Tuesday, December 14, 2010

பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் உருக்கமான உரை யாற்றினார்.

முஸ்லிம் சிறைவாசிகளின் நன்னடத்தைக்கு இ.யூ. முஸ்லிம் லீக் பொறுப்பேற்றுக்கொள்ளும்மாநில மாநாட்டில் தலைவர் பேராசிரியர் உருக்கமான வேண்டுகோள்


சென்னை தாம்பரம் மைதானத்தில் டிசம்பர் 11-ம் தேதி மாலை தமிழக முதல்வர் டாக்டர் கலைஞ ருக்கு `நானிலம் போற்றும் நல்லிணக்க நாயகர்� விருது வழங்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநில மாநாட்டில் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் மத்திய அரசுக் கும், மாநில அரசுக்கும் பல கோரிக் கைகளை முன் வைத்து உருக்கமான முறையில் தலைமை உரை யாற்றினார்.

அப்போது அவர் இந்தி யாவின் மிகச் சிறந்த தலைவராக-அறிஞராக திகழும் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு இந்தியாவின் உயரிய விருதான `பாரத ரத்னா� விருதினை வழங்க மத்திய அரசு விரைவான நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத் தார்.

மேலும், தமிழக சிறை களில் 12 ஆண்டுகளுக் கும் மேலாக வாடிக் கொண்டிருக் கும் முஸ்லிம் சிறைவாசி களை கருணை அடிப்படை யில் விடுதலை செய்வதற்கு முதல்வர் கலைஞர் முயற்சி எடுக்க வேண்டும் என்றும், விடுதலையாகும் சிறை வாசிகளின் நன்னடத்தைக ளுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொறுப் பேற்றுக் கொள்ளும் என்றும் உறுதியளித்தார். இதுபற்றிய விவரம் வருமாறு-

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சார்பில் மாநில மஹல்லா ஜமாஅத் துகளை ஒருங்கிணைத்து தமிழகத்தில் சமுதாய ஒற்றுமையையும், சமய நல்லிணக்கத்தையும் மேலோங்கச் செய்ய மஹல்லா ஜமா அத்களின் நிர்வாகிகள், உலமா பெரு மக்கள், சமுதாயத்தின் அறிஞர் பெருமக்கள், சமுதாய மக்கள் அனைவ ரையும் பங்கேற்கச் செய் யும் வகையில் மாநில மாநாடு ஏற்பாடு செய்து அதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப் படும் `மதநல்லிணக்க விருது�களுக்கு இந்த ஆண்டு தமிழக முதல்வர் கலைஞர் அவர்களை மூன்று மதங்களுக்கும் பொதுவானவராக தேர்வு செய்து, `நானிலம் போற் றும் நல்லிணக்க நாயகர்� என்ற விருதினை வழங்கி சமுதாயத்தின் கோரிக் கைகளை முன் வைக்கும் வகையில் பிரம்மாண் டமான மாநில மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது.

எழுச்சிகரமான மாநாடு
மிக எழுச்சியுடனும், உணர்ச்சிகரமாகவும் நடந்தேறிய இந்த மாநாட் டில் தமிழக முழுவதிலு மிருந்தும் பல லட்சக் கணக்கானோர் பங்கேற்ற னர். பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் பச்சிளம் பிறைக்கொடியை ஏந்தி பிரம்மாண்டமாய் நடத் திய பேரணியும், அதனைத் தொடர்ந்து விருது வழங் கும் விழா நிகழ்வுகளும் நடந்தேறின

விழாவுக்கு தலைமை வகித்த மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் முதல்வர் கலை ஞர் அவர்களுக்கு விருது வழங்கப்படுவதன் நோக்கம் குறித்தும், விருதுக்கான தகுதி சான்றுரையினை வாசித்தும் தலைமையுரை யாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது-

லட்சோப லட்ச மக்கள்
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அழைப் பினை ஏற்று லட்சோப லட்சக் கணக்கில் இங்கே சமுதாய மக்கள் கூடியி ருக்கிறார்கள். தமிழகத்தின் பல மாவட் டங்களிலிருந்து மட்டு மல்லாமல் இந்தியா வின் பல்வேறு மாநிலங்களி லிருந்தும் துபை, சவூதி உள்ளிட்ட வெளிநாடுகளி லிருந்தும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சார்பு அமைப்புகளைச் சார்ந்த பிரதிநிதிகள் இங்கே கூடியி ருக்கிறார்கள்.

இவ்வளவு பேரும் இங்கே கூடியிருப்பது தமிழகத்தில் நல்லாட்சி யினை நடத்திக் கொண்டி ருக்கும் முதல்வர் கலைஞர் அவர்கள் தொடர்ந்து நிலையான ஆட்சியினை மீண்டும் மீண்டும் வழங்க வேண்டும். இந்த தமிழ்ச் சமுதாயத்திறகு தொடர்ந்து சேவையாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தின் அடிப்படையில்தான்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சார்பில் ஆண்டு தோறும் மூன்று மதங்களைச் சார்ந்த அறிஞர்கள், சிறந்த சேவை யாளர்கள் ஆகியோரை தேர்வு செய்து வழங்கப் படும் `

`நானிலம் போற்றும் நல்லிணக்க நாயகர்�
சமூக நல்லிணக்க� விருது இந்த ஆண்டு இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என்ற மூன்று மதங்களுக்கும் பொதுவானவரும், அனைத்து சமுதாயத் திற்கும் பொதுவானவரும் சிறந்த சேவையாற்றி வரு பவருமான தமிழக முதல்வர் கலைஞர் அவர் களுக்கு `நல்லிணக்க நாயகர்� என்ற பெயரில் ஒரே விருதாக வழங்க முடிவு செய்து அறிவித் தோம். நாங்கள் இவ்வாறு அறிவித்ததும் ஒரு சிலர் இதனை விமர்சிக்கும் வகையில் ஏன் இந்த விருது? அது என்ன நல்லிணக்க நாயகர்? என்றெல்லாம் எங்களை கேட்டனர். அவர் கள் இப்படி கேட்டதும், நல்லிணக்க நாயகர் என் பதை `நானிலம் போற்றும் நல்லிணக்க நாயகர்� என்று மாற்றினோம். ஏனெனில், குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல் என நிலங்களில் உள்ளோர் எல்லாம் போற் றும் தலைவராக பாலை நிலத்தில் உள்ளோரும் வாழ்த்தும் தலைவராக ஐந்து நிலங்களிலும் வாழும் அனைத்து மக்களும் வியந்து போற்றும் சாதனை களை நிகழ்த்தி வரும் முதல்வர் கலைஞருக்கு இது தான் பொருத்தமானது என்று கருதியதால்தான்.

வேறு எவராவது வந்து அது என்ன நானிலம் போற்றும் நல்லிணக்க நாயகர்? என எங்களை கேட்டிருந்தால் பிரபஞ்சம் போற்றும் நல்லிணக்க நாயகர் என்ற பெயரி லேயே இந்த விருதினை வழங்கியிருப்போம். அந்த அளவுக்கு அகில உலகமும் போற்றக் கூடிய தலைவ ராக முதல்வர் கலைஞர் திகழ்ந்து கொண்டிருக்கி றார் என்பதை இந்த சமு தாய மக்கள் நல்ல முறை யில் அறிந்து, தெரிந்து, புரிந்து தெளிந்துள்ளனர்.

இந்த விருதினை வழங் குவதன் மூலம் கலைஞர் அவர்களுக்கு புதிதாக சிறப்பு எதுவும் வந்து விடப் போவதில்லை. அவர் எல்லாவித சிறப்புகளை யும் ஏற்கனவே பெற்றவர் தான். இந்த விருதினை அவருக்கு வழங்கியதன் மூலம் எங்களுக்கு தான் சிறப்பும், புகழும் சேரும் என்பதை நாங்கள் உணர்ந்தே இருக்கிறோம் என்பதன் அடையாளமாகவே இங்கே லட்சக் கணக்கில் கூடியுள்ள அனைவரும் அதனை அங்கீகரித்து வாழ்த்திக் கொண்டிருக் கிறார்கள்.

எங்களின் இந்த விருதினை பெற்றுக் கொள்ள வர வேண்டும் என்ற எங்களது அன்பான அழைப்பினை ஏற்று அவரது உடல் நிலை இவ்வளவு தூரம் பயணிக்க ஒத்து வராத நிலையிலும் இந்த சமுதாயத்தின் மீது கொண்டுள்ள அன்பை, பாசத்தை, நேசத்தை வெளிப்படுத்தும் வகையில் வருகை தந்துள்ள முதல்வர் கலைஞர் அவர்களுக்கும், முந்தையர் வழியைத் தொடரும் தந்தையர் கலைஞர் வழி நடக்கும் தளபதி துணை முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தவ னாக இந்த சமுதாயத்தின் சார்பில் சில தீர்மா னங்களை - கோரிக்கை களை மாநாட்டில் வாசித் தளித்தவற்றை நிறை வேற்றித் தருமாறு கேட் டுக் கொள்கிறேன்.

மருத்துவக் கல்லூரி
தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தலைவர் கவிக்கோ அப்துர்ரஹ்மான் அவர்கள் சுட்டிக்காட்டியபடி, வக்ஃபு வாரியம் சார்பில் துவங்கப்படவிருக்கிற மருத்துவக் கல்லூரிக்கும் உரிய அனுமதியை வழங்க வேண்டும் என்ற தீர்மானத் தையும் எங்கள் தீர்மானத் தோடு இணைத்து அதனை யும் செய்து தரும்படி கேட்டுக் கொள்கிறோம்.

முதல்வர் கலைஞருக்கு பாரத ரத்னா விருது
மேலும், இந்தியாவின் மிகச் சிறந்த அறிஞராக 70 ஆண்டு காலம் பொது வாழ்வில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் ஆற்றல் மிக்கத் தலைவராக விளங் கும் முதல்வர் கலைஞருக்கு மத்திய அரசு உரிய சிறப் பினை விரைவாக செய்யும் வகையில் இந்தியாவின் உயரிய விருதான `பாதர ரத்னா� விருதினை வழங்க வேண்டும் என்று நான் கடந்த முறை நாடாளு மன்ற உறுப்பினராக இருந்தபோது மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத் திருந்தேன். அதனை லட் சக்கணக்கானோர் கூடி யுள்ள இந்த மாநாட்டில் எங்களின் கோரிக்கையாக மத்திய அரசுக்கு தெரிவித் துக் கொள்கின்றோம்.

இந்தியாவின் மிகச் சிறந்த அறிஞரான கலைஞர் அவர்களுக்கு `பாரத ரத்னா� விருது வழங்குவதன் மூலம் அந்த விருதுக்கும் மத்திய அரசுக் கும் பெருமை சேரும் என்பதை கூறிக் கொள் கிறேன்.

முதல்வர் கலைஞர் அவர்கள், நாங்கள் கேட் டுத்தான் கோரிக்கைகள் எதனையும் செய்வார் என்பதில்லை. நாங்கள் கேட்காமலேயே எங்களது தேவைகளை புரிந்து கொண்டு நிறைவேற்றக் கூடியவர்தான் முதல்வர்.

பரிதாபத்துக்குரிய சிறைவாசிகள்
இந்த சமுதாயத்தின் சார்பில் நீண்ட காலமாக ஒரு கோரிக்கை இருந்து வருகிறது. இந்த சமுதா யத்தைச் சார்ந்த சில இளைஞர்கள் கேட்கக் கூடாத சிலரின் பேச்சு களை கேட்டு, தவறான சிலரால் தவறான முறை யில் வழிகாட்டப்பட்டு, திசைமாறி சென்ற அவர் கள் செய்யக்கூடாத விரும் பத்தகாத சில செயல்கள் செய்ததன் காரணமாக இன்று அவர்கள் மட்டுமல் லாது அவர்கள் குடும்பத்தி னரும் உற்றார், உறவினர் களும் சொல்லொண்ணா துயரங்களை - துன்பங் களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். அந்த இளைஞர்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் அவர்கள் தங்களின் எதிர்கால வாழ்வை தொலைத்து விட் டோம்.

கேட்பார் பேச்சை கேட்டு கெட்டு அழிந்து விட்டோம் என்பதை இப்போது நல்ல முறையில் புரிந்து கொண்டுள்ளனர்.

வருந்தி திருந்தியுள்ளனர்
தங்களின் செயல்களை எண்ணி, வருந்தி திருந்தி யுள்ளனர். இனி எக்காலத் திலும் தாங்கள் மட்டுமல் லாது இந்த சமுதாயத்தில் உள்ள யாரும் அத்தகைய செயல்களில் ஈடுபட்டு விடக்கூடாது என்பதை யும் உணர்ந்து எங்களை அணுகி, எங்களின் விடுதலைக்கு வழி செய் யுங்கள் என்று கண்ணீரு டன் அவர்கள் மட்டு மல்லாது குடும்பத்தினரும் கதறுகின்றனர்.

நன்னடத்தைகளுக்கு இ.யூ. முஸ்லிம் லீக் பொறுப்பேற்கும்
இந்த சிறைவாசிகளின் நன்னடத்தைகளை கருத்தில் கொண்டு அவர் களின் எதிர்கால நடவ டிக்கைகளுக்கும் நன்னடத் தைகளுக்கும் இந்திய யூனி யன் முஸ்லிம் லீக் பொறுப்பேற்றுக் கொள் கிறது. அவர்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்தால் அவர்களின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு நானே பொறுப்பேற்றுக் கொள் கின்றேன் என்று உறுதிய ளித்தவனாக 10 ஆண்டு களுக்கும் மேலாக சிறை யில் வாடும் அவர்களை விடுவிக்கத் தேவையான முயற்சிகளை முதல்வர் கலைஞர் அவர்கள் விரை வாக செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.

நாங்கள் இந்த மாநாட் டில் நிறைவேற்றியுள்ள பல்வேறு கோரிக்கைகளை யும், தீர்மானங்களையும் நீங்கள் நிச்சயம் நிறை வேற்றித் தருவீர்கள் என்ற நம்பிக்கை இங்கே லட் சக்கணக்கில் கூடியிருக்கிற ஒவ்வொருவருக்கும் இருக் கிறது. நீங்கள் தொடர்ந்து தமிழகத்திற்கு நல்லாட் சியினை தர வேண்டும். நாட்டிலுள்ள அனைத்து சமுதாய மக்களும் தொடர்ந்து நன்மைகளை தர வேண்டும். அதற்கு சிறுபான்மை முஸ்லிம் சமுதாய மக்கள் அனைத்து வகையிலும் ஒத்துழைப் பார்கள். இந்த நோக்கத் தோடு வருகின்ற ஜனவரி மாதத்திலிருந்து தமிழகத் தின் அனைத்து மஹல்லா ஜமாஅத்களுக்கும் ஒற்றுமை பிரச்சார பய ணத்தை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடத்தவி ருக்கிறது என்பதையும் தெரிவித்துக் கொண்டு எனது உரையினை நிறைவு செய்கிறேன். இவ்வாறு தலைவர் பேராசிரியர் உருக்கத்துடன் தலைமையுரையில் குறிப்பிட்டார்.

நன்றி : கே.எம்.கே


Monday, December 13, 2010

முதல்வர் பதவியை சாபமாக கருதும் கலைஞர்.!!!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில மாநாடு கடந்த டிசம்பர் 11ம் தேதி தாம்பரம் ரயில்வே மைதானத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் துரைமுருகன், துணைமுதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் முதல்வர் கருணாநிதி ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் கலைஞருக்கு நல்லிணக்க நாயகர் என்னும் விருது தரப்பட்டது. மேலும் அமைச்சர்கள் மைதீன் கான், தா.மோ.அன்பரசன், முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுசெயலாளர் முகமது அபுபக்கர், செயலாளர் காயல் மகபூப், பொருளாளர் வடக்கு கோட்டையார், கவிஞர் அப்துல் ரகுமான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


மாநாட்டில் முஸ்லிம் லீக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் சில பல வேண்டுகோளை முன் வைத்தனர். பள்ளிகளில் சிறுபான்மை பாடம், வெளிநாடு வாழும் மக்களுக்கு நல வாரியம், முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடை அதிகரித்தல், தாம்பரம் சிறுவியாபாரிகளுக்கு மாற்று இடமளித்தல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இதை தொடர்ந்து இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் இலக்கு 2020 என்னும் நூலை வெளியிட்டு மத்திய ரயில்வே இணை மந்திரியான அகமது முதல்வர் கலைஞர் எல்லா சமுதாயத்துக்கும் பொதுவான தலைவர் என்று புகழாரம் சூட்டினார்.


விருது வழங்கும் முன் துணை முதல்வர் முக.க.ஸ்டாலின் பேசினார். அவர் கூறுகையில், '' தலைவர் இதுபோல் பல விருதுகளை பெற்றுள்ளார்.. இப்போது மூன்று சமூகத்துக்கும் பொதுவாக நமது தலைவருக்கு இவ்விருது வழங்கபட இருக்கிறது.. இவ்விருதை பெறுவதால் ஒன்றும் கலைஞர் சிறப்புற போவதில்லை.. அவர் இதுபோல் பல விருதுகளை பெற்றுள்ளார்.. தூக்குமேடை நாடகத்தில் அன்றே எம்.ஆர்.ராதா அவர்களால் நமது தலைவருக்கு கொடுத்த பட்டம கலைஞர் என்பது.. இன்னும் பல பல விருதுகளும் பட்டங்களும்... அதனால் நமது தலைவருக்கு கொடுப்பதாலே இப்பட்டம் சிறப்புறுகிறது'' என்றார்.

பின்னர் பேசிய முஸ்லிம் லீக் கட்சியின் தமிழக தலைவர் காஜர் மொய்தீன் கூறுகையில்,''அண்ணா அறிவாலய்த்திலிருந்து இக்கூட்டம் நடைபெறும் இடம் வரை திரளாக கூடியிருந்த மக்கள் கூட்டம் நமது கலைஞரை வரவேற்றதை நாம் காணலாம். கலைஞருக்கு நல்லிணக்க நாயகர் என்னும் விருதை தருவதாக பேசிய போது இது இவருக்கு தேவைதானா என்று சிலர் கேள்விகள் எழுப்பினர்.. அதன் பிறகே நானிலம் போற்றும் நல்லிணக்க நாயகர் என்று தருவதாக முடிவு செய்தோம்...'' என்று கூறினார்.



பின்னர் கலைஞருக்கு நல்லிணக்க நாயகர் விருது வழங்கப்பட்டது. அதையடுத்து கலைஞர் நிறைவுபேருரை ஆற்றினார்.
''என்னை பற்றி புகழ்ந்து பேசிய காதர் மொய்தீன் நான் காய்தே மிலத்தின் வழி பின்பற்றுபவன் என்பதை சொல்லாமல் விட்டது மனக்குறைவாக போனது'' என்று சொன்னபோது மக்கள் கரகோஷம் எழுப்பினர்.

''நான் இதுபோன்ற விருதுகளை ஒன்றும் பெருமைகாகவோ, இல்லை பொருட்காட்சிகளிலோ வைக்கபோவதில்லை. எனக்காக தர நினைக்கும் மனங்களுக்காகவே இங்கு வந்திருக்கிறேன்.''

மேலும் சமச்சீர் கல்வியில் உருதுமொழிக்கான பாதுகாப்பை பற்றி
பேசுகையில், ''நமது மொழியான உருது மொழியை சிறப்பிக்க எந்த முயற்சியை வேண்டுமானாலும் எடுப்பேன்'' என்று அவர் நமது மொழி என்றபோது மக்கள் சந்தோசத்தில் கரகோஷம் எழுப்பினார்.

'' இன்று எங்கள் ஆட்சி, நாளை வேறொர ஆட்சி வரலாம்''என்று அவர் சொல்லும்போது கூட்டத்திலிருந்து எழுந்த சப்தங்கள் என்றுமே நீங்கள் தான் என ஒலிக்க மேலும் பேசலானார், '' அது உங்கள் ஆசை.. ஏற்கனவே 40 ஆண்டுகள் நான் தான் முதல்வர் என மாநாட்டு தலைவர் சாபம் கொடுத்துவிட்டார்.. என் மேல் அவருக்கு ஏன் இந்த அளவுக்கு கோபம் என்று தெரியவில்லை.. முதல்வர் பதவியில் இன்னும் பல கஷ்டங்களை அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிறார் போல... இன்னும் எனக்கு இயற்கை எந்த அளவுக்கு ஒத்துழைப்பு தருகிறதோ அதுவரை என பாப்போம்.. சிலர் எங்கள் தலைகளில் குப்பை கொட்ட எண்ணுகிறார்கள்.. அப்படி நினைப்பவர்களின் மேல் நாங்கள் கோபம் கொள்வதோ இல்லை எரிச்சலடைவதோ என செயலபடமாட்டோம்.. எங்களின் மதிப்பை அவர்களுக்கு என்றுமே புரியவைப்போம்..''



மேலும் தொடர்ந்த அவர், “தாம்பர மேம்பாலம் விரிவாக்க பணியால் இடமிழந்த வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்கும் கோரிக்கையை பரிசீலித்தது முடிவெடுக்கப்படும்.. பாதிக்கப்பட்டோரின் பட்டியல்கள் அளித்தால் கொஞ்சம் வசதியாக இருக்கும்.. முஸ்லிம்களுக்கு கொடுக்கப்படும் இடொதுக்கீடை பத்து சதவீதமாக மாற்ற கோரிக்கையை மத்திய அரசுக்கு விடுத்துள்ளனர்.. மாநில அரசுக்கு இல்லை மத்திய அரசுக்கு.. இதை மத்திய அரசு கண்டிப்பாக பரிசீலிக்க வேண்டும்.. அப்படி பத்து சதவீதம் கிடைக்குமேயானால் முதலில் சந்தோசிப்பது நாங்களாக தான் இருக்கும். இடையில் நாங்கள் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி கொண்டு ஆட்சியமைத்தபோது எங்களின் முதல் கோரிக்கையாக இருந்த போது மத உணர்வோ, பேதமோ இல்லாத அரசாக அமைக்கவேண்டும் என்று சொல்லியிருந்தோம்.. அது நடைபெற்ற வரையில் அவர்களோடு இணைந்திருந்தோம். எப்போது அவர்கள் மீண்டும் பாபர் மசூதி இடிப்பு, ஜாதி பேதம் என மீண்டும் ஆரம்பித்தார்களோ அன்றே நாங்கள் இனி எங்களுக்கு இங்கே வேலையில்லை என வெளியேறிவிட்டோம்.. அதுதான் திராவிட முன்னேற்ற கழகம். அன்று முதல் இன்றுவரை அந்த மதவாத சக்திக்கு இடம் தராமல் இருக்கிறோம். அதில் நாங்கள் கொண்ட உறுதியால் தான் இந்திய முஸ்லிம் லீக் நண்பர்கள் இன்று என்னுடன் அமர்ந்திருக்கின்றனர். இந்த அணி என்றுமே அப்படியே தான் இருக்கும்.. யார் சேர்ந்தாலும் பிரிந்தாலும் இந்த அணி மாறாது..'' என்று கூறி முடித்தார்.

Sunday, December 5, 2010

கோவையில் ஈழ ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்: தப்பியோடிய இலங்கை














கோவை கொடிசியாவில் ஜவுளி கண்காட்சி நடைப்பெற்று வருகிறது. இதில் பங்கேற்க சிறப்பு அழைப்பாளர்களாக இலங்கையைச் சேர்ந்த எம்.பி., காசிம் பைசல், அமைச்சர் ரிஷாத் பத்யூதின் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் கண்காட்சியை திறந்து வைப்பதற்காக அழைக்கப்பட்டிருந்தனர்.


இலங்கை அமைச்சர் வருவதை அறிந்த தமிழின உணர்வாளர்கள் அதிருப்தி அடைந்தனர். மதிமுக, பெரியார் திராவிடர் கழகம், நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த தொண்டர்கள், இலங்கை எம்பி காசிம் பைசல், அமைச்சர் ரிஷாத் பத்யூதின் ஆகியோர் வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்த தயாராக இருந்தனர்.


கோவையில் பெருமளவில் திரண்டிருந்த பெரியார் திராவிட கழகத்தினர், ராஜபக்சே கூட்டாளியே திரும்பி போ, தமிழர்களை கொன்று குவித்த சிங்களனே திரும்பி போ என்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்த பதாதைகளை ஏந்திக்கொண்டு நின்றுக்கொண்டிருந்தனர்.


பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணனிடம் வந்த போலீசார், கண்காட்சியில் இலங்கையைச் சேர்ந்த யாரும் பங்கேற்கவில்லை என்று சொன்னதின் பேரில், ஆர்ப்பாட்டத்தை கலைத்தனர்.


திரும்பவும் கொடிசியா கண்காட்சியில் இலங்கை அமைச்சர் காசிம் பைசல், ரிஷாத் பத்யூதின் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டனர் என்ற தகவலை தெரிந்துகொண்டு கொடிசியா முன்பு மதிமுக, பெரியார் திராவிடர் கழகம், நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த தொண்டர்கள் திரண்டனர். வெளியேற்று வெளியேற்று சிங்கள எம்பியை வெளியேற்று என்ற கோஷத்தோடு உள்ளே நுழைந்த அவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.


தன் வருகைக்கு எதிர்ப்பு கிளம்பியதால், இலங்கை எம்.பி., காசிம் பைசல், கண்காட்சியில் கலந்து கொள்ளாமல் கொடிசியா வாளத்தின் பின் பக்கம் வழியாக, கோவை விமான நிலைத்துக்குச் சென்று இலங்கை திரும்பினார். எதிர்ப்பு காரணமாக அமைச்சர் ரிஷாத் பத்யூதின் கோவை பயணத்தை முன்கூட்டியே ரத்து செய்தார்.


முன்னதாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த தமிழக அமைச்சர்கள் பொங்கலூர் பழனிச்சாமி மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர், பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணனை சந்தித்து, இலங்கை அமைச்சர் வருவதற்கு அதிருப்தி தெரிவித்து நாங்களும் இந்த கண்காட்சியில் பங்கேற்வில்லை என்று கூறிவிட்டு சென்றனர்.


போலீசார் தடையை மீறி இலங்கை அமைச்சர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கொடிசியா அரங்கில் உள்ளே நுழைய முயன்றதால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.


Saturday, December 4, 2010

பாபர் மஸ்ஜித் பள்ளி மட்டும் அல்ல வரலாறு !...

இந்திய முஸ்லிம் தவ்ஹீத் ஜமாத் டிசம்பர் 6 கண்டன ஆர்பாட்டம் கோவையில்...

Friday, December 3, 2010

நீதி தேடும் பாபரி மஸ்ஜித்

கோவை மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
மாபெரும் கருத்தரங்கம்
டிசம்பர் 6, 2010


Thursday, December 2, 2010

முஸ்லிம் லீக் தலைவர் தமிழக முதல்வரை சந்தித்தார்

முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் நேற்று சந்தித்து, சென்னையில் வரும் 11ம் தேதி நடைபெற உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாட்டுக்கான அழைப்பிதழை மாநில தலைவர் காதர்மொய்தீன் வழங்கினார். அருகில், பொதுச் செயலாளர் முகமது அபுபக்கர், செயலாளர் கமுதி பஷீர், அப்துர்ரகுமான் எம்.பி.


Wednesday, December 1, 2010

தமுமுக வின் டிசம்பர் 6 தொடர் முழுக்க ஆர்ப்பாட்டம்

கோவையில் த.மு.மு.க சார்பில் வரும் டிசம்பர் 6, 2010 அன்று தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் கோவை தமிழ்நாடு ஹோட்டல் முன்பு (காந்திபுரம்) காலை 10 மணிக்கு நடக்க இருக்கிறது. இதன் கோரிக்கையாக 1-பாபர் மஸ்ஜித் நிலம் தொடர்பான அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் அநீதியான தீர்ப்பு குறித்த மேல் முறையீடு வழக்கில் உச்சநீதிமன்றம் விரைந்து தீர்ப்பளிக்க வேண்டும். 2- பாபர் மஸ்ஜித்தை இடித்த வழக்கில் ரேபரேலி நீதிமன்றத்தில் நடந்துவரும் வழக்கு விசாரணைகளை விரைவு படுத்தவேண்டும்.3- பாபர் மஸ்ஜிதை இடித்தவர்கள் குறித்து லிபர்ஹான் கமிஷன் விசாரித்து குற்றம் சாட்டிய அத்வானி உள்ளிட்ட 68 பேர் மீது மத்திய அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடக்க இருக்கிறது. இந்த ஆர்ப்பாட்டத்திற்க்கு தமுமுக மாவட்ட தலைவர். பர்கத் அலி தலைமை தாங்குகிறார்.மற்றும் இதன் எழுச்சியுரையாக தமுமுக மாநில பொதுச்செயலாளர் செ.ஹைதர் அலி அவர்களும். எழுத்தாளர் பாமரன், இந்திய கம்யூஸ்டு (மா.லெ)மக்கள் விடுதலை இயக்க நிர்வாகி மீ.த. பாண்டியன் அவர்களும், பொதுநல மாணவர் எழுச்சி இயக்க தோழர்.மனுவேல அவர்களும், மக்கள் விடுதலை இயக்க தோழர்கள்,ராமச்சந்திரன்,மற்றும் பிரசன்னா அவர்களும், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர், சுல்தான் அமீர் அகியோர்கள் கலந்து கொள்கிறார்கள்.அது போல் பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்படடுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவை மாவட்ட தமுமுக, கோவை மாவட்ட மமக, நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

Tuesday, November 30, 2010

அருந்ததிராய் மீதான காவிப் படைத் தாக்குதலைக் கண்டிப்போம்! கருத்தரங்கம் கோவையில் நடந்தது.

கோவை 29 அருந்ததிராய், கீலானி, சபீர் அகமது, போன்றோர் மீதுதான காவி பயங்கரவாதிகளின் தாக்குதல் மற்றும் காங்கிரஸ் அரசின் கைது செய்யும் முயற்சிகளை முறியடிப்போம் ! காஷ்மீர் உள்ளிட்ட வடகிழக்கு மாநில மக்களின் தேச விடுதலைப் போராட்டங்களை ஆதரிப்போம்! தேசிய இன மக்கள் விடுதலைப்போராட்டங்கள் மீதான இந்திய அரசின் போரை எதிர்ப்போம்! என பல தலைப்புகளில் கருத்தரங்கம் கோவையில் 29ம் தேதி மாலை 5 மணிக்கு அண்ணாமலை அரங்கத்தில் நடைபெற்றது. இதில் தோழர்.சா. பாலமுருகன் (மக்கள் சிவில் உரிமை கழகம்) தலைமையில் நடந்தது. இதில் சிறப்புரையாக. எழுத்தாளர் . பாமரன். வழக்கறிஞர். திருச்சி பானுமதி, த.மு.மு.க. மாநில துனைச்செயலாளர். கோவை சையது . ஆகியோர் உரை நிகழ்த்தினர்கள். இதற்கான ஏற்பாடுகளை த,மு.மு.க, ம.ம.க, உள்நாட்டு அடக்குமுறை எதிர்ப்புக் கூட்டமைப்பு ஆகியோர் நடத்தினர்கள். இதில் 300 பேர் கலந்து கொண்டார்கள்.
த.மு.மு.க. மாநில துனைச் செயலாளர் கோவை சையது உரை

த.மு.மு.க, ம.ம.க, மாவட்ட நிர்வாகிகள்மற்றும் பார்வையாளர்கள்

செய்தி,புகைப்படம்: கோவை தங்கப்பா

சோறு கிடைக்குமா?... நாடாளுமன்றத்தில் விவாதிப்பார்களா?

இன்று ஒரு வலைபதிவு என் எண்ணங்களை மிகவும் பாதித்தது. 1.76 லட்சம் கோடி நாட்டுக்கு இழப்பு, ஊழல் என கூச்சலிடும் அரசியல் கட்சிகள் தயவு செய்து இதை விவாதிப்பார்களா?

சோறு கிடைக்குமா? இந்த படத்திற்கு என்ன பதில் சொல்ல முடியும்.


சோறு சாப்பிடாம படுத்த பூச்சாண்டி பிடிச்சுடும் என்று என்குழந்தைக்கு வம்புக்கு சோறுட்டினேன். அழுதுகொண்டே வீம்புக்கு சோறுண்ட குழந்தை நிம்மதியாய் தூங்குகிறது.

தூங்கும் முன் வலைபூக்களில் ஒரு மேலோட்டம் இட்டு செல்ல வந்தவளுக்கு மனம் கணத்துவிட்டது.

திரு. மாப்ள ஃகரிசுவின் சோறு கிடைக்குமா என்ற இந்த பதிவை படித்த பின்னர் எப்படி மனம் தூங்கும்?

இந்த இரவு எத்தனை குழந்தைகள் பட்டினி மயக்கத்தில் மயங்கி கிடக்கின்றனவோ ?

இறைவா நீ குறைந்தபட்சம் குழந்தைகளுக்காகவாவது பட்டினிகொடுமையை கொடுக்காமல் இருக்க நாங்கள் என்ன செய்யவேண்டும்?

*உலகில் சுமார் 25000 பேர் நாளொன்றுக்கு பசியால் இறக்கின்றனர் என்கிறது ஒரு புள்ளிவிவரம்


*உலகில் சுமார் 100 கோடி பேர் உயிர்வாழ தேவையான உணவின்றி பசியால் வாடுகின்றனர் என்கிறது சர்வதேச உணவு திட்ட ஆராய்ச்சி மையம்.


*உலகில் மிக வறுமையில் பசியால் வாடுவோரில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியர் என்கிறது உலகவங்கியின் மதிப்பீடு

தனி ஒரு மனிதனுக்கு உணவு இல்லை என்றால் எனக்கு இந்த பதவி வேண்டாம் என்று சொல்லும் அரசியல்வாதியை அடையாளம் காண்பது எப்போது?

ஆண்டவனும்
இல்லை, ஆள்பவனும் இல்லை, அடித்தட்டில் இருக்கும் நான் ?
நன்றி: தமிழ்மலர்

Sunday, November 28, 2010

தம்மாம் - இந்தியா ஃபிரடெர்னிடி ஃபோரம் நடத்திய ஈத் மிலன் நிகழ்ச்சி


இந்தியா ஃபிரடர்னிட்டி ஃபோரம் தம்மாம் தமிழ் பிரிவு பெருநாளை கொண்டாடும் விதமாகவும் மாற்று மத சகோதரர்களுக்கு இஸ்லாத்தை அறிமுகம் செய்யும் வகையிலும் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சியை கடந்த ஐந்து வருடங்களாக நடத்தி வருகின்றது. இந்த வருடமும் தம்மாமில் உள்ள நாதா கிளப்பில் இந்த நிகழ்ச்சி நவம்பர் 26, 2010அன்று நடத்தப்பட்டது.

காதர் அலி அவர்கள் இறைமறையின் வசனங்களை ஓதி நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார்.

நிகழ்சியை தொகுத்து வழங்கிய மக்தூம் நைனா அவர்கள், இத்தகைய நிகழ்ச்சிகள் இஸ்லாத்தை குறித்த தவறான கருத்துக்களை களைய உதவுவதுடன் பல்வேறு மதங்களையும் கொள்கைகளையும் பின்பற்றும் மக்கள் மத்தியில் புரிந்துணர்வுகளை ஏற்படுத்துவதாகவும் கூறினார்.

இந்தியா ஃபிரடர்னிட்டி ஃபோரம் தம்மாம் தமிழ் பிரிவின் தலைவர் முஹம்மது பைசல் அவர்கள் ஃபோரம் ஆற்றி வரும் பணிகளை விவரித்தார். சாதி, மதம், மொழி, பிராந்தியம் என அனைத்து தடைகளையும் கடந்து இந்தியர்கள் அனைவருக்கும் ஃபிரடர்னிட்டி ஃபோரம் பணியாற்றி வருவதை சம்பவங்களின் துணையுடன் விளக்கினார்.


நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தம்மாம் முத்தமிழ் மன்றத்தின் செயலாளர் திரு.சிவகுமார் அவர்கள் இந்தியா ஃபிரடர்னிட்டி ஃபோரத்தின் பணிகளை மனமாற வாழ்த்தினார். 'எனது பார்வையில் இஸ்லாம்' என்ற தலைப்பில் உரையாற்றிய அவர்,
இஸ்லாத்தின் அடிப்படை கடமைகளான தொழுகை, ஜக்காத், நோன்பு ஆகியவை தன்னை மிகவும் கவர்ந்ததாக கூறினார். இஸ்லாத்தில் ஜாதி வேறுபாடு இல்லை என்பதையும் இஸ்லாம் பெண்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்குவதாகவும் தெரிவித்தார்.


ரியாஸ் அஹமது அவர்கள் 'இஸ்லாம் ஓர் அறிமுகம்' என்ற தலைப்பில் உரையாற்றினார். இஸ்லாத்தின் கடவுள் கொள்கை,தூதர்களின் பணி மற்றும் மறுமை நாளின் அவசியம் குறித்து தன்னுடைய உரையில் குறிப்பிட்டார். தொடர்ந்து இஸ்லாம் குறித்த மாற்று மதத்தவர்களின் கேள்விகளுக்கு முஹம்மது ஃபைஸல் மற்றும் ரியாஸ் அஹமது ஆகியோர் பதில் அளித்தனர்.


இஸ்லாமிய கொள்கைள், தீவிரவாதம், பாபரி மஸ்ஜித் விவகாரம் என கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விளக்கங்கள் தெளிவாக வழங்கப்பட்டன.

சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசு வழங்கும் காட்சி


மாற்று மதத்தவர்களுக்கு குர்ஆன், இஸ்லாம் குறித்த புத்தகங்கள் மற்றும் சி.டி.கள் இலவசமாக வழங்கப்பட்டன.

வருகைதந்த அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இந்நிழ்கழ்ச்சியில் நூறு மாற்று மத அன்பர்கள் உள்ளிட்ட
இருநூறுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.


ஊடக பொறுப்பாளர்
இந்தியா ஃபிரடர்னிட்டி ஃபோரம் தம்மாம் தமிழ் பிரிவு


Sunday, November 21, 2010

தி.மு.க-காங். கூட்டணி உறுதியாக உள்ளது சென்னையில் வீரப்பமொய்லி


21 நவம்பர் 2010, 07:26.30 AM GMT +05:30 ]
ஸ்பெக்ட்ரம் ஊழல் புகாரால் கூட்டணியில் பாதிப்பு இல்லை தி.மு.க-காங். கூட்டணி உறுதியாக உள்ளது என்று வீரப்பமொய்லி தெரிவித்துள்ளார்.
மத்திய சட்ட மந்திரியும் காங்கிரஸ் மேலிட பார்வையாளருமான வீரப்ப மொய்லி இன்று காலை பெங்களூரில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

கேள்வி: ஸ்பெக்ட்ரம் பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவித்து இருப்பதால் பிரதமரின் கவுரவம் பாதிக்குமா?

பதில்:- இதனால் பிரதமரின் கவுரவத்துக்கு சிறிதளவும் பாதிப்பு ஏற்படாது. இந்த பிரச்சினை தொடர்பாக பாராளுமன்றத்தில் பேசுவதற்கும், விவாதம் நடத்துவதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் எதிர்க்கட்சிகள் தயாராக இல்லாமல் கடந்த ஒரு வாரமாக பாராளுமன்றத்தை நடத்த விடாமல் முட்டுக்கட்டை போடுகின்றனர். இது ஜனநாயக விரோதமான செயல். பாராளுமன்றத்தில் கூச்சல்- குழப்பம் ஏற்படுத்துவது சரியான நடவடிக்கை அல்ல.

கே:- ஸ்பெக்ட்ரம் பிரச்சினை பாராளுமன்ற கூட்டு குழு விசாரணைக்கு மத்திய அரசு தயங்குவது ஏன்?

ப:- இதில் மத்திய அரசுக்கு எந்த தயக்கமும் கிடையாது. கூட்டு குழுவை விட சர்வ அதிகாரமும் படைத்தது பாராளுமன்றம்தான். இந்த பிரச்சினை பற்றி பாராளுமன்றத்தில் விவாதித்தால்தான் முழு உண்மையும் தெரிய வரும். இதைத்தான் மத்திய அரசும் விரும்புகிறது. ஆனால் எதிர்க்கட்சிகள் சர்வ அதிகாரம் படைத்த பாராளுமன்றத்தில் விவாதிப்பதை விட அதில் ஒரு அங்கமான கூட்டுக்குழு விசாரணை கேட்பது ஜனநாயக விதி முறைகளுக்கு முரணானது.

கே:-ஸ்பெக்ட்ரம் பிரச்சினையில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் கூறியுள்ளாரே?

ப:- ஆம் அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கே:- தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி எந்த நிலையில் உள்ளது.

ப:- தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி உறுதியாகவும் வலுவாகவும் உள்ளது. அது தொடரும் அதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Saturday, November 20, 2010

மரண படிக்கையில் கோவை முஸ்லிம் சிறைவாசி அபுதாஹிர் !!!

கோவைஅரசு மருத்துவ மனையில் அவசர பிரிவுயில் அபுதாஹிர்
கோவை மத்திய சிறையில்ஆயுள் தண்டனைமுஸ்லிம்சிறைவாசியாகஇருப்பவர்கோவைசேர்ந்தஅபுதாஹிர்இவர்க்கு இரண்டுகிட்னியும்.இருதயமும் மற்றும்இரண்டுகண்களும்பாதிக்கப்பட்டாநிலையில் S L E என்ற ஓரு கொடிய நோய் தாக்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் 13 ஆண்டு சிறைவாசம் இருந்து வருகிறார். நமது சமுதாய இயக்கங்கள் அபுதாஹிரை விடுதலைசெய்ய தமிழக அரசுக்குதெடர்ந்து குரல் கொடுத்து வந்த காரணத்தினால் இவர்க்கு 2 ஆண்டுகளாக இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. 3 மாதம் ஜாமீன் அரசு உத்திரவுட்டது. முன்று மாதம் கழித்து மிண்டும் அரசுக்கு கோரிக்கை வைத்தால் மிண்டும் ஜாமீன் வழங்கும். இந்த நிலை தொடர்ந்து நீடித்துவந்தது. இதற்கிடையில் முஸ்லிம் லீக் எம்.பி. அப்துல்ரஹ்மான் அவர்கள் கோவை வந்த போது அபுதாஹிர் விட்டுக்கு சென்று இவர்யின் உடல்நிலையை பார்த்து கண்ணீர் விட்டு அழுதார் இப்படியா? உனது உடல் நிலை நேரில் விசாரித்தார். உனக்காக என்னால் முடிந்த அளவுக்கு உதவி செய்கிறோன்.என்று வாக்கு உறுதி அளித்தார். பிறகு உடனே சிறைதுறை அமைச்சர் மற்றும் அரசு உயர் அதிகாரிகளையும், சிறைதுறை அதிகாரிகளையும் தொடர்பு கொண்டு அபுதாஹிர்யின் இடைகால ஜாமீன் விபரம்களை தெரிந்து கொண்டுஇவர்காகஅரசு பொதுமன்னிப்பு வழங்கமுயற்ச்சிசெய்துவருகிறார். அதுபோல் தமுமுக மாநிலதலைவர் ஜவாஹிருல்லாஹ்அவர்கள். பொதுச்செயளாளர் ஹைதர் அலி அவர்கள் அபுதாஹிர்க்கு பொது மன்னிப்புயில் விடுதலை வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து கொண்டுயுள்ளனர். கோவை மாவட்ட தமுமுக மருத்துவ அணி சார்பாக கோவை அரசு மருத்துவமனையில் அபுதாஹிர் சிகிச்சைக்கு டாக்டர்யிடம் பேசி வருகிறார்கள். அதுபோல் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாநிலதுனைத்தலைவர் கோவை இஸ்மாயில் அவர்கள் மற்றும் நிர்வாகிகள் தமிழகஅரசுக்கும்,சிறைத்துறை அதிகாரிகளுக்கும் இவர்கள் நேரில் அல்லது தொலைபேசி முலமாக கோரிக்கை வைத்து வருகிறார்கள்.அதுபோல் ஜாக்ஜமாத், அபுதாஹிர் விடுதலைக்கும் இவரது நோய் குணமடையா ஜிம்மா மேடைகளில் பேசி வருகிறார்கள். அதுபோல் இந்தியா தவ்ஹீத் ஜமாத்(பாக்கர்) மாநில தலைவர் பாக்கர் அவர்களும் அபுதாஹிர் விடுதலை செய்ய குரல் கொடுத்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு உளவுத்துறை சில அதிகாரிகள் அபுதாஹிர் இடைகால ஜாமீன்யை ரத்து செய்ய அரசுக்கு அறிக்கை கொடுத்து இவரது இடைக்கால ஜாமீன்யை ரத்து செய்து. மீண்டும் சிறையில் அடைத்துவிட்டார்கள். இவர் சிறையில் மிகவும் அவதிபட்டு வருகிறார்.அபுதாஹிர் இடைக்கால ஜாமீன் இருக்கும் போது இவர்க்கு தினமும் தனியார்மருத்துவமனையில் வாரம் ஒரு முறை ரூபாய் 3000க்கு மேல் மருந்து, இரத்தம் செலுத்த வேண்டும். அப்போதுதான் இவர் உயிர்யுடன் வாழ முடியும். சிறையில் இருக்கும் போது இந்த மருத்துவ வசதி கிடையாது. இந்த நிலையில் சிறையில் இவருக்கு மூச்சு தினறல் ஏற்பட்டு சிறைத்துறை உடனே அரசு மருத்துவமனையில் அவசர பிரிவுயில் அனுமதிக்கபட்டார்கள். உடனே சிறுபான்மை உதவி அறக்கட்டளை நிர்வாகிகள் தமுமுகமாநிலநிர்வாகிகளுக்கும், முஸ்லிம் லீக் எம்.பி.அப்துல் ரஹ்மான் அவர்களுக்கும், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாநில நிர்வாகிகளுக்கும், இந்தியா தவ்ஹீத் ஜமாத்(பாக்கர்) மாநில நிர்வாகிகளுக்கும், தொடர்பு கொண்டு மீண்டும் இடைக்கால ஜாமீன் வழங்க தமிழக அரசுக்கும், சிறைத்துறை அமைச்சருக்கும், கோரிக்கை வைத்து ஜாமீன் வழங்க வேண்டும் என்று சிறுபான்மை உதவி அறக்கட்டளை நிர்வாகி கேட்டு கொண்டனர். அபுதாஹிர் விடுதலைக்கும் உடல் நிலை சரியாகவும் அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள் செய்தி, படம் : கோவை தங்கப்பா

Wednesday, November 17, 2010

கோவையில் இஸ்லாமிய அமைப்புகள் நடத்திய பக்ரீத் பெருநாள் தொழுகைகள்

16-11-2010 அன்று ஜாக் நடத்திய தொழுகை படம் 2000 கலந்து கொண்டார்கள்.
17-11-2010 அன்று கோவையில் த.மு.மு.க . நடத்திய தொழுகை படம் 1000 பேர் கலந்து கொண்டார்கள்.


17-11-2010 அன்றுகோவையில் இந்திய தவ்ஹீத் ஜமாத் தொழுகை படம் 700 பேர் கலந்து கொண்டார்கள் இதில் மாநில செயலாளர் ஜெங்கீஸ்கான் பொருநாள் உரை நிகழ்த்தினர்.


படம்- கோவை தங்கப்பா

Monday, November 15, 2010

பாபர் மசூதி – ராம ஜென்ம பூமி பிரச்சினை நேரடி கள ஆய்வு - இடைக்கால அறிக்கை!


சென்ற அக்டோபர் 27, 28, 29, 30, 31 ஆகிய நாட்களில் லக்னோ, பைசாபாத், அயோத்தி ஆகிய இடங்களுக்கு நேரடியாக சென்ற நாங்கள் பாபர் மசூதி – ராம ஜென்ம பூமி பிரச்சினையில் முக்கிய வழக்காடிகளான (Litigants) அலகாபாத் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஸ்ஃபரியாப் ஜிலானி (சுன்னி வக்ப் வாரியம்), உயிருடன் உள்ள மூத்த மனுதாரான முகமது அஷிம் அன்சாரி, ராம ஜென்ம பூமி நியாசின் தலைவர்களில் ஒருவரும், அயோத்தி முன்னாள் பா.ஜ.க பாராளுமன்ற உறுப்பினருமான ராம் விலாஸ் வேதாந்தி, நிர்மோகி அகாராவின் மகந்த் பாஸ்கரதாஸ், விசுவ இந்துப் பரிசத் அயோத்தி தலைமையகத்தில் உள்ள கரசேவபுரம் அலுவலகத்தின் பொறுப்பாளர் மகேந்திர உபாத்யாய, பிரச்சினைக்குரிய பகுதியில் இருக்கும் நிலையை (Status Quo) மேற்பார்வை இடுவதற்கென உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் காலிக் அகமது, அயோத்தியில் உள்ள சரயுகுன்ஜ் ராம் ஜானகி மந்திரின் மகந்த்தும், ‘அயோத்தியில் பன்மைக் கலாச்சாராத்திற்கான அமைப்பு’ பொறுப்பாளருமான யுகல் கிஷோர் சரண் சாஸ்திரி, பைசாபாத் நகர பத்திரிகையாளர்களான கே.கே.பாண்டே (ஈ டிவி), பன்பீர் சிங் (ஆஜ்தக் டிவி), சுமன் குப்தா, பாபர் மசூதி இருந்த இடத்தில் கோயில் இருந்ததா எனக் கண்டறிய அகழ்வாய்வு செய்யவதற்காக உயர்நீதிமன்றம் ஆணையிட்ட போது அதை மேற்பார்வை இடுவதற்காக நியமிக்கப்பட்டவர்களில் ஒருவரான பேராசிரியர் முனைவர் அசோக் கே. மிஸ்ரா (வரலாற்றுத் துறைத் தலைவர், ராம் மனோகர் லோகியா பல்கலைக்கழகம், பைசாபாத்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ, லிபரேஷன்) உ.பி. மாநில தலைமையகச் செயலர் அருண் குமார், அகில இந்திய முற்போக்கு மகளிர் கழகத் தேசிய துணைத் தலைவரும், ‘டெகிரி-ஏ-மிஸ்வான்’ என்கிற அமைப்பின் பொறுப்பாளருமான தாஹிரா ஹாசன் மற்றும் பல இளைஞர்கள், பொதுமக்கள் ஆகியோரையும் சந்தித்து விரிவாகப் பேசி பதிவு செய்துக் கொண்டோம்.

மேலே: அயோத்தியில் பன்மைக் கலாச்சாராத்திற்கான அமைப்பு’ பொறுப்பாளர் யுகல் கிஷோர் சரண் சாஸ்திரி.

கீழே: சரயுகுன்ஜ் ராம் ஜானகி மந்திர்…

முள்வேளியிட்டு, பலத்த பாதுகாப்புடன் பாபர் மசூதி இருந்த இடம்…

அயோத்தி நகரம், கரசேவபுரம், ராமர் கோயிலுக்கான தூண்கள் முதலிய கட்டுமானங்களை உருவாக்கி வைத்திருக்கும் வி.இ.ப. அலுவலகம், பெரும் பாதுகாப்புடன் அரசு கையகப்படுத்தி, இரட்டை முள்வேளியிட்டு மத்திய போலீஸ் பாதுகாப்பில் வைத்துள்ள 71.3 ஏக்கர் நிலம், பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் இன்று உருவாக்கி வழிபாடு நடத்தப்படும் ராம் லல்லாவின் தற்காலிக கோயில் முதலிய பிரச்சினைக்குரிய பகுதிகளை நேரடியாகச் சென்றுப் பார்த்தோம்.

சட்டத்தின் ஆட்சி, அரசியல் சட்டத்தின் அடிப்படையிலான ஆளுகை, சமூக ஒற்றுமை, பன்மைத்துவம் காப்பாற்றப்படுதல் ஆகிய அடிப்படையான நோக்கங்களுடன் இந்த ஆய்வை நாங்கள் மேற்கொண்டோம். இப்பிரச்சினையில் சுமூகமான தீர்வு ஏற்படுதல், நீதி நிலை நாட்டப்படுதல் ஆகிய நோக்கங்களுடன் மேற்கொள்ளப்பட்ட எமது ஆய்வின் சுருக்கமான (Interim Report) முடிவுகள் பின் வருமாறு. விரிவான அறிக்கை பின்னர் வெளியிடப்படும்.

சட்ட அடிப்படைகளைப் புறந்தள்ளி இந்து மத நம்பிக்கை ஒன்றின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ பென்ச் தீர்ப்பு சட்ட வல்லுநர்கள், அறிவுஜீவிகள் மத்தியில் கடும் சர்சையை ஏற்படுத்தி உள்ளது. முரண்பாடுகள் மிகுந்த ஒரு அகழ்வாய்வை நீதிமன்றம் பெரிய அளவில் சார்ந்திருந்ததும் வரலாற்று அறிஞர்களின் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. பாபர் மசூதி இருந்த இடம் பிரித்துக் கொடுக்கப்பட ஆணையிடப்பட்டுள்ள மூன்று மனுதாரர்களும் (ராம் லல்லாவின் நெருங்கிய நண்பர், சுன்னி வக்ப் வாரியம், நிர்மோகி அகாரா) உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்து அதற்கான பணிகள் நடந்துக் கொண்டிருப்பதை மூன்று தரப்பினருமே எம்மிடம் தெரிவித்தனர்.

இன்னொரு பக்கம் முஸ்லிம் தரப்பு மூத்த மனுதாரரான அஷிம் அன்சாரிக்கும், நிர்மோகி அகாராவின் பாஸ்கர தாசுக்கும் இடையில் நீதிமன்றத்திற்கு அப்பால் சுமூகமான தீர்வு ஏற்படும் வகையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது. ஜோதிர் மட சங்கராச்சாரியான ஸ்வருபானந்த சரசுவதிக்கும், அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்திற்கும் இடையில் இதே நோக்கில் பேச்சுவார்த்தை நடந்துக் கோண்டிருப்பதாக இரு நாட்களுக்கு முன்பு பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. இன்னொரு பக்கம் இந்தியாவிற்குள்ளேயே பாபரின் பெயரில் இன்னொரு மசூதியை அனுமதிக்க மாட்டோம் என்கிறது ராம் ஜென்ம பூமி நியாஸ். அஷிம் அன்சாரி பாபர் மசூதி இருந்த இடத்தை விட்டுக் கொடுத்தாலும் கூட அப்படி விட்டுக் கொடுக்கும் அதிகாரம் வக்ப் வாரியம் உட்பட யாருக்குமே கிடையாது என முஸ்லிம் சட்ட வாரியத்தினர் கூறுகின்றனர்.

மூத்த வழக்காடி அஷிம் அன்சாரியுடன் நாங்கள்…

தீர்ப்பு முஸ்லிம்களுக்கு நீதியை மறுத்துள்ள போதிலும் அவர்கள் தரப்பில் காட்டப்படுகிற பொறுமையை அனைவரும் பாராட்டி உள்ளனர். அதே நேரத்தில் இந்த இறுக்கமான அமைதி சட்டத்தின் ஆட்சி, அரசியல் சட்ட ஆளுகை ஆகியவற்றில் முஸ்லிம்கள் நம்பிக்கை இழந்ததன் அறிகுறிதான் என்றும் சொல்லப்படுகிறது.

இந்தப் பின்னணியிலேயே எங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

முஸ்லிம் தரப்பினரின் கருத்துக்கள்:

பொதுவாக முஸ்லிம்களில் எல்லா தரப்பிலும் பெருத்த ஏமாற்றம் நிலவுவதை நாங்கள் கண்டோம். சட்டத்தின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் வழக்கைப் பரிசீலிக்கும் எனவும், அந்த அடிப்படையில் தங்களுக்கு நீதி கிடைக்கும் எனவும் ஸ்ஃபரியாப் ஜிலானி மற்றும் காலிக் அகமது ஆகியோர் கூறினர். இடையில் அஷிம் அன்சாரியின் பேச்சுவார்த்தையில் நல்ல முடிவுகள் வருமாயின் அதை ஏற்க தமக்கு தடையில்லை எனவும் காலிக் அகமது கூறினார்.

பேச்சுவார்த்தையில் முனோக்கி நகர்ச்சி இல்லையாயினும் அது நடந்து கொண்டிருப்பதாகவும், 30 நாட்களுக்குள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டிய நிபந்தனையின் காரணமாக அதற்கான வேலைகளுக்குத் தான் ஒப்புதல் அளித்து மனுவில் கையெழுத்திட்டுள்ளதாகவும் அஷிம் அன்சரி கூறினார். முஸ்லிம்களுக்குள் இரு கருத்து கிடையாது எனவும், எப்படியும் பாபர் மசூதி இருந்த இடத்தில் மசூதி கட்டித் தர வேண்டும் என்ற ஒரே கருத்துதான் உள்ளது எனவும், இரு கருத்துக்கள் உள்ளன என்பது ஊடகங்கள் கட்டுகிற கதை என்றும் ஜிலானி கூறினார். சுன்னி வக்ப் வாரியத்தின் முடிவுக்கு கட்டுப்படுவதாக அஷிம் அன்சாரி கையெழுத்திட்டுள்ளதாகவும் காலிக் அகமது கூறினார்.

வழக்கறிஞர் ஸ்ஃபரியாப் ஜிலானியுடன் நாங்கள்…

வழக்கறிஞர் காலிக் அகமதுவுடன் நாங்கள்…

இப்பிரச்சினை எப்படியாவது முடிந்தால் நல்லது என ஏற்கனவே பாதிக்கப்பட்ட அயோத்தி முஸ்லிம்களிடம் கருத்துள்ளதையும் காண முடிந்தது. லக்னோவிலிருந்து முஸ்லிம் பெண்கள் மத்தியில் பணிபுரியும் தாஹிரா ஹாசன் உ.பி. முஸ்லிம்கள் பெரும்பாலோர் கடும் வறுமையிலும், சுரண்டலிலும் உழல்வதைச் சுட்டிக்காட்டினார். பீடி சுற்றுவது, எம்பிராய்டரி செய்வது ஆகிய தொழில்களில் நாளொன்றுக்கு இருபது ரூபாய் வருமானம் கூட இல்லையெனவும், இவர்களுக்கு பாபர் மசூதி எல்லாம் பிரச்சினை இல்லை எனவும் குறிப்பிட்டார். எனினும், பாபர் மசூதி இருந்த இடத்தை விட்டுக் கொடுத்தால், அது தவறான முன்னுதாரணமாகி விடாதா, தொடர்ந்து காசி, மதுரா இன்னும் பல இடங்களில் இந்துத்துவவாதிகள் இதுபோன்ற பிரச்சினை உருவாக்க மட்டார்களா என்ற கேள்விக்கு அவரிடம் பதில் இல்லை. உண்மைதான், உயிர் வாழும் உரிமையும், சட்டத்தின் ஆட்சி என்பதில் நம்பிக்கையும் இல்லாது போனால், பின் வாழ்வதில் அர்த்தம் என்ன என்றார் தாஹிரா. பொதுவாக முஸ்லிம்களிடம் சமூக ஒற்றுமை, அமைதி ஆகியவற்றில் கருத்தொருமிப்பு இருந்தது.

இன்றளவும் அயோத்தியில் உள்ள நூற்றுக்கணக்கான ராமர் கோயில்களில் வழிபாடு செய்வதற்குரிய பூ முதலிய பொருட்களை முஸ்லிம்களே கொடுத்து வருவதையும் நாங்கள் கண்டோம். தீர்ப்பு நாளன்று அச்சத்தின் காரணமாக அயோத்தி முஸ்லிம்கள் வீட்டை விட்டு வெளியேறி இரண்டு, மூன்று நாட்கள் கழித்துதான் ஊர் திரும்பியுள்ளனர். வக்ப் சொத்தை வாரியமே விரும்பினாலும்கூட மாற்றி அமைக்கவோ, யாருக்கும் கையளிக்கவோ முடியாது என்பதை முஸ்லிம் தலைவர்கள் சிலர் சுட்டிக்காட்டிய போதும், பொதுவான முஸ்லிம் மனநிலை தங்களது சட்டபூர்வமான உரிமையை நிலைநாட்டுவதும், மசூதி இருந்த இடத்தில் மீண்டும் மசூதியையே நிர்மாணிப்பதும் என்கிற அளவிலேயே உள்ளது. தங்களுக்குச் சாதகமான தீர்ப்பு வருமானால் மசூதிக்கு அருகாமையில் ராமர் கோயில் கட்டுவதற்கு இடம் அளிக்கும் மனநிலை அவர்களிடம் உள்ளதைக் கண்டோம்.

இந்து தரப்பினரின் கருத்து:

இந்து தரப்பினர் என்பது பொதுவான இந்து மக்களைக் குறிப்பதல்ல என்பதை முதலில் குறிப்பிட விரும்புகிறோம். பொதுவான இந்துக்கள் மத்தியில் சமூக ஒற்றுமை, மசூதி, கோயில் இரண்டையும் கட்டிக் கொள்வது என்பதில் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை. ஆனால், இதை அரசியலாக்கி முன்னெடுக்க கூடியவர்கள் மிகவும் தீவிரமான கருத்துகள் உள்ளவர்களாக உள்ளது எங்களுக்கு கவலை அளித்தது. டிசம்பர் 6, 1992-ல் மசூதியுடன் கூடவே உடைக்கப்பட்ட ராம் சபுத்ராவில் அனுபவ பாத்தியதை (Possession) உள்ள நிர்மோகி அகராவின் மகந்த் பாஸ்கரதாஸ் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் மட்டுமே கட்டியாக வேண்டுமெனவும், அரசு கையகப்படுத்தியுள்ள 71.3 ஏக்கருக்கு அப்பால் வேண்டுமானால் முஸ்லிம்கள் மசூதியைக் கட்டிக் கொள்ளலாம் எனவும், அதற்கு தாமே நிலம் தருவதாகவும் கூறினார். 400 ஆண்டுக் காலம் தொழுகை நடந்த இடத்தை எந்த அடிப்படையில் அவர்களுக்கு மறுப்பது என நாங்கள் கேட்ட போது 1939 முதல் அங்கு தொழுகையே நடக்கவில்லை என்றார் பாஸ்கரதாஸ். ஆனால், 1949 டிசம்பர் 22 வரை அங்கே தொழுகை நடந்துள்ளதை உ.பி. மாநில அரசு ஏற்று உயர்நீதிமன்றத்தில் ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும், பாஸ்கரதாஸ் அயோத்திக்குள் முஸ்லிம்கள் மசூதி கட்டிக் கொள்ளலாம் என்பதை ஏற்றுக் கொள்ளும் வகையில் விசுவ இந்து பரிசத், ராம ஜென்ம பூமி நியாஸ் ஆகியவற்றில் இருந்து வேறுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. விசுவ இந்து பரிசத், ராம ஜென்ம பூமி நியாஸ் ஆகியன நிர்மோகி அகாரவிற்கு மூன்றில் ஒரு பங்கு நிலம் கொடுக்க ஆணையிடப்படுள்ளது தவறு எனச் சொல்கிறார்களே என நாங்கள் கேட்ட போது, “மொத்த நிலமும் எங்களுக்குச் சொந்தம், வி.இ.ப. உள்ளிட்டவர்களுக்கு இதில் எந்தவித சட்ட உரிமையும் கிடையாது. இந்துக்களின் பெயரால் அரசியல் செய்யும் உரிமையை இவர்களுக்கு யார் அளித்தது. விசுவ இந்துப் பரிசத் முதலியன வெளியில் இருந்து வந்து இங்குப் பிரச்சினை செய்கிறார்கள். அவர்கள் மட்டும் தலையிடாவிட்டால், எப்போதோ பிரச்சினை தீர்ந்திருக்கும். தீர்ப்பைப் பொறுத்தவரையில் நிலத்தை மூன்றாக பிரித்தது தவறு, எல்லாவற்றையும் எங்களுக்கே தந்திருக்க வேண்டும்” என்றார்.

நிர்மோகி அகாராவின் மகந்த் பாஸ்கரதாசுடன் நாங்கள்…

பைசாபத்திலுள்ள

நிர்மோகி

அகோரா

தலைமையகம்…

திகம்பர அகாராவில் மகந்த் சுரேஷ் தாஸ் ஊரில் இல்லை எனவும் வேறு யாருடனும் நாங்கள் பேச இயலாது என்றும் கூறிவிட்டனர். வி.இ.ப. காரியாலயத்தின் பொறுப்பாளர் மகேந்திர உபாத்யாயா யார் பேச்சுவார்த்தை நடத்தினாலும் அதுபற்றி எங்களுக்கு கவலை இல்லை. உச்சநீதிமன்றத்தில் என்ன தீர்ப்பு வந்தாலும் கவலை இல்லை. மிகப் பெரிய ராமர் கோயிலை மட்டுமே அங்கே கட்ட வேண்டும். வேறு எதையும் கட்ட அனுமதிக்க மட்டோம் என்றார்.

ராமஜென்ம பூமி நியாஸ் காரியாலய பொறுப்பாளர் மகேந்திர உபாத்யாயாவுடன் நாங்கள்…பின்னணியில் ராமர் கோயில் கட்டுமாணங்கள்…

ராமர் கோயில் கட்டுவதற்கான கட்டுமாணங்கள்…

ராம ஜென்ம பூமி நியாசின் முக்கிய பொறுப்பாளரான ராம் விலாஸ் வேதாந்தி வாரணாசியில் இருந்ததினால் அவருடன் தொலைபேசியில் மட்டுமே உரையாட முடிந்தது. ராம் விலாஸ் வேதாந்தி கூறியதிலிருந்து: “அயோத்தியில் மட்டுமல்ல, இந்தியாவில் பாபரின் பெயரால் எந்த மசூதியும் கட்டவிட மட்டோம். அயோத்திக்குள் மசூதி கட்ட வேண்டுமானால், அயோத்தியின் கலாச்சார எல்லையைத் தாண்டித்தான் இருக்க வேண்டும். அதாவது 12 யோஜனை நீளம், 3 யோஜனை அகலத்திற்குள் எந்த மசூதி கட்டவும் அனுமதிக்கமாட்டோம்.(1 யோஜனை = 9 கி.மீ.). வேண்டுமானால், அவர்கள் மீர்பாகியின் கல்லறைக்குப் பக்கத்தில் மசூதியைக் கட்டிக் கொள்ளட்டும். (கல்லறை அயோத்தியில் இருந்து 7 கி.மீ. தொலைவில் சாஹின்வா கிராமத்தில் உள்ளது). அதுவும் கூட பாபரின் பெயரல் இருக்கக் கூடாது. மசூதி இருந்த இடத்தில் கோயில் இருந்தது உண்மையென்றால், தாங்கள் விட்டுக் கொடுத்துவிடுவதாக முஸ்லிம்கள் எழுதிக் கொடுத்துள்ளனர். இப்போது நீதிமன்றம் கோயில் இருந்ததை உறுதி செய்துள்ளது. அவர்கள் விட்டுவிட்டுப் போக வேண்டியதுதான்.”

நிர்மோகி அகாரா உங்களுக்கு இதில் உரிமை இல்லை எனக் கூறுகிறதே என நாங்கள் கேட்ட போது, 1 கோடியே 81 லட்சத்து 66 ஆயிரத்து 65 ஆண்டுகளுக்கு முன்னர் ராமர் பிறந்தார். இந்த நிர்மோகி அகாரா 400 ஆண்டுகளுக்கு முன் உருவானது. இவர்கள் யார் ராம ஜென்ம பூமிக்கு உரிமைக் கொண்டாடுவது என்று ஆவேசமாகப் பதிலளித்தார்.

நீதிமன்றத் தீர்ப்பின்படி ராம ஜென்ம பூமி எனச் சொல்லப்படுகிற இடம் ராம் ல்ல்லாவிற்குத்தான் கொடுக்கப்பட்டுள்ளது. அப்படிப் பார்த்தாலும் நீங்கள் அங்கு கோயில் கட்ட முடியாதே எனக் கேட்டதற்கு, “நிர்மோகி அகாரா, அஷிம் அன்சாரி இருவருக்கும் ஜென்ம பூமிக்கு வெளியே தான் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் கூட எந்த இடம் எனத் தெளிவாக வரையறுக்கப்படவில்லை. ராம் லல்லாவிற்கு மட்டும் தான் தெளிவாக வரையறுக்கப்பட்டு 130 x 90 அடி கொடுக்கப்பட்டுள்ளது. திருலோகி நாத் தான் ராம் லல்லாவிற்காக வழக்குத் தொடுத்தவர். அவர் இப்போது உயிரோடு இல்லை. ராம் லல்லாவின் கார்டியனாக இப்போது நியமிக்கப்பட்டுள்ள தேவகி நந்தன் அகர்வால் எங்களுக்காக வழக்காடுகிறார். நியாசும், பரிசத்தும் இதில் ஒரு வாதியாக இல்லையாயினும் திருலோகி நாத்திற்கோ அல்லது தேவகி நந்தனுக்கோ கொடுப்பது எங்களுக்குக் கொடுப்பதுதான். இதில் எந்தப் பிரச்சினையும் இல்லை” என்றார்.

ஒரு வேளை உச்சநீதிமன்றத் தீர்ப்பு நம்பிக்கை அடிப்படையில் இல்லாமல் சட்டத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டால் என்ன செய்வீர்கள் என நாங்கள் கேட்ட போது, “உச்சநீதிமன்றத்திற்கு வேறு எந்தத் தேர்வுமே கிடையாது. எங்களுக்குத்தான் கொடுத்தாக வேண்டும். ஒரு வேளை தீர்ப்பு எதிராகப் போனால், இந்த நாடு வகுப்பு வன்முறையால் அழிவதை யாராலும் தடுக்க முடியாது. இந்த நாட்டில் சமூக ஒற்றுமை நிலவ வேண்டும் என உச்சநீதிமன்றம் விரும்புமானால், இந்துக்களுக்கு சார்பாகவே அது தீர்ப்பளிக்க வேண்டும். மொத்த நிலத்தையும் இந்துக்களுக்கு மட்டுமே கொடுக்க வேண்டும்” எனக் கூறி முடித்துக் கொண்டார்.

ராமரை வழிபட பூசைப் பொருட்கள் விற்கப்படும் கடைகள்…

சர்ச்சைக்குரிய இடத்தில் ராமரை வழிபட செல்லும் பஜனை கோஷ்டி…

இதர தரப்பினர் கருத்து:

அரசியல் கட்சி ஒன்றின் ஊழியரான அருண் குமார் பேசும்போது அயோதிக்குள்ளேயே மசூதியை அனுமதிக்க இயலாது எனப் பேசுபவர்களுக்கு எதிராக மக்களைத் திரட்ட அரசியல் கட்சிகள் முன்வர வேண்டுமென்றார். உள்ளூர் பத்திரிகையாளர் சிலரிடம் பேசிய போது, மசூதியை அரசு கையகப்படுத்தி உள்ள 71.3 ஏக்கருக்கு அப்பால் மசூதி கட்டிக் கொள்ள அஷிம் அன்சாரி பாஸ்கரதாசிடம் ஒத்துக் கொண்டுள்ளார் எனவும், அப்படி செய்வதுதான் சரியென்றும் கூறினர். ஆனால், இது அடிப்படை நீதியை மறுப்பதாகாதா, தொடர்ந்து இதேபோல் பிரச்சினைகள் பிற இடங்களில் எழுந்தால் என்ன செய்வது. 71.3 ஏக்கர் நிலத்திற்கு அப்பாலும் கூட மசூதி கட்ட கூடாது என பரிசத்தும், நியாசும் கூறுகிறதே என்று கேட்ட போது, அவர்கள் எந்த பதிலும் சொல்லாமல் மவுனமாக இருந்தனர்.

உள்ளூர் பத்திரிகையாளர்களான கே.கே.பாண்டே, பன்பீர் சிங் ஆகியோருடன் நாங்கள்…

பேராசிரியர் ஏ.கே.மிஸ்ரா…

எங்களை அன்புடன் வரவேற்று உபசரித்த வரலாற்றுத் துறைப் பேராசிரியர் ஏ.கே.மிஸ்ரா, மசூதி இருந்த இடத்தில் கோயில் இருந்தது என ஆணித்தரமாக கூறினார். எனினும், அகழ்வாய்வுகளின் அடிப்படை நியதிகள் மீறப்பட்டுள்ளதாக சூரஜ்பன், டி.என்.ஜா முதலிய வரலாற்று அறிஞர்கள் கூறியது பற்றிக் கேட்டபோது அவர் சற்றுக் கோபமானார். “அகழ்வாய்வுத் துறையே முன்னின்று இதைச் செய்திருந்தால் நியதிகள் பின்பற்றப்பட்டிருக்கும். நீதிமன்ற உத்தரவுப்படி நாங்கள் செய்யும் போது நியதிகள் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை” என்றார். தோண்டிய இடத்தில் முஸ்லிம்கள் வாழ்ந்ததற்கான அடையாளமாக சுண்ணாம்பால் கட்டப்பட்ட கட்டுமானங்கள், மிருக எலும்புகள் ஆகியன கிடைத்துள்ளதை நீங்கள் ஏன் கணக்கில் கொள்ளவில்லை என்றும், இந்த தரவுகளை நீங்கள் ஏன் பாதுகாத்து வைக்கவில்லை எனவும் நாங்கள் கேட்ட போது, “எலும்புகளைக் பாதுகாத்து வைக்க சில முறைகள் உண்டு. ஆனால், இந்த துலுக்கப் பசங்க (Muslim Fellows) எலும்புகளை அப்படி வைக்கக் கூடாது, வெறும் பாலித்தின் உறையில் வைத்தால் போதும் என முட்டாள்தனமாக சொன்னார்கள். அதனால், அவைகள் எல்லாம் பொடித்து அழிந்துவிட்டன” என அலட்சியமாகக் கூறினார். இப்படியான மனநிலையுடன் கூடிய வரலாற்று அறிஞர்களின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகள் எப்படி இருக்கும் என்பதையும், இந்த ஆய்வை நீதிமன்றம் முழுமையாக சார்ந்திருந்தது என்பதையும் நினைத்த போது எங்களுக்கு கவலையாக இருந்தது.

எமது பார்வைகளும், முடிவுகளும்:

சுமூகமான தீர்வும், சூழலும் ஏற்படும் சாத்தியம் மிகக் குறைவாகவே உள்ளது. பொதுமக்கள் மத்தியில் இத்தகைய கருத்து இருந்த போதும், விசுவ இந்துப் பரிசத்தும், ராம் ஜென்ம பூமி நியாசும் இதற்கு முற்றிலும் எதிராகவே உள்ளன. தீர்ப்பு எங்களுக்கு சாதமாக வராவிட்டால் இந்த நாட்டையே மத வன்முறையால் அழித்துவிடுவோம் என வேதாந்தி போன்றவர்கள் பகிரங்கமாக உச்சநீதிமன்றத்தை மிரட்டுவது இந்த நாட்டின் எதிர்காலத்தையும், ஜனநாயகத்தையும், அரசியல் சட்ட ஆளுகையையும் மிகப் பெரிய கேள்விக்குள்ளாக்குகிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எதிராக வந்தால் ஏற்க முடியாது, இந்த நாட்டையே அழிப்போம் என ஒரு சாரார் கூறும் போது, நீதிமன்றத்திடம் பொறுப்பை கைக்கழுவி விட்டு ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்க்கும் அனைத்து அரசியல் கட்சிகளையும் நினைக்கும் போது வேதனை மட்டுமல்ல, கோபமும் ஏற்படுகிறது. லக்னோ, பைசாபாத், அயோத்தி உள்ளிட்ட அவாத் பகுதி முழுமையிலும் கடும் ஏழ்மையும், உழைப்புச் சுரண்டலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் இந்துக்கள், முஸ்லிம்கள் இரு தரப்பிலும் எளிய மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றனர். ஆயிரம் பீடி சுற்றினால் வெறும் 10 ரூபாய் மட்டுமே கூலி. எல்லா நகரங்களிலும் சைக்கிள் ரிக்க்ஷாக்களே அதிகமாக உள்ளன. சென்னையில் ஒரு ஆட்டோ 50 ரூபாய் கூலி கேட்கும் தொலைவை லக்னோவிலும், பைசாபாத்திலும் வெறும் 15 ரூபாய் கொடுத்து ஒரு சைக்கிள் ரிக்க்ஷாவில் கடக்க முடியும். இத்தகைய கடும் சுரண்டல் மத அடிப்படையிலான கருத்தியல்களால் மூடி மறைக்கப்படுகிறது. நாங்கள் சந்தித்த இடதுசாரித் தோழர் ஒருவர் பெரியார் ஈ.வே.ரா. என்றொருவர் வடநாட்டில் பிறக்காமல் போனதின் விளைவு இது எனக் கூறியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சமூக ஒற்றுமையையும் அதே சமயத்தில் சட்டத்தின் அடிப்படையிலான நீதியையும் கருத்தில் கொண்டு பார்க்கும் போது, கீழ்க்கண்ட வழிமுறைகளே உடனடித் தேவை என நாங்கள் கருதுகிறோம்.

1) நீதிமன்றத் தீர்ப்பு தமக்கு எதிராக வந்தால் இந்த நாட்டையே மத வன்முறையால் அழித்துவிடுவோம் என வெளிப்படையாகப் பேசுகிற சக்திகள் யாராக இருந்தாலும் அவர்களைத் தனிமைப்படுத்த ஜனநாயகத்திலும், மதசார்பின்மையிலும் நம்பிக்கை உள்ள அரசியல் கட்சிகளும், அறிவுஜீவிகளும், சமூக ஆர்வலர்களும் முன்வர வேண்டும்.

2) இந்திய அளவில் முக்கியமான அறிவுஜீவிகள், மனித உரிமை ஆர்வலர்கள், வரலாற்று அறிஞர்கள், சட்ட வல்லுநர்கள் முதலான பேச்சுவார்த்தைக் குழு (Interlocutors) ஒன்றை அரசு உருவாக்கி சகல தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்த அரசு முன்கை எடுக்க வேண்டும். பேச வர மறுப்பவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

3) சட்டப்படியும், நிலவும் மரபுகளின்படியும் 400 ஆண்டுக் காலமாக தொழுகை நடத்தப்பட்ட மசூதியின் உள் மற்றும் வெளிப் பிரகாரங்கள் உள்ளிட்ட எல்லா நிலத்தையும் முஸ்லிம்களுக்கே அளிப்பதுதான் சரியானது. எனினும், நிலவுகிற சூழல்கள் எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டு பார்க்கும் போது, மசூதி இருந்த இடத்தில் மீண்டும் மசூதியையே நிறுவுவது. ஏற்கனவே ராம் சபுத்ரா உள்ளிட்ட பகுதியில் ராமர் கோயில் ஒன்றை நிறுவுவது, அரசுக் கையகப்படுத்தியுள்ள மிகுதியான இடங்களில் சமூக பன்மைத்துவத்தை ஏற்கும் அருங்காட்சியகம், நூலகம், மருத்துவனை, சிறுவர் பூங்கா உள்ளிட்டவற்றை உருவாக்குவது என்பதே சரியாக இருக்கும் என நாங்கள் கருதுகிறோம். . இப்படியான ஒரு முடிவு ஏற்கனவே சுன்னி வக்ப் வாரிய தரப்பிலேயே கூறப்பட்டுள்ளது இங்கு நினைவு கூறத்தக்கது.

4) பச்சை ஏமாற்றாலும், வன்முறையாலும் மசூதியை இடித்து வைக்கப்பட்ட ராமர் சிலைகளையும், தற்காலிக கோயிலையும் ஒரு புனிதத் தலமாக இன்று மாற்றப்பட்டுள்ளதும் இதற்கு அரசே துணைபோகியுள்ளதும் வருத்தமளிக்கிறது. மகாத்மா காந்தி போன்ற உண்மையான ராம பக்தர்கள் இன்று இருந்திருந்தால் இந்த நிலையைக் கண்டித்திருப்பார்கள். முன்னாள் மத்திய உள்துறைச் செயலர் மாதவ் கோட்போல் மேற்கூறிய இதே காரணங்களைச் சொல்லி ராம் லல்லாவை வணங்க மறுத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது. இதை அரசியலுக்கு அப்பாற்பட்ட இந்து மதத் தலைவர்கள் தலைவர்கள் கண்டிக்க வேண்டும்.

5) நீதிமன்றத்திடம் பொறுப்பைத் தட்டிக் கழித்துவிட்டு அரசியல் கட்சிகள் ஒதுங்கிக் கொள்ளாமல், வகுப்பு வெறியர்களுக்கு எதிராக மக்களைத் திரட்டுகிற பணியில் அவை ஈடுபட வேண்டுமென குறிப்பாக மதச்சார்பற்ற, ஜனநாயக, இடதுசாரி மற்றும் அடித்தள சமூகங்களைப் பிரதிநித்துவப்படுத்தும் கட்சிகளுக்கு இப் பொது வேண்டுகோளை நாங்கள் விடுக்கிறோம்.

நன்றி: கோ.சுகுமாரன் செயலாளர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி