இரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு 4நால்வர் பலி
சோழவந்தான் இரயில் நிலையத்தில் இன்று மாலை குண்டுவெடித்ததில் நால்வர் கொல்லப்பட்டார்கள். நிலைய மேலாளர் உட்பட் பலர் காயமடைந்தனர். மதுரை லி திண்டுக்கல் இடையே உள்ள ஊரான சோழவந்தானில் இன்று மாலை நெல்லைலிஈரோடு இரயில் வந்து நின்ற சில நிமிடங்களிலேயே குண்டு வெடித்தது.
குண்டு வெடித்ததில் சம்பவ இடத்திலேயே, இரயிலுக்கு காத்திருந்த பயணிகள் இருவர் கொல்லப்பட்டனர். மேலும் இருவர் மருத்துவமனையில் உயிரிழந்தனர். நிலைய மேலாளர் ஆறுமுகம் உட்பட பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறையினர், இது தீவிரவாதிகளின் செயலாக இருக்க வாய்ப்பில்லை என்றும், குவாரியில் பாறைகள் உடைக்க வைக்கப்பட்ட ஜெலடின் குச்சிகள் வெடித்ததா? அல்லது கிணறு வெட்ட வைக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் வெடித்ததா? என்பது குறித்தும் விசாரித்து வருவதாக தெரிவித்தனர்.

இக்குண்டு வெடிப்பு சம்பவம், சோழவந்தானில் பெரும் பீதியை கிளப்பியுள்ளது. பாதுகாப்பிற்காக போலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.