Wednesday, January 13, 2010

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
CHARITABLE TRUST FOR MINORITIES
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ். . .)
'புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாகட்டும்'
அவனின் பேரருள் அண்ணல் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அன்னாரது வழியை முறையேற்று வாழ்ந்த உத்தம சஹாபா பெருமக்கள் மீதும் தீனை நிலைநாட்டுவதற்காக தங்களின் உயிரையும் பொருளையும் அர்ப்பணித்திட்ட, அர்ப்பணித்து வருகின்ற அர்ப்பணம் செய்ய விரும்புகின்ற என அனைத்து நல் உள்ளங்கள் மீதும் நின்று நிலவட்டுமாக ‚
பரபரப்பாக நடந்து முடிந்திட்ட கோவை குண்டு வெடிப்பின் உயர்நீதிமன்ற தீர்ப்பின் விவரத்தை பத்திரிகைகளில் படித்து அறிந்திருப்பீர்கள். 43 முஸ்லிம் இளைஞர்கள் மீது ஆயுள்தண்டனை என விசாரணை நீதிமன்றம் (மாவட்ட நீதிமன்றம்) தீர்ப்பு வழங்கியது. இதில் சபூர் ரஹ்மான் என்பவர் (வயது 35) சிறையிலேயே இறப்பெய்தினார் (இன்னாலில்லாஹி). மீதமுள்ள 42 பேரில் 18 பேர்களுக்கு மட்டும் விசாரணை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனை உறுதி செய்து மீதமுள்ள அனைவரையும் விடுதலை செய்தது உயர்நீதிமன்றம்.

166 பேர் சிக்குண்ட இப்பிரமாண்டமான வழக்கில் தற்போது 18 பேர் மட்டும் எஞ்சியுள்ளனர். ஆண்டுகள் 12 ஆன பின்பே நிரபராதி என நியாயம் கிடைக்கப்பெற்றன. கடுமையான பொருளாதார திரட்டுதலை மேற்கொண்டு சட்ட நுணுக்கம் வாய்ந்த திறமையான வழக்கறிஞர்களை நியமித்ததன் மூலம் வல்லான் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இத்தனை சகோதரர்களும் விடுதலையாகினர். சில தூய உள்ளங்களின் உண்மையான பணிகளாலும், உம்மத்தின் உதவியினாலும், துஆவாலும் இவ்விடுதலை நல்கிற்று. இவ்வறக்கட்டளை கடந்த எட்டாண்டுகளாக நடத்தி வந்த நீதிக்கோரும் பயணத்தில் ஓரளவிற்கு நீதி கிடைத்துள்ளது, அல்ஹம்துல்லில்hஹ். இன்னும் கிடைத்திட வேண்டிய நீதியை பெறுவதற்கு உயர்நீதிமன்றம் சென்றிட வேண்டிய பணி மீதமுள்ளது. அதையும் செய்து முடித்திட வேண்டி இவ்அறக்கட்டளை (சி.டி.எம்.) களமிறங்கியுள்ளது. தொடர்ந்து உம்மத்தின் உதவியினையும், துஆவினையும் வாரி வழங்கிட வேண்டும்.

சிறைபட்டோர் துன்ப, துயரங்களை வார்த்தைகளில் வடித்திட இயலாது. அவர்தம் குடும்பத்தினரின் துயரங்களை நிரந்தரமாக துடைத்திட ஒரே தீர்வு சிறைப்பட்டோரை விடுவிப்பதே‚ விடுவிப்பதற்குண்டான பணிகளாக இருப்பது உச்ச நீதிமன்றம் சென்று திறமையான வழக்கறிஞர்களை நியமித்து ஓர் சட்டரீதியான போராட்டம் மேற்கொண்டால், இன்ஷா அல்லாஹ் மீதமுள்ள சகோதரர்களையும் சுதந்திரக் காற்றை சுவாசித்திட செய்திடலாம் என்ற கருத்துக்கள், ஆலோசனைகள் சீனியர் வழக்கறிஞரான என். நடராஜன் அவர்கள் ஆணித்தரமாக அடித்து கூறினார்கள். இவர்தான் உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்கிற்கு ஆஜரான பிரதான வழக்கறிஞர் ஆவார். 18 நபர்களை தண்டிப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. வழக்கின் அடிப்படையை தகர்த்து விட்டோம். உயர்நீதிமன்றத்தில் இந்த 18 பேரையும் விடுதலை செய்திருக்க வேண்டும். ஆனால் சட்டமல்லாத வேறு பல காரணங்களுக்காக இவர்களை தண்டித்துள்ளார்கள். ஆனால் உச்சநீதிமன்றத்தில் இவர்களை சுலபமாக விடுதலை செய்திடலாம் என்பது திரு. நடராஜன் உள்பட பல வழக்கறிஞர்களின் கருத்தாக இருக்கின்றது.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி முடித்திட சுமார் 75 லட்சம் ரூபாய் செலவாயிற்று. முழுக்க, முழுக்க உம்மத்திலுள்ள சில நல்ல உள்ளங்கள் செய்திட்ட உதவியாகும். இனி உச்சநீதிமன்றம் சென்றிட சுமார் ரூ. 1.25 கோடி செலவாகும் என வழக்கறிஞர் கூறியுள்ளார். ரூ. 1.25 கோடி என்பது பெரிய தொகையாக தெரிகின்றதே என்ற மனக்கிலேசம் எங்களுக்கு இருந்து வருகிறது. என்ன செய்வது? காசிற்கு தகுந்த பணியாரம் போல, காசிற்கு தகுந்த வழக்கறிஞர் மூலமே நாம் உரிய நீதியை பெறக் கூடியதோர் நீதியமைப்பின் கீழ் நாம் வாழவேண்டிய துரதிர்ஷ்ட நிலையை எண்ணி வேதனைப்பட வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றக்கூடிய வசதி பெற்றவர்கள் நம் சமுதாயத்தில் லட்சங்கள் செலவழித்து ஒன்றிற்கு மேற்பட்ட தடவை ஹஜ்ஜை நிறைவேற்றி வருவதையும் காணலாம். அங்ஙனம் செலவழித்து ஒன்றிற்கு மேற்பட்ட தடவை புனிதயாத்திரை செல்லக்கூடியவர்களே, செலவிடும் அப்பணத்தை உள்ளூரில் உள்ள துயரங்களை போக்கவோ அல்லது உணவிற்கு வழியின்றி தவிக்கும் சோமாலியா, நைஜீரியா போன்ற வக்கிர ஏழை நாடுகளுக்கோ பயன்படுத்துங்கள். உங்களின் புனிதயாத்திரை செல்லக்கூடிய நோக்கம் நிறைவேறும் என நடப்பு உலகின் தலைச்சிறந்த ‡பிக்ஹ் அறிஞர் யூசுப் அல்கர்ளாவியின் ‡பத்வா நாம் அறிந்ததே‚ ஆகவே, ஒன்றிற்கு மேற்பட்டு புனிதயாத்திரை செல்லும் அன்பர்கள் இவ்வடிமை வாழ்வினை அகற்றிட முன்வருவீராக‚ அங்ஙனம் செல்லக்கூடிய சகோதரர்களுக்கு இம்மெயில் கண்ட அன்பர்கள் இவ்விஷயத்தை உணர்த்துவீராக‚ உம்மத்தில் வீண் விரயமாக நடந்திடும் திருமண செலவு, வைபோகமான விருந்துகள், மற்றும் ஆடம்பரங்களில் திளைத்திடுவோர் என அனைவரிடமும் இவ்வடிமைகளின் நிலைகளை விளக்கி செலவுகளை விடுதலைக்கு பயன்படுத்தினால் - கொடுத்து உதவியவர்களுக்கும், உதவி செய்ய தூண்டியவர்களுக்கும் 'சுபஹானல்லாஹ்' நிச்சயம் ஈடேற்றத்தை தந்திடுவான்.

தான, தருமங்கள் வழங்கிட வசதி பெற்றவர்களே‚ நீங்கள் அளித்திடும் உதவியின் மூலம் இவ்வடிமை வாழ்விற்கோர் முடிவு கிடைக்கிறதென்றால் உங்களின் பணம் ... படைத்த இரட்சகனிடம் எத்தகைய மதிப்பு வாய்ந்ததாக இருக்கும். ஆகையால், இவ்வடிமை வாழ்வினை அகற்ற வாரிவழங்குவீராக‚ நாம் செலவழித்தது தான் ... நாம் சேர்த்து வைத்த சொத்தாகும். அதிலும் ஆண்டுக்கணக்கில் அல்லலுறும் இந்த அடிமைகளுக்கு அள்ளி அள்ளி தருவது வீணாகாத, தொலைந்து போகாத, நிரந்தரமாக பயன்தரும் டெபாசிட் ஆகும். உடனடியாக இறைவனிடம் டெபாசிட் செய்திடுவீராக‚ என முடிக்கின்றோம்.


CHARITABLE TRUST FOR MINORITIES
96, Vincent Road
Coimbatore – 641001
Email : ctmcoimbatore@gmail.com
Website: www.ctmkovai.com
Phone : 0422 2037673
Mobile : +919786093544
Our Banker : ICICI BANK LTD., OPPANAKARA STREET BRANCH, COIMBATORE – 641 001
S.B. A/C. NO. 605301208490

Monday, January 11, 2010

அமிலப் பெண்கள்
(இளகிய மனமுடையவர்கள் இப் பதிவைத் தவிர்க்கவும் )
போரிலும் பகையிலும் முதல் பொருளாய்அவளையே சூறையாடினாய்:அவளுக்கே துயரிழைத்தாய் ;உன்னால் அனாதைகளாக்கப் பட்டகுழந்தைகளையெல்லாம் அவளிடமே ஒப்படைத்தாய்:தலைவனாகவும் தேவனாகவும் நீதலை நிமிர்ந்து நடந்தாய்
(கவிஞர் ஃபஹீமாஜஹானின் 'ஒரு கடல் நீரூற்றி' தொகுப்பிலிருந்து)
பல பத்திகளில் எழுத வேண்டியவற்றை, கவிஞரின் மேற்சொன்ன வரிகள் எளிதாகவும், விரிவாகவும், வெளிப்படையாகவும் விளக்குகிறது. போர்களிலும், பகைகளிலும், பல குடும்பங்களிலும் பெண்களின் நிலைமை மிகவும் பரிதாபத்துக்குரியது. ஒவ்வொரு இடத்திலும் அவள் அத்திவாரமாக விளங்குவதாலோ என்னவோ, எதிரிகள் அவளையே சிதைக்கிறார்கள். எள்ளி நகையாடுகிறார்கள். காவலற்றுப் போன அகிம்சை விலங்கென, வேட்டையாடுகிறார்கள். எல்லாம் செய்யும் ஆண், தப்பித்துவிடுகிறான். சிலவேளை சிறிய தண்டனை அல்லது பொது மன்னிப்பு. பெண், காலங்காலமாக தன் வாழ்வின் இறுதிக் கணம் வரை ரணம் சுமக்க வேண்டியவளாகிறாள்.
இனி, படங்களைப் பார்ப்போம். இப் படங்கள் உங்களை அதிரச் செய்யும். இப்படியுமா கொடூரங்களென வியக்கவும் செய்யும். பாதிக்கப்பட்டவர்களுக்காக மனமுருகவும் செய்யும். அவர்களின் துயருணர்ந்து, இது போல எவருக்குமே நிகழக் கூடாதெனப் பிரார்த்தியுங்கள். நீங்கள் அறிந்தவர்கள் எவரேனும் இவ்வாறான கொடூரங்களை நிகழ்த்த முற்பட்டால், தடுங்கள். பாதிக்கப்படப் போவது ஒரு உயிர். ஒரு முழு மனித வாழ்க்கை.
இப் படங்களில் இருப்பவர்கள், வன்னமில (Acid) வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்கள். இச் சாகசத்தைச் செய்தவர்கள் ஆண்கள். பாகிஸ்தான் நாட்டில் இவை பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டுவரும் யுக்தி அல்லது பழிக்குப் பழி.
# இரம் சயீத் (வயது 30) - 12 வருடங்களுக்கு முன்னர், இவர் திருமணம் செய்ய மறுத்த இளைஞனால், நடு வீதியில் வைத்து, அமில வீச்சுக்கு உள்ளாகி முகம், தோள், பின்புறமென முழுவதுமாகப் பாதிக்கப்பட்டார். இவரைக் காப்பாற்ற, இருபத்தைந்து ப்ளாஸ்டிக் சத்திரசிகிச்சைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

# ஷமீம் அக்தர் (வயது 18) - இவரது 15 வயதில், மூவர் இவரைப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்திப் பின்னர் அமிலத்தை இவர் மீது எறிந்து தப்பித்தனர். இதுவரையில் பத்து ப்ளாஸ்டிக் சத்திர சிகிச்சைகளுக்குள்ளாகியுள்ளார்.
# நஜாஃப் சுல்தானா (வயது 16) - பெண் குழந்தை வேண்டாமென்று கருதிய இவரது தந்தை, இவரது ஐந்து வயதில் இவரை எரித்துவிட்டார். இதன் காரணமாக முழுமையாகப் பார்வையிழந்த இவரை பெற்றோரும் கைவிட்டு விட, தற்பொழுது உறவினர்களிடம் தஞ்சமடைந்துள்ளார். பதினைந்து தடவைக்கும் மேலாக சத்திர சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.

# ஷெஹ்னாஸ் உஸ்மான் (வயது 36) - ஐந்து வருடங்களுக்கு முன்பு குடும்பப் பிரச்சினையொன்றின் போது, இவரது உறவினரால் அமில வீச்சுக்குள்ளானார். நிவாரணம் பெறவேண்டி இதுவரை பத்து சத்திர சிகிச்சைகளுக்குள்ளாகியுள்ளார்.

# ஷானாஸ் பீபி (வயது 35) - பத்து வருடங்களுக்கு முன்னர் குடும்பப் பிரச்சினையொன்றின் போது உறவினரொருவரால் அமில வீச்சுக்குள்ளான இவர் எந்தவொரு சிகிச்சைகளுக்கும் இன்றுவரை உட்படுத்தப்படவில்லை.

# கன்வால் கையூம் (வயது 26) - ஒரு வருடத்திற்கு முன்னர், இவர் திருமணம் செய்ய மறுத்த இளைஞனால் அமில வீச்சுக்குள்ளானார். இவருக்கு இதுவரை எந்த சிகிச்சையும் மேற்கொள்ளப்படவில்லை

# முனீரா ஆசிப் (வயது 23) - ஐந்து வருடங்களுக்கு முன்னர், இவர் திருமணம் செய்ய மறுத்த இளைஞனால் அமில வீச்சுக்குள்ளானார். இதுவரை ஏழு சத்திர சிகிச்சைகளுக்காகியுள்ளார்.


# புஷ்ரா ஷாரி (வயது 39) - தனக்குப் பிடிக்காத கணவரை விவாகரத்துச் செய்ய முற்பட்டபோது, அவரால் அமில வீச்சுக்காளான இவர், இதுவரை இருபத்தைந்து சத்திர சிகிச்சைகளுக்காளாகியுள்ளார்.

# மைமூனா கான் (வயது 21) - குடும்பத் தகராறொன்றின் போது ஒரு இளைஞர் குழுவினால் அமில வீச்சுக்குள்ளானார். இதுவரை இருபத்தியொரு சத்திர சிகிச்சைகளுக்குள்ளாகியுள்ளார்.

# ஸைனப் பீபி (வயது 17) - ஐந்து வருடங்களுக்கு முன்னர், இவர் திருமணம் செய்ய மறுத்த இளைஞனால் அமில வீச்சுக்குள்ளானார். இதுவரை பல சத்திர சிகிச்சைகளுக்காகியுள்ளார்.


# நைலா ஃபர்ஹத் (வயது 19) - ஐந்து வருடங்களுக்கு முன்னர், இவர் திருமணம் செய்ய மறுத்த இளைஞனால் அமில வீச்சுக்குள்ளானார். இதுவரை ஏழு சத்திர சிகிச்சைகளுக்காகியுள்ளார்.

# ஸாய்ரா லியாகத் (வயது 26) - பதினைந்து வயதில் திருமணமான இவர், படிப்பைத் தொடர வேண்டுமென விரும்பியதால் தனது கணவராலேயே அமில வீச்சுக்குள்ளானார். இதுவரை ஒன்பது முறை சத்திர சிகிச்சைகளுக்காளாகியுள்ள இவர், கையில் வைத்திருப்பது பழைய புகைப்படம்.
இது போலவும், இன்னும் பல விதங்களில் பாதிக்கப்பட்ட பெண்களும் பாகிஸ்தானில் மட்டுமல்ல. எல்லா தேசங்களிலும்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
போகப் பொருளாகவும், விளம்பரங்களுக்கும், அங்கங்களை வர்ணிக்கவும் பயன்படும் பெண்கள் மட்டுமல்ல. இவ்வாறாக பாதிப்புற்ற பெண்களும் நம் மத்தியில் உலவிக் கொண்டுதானிருக்கிறார்கள்.
எம்.ரிஷான் ஷெரீப்,இலங்கை


































Friday, January 8, 2010

த மு மு க. மாநில துனைசெயலாளர் கோவை சையது அவர்களின் தாயார் மரணம்இன்னாலில்லாஹி வ இன்னா இலாஹி ராஜி ஊன்

கோவை சையது அவர்களின் தாயார் மரியம் பீவி வயது 71 அம்மையார் அவர்கள் (8-01-2010) வெள்ளிகிழமை மதியம் 12 மணியளவில் மருத்துவமனையில் வபத்தனர்.பிறகு கரும்பு கடை பகுதியில் உள்ள அவரது விட்டியில் சமுதாயத்தனர் பார்வைக்கு வைக்கப்பட்டது. மரண செய்தியை அறிந்த த மு மு க மாநில தலைவர். போரா ஜவாஹிருல்லாஹ் அவர்கள் சென்னையில் இருந்து இரவு 8-30 மணி விமான முலம் கோவை வந்தார்.விமான நிலையத்தில்இருந்து நேராக கோவை சையது இல்லத்தில் வந்து அவராது தாயார்யின் மையத்தை பார்த்து துஆ செய்துவிட்டு கோவை சையதுக்கும் அவராது குடும்பதார்க்கும் ஆறுதல் கூறியனார்.
அது போல் த மு மு க கோவை மாநகர செயலாளர் பாபு அவாகளின் தந்தை ஜியாவுதின் வயது 65 அவாகள் மாலை மரணம் அடைந்தார்கள். அவராது இல்லத்திற்கும் சென்று மையத்தை பார்த்து விட்டு பாபுவின் குடும்பத்திற்க்கும் ஆறுதல் கூறினார் துஆ செய்தார்.
அது போல் த மு மு க முன்னாள் வர்த்தக அணி செயலாளர் கலில் அவர்களின் தாயார் பல்கீஸ் அம்மையார் உடல் நலம் சரியில்லாமல் அவராது இல்லத்தில் இருக்கிறர் அவரையும் சென்று உடல்நலம் விசாரித்தார்.பிறகு கோவை மாவட்ட மனித நேய மக்கள் கட்சி தலைமை அலுவலகத்திற்கு வந்து சற்று ஒய்வு எடுத்துவிட்டு, த மு மு க, மமக, மாவட்ட நிர்வாகிகளுடன் வருகிற பிப்-7 ம் தேதி திருப்பூரில் நடக்க இருக்கும் மமக வின் 2ம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி பற்றி விபரங்கனை கேட்டு அறிந்தார்.
இந்த நிகழ்ச்சியில் த மு மு க மாநில செயலாளர் கோவை உமர், த மு மு க மாநில பேச்சளாளர் கோவை ஜாகீர், த மு மு க மாநில துனைசெயளாளர் சாதிக், தமுமுக மாவட்ட தலைவர் பஷிர். மமக மாவட்ட செயளாளர் சுல்தான் அமீர், மமக மாவட்ட துனை செயலளளர் ஷாஜகான். மாவட்ட பெருளாளர் அப்பாஸ். மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் அப்பாஸ், அபு,பாபு,ஜபார். காஜா, கவிஞர் ஹக் ஆகியோர் உடன்யிருந்தர்கள்.
பிறகு இரவு 10-30 மணிக்கு பஸ் முலம் நெல்லையில் நடக்க இருக்கும் நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டார்.



செய்தி புகைப்படம் : கோவை தங்கப்பா







Wednesday, January 6, 2010

மனித நேய மக்கள் கட்சி சார்பாக திமுக கவுன்சிலர்யை கண்டித்து ஆர்பாட்டம் கோவையில்

கோவை புறநகர் பகுதியான குறிச்சி, நகராட்சி துனைத்தலைவரும், 1-வது வார்டு ஆத்துபாலம் பகுதி கவுன்சிலருமான இ.எம். அனிபாவை கண்டித்து 1-வது வார்டு பொதுமக்களும், மனித நேய மக்கள் கட்சியும் இனைந்து கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றுது, 1-வது வார்டுக்குட்பட்ட ஆத்துப்பாலம் பகுதியில் உள்ள காயிதே மில்லத் காலனியில் பாட்ட ஏற்பாடு செய்ய கோரி பலமுறை கூறியும் அதில் அசட்டையாக இருந்து. ஆத்துபாலம் பகுதியில் சாக்கடை நீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை சுத்தம் செய்ய ஏற்பாடு செய்யாமை சாக்கடை சுத்தம் செய்யாதால் கடந்த 25-11-05 அன்று அசாருதீன் என்ற சிறுவன் டெங்கு காய்ச்சால் இறந்தது கூறியும் அசட்டையாக இருந்தது. 1-வது வார்டில் குப்ழபத்தொட்டி வைக்காமல் அதை 2-வது வார்டில் உள்ள மண்டபங்கள் முன்பு வைத்தது. டி.எ.ஹச்.காலனியில் பொது சுகாதாரக் கழிப்பிடம் 3 வருடமாகக் கேட்டும் ஏற்பாடு செய்யாதது, தெரு விளக்குகள் முறையாக அமைக்காமல் இருப்பது. குடிநீர் விநியோகம் சரிவர முறைப்படுத்தால் வார்டு மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.
மேலும் 1-வது வார்டு, 2-வது வார்டு பகுதிகளில் ராஜ வாய்க்கால் அருகில் கடந்த 40 ஆண்டுகளாக குடியிருந்து வரும் மக்களை ஒவ்வொரு மழைக்காலங்களிலும் மாவட்ட வருவாய் அதிகாரிகள் திடீரென காலி செய்ய வேண்டும் என அச்சுறுத்துவதை நகராட்சி கண்டு கொள்வதில்லை.
மேலும் நகராட்சிப் பகுதிகளில் துப்புரவு தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகபபடுத்தி, கொசு ஒழிப்பு நடவடிக்கைளையும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீரையும் நகர மக்களுக்கு வழங்க வேண்டும். என தழிழக அரசுயின் கவணத்திற்காக இந்த ஆர்பாட்டம் நடத்தபாட்டது.
இந்த ஆர்பாட்டதிற்க்கு அந்த பகுதி பொதுமக்கள் பெண்கள் மற்றும் தமுமுக, மனித நேய மக்கள் கட்சியினர் கலந்து கொண்டார்கள். இதில் தமுமுக மாவட்ட தலைவர் அப்துல் பஷிர் தலைமையில். மனித நேய மக்கள் கட்சி மாவட்ட பொருளாளர் அப்பாஸ், துனை செயலாளர் ஷாஜகான். தமுமுக மாவட்ட செயலாளர் ரபிக். இளைஞர் மாவட்ட செயலளாளர் அப்பாஸ். மற்றும் ஜபார். பாபு. அஜிஸ். ஹக்கிம். 100க்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டார்கள்
செய்தி,புகைப்படம் : கோவை தங்கப்பா





































Wednesday, December 30, 2009

மனித நேய மக்கள் கட்சியின் 2ம் ஆண்டு துவக்க விழா பிரச்சராம்....

மனித நேய மக்கள் கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் முப்பெரும் கோரிக்கை மாநாடு ( சமூக நீதி, விலைவாசி குறைப்பு, பூரண மது ஒழிப்பு ) வரும் பிப்ரவரி 7ம் திருப்பூரில் நடக்கவுள்ளது. அதற்காக கோவையில் மனித நேய மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் அப்துல் சமது. மாநில துனை ஊபொதுச் செயலாளர் தமீம் அன்சாரி. த மு மு க மாநில துனைபொதுச் செயலாளர் ரிபாய். மாநில செயலாளர். கோவை உமர். மாநில துனை செயலாளர் கோவை சாதிக். மாநில பேச்சாளர் ஜாகீர். தமுமுக மாவட்ட தலைவர் அப்துல் பஷிர்.மாவட்ட செயலாளர் ரபிக்.மாவட்ட பொருளாளர் அகமது கபீர். மற்றும் மாவட்ட நிர்வாகிகள். ஆகியோர்கள் கொடி ஏற்றும் நிகழ்ச்சிகள், செயல் வீரர்கள் கூட்டம் கோவையில் நடைபெற்றது. இந்த அனைத்து நிகழ்ச்சிக்கு மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சுல்தான் அமீர் தலைமையில் நடந்தது. இதற்கான ஏற்றபாடுகளை மாவட்ட துனை செயலாளர் ஷாஜகான். மாவட்ட பொருளாளர். அப்பாஸ். மாவட்ட இளைஞர் அணி அப்பாஸ். ஜபார். கவிஞர் ஹக். பரகாத்துல்லா. காஜா உசேன். நுர் முஹம்மது. ஆகியோர் செய்து வந்தார்கள். இறுதியில் சிறுபான்மை சமூக புரட்சி கட்சியின் மாவட்ட தலைவர் யூசுப் அவர்கள் அந்த கட்சியில் இருந்து விலகி மனித நேய மக்கள் கட்சியில் இனைதார். முடிவுவில் மாநகர செயலாளர் ரபிக் நன்றி கூறினார்.
புகைப்பட தொகுப்பு

செய்தி புகைப்படம் : கோவை தங்கப்பா