Tuesday, July 13, 2010

அன்சாரியை மீண்டும் கோவை ஜெயிலுக்கு
மாற்ற வேண்டும்

கோவை வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தை சந்தித்தார்
சிறுபான்மை உதவி அறக்கட்டளை நிர்வாக டிரஸ்டியும், மீடியா வாயஸ் இனைதளத்தின் முதன்மை நிர்வாகி கோவை தங்கப்பா

கோவை ஜீலை 12-
திருப்பூரில் காங்கிரஸ் கட்சியின் 125- வது ஆண்டு விழா பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் விமானம் மூலம் கோவை வந்தனர். அப்போது மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூலம், பேசுவதற்க்கு அனுமதி பெற்று. மந்திரியை அரைமணி நேரம் சந்தித்து. தமிழகத்தில் உள்ளா முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலை சம்பாந்தமாகவும், அன்சாரி மீண்டும் கோவை ஜெயிலுக்கு மாற்றம் சம்பாந்தமாகவும், கோவை தங்கப்பா பேசினார். முழுமையாக கேட்டு சிறைவாசிகளின் முழு விபரங்களையும் எழுத்து முலம் பெற்று கொண்டு நான் தமிழக அரசுயிடம் பேசுகிறேன். என்று கூறினார். அருகில் மத்திய உள்துறை அதிகாரிகள், மத்திய, மாநில உளவுதுறை உயர் அதிகாரிகள் உடன் இருந்தார்கள்.







அன்சாரியை மீண்டும் கோவை ஜெயிலுக்கு
மாற்ற வேண்டும்

தமிழக மந்திரி பழனிசாமியிடம், சிறைத்துறை டி.ஐ.ஜி. யிடம்
த மு மு க, ம ம க, மனு


கோவை, ஜீலை. 13-

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில மாநில செயலாளர் கோவை இ உம்மர் மற்றும் மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சுல்தான் அமீர் உள்ளிட்ட 10 பேர் தமிழக ஊரக தொழில் துறை அமைச்சர் பொங்கலுர் பழனிசாமியை சந்தித்து மனு அளித்தார். அதில் அன்சாரியை மீண்டும் கோவை ஜெயிலுக்கு மாற்ற வேண்டும் என கூறி இருந்தனர். மற்ற விபரங்களை கேட்ட அமைச்சர் நான் தமிழக முதல்அமைச்சர், சட்ட துறை அமைச்சர், கலந்து பேசிவிட்டு உங்களுக்கு நல்ல முடிவு சொல்லுகிறேன், பிறகு கோவை மத்திய சிறையில் உள்ள சிறைத்துறை துனைதலைவர் கோவிந்தராஜை சந்தித்து மனு அளித்தார். சந்தித்து விட்டு வெளியே வந்த தமுமுக மாநில செயலாளர் உம்மர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அன்சாரிக்கு இருதய நோய் நீரிழிவு நோய் உள்ளது. கைக்குழந்தைகளும் உள்ளது. அவரை எந்த வித முன் அறிவிப்பு இன்றி சென்னை புழல் ஜெயிலுக்கு மாற்றி உள்ளனர். இங்கிருந்தால் அவரது மனைவி உறவினர்கள் சென்று பார்க்க வசதியாக இருக்கும் எனவே மனிதாபிமான அடிப்படையில் அன்சாரியை மீண்டும் கோவை ஜெயிலுக்கு கொண்டு வர வேண்டும், எங்கள் அமைப்பின் நிர்வாக குழு கூட்டம் 14 ம்தேதி நடக்க இருக்கிறது கூட்டத்தின் முடிவில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.


பேட்டியின் போது சிறுபான்மை உதவி அறக்கட்டளை நிர்வாகி கோவை தங்கப்பா, தமுமுக மாவட்ட தலைவர் அப்துல் பஷிர்,துனைதலைவர் பர்கத்துல்லாஹ், செயலாளர் ரபிக், பொருளாளர் அகமது கபீர், அதுபோல் மமக மாவட்ட செயலாளர் சுல்தான் அமீர், துனைசெயலாளர்கள் அப்பாஸ், ஷாஜகான், மாவட்ட பொருளாளர் அப்பாஸ், இளைஞர் அணி செயலாளர் அக் ஷியா நிசார் ஆகியோர் உடன் இருந்தார்கள்.

செய்தி புகைப்படம்: மீடியா வாயஸ்


Sunday, July 11, 2010


அல் உம்மா இயக்க தலைவர் முஹம்மது அன்சாரி கோவை மத்திய சிறையில் இருந்து
சென்னை புழல் சிறைக்கு மாற்றம்


அவர் மனைவி சம்சுநிஷா மூன்று பெண் குழந்தைகளுடன்
கோவை கலெக்டர் அலுவலகத்தில் உள் இருப்பு போராட்டம்



கோவை ஜீலை 11-
அல் உம்மா தலைவர் முஹம்மது அன்சாரி, கோவை மத்திய சிறையில் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று
கோவை மத்திய சிறையில் உள்ளார். இவரை சென்னை புழல் சிறைக்கு மாற்றி சிறை நிர்வாகம் உத்திரவிட்டது. இதையடுத்து அன்சாரி
பலத்த பாதுகாப்புடன் (10ம் தேதி சனிகிழமை ) சென்னை புழல் சிறைக்கு கொண்டு சொல்லப்பட்டார்.

இந்த தகவலையை சிறுபான்மை உதவி அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு தெரியவந்தது. உடனே சமுதாய இயக்க தலைவர்கள், தமுமுக
தலைவர் ஜவாஹிருல்லாஹ், பொதுச் செயலாளர் ஹைதர் அலி,கோவை இ உம்மர், முஸ்லிம் லீக் தலைவர் காதர்மைதீன், அப்துல்
ரஹ்மான் எம்.பி, இந்திய தவ்ஹித் ஜமாத் தலைவர் பாக்கர், பாப்புலர் ஃபிரண்ட் மாநில துனை தலைவர் இஸ்மாயில், குணங்குடி
அனிபா, மற்றும் அரசு உயர்அதிகாரிகளுக்கு அறக்கட்டளை நிர்வாகி கோவை தங்கப்பா, தகவல் தெரிவித்தார்.
இதற்கிடையில் அன்சாரி மனைவிக்கு தகவல் கிடைக்க புழலுக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து தன் மூன்று பெண் குழந்தைகளுடன்
கலெக்டர் அலுவலகத்தில் உள் இருப்பு போராட்டம் நடத்தினர். பிறகு காவல் துறை உயர் அதிகாரிகள் பேச்சு வார்த்தைக்கு பிறகு
கோவை குற்றவியல் அலுவலக மேலாளர் மல்லிகாவிடம் மனு அளித்தனர். பிறகு கலெக்டர் வேறு நிகழ்ச்சியில் உள்ளதால் அவர்
அன்சாரி மனைவியிடம் தொலை பேசி தொடர்பு கொண்டு உங்கள் கணவரை கோவை மத்திய சிறைக்கு மாற்ற சிறை நிர்வாத்திற்க்கு
பரிந்துறை செய்கிறேன்.

பிறகு உள்துறை செயலாளர் அவர்களுக்கு கலெக்டர் அலுவலக முலம் மனு கொடுத்தார். அளித்தார் விபரம்
கோவையில் நடந்த வெடிகுண்டு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று கடந்த 13 வருடங்களாக கோவை மத்திய சிறையிலேயே தன்
தண்டனை காலத்தை கழித்து வரும் எனது கணவர் முஹம்மது அன்சாரி எக்காரணமும் இல்லாமல் மிகக் கொடுமையான முறையில்
அதிகாலை 5 மணிக்கு சிறைமாற்றம் செய்யப்பட்டுள்ளார
எங்களுக்கு திருமணமாகி இரண்டு கைக்குழந்தைகள் உட்பட மூன்று பெண் குழந்தைகள் உண்டு. எனது கணவர் ஏற்கனவே
கடுமையான நீரழிவு நோயாலும் அவதிப்பட்டு வருகிறார். மேலும் அவருக்கு இருதய நோயும் உண்டு நான் சென்ற முறை வியாழன்று
நேர்கானல் சென்ற போது மிகவும் சோர்வாக இருந்தார்.
நானும் எங்களது குடும்பத்தார் அனைவரும் கோவையில் தான் வசிக்கின்றோம். சிறைமாற்றம் செய்த காரணத்தால் எங்களின்
குடும்பத்தாருக்கும், எங்களது குழந்தைகளுக்கும் மிக நீண்ட தூரம் பயணம் செய்து மனு நேர்காணல் சென்று காண சிரமமாக இருக்கும்
என்பதை கருத்தில் கொண்டு அவரை கோவை மத்திய சிறைக்கே மாற்ற செய்து தரும்படி தாங்களை அன்புடன் கேட்டு கொள்கிறேன்.
என மனுவில் கூறியுள்ளனர்.
இதற்கான ஏற்பாடுகளை சிறுபான்மை உதவி அறக்கட்டளை நிர்வாகிகள் உம்மா ஷா, கோவை தங்கப்பா, அபுதாஹிர், தாஜ்பாபு, ரபிக், ஏர்டெல் அபு ஆகியோர் செய்து வந்தார்கள்.






 

Wednesday, July 7, 2010

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

இன்ஷா அல்லாஹ்

விரைவில்

புது பொழிவுயுடன

"center">

Monday, July 5, 2010

கோவையில் பந்த் அமைதியாக நடந்தது

கோவையில்  பந்த் அமைதியாக நடந்தது

கோவை ஜீலை 5,

பெட்ரோல், டீசல், மண்ணெண்ணைய் மற்றும் கியாஸ் ஆகியவற்றின் கடுமையான விலை உயர்வை கண்டித்தும், எண்ணெய் நிறுவனங்கள்
எண்ணெயின் விலையை அவர்களே நிர்ணயித்து கோடிகள் பல கொள்ளை அடிக்க வழி வகுத்துக்கொடுக்கும். அதிகாரத்தை மத்திய அரசு திரும்பப் பெற  வேண்டும் என்பதை வலியுறுத்தி  நாடு தழுவிய முழு அடைப்பு நடைபெற்றது.

இதில் கோவையில்  மனித நேய மக்கள் கட்சி  அறிவிப்புவிடுத்தது கோவையில் அமைதியாக நடந்த புகைப்பட காட்சிகள்.





Friday, July 2, 2010

கோவையில் மமக நூதன போராட்டம்....

கோவையில்  பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு,  மண்ணெண்ணெய்
விலையேற்றத்தைக் கண்டித்து
மனித நேய மக்கள் கட்சி  மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடத்தியது....


கோவை 2,
மத்திய அரசு இந்த விலை உயர்வு திரும்ப பெறுவது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இக்கோரிக்கை வலியுறுத்தி கோவை மாவட்ட  மனித நேய மக்கள் கட்சியின்  சார்பாக, கோவையில் செஞ்சிலுவை சங்கம்  முன்பு, 2ம் தேதி, வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு நடந்தது.

இதில் மனித நேய மக்கள் கட்சி மாவட்ட துனை செயலாளர்  எம்.ஹெச்.அப்பாஸ் தலைமையிலும் தமுமுக  மாநில துனை செயலாளர் கோவை சாதிக் அவர்கள் கண்டன உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மமக, மாவட்ட செயலாளர்  சுல்தான் அமீர், மமக மாவட்ட துனைசெயலாளர் கே. ஷாஜகான், மமக மாவட்ட பொருளாளர் டி.எம்.எஸ். அப்பாஸ், அதுபோல் தமுமுக மாவட்ட தலைவர் அப்துல் பஷிர், தமுமுக மாவட்ட பொருளாளர் அகமது கபீர், மற்றம் தமுமுக, மமக, மாவட்ட, நகரம், கிளை நிர்வாகிகள  உட்பட 300க்கு மேற்பட்றோர்கள் கலந்து கொண்டார்கள். முடிவில் மமக நகர தலைவர் ரபிக் நன்றி கூறினார்.














செய்தி,புகைப்படம்: கோவை தங்கப்பா