Tuesday, September 22, 2009

ஈ த் அன்று முஸ்லிம் பெண்கள் வாந்தி மயக்கம் ! ! !


பாட்னா : நேற்று நாடு முழுவதும் முஸ்லிம்களால் ரம்ஜான் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வட மாநிலங்களில் ரம்ஜானையொட்டி ஏராளமான முஸ்லிம் பெண்கள் மெகந்தி வைத்துக் கொள்வது வழக்கம். ரமஜானை முன்னிட்டு சிலர் கடைகளில் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் மெகந்தியை வாங்கி தங்கள் கை, கால்களில் வைத்துக் கொண்டனர். இந்த மெகந்தியை வைத்த அடுத்த சில நிமிடங்களில்....

அவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. மெகந்தி வைத்த இடங்களில் கொப்புளம் காயம் ஏற்பட்டது. இதை கண்ட உறவினர்கள் உடனே அவர்களை அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஒரிசா மாநிலம் பாலசூர், பட்ராக் மாவட்டங்களில் மெகந்தி வைத்த பெண்கள் அங்குள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது பற்றி அங்குள்ள மருத்துவர்கள் கூறும்போது, 'மெகந்தி வைத்ததால் மயக்கம் அடைந்த பெண்கள் இங்கு சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் தற்போது பதினைந்து பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். மற்றவர்களுக்கு உரிய மருந்துகளை கொடுத்து அனுப்பிவிட்டோம்' என்றனர்.
பீகார் மாநில சுகாதாரத்துறை செயலாளர் சி.கே.மிஸ்ரா கூறும்போது, 'பீகாரில் 100-க்கும் மேற்பட்ட முஸ்லிம் பெண்கள் மெகந்தி வைத்ததால் வாந்தி- மயக்கம் அடைந்துள்ளனர். எனவே கடைகளில் விற்கப்படும் மெகந்தியை பரிசோதனை செய்து அதில் கலப்படம் இருந்தால் தயாரிப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

Saturday, September 19, 2009


Assalaamu Alaikum warhmatullahi wabarakathu
Dear Brothers
Insha Allah I hope this email reaches you with the best of imaan and good health
Eid Mubarak to You & Your Family
May Allah accept all your duas this Eid.
May Allah bless us with the righteous way and the proper understanding of His guidance
May Allah forgive us of our shortcomings in our deen and our worldly activities which we may have done
knowingly and unknowingly.
May Allah protect us from the mischief’s of Shaytan and from Shaytan getting the better of our weaknesses.
May Allah grant us patience, determination, health, and strength in facing the difficulties of this life
May Allah guide us all and help us to Unite
and
May Allah bless the Ummah on this special time of Eid ul FITR
Ameen

By
Kovai Thangappa
Media Voive Tv

Friday, September 18, 2009

ஸதக்கத்துல் ஃபித்ரை முறையாகக்
கொடுப்போம்
ஸதக்கத்துல் ஃபித்ரு என்றால் என்ன?

ஈகைத் திருநாள் என்னும் ஈதுல் ஃபித்ரு அன்று ஏழை - எளியோருக்கு வழங்கியாகவேண்டிய கொடை ஸதக்கத்துல் பிஃத்ரு ஸகாதுல் ஃபித்ரு எனப்படு கின்றது. ரமழான் மாத நோன்புகளை வைத்து முடித்த பிறகு கொடுக்கப்படுவதால் இது ஸதக்கத்துல் ஃபித்ரு எனப்படுகின்றது. ரமழான் மாத நோன்புகளில் நாம் இழைத்துவிடும் சிறுசிறு குற்றங்களுக்கு பரிகாரமாக இது அமைகின்றது. ஏழை - எளிய முஸ்லிம்களும் ஈதுப் பெருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டும். இல்லாமை அவர்களுடைய சந்தோஷத்திற்கு தடையாக ஆகிவிடக்கூடாது என்பதும் ஒரு முக்கியக் காரணம். (அபு தாவுது, இப்னு மாஜா)

யாரெல்லாம் கொடுக்கவேண்டும்?

முஸ்லிமான ஆண்கள், பெண்கள், சிறியவர்கள், பெரியவர்கள், பச்சிளம் குழந்தைகள், வயதானோர் அனைவரும் கட்டாயம் கொடுத்தாக வேண்டும். (புகாரி, முஸ்லிம், அபு தாவுது, நஸாயி, திர்மிதீ, அஹ்மத்)தான-தருமம் பெறத்தகுதியில்லாத அனைவரும் ஸதக்கத்துல் ஃபித்ரு கொடு;த்தாக வேண்டும். இவ்வளவு இருந்தால்தான் கொடுக்கவேண்டும் என்னும் நிபந்தனை எல்லாம் கிடையாது. ஒருநாளுக்கு அதிகமாகன உணவு வீட்டில் இருந்தால் ஸதக்கத்துல் ஃபித்ரு கொடுக்கவேண்டும். கடன் வாங்க முடிந்தால் கடன் வாங்கி ஸதக்கத்துல் ஃபித்ரு கொடுக்க வேண்டும்.

எப்போது கொடுக்கவேண்டும்?
ஈது தொழுகைக்காக தொழுகைத் திடலுக்கு போகும் முன் கொடுத்துவிட வேண்டும். அப்போதுதான் கடமை நிறைவேறும். தொழுதபிறகு, கொடுத்தால் தான-தருமமாகக் கருதப்படுமே அல்லாமல் ஃபித்ரு கடமையை நிறைவேற்றியதாக ஆகாது.

எவற்றைக் கொடுக்கவேண்டும்?

நபிமொழிகளில் எட்டு பொருட்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை:-1) தீட்டாத கோதுமை
2) பேரீத்தம் பழம்
3) சோளம்
4) பாலாடைக் கட்டி
5) உலர்ந்த திராட்சை
6) வறுக்கப்பட்;ட தானியமாவு
7) கோதுமை மாவு
8) உணவுப் பொருள்இப்பொருட்களில் இருந்து ஏறக்குறைய 2650 கிராம் (இரண்டே முக்கால் கிலோ) அளவு கொடுக்கவேண்டும்.

நிர்ணயிப்பது சரியா?

ஸதக்கத்துல் ஃபித்ரு இவ்வளவுதான் என நிர்ணயிப்பது ஷரீஅத்தில் வழிகாட்டப் படவில்லை. நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கை முறையும் வசதிகளும் வேறுபடுகின்றன. நம்முடைய வசதி, வாய்ப்பு, செல்வ நிலைமை, வாழ்க்கை முறை போன்றவற்றைக் கருத்தில் கொண்டு மேற்கண்ட பொருட்களில் நமக்குரிய, நம்மால் இயலுகின்ற பொருளின் அளவு ஸதக்கத்துல் ஃபித்ரு கொடுக்க வேண்டும். மேற்கண்ட பொருட்களில் உங்களால் கொடுக்க இயலுகின்ற பொருளின் அளவு ஸதக்கத்துல் ஃபித்ரு கொடுக்கவேண்டும். மேற்கண்ட பொருட்களில் உங்களால் கொடுக்க இயலுகின்ற விலை உயர்ந்த பொருளைக் கொடுக்கவேண்டும் என இமாம் அபு ஹனீஃபா (ரஹ்) கூறியுள்ளார்கள்.இமாம்களைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொள்வோரும் நபிமொழிகளைப் பின்பற்றுவதாக சொல்வோரும் ஸதக்கத்துல் ஃபித்ராவுக்கென ஒரு தொகையை நிர்ணயித்து அறிவித்து விடுகிறார்கள். இரண்டு தரப்பாருக்கும் ஏறக்குறைய பத்து, பதினைந்து ரூபாய்தான் வித்தியாசம்.பொதுவாக, இரண்டரை கிலோ நடுத்தர கோதுமையின் விலையே நிர்ணயிக்கப் படுகின்றது. ஏறக்குறைய 60 அல்லது 80 ரூபாய். கூலிவேலைக்குப் போகின்ற முஸ்லிமும் 60 ரூபாய்தான் கொடுக்கிறார். மிகப்பெரிய பணக்காரரும் 60 ரூபாய்தான் கொடுக்கிறார். சாதாரண பருப்புக் குழம்போடு தம்முடைய உணவை முடித்துக் கொள்கின்ற ஏழை முஸ்லிம்களும் 60 ரூபாய் ஸதக்கத்துல் ஃபித்ரு கொடுக்கிறார்கள். அன்றாடம் நான்-வெஜ் சாப்பிடுகின்ற முஸ்லிம்களும் 60 ரூபாய் ஸதக்கத்துல் ஃபித்ருஸ கொடுக்கிறார்கள்.

இறைமறை குர்ஆனின்
வழிகாட்டுதல்

அல்லாஹ்வின் வேதமான அல்குர்ஆன் இதற்கு வழிகாட்டுகின்றது. தன்னுடைய மனைவியை ஒருவர் தலாக் சொல்லிவிட்டால் தன்னால் முடிந்த அளவு உதவித்தொகையை வழங்கவேண்டும்.'ஆயினும், செல்வம் படைத்தவன் அவனுக்குத் தக்க அளவும் ஏழை அவனுக்குத் தக்க அளவும் அவர்களுக்குப் பயனுள்ள பொருட்களை முறையாகக் கொடுங்கள். இது நல்லோர்களின் கடமையாகும்' (அல்குர்ஆன் 2:236)தரத்திற்கும் தகுதிக்கும் ஏற்ப உதவித் தொகையை வழங்கவேண்டும் என குர்ஆன் சொல்கின்றது. தலாக் என்பது வெறுப்பு ஏற்பட்ட பிறகு, நடைபெறும் செயல். அப்போதுகூட முடிந்த அளவு உதவித்தொகையை அளிக்குமாறு குர்ஆன் சொல்கின்றது.ஸதக்கத்துல் ஃபித்ரு என்பதோ விருப்போடு செய்யும் செயல். குர்ஆன் சொல்லும் நியதியை கருத்தில் கொண்டால் இங்குதான் அதிகமாக சக்திக்கு ஏற்றவாறு கொடுத்தாக வேண்டும். ஆகையால் ஷரீஆ சொல்ல வருகின்ற கருத்தை மனதில் கொண்டு 50, 60 ரூபாயோடு நிறுத்திக் கொள்ளாமல் நம்முடைய தகுதிக்கு ஏற்ப தலைக்கு 100, 150, 200, 300, 500, 750, 1000, 1500, 2000 என மனப்பூர்வமாக வழங்குவோம். ஏழை முஸ்லிம்களும் நம்மோடு சந்தோஷமாக ஈது கொண்டாட வகை செய்வோம்.
தொகுப்பு: சையது அப்துல் ரஹ்மான் உமரி

Centre for Islamic Studies
Coimbatore. TN.

Thursday, September 17, 2009

சவூதியில் 25 வயது இளைஞர் துக்கு போட்டு தற்கொலை !!!




ரியாத்: கடந்த ஆறு வாரங்களுக்கு முன் சவூதி தலைநகர் ரியாத்துக்கு எலக்டிரிசியன் வேலைக்கு வந்த இளைஞர் ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆந்திர மாநிலம் அனந்த்பூர் மாவட்டம் காதிரி கிராமத்தை சேர்ந்த ஷேக் யூசுப் பாஷா என்ற 25 வயதுடைய இளைஞர் ரியாத்தில் உள்ள ஒரு தனியார் எலக்டிரிகல் நிறுவனத்திற்கு பணிக்காக வந்தார். அவர் தனது மாமாவான எஸ்.கே. முஸாப்பருடன் தங்கியிருந்தார்.

இந்நிலையில் முஸாப்பர் காலையில் வேலைக்காக புறப்பட்டு சென்றபோது பாஷா அயர்ந்து தூங்கிகொண்டிருந்ததாகவும் பிறகு 3 மணிக்கு வேலை முடிந்து திரும்பி வந்து பார்க்கும்போது அவரது உடல் தூக்கில் தொங்கி கொண்டு இருந்ததாகவும் கூறினார். மேலும் பாஷாவிற்கு எந்த பணப்பிரச்சனைகளோ அல்லது கடன் தொல்லையோ இல்லை என்றும் சவூதி வருவதற்கு கூட அவர் ஒரு ரியால் கூட செலவழிக்கவில்லை என்றும் அவ்ருக்கு விசா கூட இலவசமாகவே கிடைத்தது என்றார்.இந்தியாவில் இருக்கும் அவருடைய பெற்றோர் அவருடைய உடலை பத்திரமாக இந்தியாவிற்கு அனுப்பி வைக்கும்படி இந்திய தூதரகத்தை கேட்டுக்கொண்டுள்ளனர் தனது மகன் சவூதிக்கு செல்லும்போது பூரண உடல்நலத்துடனே சென்றதாக கூறினார்கள்.

Tuesday, September 15, 2009


அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு கோவை இஸ்லாமிய சிறைவாசி 9 பேர் இன்று விடுதலையானார்கள்: சிறை வாசலில் உறவினர்கள் வரவேற்பு
கோவை, செப். 15
அண்ணா பிறந்த நாளை யொட்டி ஆண்டு தோறும் நன்னடத்தை விதிகளின் கீழ் கைதிகள் கருணை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டு வருகிறார்கள். இந்த ஆண்டு 10 பேரை விடுதலை செய்வதாக அரசு அறிவித்தது.
இவர்கள் அனைவரும் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதானவர்கள். குண்டு வெடிப்பு வழக்கில் இவர்கள் 13 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வந்தனர். இவர்களை விடுதலை செய்வதற்கான உத்தரவு கோவை ஜெயிலுக்கு வந்தது. இதை தொடர்ந்து 10 பேரில் 9 பேர் இன்று காலை 7.15 மணிக்கு விடுதலை செய்யப்பட்டனர்.
யூசுப் என்கிற ஷாஜகான் என்பவருக்கு விடுதலை உத்தரவு வந்துள்ளது. அவருக்கு வேறு வழக்கில் தொடர்பு இருப்பதால் விடுதலை செய்வது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விடுதலை செய்யப்பட்ட கைதிகள் விவரம் வருமாறு:
1. முகம்மது இப்ராகிம், 2. அப்துல் ரகீம், 3. அப்துல் பாரூக், 4. அப்பாஸ், 5. முகம்மது ரபீக், 6. அப்துல் ரவுப், 7. அஷ்ரப், 8. பத்ருதீன் அலிமுகம்மது, 9. சாகுல் அமீது. விடுதலையான 9 பேரின் தண்டனை அடுத்த மாதம் முடிவடைய இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கைதிகள் விடுவிக்கப்படும் தகவல் கிடைத்ததும் அவர்களின் உறவினர்கள் அதிகாலையிலேயே ஜெயில் முன் குவிந்து இருந்தனர். கைதிகள் வெளியில் வந்ததும் கட்டித்தழுவி மகிழ்ச்சி தெரிவித்தனர். சில கைதிகள் ஆனந்த கண்ணீர் விட்டனர்.
விடுதலை குறித்து அஷ்ரப் கூறியதாவது:லி நாங்கள் ஒரு வாரத்தில் தண்டனை காலம் முடிந்து விடுதலை ஆகிவிடுவோம். ஆனால் அண்ணா பிறந்த நாளில் விடுதலை செய்தோம் என அரசு கண் துடைப்பு செய்கிறது. மேலும் 65 பேர் உள்ளே இருக்கிறார்கள். அவர்களை விடுதலை செய்ய வேண்டியது தானே. இவ்வாறு அவர் கூறினார்.
சாகுல் அமீது கூறியதா வது:விடுதலை ஆகி குடும்பத் தினரை சந்திப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் இன்னும் 10 நாளில் விடு தலை ஆக வேண்டிய எங்களை அண்ணா பிறந்த நாளில் விடுதலை செய்தோம் என்பது சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. அதே போல் எங்களின் அமைப்பு விடுத்த கோரிக்கையின்படி யாரும் விடுதலை செய்யப் படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
படம்: கோவை தங்கப்பா