Saturday, July 4, 2009


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட நிர்வாகிகள்
100 க்கு மேற்பட்டோர்கள் கைது
நடுத்தர மக்களின் அன்றாட தேவையான பெட்ரோல் டீசல் விலை
உயர்த்திய மத்திய அரசை கண்டித்து மாபெரும்கண்டன ஆர்பாட்டம் கோவையில் நடைபெற்றது.. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் இன்று நடந்த கண்டன ஆர்பாட்டம். கோவை மாவட்ட செயலாளர் அப்பாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது 100மேற்பட்டோர்கள் கலந்து கொண்டார்கள்.பெட்ரோல் டீசல் விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டித்து மக்கள் கோஷங்களை எழுப்பி தங்களுடைய கண்டனத்தை பதிவு செய்த போது கைது செய்தார்கள்.
கைது செய்து காவல்துறை வேனியில் ஏற்றய போது எடுத்த படம்

செய்தி படம், கோவை தங்கப்பா


Sunday, June 28, 2009

மறைந்த தவ்ஹித் ஜமாத் கிளை தலைவர் முகம்மது கனி குடும்பத்திற்க்கு அரசு சார்பில் நிதி உதவி
மருத்துவ மனையில் டாக்டர்யிடம் விபத்தில் காயம் அடைந்தவர்களை பற்றி விபரங்களை கேட்கிறார் அமைச்சர் பழனிசாமி.

விபத்தில் காயம் அடைந்த சாகுல் ஹமிது அவர்களை மருத்துவமனையில் அமைச்சர் பொங்கலுர் நா. பழனிசாமி பார்வையிட்டார் அருகில் கோவை தங்கம் எம்.எல்.ஏ, முன்னாள் எம்.பி மு ராமநாதன் மற்றும்.தவ்ஹித் நிர்வாகிகள் கோவை ஜபார்,ஜாலுத்தீன்,த. மு .மு. க,மாவட்ட நிர்வாகிகள். அப்துல் பஷிர், சாகுல் ஹமிது, நிஜாம்,மனித நேய மக்கள் கட்சி மாவட்ட பொருளாளர் அப்பாஸ்,சி .டி.எம். துனைத்தலைவர் அபுதாஹிர்.மற்றும் ஜமாத் நிர்வாகிள் கலந்து கொண்டார்கள். காயம் அடைந்த இவர். மறைந்த தவ்ஹித் ஜமாத் கிளை தலைவர் கனியின் அண்ணன் ஆவார்.


விபத்தில் மரணம் அடைந்த கோவை தவ்ஹித் ஜமாத் கிளை தலைவர் முகம்மது கனி குடும்பத்திற்க்கு அரசு சார்பில் அமைச்சர் பொங்கலுர் நா. பழனிசாமி நிதி உதவி வழங்கிய போது எடுத்து படம்.அருகில் கோவை தங்கம் எம்.எல்.ஏ, முன்னாள் எம்.பி மு.ராமநாதன்,அருகில் உள்ளனர்.
செய்திகள், படம்- கோவை தங்கப்பா

Wednesday, June 24, 2009

கோவை தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் என்.செ். ரோடு கிளை தலைவர்.

முகமது கனி விபத்துயில் மரணம்.

ஜனஸா தொழுகை கோவை திப்பு சுல்தான் பள்ளி யில்நடந்தது.இதில் தவ்ஹித் ஜமாத் மாநில நிர்வாகிகள். எம்.ஐ.சுலைமான்,ஏ.ஸ் அலாவுத்தின்.கோவை ஜபார்,கோவை ரஹிம்,மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டார்கள்.அதுபோல் த மு மு க .மாநில செயலாளர் கோவை உம்மர்,துனை செயலாளர் கோவை சாதிக்,மாநில போச்சாளர் கோவை சைய்து,மாவட்ட நிர்வாகிகள், அப்துல் பசிர், ஹமிது,அகமது கபிர்,திருப்புர் த மு மு க. நிர்வாகிகள். ஹாலித், ஹைதர்அலி,மற்றும் மனித நேய மக்கள் கட்சி மாவட்ட நிர்வாகிகள். அப்பாஸ். ஷாஜகான். அப்பாஸ்.கோவை தங்கப்பா, அது போல். ஜாக் மாவட்ட நிர்வாகிகள். மலங்கு.சித்திக்.மற்றும் முஸ்லிம் லிக் நிர்வாகிகள். கோவை நாசர். சாகுல் அமிது. சி.டி.எம்.நிர்வாகிகள் உம்மர்ஷா. அபுதாஹிர். மனிதநீதி பாசறை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்ஜமாத்நிர்வாகிகள்.பொதுமக்கள் சுமார் 3000க்கும் மேற்பட்றோர்கள் கலந்து கொண்டார்கள்.






விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு மற்றும் அடைந்தவர்களுக்கு அரசு சார்பில் ருபாய் 7 லட்சத்து 20 ஆயிரம் ருபாய் உதவியை கோவை கலெக்டர் உமாநாத் வழங்கியபோது அருகில் மனித நேய மக்கள் கட்சி மாவட்ட பொருளாளர் அப்பாஸ் உடன் இருந்தார்கள்.




விபத்தில் எந்தவித காயமும் இன்றி தப்பிய 2 வயதுசிறுவன் சேக்பரீத் நடந்த சம்பவம் பற்றி எதுவுமே தெரியாமல் பரிதாபத்துடன் அமர்ந்திருந்த காட்சி.


வேன் நொறுங்கி உருக்குலைந்து கிடக்கும் காட்சி.



பலியான தவ்ஹித் ஜமாத் தலைவர்யின் குடும்பத்தார்கள்.ரஜபுனிஸா,தாஜ்னிஸா,ரகமத்துல்லா,சாயிராபானு,முகமது மீரான்,சாகிதாபேகம்,முகமதுகனி,பாத்துமுத்துஜொகரா,மற்றொரு ரகமத்துல்லா ஆகியோரை படத்தில் காணலாம்.



விபத்துக்குள்ளான லாரியும் ஒரு காரும் நெறுங்கி கிடக்கும் காட்சி.


பல்லடம் அரசு மருத்துவமனையில் வரிசையாக வைக்கப்பட்டு இருப்பதை காணலாம்.



கோவை மேற்கு மண்டல காவல்துறை அதிகாரி. பிரமோத்குமார்.மாவட்ட காவல்துறை கண்கானிப்பாளர். சாந்தி ஆகியோர் பார்வையிட்டர்கள்





ஜனஸாதொழுகை நடத்தும் கட்சி









கொள்கை சகோதரர்கள் கலந்து கொண்ட கட்சி


ஜனாஸா வை. த மு மு க. தவ்ஹித் ஜமாத். ஆம்லன்ஸ் முலம் மைய்ய வாடிக்கு எடுத்து சென்ற கட்சி














Saturday, March 7, 2009

தேர்தல் களம். ஜீனியர் விகடனுக்கு த மு மு க தலைவர்.ஜவாஹிருல்லா சிறப்பு போட்டி....

Tuesday, March 3, 2009

மனித நேய மக்கள் கட்சி 6தொகுதிகளில் போட்டி
த மு மு க மாநில தலைவர் ஜவாஹிருல்லா அறிவிப்பு



கோவை-மார்ச்-3
மனித நேய மக்கள் கட்சி வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஆறு தொகுதிகளில் தனித்துப் போட்டியிடும் என தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லாஹ், பொதுச் செயலாளர் ஹைதர்அலி, மனித நேய மக்கள் கட்சிப் பொதுச் செயலாளர் அப்துல் சமத், பொருளாளர் ஹாரூண் ரஷீத் ஆகியோர் இன்று கோவையில் நிருபர்களிடம் கூறினார்கள். மனித நேய மக்கள் கட்சி பிப்ரவரி 7ம் தேதி துவங்கப்பட்டது. முறைப்படி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுக் கட்சியாக இருந்தாலும், த.மு.மு.க.வின் முழுக் கட்டுபாட்டில் இயங்கும். மனித நேய மக்கள் கட்சிக்கு மாவட்ட நிர்வாகிகளை நியமிப்பதற்காக தமிழகம் முழுவதும் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஆலோசனைக் கூட்டங்கள் நடந்து வருகிறது. முதல் கட்டமாக தஞ்சை, மதுரை, மண்டலங்களில் கலந்தாய்வு முடிந்து விட்டது. இன்று கோவையில் நடைபெற்றது. நாளை சென்னை மண்டலத்தில் கலந்தாய்வு நடைபெறும். இன்னும் ஓரிரு நாட்களில் 32 மாவட்டங்களுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள். வருகிற பாராளுமன்றத் தேர்தலில் மத்திய சென்னை, வேலூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம், தஞ்சை, திருநெல்வேலி அல்லது தென்காசி தனி ஆகிய தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளோம். ஏதேனும் அரசியல் கட்சிகள் சிறுபான்மை, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக எழுத்துப் பூர்வமாக வாக்குறுதி அளித்தால் அந்த கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவோம். இன்னும் ஓரிரு தினங்களில் கூட்டணி நிலவரம் மற்றும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். சென்னை உயர்நீதிமன்றம் மோதல் சம்பவம் துர்பாக்கியமான செயல். அப்பாவி மக்கள், காவல்துறையையும், நீதித்துறையையும் நம்பித்தான் இருக்கிறார்கள். அவர்களே பகிங்கரமாக மோதிக் கொள்வது வேதனையானது. மருத்துவனை நோயாளிக்கு சிகிச்சையளிக்க மருத்துவர் மறுத்தது போல் இச்செயல்கள் உள்ளது. இலங்கைத் தமிழர்களுக்கு அதிகார பகிர்வு வழங்க மத்திய அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். ராணுவ நடவடிக்கையின் மூலம், இப்பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது. இவ்வாறாகக் கூறினார்கள். இந்த பேட்டியின் போது மாநிலச் செயலாளர், கோவை உம்மர், மாவட்டத் தலைவர் பஷீர், மாவட்டச் செயலாளர் அமீர், மாவட்ட பொருளாளர் கபீர் ஆகியோர் உடனிருந்தார்கள். பின்னர், த.மு.மு.க. மர்க்கஸில் இன்று பகல் 12.00 மணியளவில் மனித நேய மக்கள் கட்சியின் மேற்கு மண்டலச் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த செயற்குழுவில் கட்சியின் மாவட்ட நிர்வாகிகளை நியமித்தல் சம்பந்தமாக கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களின் நிர்வாகிகள், மாநில நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்தார்கள்.
செய்தி.புகைப்படம்: கோவை தங்கப்பா