது(37). 6 பேரும் நண்பர்கள். அப்துல் கனி அருவங்காட்டியில் நிலம் வாங்க முயன்றார். நில உரிமையாளர் திருச்சி அருகேயுள்ள ஒரு ஊரில் உள்ளதால், அவரை சந்திப்பதற்காக நேற்று முன் தினம் 6 பேரும் காரில் சென்றனர். 11 மணியளவில் கார், கரூர் அருகேயுள்ள சரசம்பட்டி என்ற இடத்தில் வந்துகொண்டிருந்தது. எதிரே வந்த டிப்பர் லாரியின் முன்பக்க சக்கரம் முறிந்து, கட்டுப்பாட்டை இழந்த கார் மீது பயங்கரமாக மோதியதில் 6 பேரும் உடல் நசுங்கி பலியாயினர். உடனே கோவை மாவட்ட தமுமுக, மகக ,நிர்வாகிகளுக்கு தகவல் கிடைக்க உடனே கரூர் அரசு மருத்துவமனைக்கி தமுமுக மாநில செயலாளர் கோவை உம்மர் தலைமையில் தமுமகவின் 6 ஆம்புலானஸ்யுடன் விரைந்தினார். பலியான 6 பேரின் ஜனாஸாவை கரூர் அரசு மருத்துவனையில் பிரதே பரிசோதனை செய்யப்பட்டு, நள்ளிரவு 1 மணிக்கு தமுமக,மமக,நிர்வாகியிடம் ஒப்படைக்கப்பட்டது. இரவுவோடு இரவாக ஊட்டிக்கு 6 ஆம்புலானஸ் முலம் எடுத்து சொல்லாப்பட்டது.
நேற்று 6ம் தேதி காலையில் பொதுமக்கள் பார்வையிட ஊட்டி பெரியபள்ளி வாசல் வாளகாத்தில் 6 போரின் ஜனாஸாவை பொதுமக்கள், அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள், ஜமாதார்கள், அனைத்து சமூக மக்களும் பார்வையிட்டார்கள். பிறகு காலை 10 மணியளவில் ஊட்டியில் உள்ள கபர்ஸ்தான்க்கு எடுத்து சொல்லப்பட்டது. இதில் ஆயிரத்திற்க்கு மேற்பட்றோர்கள் கலந்து கொண்டார்கள்.
ஜனாஸா அடக்கம் முடிந்தயுடன் இரக்கல் கூட்டம் நடந்தது. இதில் தமுமுக மாநிலசெயலாளர் கோவை உம்மர் அவர்கள் தலைமையில் நடந்து. பிறகு இதில் தி மு க தேர்தல் பணிக்குழு செயலாளர் முன்னாள் சட்ட மன்ற கொரடா ப மு முபராக், ஊட்டி அதிமுக நகர செயலாளர்,தேமுதிக செயலாளர்,காங்கிரஸ் நகர தலைவர்,ஊட்டி ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள் பலர் இந்த இரங்கல் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.
இறுதியில் மனித நேய மக்கள் கட்சி மாநில துனைச்செயலாளர் தமீம் அன்சாரி அவர்கள் உரை நிகழ்த்தினர் இதில்'அவர் மரணம் அடைந்தா 6 பேர்க்கு தமிழக அரசு நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை
வைத்தார். அப்போது அருகில் இருந்த ப மு முபரக் நான் உடனடியாக அரசுக்கும், தமிழக முதல்வர்க்கும் பேக்ஸ் கொடுத்து நிவாரண வழங்க நடவடிக்கை எடுக்கிறேன் என்று உறுதி அளித்தார்.
இறுதி ஊர்வலத்தை முன்னிட்டு ஊட்டி மார்கட் பகுதி வியாபாரிகள் கடைகளை அடைத்திருந்தனர்.
இந்த துயார சம்பவத்தை கேட்ட கோவை மாவட்டம், திருப்பூர் மாவட்டம், ஈரோடு மாவட்டம், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த தமுமுக, மமக, நிர்வாகிகள், தொண்டர்கள் பெரும்பாலானோர் ஊட்டியில் குவிந்தனர்.
ஊட்டியே சேகத்தில் திகழ்ந்தது.
மரணம் அடைந்த 6 நபர்களின் குடும்ப விபரம் 1,ஷேக் அப்துல்லாவுக்கு மனைவி, ஒரு ஆண் ஒரு பெண் குழைந்தைகள். 2, யூனுஸ்க்கு மனைவி, இரண்டு குழைந்தைகள். 3,மதீன்க்கு மனைவி, முன்று ஆண் குழைந்தைகள், ஒரு பெண் குழைந்தைகள். 4, சைபுதீன்க்கு மனைவியும்,இரண்டு குழைந்தைகள். 5,சாதிக்க்கு மனைவியும், இரண்டு பெண் குழைந்தைகள். 6, எஹ்ஸான்க்கு திருமணம் ஆகவி்ல்லை.
இவர்களின் கப்ர் வாழ்க்கைக்கும், மறுமை வாழ்க்கைக்கும், துஆ செய்யுங்கள், இவர்களின் குடும்பங்களின் ஏற்பட்ட சோதனையில் முழ்கியுள்ள இவர்களுக்கும் துஆ செய்யுங்கள்.

ஊட்டியில் இருந்து செய்திகள் புகைப்படம் : கோவை தங்கப்பா


முதல் படம்தான் மனித நேய மக்கள் ஊட்டி மாவட்ட செயலாளர் ஷேக் அப்துல்லா