Tuesday, February 22, 2011

கோவையில் கருத்துரிமை அரங்கக்கூட்டம் த மு மு க மாநிலத்தலைவர் ஜவாஹிருல்லாஹ் உரை

கோவையில் உள்நாட்டு அடக்குமுறை எதிர்ப்புக் கூட்டமைப்பு சார்பில் மக்கள் மீதான போரும்! கருத்துரிமை மீதான தாக்குதலும்!! என்ற தலைப்பில் மாபெரும் கண்டன அரங்கக்கூட்டம் 20-2-2011, ஞாயிறு அன்று கோவை சி. எம். திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மாவோயிசம்,நக்சலிசம்,பிரிவினைவாதம்,தீவிரவாதம், என்ற பெயரில் தண்டகாரண்யப் பழங்குடி மக்கள், காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநில மக்களின் மீதான போர் மற்றும் போலி மோதல் படுகொலைகளை உடனே நிறுத்தவும், போராடும் மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தவும், இராணுவச் சிறப்பு அதிகாரச் சட்டம் போன்ற கறுப்புச் சட்டங்களை திரும்ப் பெறு. பச்சை வேட்டை நடவடிக்கையை கைவிடவும். மக்கள் மீதான போருக்கெதிராகவும், மக்களின் உரிமைகளுக்காகவும், தொடர்ந்து குரல் கொடுத்துவரும் எழுத்தாளர் அருந்ததிராய், போர. கிலானி, சபிர் அகமது ஷா, எஸ். ஏ. ஆர் கிலானி,பினாயக் சென் , கேரளா அப்துல் நாசர் மாதனி, போன்றவர்கள் மீது பொய் வழக்குளை திரும்பப் பெறுவும், ஜனநாயக சக்திகளின் மீதான காவிபயங்கரவாதிகளின் தாக்குதல்களை உடனே தடுத்து நிறுத்தவும். என்ற பல தலைப்புகளில் கருத்து கூட்டம் நடைபெற்றது. இதில் டெல்லி பல்கலைக்கழகம் செயற் தலைவர்,மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான குழு சார்நத பேரா.கிலானி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகத்தின் மாநில தலைவர் பேரா. ஜவாஹிருல்லாஹ்,தமிழ்தேசிய விடுதலை இயக்க பொதுச்செயலாளர் தியாகு, பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை கு. ராமகிருட்டிணன், இன்னும் பல மனித உரிமை ஆர்வலர்கள்,ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.
கோவையில் கருத்தரங்த்திற்க்கும், திருப்பூர் மாவட்டம் மங்கலத்தில் 94வது ஆம்புலனஸ் ஆர்பணிப்பு நிகழ்ச்சிகளுக்கும் கலந்து கொள்ள வந்த த மு மு க மாநிலத்தலைவர், மாநில பொதுச்செயலாளர், ம ம க மாநில பொதுச்செயலாளர் அவர்களை கோவை விமான நிலையத்தில், கோவை மாவட்ட த மு மு க, ம ம க, மாவட்ட நிர்வாகிகள் வரவேற்ற போது எடுத்த படம்.

மீடியா வாய்ஸ் டிவி யில் தமுமுக மாநிலத் தலைவர் சிறப்பு பேட்டி










செய்தி: புகைப்படம்: மீடியா வாய்ஸ் டிவி

Sunday, February 6, 2011

மனித நேய மக்கள் கட்சி மூன்றாம் ஆண்டு தொடக்கவிழா கோவையில்...


கோவை மாவட்ட மனித நேய மக்கள் கட்சியின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் கோவை நடந்தது... பிப்ரவரி 6ம் தேதி மாலை 7 மணிக்கு கோவை சுந்தராபுரம் கடைவிதியில் நடந்தது. இதில் மமக மாவட்ட செயலாளர் சுல்தான் அமீர் தலைமையில், மாவட்ட பொருளாளர் டி.எம்.எஸ். அப்பாஸ் முன்னிலையில் நடந்தது. இதில் சிறப்புரையாக தமுமுக மாநிலத்தலைவர் போராசியர். டாக்டர் . எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் பேசினர், மற்றும் தமுமுக, மமக, தலைமை கழக பேச்சாளர் கோவை செய்யது அவர்கள் தற்போதையா அரசியல் சுழ்நிலைகளை எடுத்து உரைத்தார். இதில் 1500 க்கு மேல் கலந்து கொண்டார்கள். மாலையில் கோவையில் கோட்டைமேடு, செல்வபுரம், கரும்பு கடை, ஆத்துபாலம்,பகுதிகளில் கொடி ஏற்றும் நிகழ்ச்சிகள் மமக கட்சியின் பெயர் பலகை திறப்பு விழா, குறிச்சி நகரம் அலுவலகம் திறப்பு விழா நடந்தது.





மாநிலத்தலைவர் எழுச்சியுரை


மாநாடு போல் காட்சி அளிக்கும் மக்கள் கூட்டம்

இடம் இல்லாமல் தொண்டர்கள் கடை வாசல் பகுதியில் அமர்ந்து இருக்கும் காட்சி

இஸ்லாமிய பெண்கள் தமுமுக தலைவர் ஜவாஹிருல்லாஹ் அவர்யிடம் மனு கொடுத்த போது.
அதிமுக, மதிமுக, நிர்வாகி தமுமுக மாநில தலைவருக்கு சால்வை அணிவித்தார்கள்.
கோவை செய்யது யின் எழுச்சியுரை

கோவை கோட்டை மேட்டில் புதிய கட்டபட்டா அடுக்குமாடி குடியிருப்புயை இன்னும் அடிப்படை வசதி செய்து தரப்படதா நிலையில் இருக்கும் இந்த கட்டிடத்தை பார்வையிட்டார். தமுமுக தலைவர் ஜவாஹிருல்லாஹ், அருகில் தமுமக மற்றும் மமக நிர்வாகிகள்.
செய்தி, புகைப்படம்: கோவை தங்கப்பா

Thursday, January 27, 2011

Wednesday, January 19, 2011

கோவையில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம் !

கோவையில் பல கோடியில் கட்டப்பட்ட அடுக்கு மாடி குடியிருப்பு
மாநகராட்சி இழுபறியால் ஒப்படைப்பதில் தாமதம்

அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம் !

கோவை: உக்கடம் வின்சென்ட் ரோட்டில் 12 கோடி ரூபாய் மதிப்பில் வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்ட 352 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவதில்இ மாநகராட்சி செய்யும் காலதாமதத்தால் வீடுகளை ஒப்படைப்பதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. உக்கடம் வின்சென்ட் ரோட்டில் வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்டு பரமாரிக்கப்பட்டு வந்த அடுக்கு மாடி கட்டடங்கள்இ 2007ம் ஆண்டு இடிந்து விழுந்தது. இதில் 13 பேர் பலியாயினர்; பலர் காயமடைந்தனர்.

இச்சம்பவத்தையடுத்து. அங்குள்ள மற்ற குடியிருப்புகளை காலி செய்ய மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது. அதன் பிறகு வீடுகளை முழுமையாக இடித்து அப்புறப்படுத்தி புதியதாக 12 கோடி ரூபாயில் 352 வீடுகள் கட்டப்பட்டன. வீடுகளை இடித்து அப்புறப்படுத்திய மாவட்ட நிர்வாகம் ஏழு மாதங்களில் வீடுகளை புதியதாகக் கட்டி பயனாளிகளுக்கு ஒப்படைப்பதாகக் கூறியிருந்தது. அதுவரை வேறு வீடுகளில் குடியிருப்பதற்காக ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் 8000 ரூபாயை வழங்கியது. கட்டடங்களை முழுமையாக இடித்து அப்புறப்படுத்தும் பணியே ஏழு மாதத்தில் நிறைவடையாமல் காலதாமதமாக கட்டடம் கட்டும் பணி 2009 மார்ச்சில் துவங்கியது. ஜூலையில் பணிகளை வாரியம் வேகமாக நிறைவு செய்தது. ஆனாலும்இனியும் வீடுகள் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படவில்லை. இந்நிலையில் வீடுகளை ஒப்படைக்கக் கோரிய தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்போர் பொது நல ஒருங்கிணைப்புக் குழுவினர் நேற்று மாலை அவசர கூட்டத்தைக் கூட்டினர். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா ஜமாத்தே இஸ்லாமிய ஹிந்த் சிறுபான்மை உதவி அறக்கட்டளை ஜாக் மற்றும் ஜமாத் அதன் நிர்வாகிகள் ஜாபர் உசேன் அப்துல் ஜலீல் கோட்டை தங்கப்பா அப்பாஸ் நூருல்அமீன் அபுதாஹிர் சர்புதீன் உட்பட பலர் பங்கேற்றனர். 'இம்மாதம் 31ம் தேதிக்குள் வீடுகளை பயனாளிகளிடம் ஒப்படைக்கா விட்டால் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் குடும்ப உறுப்பினர்களை திரட்டி போராட்டம் நடத்தவும் தயங்க மாட்டோம்' என்று கூட்டத்தில் எச்சரிக்கப்பட்டது.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய நிர்வாக பொறியாளர் (பொறுப்பு) ராமமூர்த்தி உதவி நிர்வாக பொறியாளர் கோவிந்தன் ஆகியோர் கூறியதாவது: அடுக்கு மாடி கட்டடத்திலுள்ள 352 வீடுளில் வசிக்கப் போகும் மக்களுக்காக மூன்று ஆழ்துளை கிணறு (போர்வெல்) அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு சம்ப் கட்டியுள்ளோம். மின் இணைப்பிற்கு விண்ணப்பித்துள்ளோம். சிறுவாணி குடிநீர் வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்ததின் அடிப்படையில் இணைப்பு கோரி மனு செய்துள்ளோம்.
எங்கள் தரப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்துவிட்டன. காலதாமதத்திற்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது என்றனர். மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது 'குடிநீர் இணைப்பு கொடுப்பதற்கு வரி விதிப்பு செய்ய வேண்டும். வரி விதிப்பு செய்ய வாரியம் ஒப்படைப்பு ஆணையை சமர்ப்பிக்க வேண்டும். அதனால் இது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். விரைவில் குடிநீர் இணைப்பு வழங்கி விடுவோம்' என்றார்.