Sunday, January 4, 2009

அ.தி.மு.க. கூட்டணியில் த.மு.மு.க.?
எதிர்க்கும் ஜவாஹிருல்லாஹ் !!!










Friday, January 2, 2009






மனிதநீதிப்பாசறை சார்பில் இஸ்ரேலின் அடாவடியை கண்டித்து ஆர்ப்பாட்டம்
கோவை-1
இஸ்ரேலில்27.12.2008 சனிக்கிழமை முதல் யூத ராணுவம் ‡பலஸ்தீ குடிமக்களின் மீது விமானத் தாக்குதல் ஏவுகணையாலும், நூற்றுக்கணக்கான டாங்கிகளாலும், வெறித்தனமான தாக்குதல் தொடுத்து வருகின்றது. இதில் 315 ‡பலஸ்தீன அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர். 1500 முஸ்லிம்கள் படுகாயம் அடைந்துள்ளனர். ஜபலியா அகதிகள் முகாமிலும் பள்ளி வாசல்களிலும் குண்டு வீசி கொடூர தாக்குதல்கள் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் 7 பெண்குழந்தைகளும் கொல்லப்பட்டுள்ளனர். எனவே, ‡பலஸ்தீன் மீது இஸ்ரேலின் தொடரும் தாக்குதலைக் கண்டித்து பாப்புலர் ‡ப்ரண்ட ஆ‡ப் இந்தியா சார்பாக 31.12.2008 அன்று மாலை 4.45 மணிக்கு செஞ்சிலுவை சங்கம் முன்புறம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவ்வார்ப்பாட்டத்தில் M N Pமாவட்ட செயலாளர் ஆ.லு. அப்பாஸ் தலைமை தாங்கினார். M N P மாவட்ட தலைவர் AS. இஸ்மாயில் கண்டன உரை நிகழ்த்தினார். இவ்வார்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மேலும், ‡பலஸ்தீனில் இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கண்டன ஆர்ப்பாட்டத்தின் தீர்மானங்கள்
1. ‡பலஸ்தீன பூர்வீக அரபு முஸ்லிம்களின் மீது இஸ்ரேல் தொடுத்து வரும் இராணுவ தாக்குதல் மற்றும் முற்றுகைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
2. இஸ்ரேலியர்களால் அநீதியாக ஆக்கிரமிக்கப்பட்ட ‡பலஸ்தீர்களின் நிலங்கள் உடனடியாக அவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும்.
3. மஸ்ஜிதுல் அக்ஸா (பைத்துல் முக்கத்தஸ்) பள்ளிவாயில் முஸ்லிம்களின் சொந்தமான முதல் கிப்லாவாகும். ஆதனை இஸ்ரேல் முஸ்லிம்களிடம் திரும்ப ஒப்படைகக் வேண்டும்.
4. ‡பலஸ்தீன மக்களால் தங்களின் பிரதிநிதியாக அங்கீகரிக்கப்பட்டு ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹமாஸ் இயக்கத்தினரை சர்வதேசம் உடனடியாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.
5. நமது தேசப்பிதா மகாத்மா காந்தி நமக்கு அளித்த ஜியோனிச எதிர்ப்பு கொள்கையை கைகொண்டு இஸ்ரேலுடனான ராஜ்ய உறவுகளை இந்தியா உடனனடியாக முறித்துக் கொள்ள வேண்டும்.
6. ‡பலஸ்தீன அகதிகள் 60 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உடனடியாக அவர்களின் தாய் பூமியில் மீண்டும் குடியேற்றம் செய்யப்பட வேண்டும்.
7. இஸ்ரேலின் பயங்கரவாத நடவடிக்கைகளை கண்டித்து ஐ. நா. சபை சர்வதேச உலகிலிருந்து அதனை தனிமைப்படுத்திட வேண்டும்.
செய்திகள் படம்:கோவை தங்கப்பா

Sunday, December 28, 2008

த மு மு க. சார்பில் தமிழக முதல்வர்க்கு கடிதம்

கோவை மாவட்ட த மு மு க. சார்பில் தமிழக முதல்வர்க்கு கடிதம்

கோவை சிறையிலுள்ள குண்டு வெடிப்பு கைதிகள் பாதிக்கப்படுவது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கக் கோரியும் மற்றும் விடுதலைச்செய்ய கோரி கடிதம். மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு,
கோவை மத்திய சிறையில் 11 வருடங்களாக அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கின்ற முஸ்லிம் சிறைவாசிகளை, மற்ற ஆயுள் தண்டனை சிறைவாசிகளை அண்ணா பிறந்த நாளன்று விடுதலை செய்வது போல் வருகின்ற குடியரசு தினத்தன்று முஸ்லிம் சிறைவாசிகளை பாரபட்சமின்றி விடுதலை செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்வதுடன், சிறையிலுள்ள முஸ்லிம் சிறைவாசிகள் தங்களது நியாயமான கோரிக்கைகளை சிறை நிர்வாகத்திடம் கோருகின்ற போது, 11 வருடங்களாக சிறை வாழ்க்கையினால் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள இக்கைதிகள் உடல்நலம் குன்றி நோய்வாய்பட்;டு இருக்கும் வேளையில் சிறைத் துறை அதனை அறிந்து இக்கைதிகளுக்கு முறையான சிகிச்சைகள் அளிக்கப்படாமல் இருக்கின்ற நிலையில் மிகவும் பாதிப்படைகின்ற சூழ்நிலை ஏற்படுகின்றது. மேலும் கைதிகள் தங்களுக்குண்டான உரிமைகளை கேட்கும் நேரத்தில,; அதுவும் பல வழிகளில் மறுக்கப்படுகின்றது. இக்கைதிகள் பரோலில் வரும் போது அளவுக்கு அதிகமான காவல் துறையின் பாதுகாப்பு ஏற்பாட்டினால் இவர்கள் குடும்பத்தார் மத்தியிலும் அப்பகுதியில் வாழ்கின்ற மக்கள் மத்தியிலும் அச்சம் ஏற்படுகின்ற வகையில் இச்செயல் அமைந்து விடுகின்றது.
எனவே, மேலே குறிப்பிடப்பட்டுள்ள இப்பிரச்சனைகளை கருத்தில் கொண்டு இவர்களுக்கு நியாயம் கிடைக்க தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
இவர்களின் வழக்கை விசாரித்து இவர்களின் நடவடிக்கைகளை நன்கு அறிந்த தனி சிறப்பு நீதிமன்ற நீதிபதி அவர்கள,; அவரின் தீர்ப்பில் 'மனித சமூகத்தில் வாழும் உதாரணமாக இவர்கள் இருப்பார்கள்' என நீதிபதி தன் தீர்ப்பில் கூறியதையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றோம். ஆகையால், ஐயா அவர்கள், இவைகளை கருத்தில் கொண்டு முஸ்லிம் சிறைவாசிகளின் விஷயத்தில் ஆவண செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
செய்தி : கோவை தங்கப்பா
மீடியா வாய்ஸ்

Saturday, December 27, 2008

கோவை மத்திய சிறையில் ஒருதலை பட்சம்

கோவை மத்திய சிறையில் ஒருதலை பட்சம்
கோவை டிசம்பர்- 27
சிறையில் கைதிகளுக்கு பரோல் என்பது ஒரு மனிதவுரிமை. ஆனால் முஸ்லிம் சிறைவாசிகளுக்கு இந்த உரிமை மறுக்கப்படுகிறது. மதசார்பற்ற கொள்கைக்கு வேட்டு வைப்பது போல், கோவை சிறை அதிகாரிகள் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார்கள். உதாரணம் : சுல்தான் மீரான் கொலை வழக்கில் ஆயுள் தண்டனைபெற்று ஐந்து வருடங்களாக சிறையில் இருக்கும் பூரிகமல், ராஜேஷ் போன்ற இந்து பாசிஸ குற்றவாளிகளுக்கு வழிக்காவல் கூட இல்லாமல் மூன்று நாட்கள் வரை பரோல் போன்ற சலுகைகள் கொடுக்கப்படுகின்றன. ஆனால் 11 வருடங்களாக தன் குடும்பத்தாரை பிரிந்து சிறையில் வாடும் முஸ்லிம் கைதிகளுக்கு அவர்களின் குடும்பத்தார்கள் மரணமடைந்தால் சில மணி நேரம் பலத்த போலீஸ் காவலுடன் பரோல் கொடுக்கப்படுகின்றது. இது முஸ்லிம் கைதிகளுக்கு அளிக்கும் ஒரு வெளிப்படையான அநீதியாகும். இது தொடர்பாக சம்சுதீன் என்ற சிறைவாசி 24.12.2008 அன்று முதல் எங்களுக்கும் சம நீதி வேண்டும் என சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவரின் தொடர் உண்ணாவிரதத்தின் காரணமாக உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டு சிறை மருத்துவமனையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக அவரின் குடும்பத்தாருக்கு கூட நேர்காணலில் சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை. இது சம்பந்தமாக அவரின் மனைவி ஆரிபா மற்றும் சிறுபான்மை உதவி அறக்கட்டளையின் நிர்வாகிகள் இன்று (26.12.2008) கோவை மாவட்ட ஆட்சியாளரை சந்தித்து இவ்விஷயத்தில் சமநீதி கிடைத்திட வழிவகை செய்ய ஆவண செய்யுமாறு மனு அளித்துள்ளனர். சம நீதி கிடைக்குமா?
தமிழக முதல்வர்க்கு சிறைவாசியின் மனைவி கடிதம்
ஆரிபா ஆல் அமீன் காலனி3-வது வீதி, தெற்கு உக்கடம் கோவை
– 641001
பெறுநர்
திரு. தமிழக முதலமைச்சர் அவர்கள்
கோட்டைசென்னை
ஐயா,
என்னுடைய கணவர் ஷம்சுதீன். கடந்த பதினொரு ஆண்டுகளாக கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை சிறைவாசியாக இருந்து வருகிறார். நானும் கடந்த பதினொரு ஆண்டுகளாக என்னுடைய கணவரை நேர்காணலில் சென்று சந்தித்துக் கொண்டுள்ளேன். ஆனால், இன்று 26.12.2008 அன்று மத்திய சிறைக்கு நேர் காணலுக்கு சென்ற பொது அங்கிருந்த சிறை அதிகாரிகள் என்னுடைய கணவர் ஷம்சுதீன் நான்கு நாட்களாக சிறையில் உண்ணாவிரதம் இருக்கின்றார். தற்போது அவருடைய உடல்நிலை பாதிக்கப்பட்டு சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதனால் அவரை நேர்க்காணல் காண முடியாது என்று கூறிவிட்;டார்கள்.
ஐயா, என்னுடைய கணவர் எதற்காக உண்ணாவிரதம் இருக்கின்றார். அவரின் உடல்நிலை எப்படி உள்ளது என்ற எந்த விபரமும் கூறவில்லை. ஆதனால் ஐயா, அவர்கள் மனிதாபிமான அடிப்படையில் சிறைத்துறை அதிகாரிகள் மூலம் என்னுடைய கணவரின் உண்ணாவிரதத்தை முடித்து வைக்க நடவடிக்கை எடுக்குமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு
ஆரிபா
கணவர் பெயர் சம்சுதீன்
கோவை
செய்தி: கோவை தங்கப்பா
மீடியா வாய்ஸ்